என் மலர்
கிரிக்கெட் (Cricket)

உலகக் கோப்பை Finals - விராட் கோலிக்கு தனது ராசியான ஜெர்சியை வழங்கிய சச்சின்.. வைரலாகும் புகைப்படங்கள்
- உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங்.
- டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளது.
உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியை ஒட்டி சச்சின் டெண்டுல்கர் 2011-ம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற ஜெர்சியை விராட் கோலிக்கு பரிசாக வழங்கி உள்ளார்.
இரண்டாவது உலகக் கோப்பை தொடரில் விளையாடும் முதல் இந்திய வீரர் என்ற பெருமையுடன் விராட் கோலி விளையாடி வருகிறார். 2023 உலகக் கோப்பை தொடரின் அரையிறுதி போட்டியில் விராட் கோலி சர்வதேச ஒருநாள் போட்டிகளில் தனது 50-வது சதத்தை அடித்து அசத்தினார். மேலும் சச்சின் டெண்டுல்கரின் 49 சதங்கள் என்ற சாதனையை விராட் கோலி முறியடித்தார்.
ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி கோப்பை வெல்லும் முனைப்பில் களமிறங்கி உள்ள நிலையில், இறுதிப் போட்டியை காண சச்சின் டெண்டுல்கர் உள்பட பல்வேறு முன்னணி வீரர்கள், பிரபலங்கள் என பலரும் மைதானத்திற்கு வந்துள்ளனர்.






