search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    உலகக் கோப்பை 2023.. கோலி, கே.எல். ராகுல் அரைசதம்.. 241 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்தியா
    X

    உலகக் கோப்பை 2023.. கோலி, கே.எல். ராகுல் அரைசதம்.. 241 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்தியா

    • டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது.
    • இந்தியா சார்பில் கே.எல். ராகுல் 66 ரன்களை குவித்தார்.

    உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. அதன்படி இந்திய அணிக்கு கேப்டன் ரோகித் சர்மா, சுப்மன் கில் ஜோடி துவக்க வீரர்களாக களமிறங்கியது. இருவரும் முறையே 47 மற்றும் 4 ரன்களை குவித்து ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த விராட் கோலி 54 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.

    பிறகு களமிறங்கிய ஸ்ரேயஸ் அய்யர் 4 ரன்களில் ஆட்டமிழக்க, கே.எல். ராகுல் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவர் 107 பந்துகளில் 66 ரன்களை குவித்தார். இதில் ஒரே ஒரு பவுண்டரி மட்டுமே விளாசினார். இவருடன் ஆடிய ரவீந்திர ஜடேஜா 9 ரன்களில் ஆட்டமிழந்தார். சூர்யகுமார் யாதவ் 18 ரன்களை குவித்தார்.

    முகமது ஷமி 6 ரன்களிலும், ஜஸ்பிரித் பும்ரா 1 ரன்னிலும், குல்தீப் யாதவ் 10 ரன்களை குவித்தார். போட்டி முடிவில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 240 ரன்களை குவித்துள்ளது. ஆஸ்திரேலியா சார்பில் சிறப்பாக பந்துவீசிய மிட்செல் ஸ்டார்க் மூன்று விக்கெட்டுகளையும், பேட் கம்மின்ஸ், ஹேசில்வுட் தலா இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். மேக்ஸ்வெல், ஆடம் ஜாம்பா தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    Next Story
    ×