என் மலர்
புதுச்சேரி
கொரோனா பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கால் தனது அலுவலகத்தில் டிராவல்ஸ் உரிமையாளர் ஒருவர் முட்டை விற்றுவருகிறார்.
புதுச்சேரி:
ஊரடங்கு உத்தரவால் நாடு முழுவதும் பல்வேறு தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக சுற்றுலா தொழில் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. கோடை காலமான ஏப்ரல், மே மாதங்களில் சுற்றுலா வாகனங்கள் கடும் பிசியாக இருக்கும்.
ஆனால், ஊரடங்கால் வாகனங்கள் இயக்கப்படாததால் டிராவல்ஸ் தொழில் முழுமையாக முடங்கி போய்விட்டது. இதனால் சுற்றுலா வாகன டிரைவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பலர் மாற்று தொழிலுக்கு செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
அதுபோல் புதுவை லாஸ்பேட்டையை சேர்ந்தவர் சத்தீஷ். 10-ம் வகுப்பு படித்த இவர் கிளீனராக தனது வேலையை தொடங்கினார். அடுத்து டிரைவராகி 2003-ம் ஆண்டில் டிராவல்ஸ் உரிமையாளரானார்.
4 கார்கள், 1 பஸ், 3 வேன்களை வைத்து தொழில் நடத்தி வந்தார்.
கொரோனா ஊரடங்கால் சுற்றுலா தொழில் முடங்கியதில் சத்தீஷ் பாதிக்கப்பட்டு தற்போது டிராவல்ஸ் அலுவலகத்தில் முட்டை விற்கிறார். நாள் ஒன்றிற்கு ரூ.2 ஆயிரம் முதலீடு செய்து முட்டை வாங்கி விற்கிறார்.
இதன் மூலம் ரூ.200 லாபம் கிடைக்கிறது என்றும், இது குடும்ப செலவுக்கே போதவில்லை என்றும் சத்தீஷ் கூறுகிறார்.
கடந்த 60 நாட்களாய் வேலை இல்லாததால் வீதியில் மீன், இறால் விற்கும் கொடுமையான சூழ்நிலைக்கு ஊரடங்கு தள்ளி விட்டதாக டிரைவர்கள் கவலையுடன் தெரிவிக்கின்றனர்.
புதுவையை பொருத்தவரை சமீப ஆண்டுகளாக சுற்றுலா வளரும் தொழிலாக இருந்தது. ஆனால், கொரோனா காரணமாக சுற்றுலா பயணிகளின் நடமாட்டம் முற்றிலும் நின்று விட்டது.
இதனால் டிராவல்ஸ் தொழில் அதிக அளவில் பாதிக்கப்பட்டு உள்ளது. டிராவல்ஸ் தொழில் மீண்டும் புத்துயிர் பெற குறைந்தது 6 மாதங்கள் ஆகும் என்பதால் அதுவரை வயிற்று பிழைப்புக்கு வழி தெரியாமல் சுற்றுலா வாகன டிரைவர்கள் விழி பிதுங்கி உள்ளனர்.

புதுவையில் காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி:
புதுவை முத்தியால்பேட்டை சோலை நகர் கலைவாணர் வீதியை சேர்ந்தவர் அம்சவள்ளி. இவருக்கு 4 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். அவருடைய 3-வது மகள் அன்னலட்சுமி (வயது24), புதுச்சேரி முத்துமாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த மணிகண்டன் என்பவரை காதலித்து இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் அன்னலட்சுமி குடும்ப பிரச்சினை காரணமாக தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பெரியக்கடை போலீசார் விசாரிக்கின்றனர்.

இரவு 7 மணிக்கு மேல் வீட்டை விட்டு பொதுமக்கள் வெளியே வரவேண்டாம் என கலெக்டர் அருண் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
புதுச்சேரி:
புதுவை கலெக்டர் அருண் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
புதுவை மாநிலத்தில் 32 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் வசிக்கும் தெருக்களில் மட்டும் மக்கள் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. புதுவையில் இருந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
தற்போது ஒடிசா, மேற்கு வங்காளம், அசாம் போன்ற மாநிலங்களுக்கு தொழிலாளர்களை அனுப்ப ரெயில் வசதி ஏற்படுத்தித் தருமாறு மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தற்போது மதுபான கடைகள் திறக்கப்பட்டுள்ளன. அங்கு சமூக இடைவெளியுடன் மதுபான விற்பனை நடைபெற்று வருகிறது. ஏதேனும் விதிமீறல்கள் இருந்தால் கண்டறிந்து நடவடிக்கை எடுப்போம்.
புதுவையில் சமூக பரவல் ஏற்பட்டுள்ளதாக இதுவரை தகவல் எதுவும் இல்லை. தற்போது பாதிக்கப்பட்டுள்ளவர்கள் வரை ஒவ்வொருவருக்கும் தொடர்பு உள்ளது. ஊரடங்கு உத்தரவு இரவு 7 மணிக்கு பிறகும் அமலில் தான் உள்ளது. எனவே தேவை இல்லாமல் மக்கள் வெளியே வரக்கூடாது. வெளியே வரும்போது கண்டிப்பாக முககவசம் அணிந்து இருக்க வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் அருண் கூறினார்
சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராகுல் அல்வால் கூறியதாவது:-
மதுபான கடைகள் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை தான் திறந்திருக்க வேண்டும். சில கடைகளில் வாடிக்கையாளர்களை சிறப்பான முறையில் நடத்தி வருகிறார்கள். கண்டிப்பாக மக்கள் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். தமிழக பகுதியில் இருந்து புதுச்சேரிக்கு மதுபானம் வாங்க வர முடியாத அளவுக்கு எல்லைகள் கண்காணிக்கப்படுகின்றன. அதேபோல் இ-பாஸ் இல்லாமல் யாரையும் புதுவைக்குள் நுழைய அனுமதிக்க மாட்டோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

காரைக்காலில் மது பிரியர்கள் கூடுதல் விலையால் மதுபாட்டில்கள் வாங்க முன்வரவில்லை. மதுக்கடை திறந்த முதல் நாளே விற்பனை மந்தமாகவே நடந்ததாக மதுக்கடை உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
காரைக்காலில் மொத்தம் மற்றும் சில்லறை விற்பனைக்காக 58 கடைகள் உள்ளன. இதில் 13 மதுபான கடைகளின் உரிமம் தற்காலிக ரத்து செய்யப்பட்டு 45 மதுபான கடைகள் மட்டும் நேற்று திறக்கப்பட்டன. 25 சாராயக்கடைகளில் 4 கடைகள் உரிமம் ரத்து செய்யப்பட்டு 21 சாராயக்கடை கடைகள் திறக்கப்பட்டன. கள்ளுக் கடைகள் திறக்கப்பட்டன. திறக்கப்பட்ட அனைத்து கடைகளிம், கொரோனா வரியுடன் மதுபாட்டில்கள் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாலும், தமிழகப்பகுதி மற்றும் சுற்றுலாப் பயணிகள் வருகை ரத்தாலும், ஏராளமான மதுக்கடைகளில் சில மணிநேரம் மட்டுமே கூட்டம் இருந்தது.
அதன்பிறகு மாலை வரை கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. இதனால், மதுக்கடை உரிமையாளர்கள் பெருத்த ஏமாற்றம் அடைந்ததோடு, வருவாய் இன்றி அதிருப்தி தெரிவித்துள்ளனர். மது பிரியர்களும் கூடுதல் விலையால் மதுபாட்டில்கள் வாங்க முன்வரவில்லை. குறைந்த விலைக்கு விற்கப்படும் சாராயத்தை வாங்கிச் சென்றனர். மதுக்கடை திறந்த முதல் நாளே விற்பனை மந்தமாகவே நடந்ததாக மதுக்கடை உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

புதுச்சேரியில் தமிழ்நாட்டுக்கு இணையாக மது வகைகளின் விலை உயர்த்தப்பட்டுள்ளதால் மது பிரியர்கள் அதிருப்தி தெரிவித்தனர்.
புதுச்சேரி:
புதுவையில் நேற்று மதுக்கடைகள் திறக்கப்பட்டு மது விற்பனை தொடங்கியது. அதே நேரத்தில் மதுபானங்களின் விலை தமிழகத்துக்கு சமமாக இருந்தது. புதுவையில் மதுபானங்களின் விலை தமிழகத்தில் இருந்து 30 முதல் 50 சதவீதம் வரை குறைவாக இருக்கும். ஆனால் கவர்னரின் அதிரடி நிபந்தனையால் மதுபானங்களிள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் மது பிரியர்கள் அதிருப்தி தெரிவித்தனர்.
இதுகுறித்து மது பிரியர்களிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:-
தொழிலாளி சேகர்:- மது பிரியர்களை வரிசையில் நிற்க வைத்து உதாசீனப்படுத்துகிறார்கள். ஏற்கனவே தமிழகத்துக்கு சரக்கு வாங்க செல்ல வைத்து அவமானப்படுத்தினார்கள். இப்போது மிகவும் அதிகமாக விலையை உயர்த்தி உள்ளனர். தற்சமயம் எங்கும் வேலை கிடையாது. கஷ்டப்பட்டு குடும்பத்தை நடத்தி வருகிறோம். இந்தநிலையில் மதுபான விலையை உயர்த்தி எங்கள் வயிற்றில் அடிக்கிறார்கள். முன்பு இருந்ததைவிட இருமடங்கு விலை அதிகமாக இருப்பதால் உழைக்கும் பணத்தை செலவிட வேண்டியுள்ளது. இப்படி விலையை உயர்த்திவிட்டால் மட்டமான சரக்குகளை தான் தேடி வாங்க வேண்டியது வரும்.
தனியார் நிறுவன காவலாளி ரவிக்குமார்:- சின்ன சின்ன கடைகளில் கூட இப்போது வியாபாரம் குறைந்து விட்டது. இந்த சூழ்நிலையில் வரியை அதிக அளவு உயர்த்தி மதுபானங்களை விற்கிறார்கள். இது புதுவையின் தனித்தன்மையை பாதித்து விட்டது. வரியை உயர்த்துவதால் குடிப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வருமானம் குறையுமே தவிர உயராது. எனவே வரியை ரத்து செய்து பழைய விலைக்கே மதுபானங்களை விற்க வேண்டும்.
பவளக்காரன் சாவடியை சேர்ந்த முருகன் :-
கடந்த 40 வருடங்களாக மதுபானம் அருந்தி வருகிறேன். ஆனால் இதுபோல் அதிக விலை கொடுத்து வாங்கி சாப்பிட்டது இல்லை. மதுபான விலையை 2 மடங்கு உயர்த்தி உள்ளனர். இதனால் முன்புபோல் மது வகைகளை சாப்பிட முடியாது. அதில் பாதியாக வாங்கி குடிக்க வேண்டியது தான். இந்த விலை உயர்வினால் ஏழைகளுக்கு தான் அதிக பாதிப்பு. பணக்காரர்கள் எவ்வளவு விலை வைத்தாலும் வாங்கிக் கொள்வார்கள். ஆனால் சொற்ப அளவில் சம்பாதிக்கும் ஏழைகள் கஷ்டப்படுவதை இந்த அரசு அனுமதிக்கக் கூடாது. உடனடியாக மதுபான விலையை குறைத்து பழைய விலைக்கே விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

மீன்பிடி தடைக்காலம் 47 நாட்களாக குறைத்து மத்திய மீன்வள அமைச்சகம் அறிவித்துள்ளது.
புதுச்சேரி:
புதுச்சேரியில் கடந்த ஏப்ரல் 15-ந் தேதி முதல் ஜூன் 14-ந் தேதி வரை 61 நாட்களுக்கு மீன்பிடி தடைக்காலமாக மீன்வளத்துறை அறிவித்து இருந்தது. இந்த நிலையில் கொரோனா பரவலை தடுக்க கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் மீனவர்கள் யாரும் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்லவில்லை.
இதனை கருத்தில் கொண்டு மீன்பிடி தடைக்காலத்தை 61 நாட்களில் இருந்து 47 நாட்களாக குறைக்க வேண்டுமென மீனவர்கள் வேண்டுகோள் விடுத்து வந்தனர்.
இதையடுத்து தமிழகம், புதுச்சேரி அரசுகள் மற்றும் தேசிய மீனவர் பேரவை உள்ளிட்ட மீனவர் அமைப்புகளின் கோரிக்கையை ஏற்று இந்திய மத்திய அரசு மீன்வள அமைச்சகம், கிழக்கு கடற்கரை பகுதி மீனவர்களுக்கான வங்க கடல் மீன்பிடி தடை காலத்தின் அளவை 61 நாட்களில் இருந்து 47 நாட்களாக குறைத்து உத்தரவிட்டுள்ளது.
அதன்படி இந்த ஆண்டுக்கான மீன்பிடி தடை காலத்தை ஏப்ரல் 15 முதல் மே 31 வரையிலான 47 நாட்களாக குறைத்துக்கொள்வதாக மத்திய மீன்வள அமைச்சகம் அறிவித்துள்ளது. அதேபோல் மேற்கு கடல் பகுதியில் ஜூன் 15 முதல் ஜூலை 31 வரை 47 நாட்களாக தடைக்காலம் குறைக்கப்பட்டுள்ளது.
மத்திய மீன்வள அமைச்சக உதவி ஆணையர் டாக்டர் சஞ்சய் பாண்டே இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளதாக தேசிய மீனவர் பேரவை தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான இளங்கோ தெரிவித்துள்ளார்.

நையினார் மண்டபத்தை சேர்ந்த 3 பேர் ஊருக்குள் நுழைய தடைவிதிக்குமாறு முதலியார்பேட்டை போலீசார் கலெக்டருக்கு பரிந்துரை செய்துள்ளனர்.
புதுச்சேரி:
முதலியார்பேட்டையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு போஸ்டர் ஒட்டுவது தொடர்பாக பாஸ்கர் எம்.எல்.ஏ.வின் ஆதரவாளர்களுக்கும் வக்கீல் சம்பத்தின் ஆதரவாளர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு மோதலாக மாறியது. இருதரப்பினரும் கற்களால் மாறிமாறி தாக்கி கொண்டனர்.
இந்த மோதல் தொடர்பாக முதலியார்பேட்டை போலீசார் இருதரப்பினர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த மோதல் காரணமாக முதலியார்பேட்டையில் தொடர்ந்து பதட்டம் நிலவி வருகிறது. அப்பகுதியில் எந்த நேரத்திலும் மீண்டும் இருதரப்பினரும் மோதிக்கொள்ளலாம் என்ற சூழ்நிலை நிலவி வருகிறது. இதனை தடுத்திடும் வகையில் அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே மீண்டும் மோதல் ஏற்பட காரணமாக கருதப்படும் இருதரப்பை சேர்ந்த நையினார் மண்டபம் பாரதிவீதியை சேர்ந்த அருண்குமார்(வயது28) மற்றும் மணவாளன்(32), அறிவழகன் ஆகிய 3 பேரையும் ஊருக்குள் நுழைய தடைவிதிக்குமாறு முதலியார்பேட்டை போலீசார் கலெக்டருக்கு பரிந்துரை செய்துள்ளனர்.

கூலித்தொழிலாளர்கள் விலை குறைவான சாராயத்தை குடித்து வந்த நிலையில் இப்போது சாராய விலையும் உயர்த்தப்பட்டதால் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர்.
பாகூர்:
புதுவையில் 62 நாட்களுக்கு பிறகு இன்று மதுக்கடைகள் திறக்கப்பட்டன. அதுபோல் சாராயக்கடை மற்றும் கள்ளுகடைகளும் இன்று திறக்கப்பட்டன.
ஆனால் புதுவையில் ஒன்றிரண்டு கள்ளுக்கடை மட்டுமே உள்ளதால் விலை உயர்த்தப்படவில்லை. அதேவேளையில் சாராயத்துக்கு விலை உயர்த்தப்பட்டது. ரூ.30 க்கு விற்கப்பட்ட 150 மில்லி கொண்ட சாராய பாக்கெட் ரூ.40-க்கும், ரூ.40க்கு 180 மில்லி கொண்ட சீல்டு சாராய பாட்டில் ரூ.50 என விலை உயர்த்தப்பட்டது.
பெரும்பாலான கூலித்தொழிலாளர்கள் விலை குறைவான சாராயத்தை குடித்து வந்த நிலையில் இப்போது சாராய விலையும் உயர்த்தப்பட்டதால் பெரும் அதிர்ச்சிகுள்ளாகி உள்ளனர்.

மூலக்குளத்தில் வட்டிக்கடைக்காரர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் தொடர்பாக ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புதுச்சேரி:
புதுவை ரெயின்போநகர் 6-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் மகேந்திரகுமார் ஜெயின் (வயது55). இவர் வில்லியனூர் மெயின் ரோடு மூலக்குளத்தில் கடந்த 20 ஆண்டுகளாக வட்டிக்கடை நடத்தி வருகிறார்.
நேற்று காலை வழக்கம் போல் மகேந்திரகுமார் ஜெயின் வட்டிக்கடையை திறந்து வைத்து நாற்காலியில் அமர்ந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென தனக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால் இதுபற்றி அவர் தனது மனைவிக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தார். உடனடியாக அவரது மகன் சுலப் ஜெயின்(33) வட்டிக்கடைக்கு விரைந்து வந்தார். அப்போது தனது தந்தை மகேந்திரகுமார் ஜெயின் மயங்கி கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
உடனடியாக அக்கம்பக்கத் தினர் உதவியுடன் அவரை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே மகேந்திரகுமார் ஜெயின் இறந்து விட்டதாக தெரிவித்தனர். மகேந்திரகுமார் ஜெயின் திடீர் மாரடைப்பால் இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது.
இதுகுறித்த புகாரின் பேரில் ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கால்நடை தீவனம், கோதுமை தவிடு உள்ளிட்டவற்றின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் மாடுகளை அடிமாட்டுக்கு விற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
புதுச்சேரி:
இந்நிலையில் கடந்த 3 மாதமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால், வெளி மாநிலங்களில் இருந்து வரும் கால்நடை தீவனங்கள், கோதுமை தவிடு, புண்ணாக்கு உள்ளிட்டவைகளின் வரத்து குறைந்துள்ளது. இதனால் தீவனங்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.
இதன் காரணமாக மாடு வளர்க்கும் விவசாயிகளுக்கு மாட்டிற்கு தீவனம் வைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. ரூ.1000-ஆக விற்ற கோதுமை தவிடு தற்போது ரூ. ஆயிரத்து 500 வரை விற்கப்படுகிறது.
அதேபோன்று கால்நடை தீவனம் மற்றும் புண்ணாக்கின் விலையும் உயர்ந்து விட்டது. இதன் காரணமாக வழக்கமாக மாட்டிற்கு வைக்கும் தீவனத்தை விட குறைந்த அளவு தீவனம் வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக பால் உற்பத்தியும் குறைந்துள்ளது. இது தொடர்பாக வேதனை அடைந்துள்ள விவசாயிகள் கூறியதாவது:
மாடு வளர்ப்பது என்பது குதிரைக் கொம்பாகி விட்டது. கால்நடை தீவனம், கோதுமை தவிடு உள்ளிட்டவற்றின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் மாடுகளை அடிமாட்டுக்கு விற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
அரசு மானிய விலையில் கால்நடை தீவனம், கோதுமைத் தவிடு, புண்ணாக்கு ஆகியவற்றை வழங்க வேண்டும். இதே நிலை நீடிக்குமானால் மாடுகளை வளர்க்க முடியாமல் அடிமாட்டு விலைக்கு விற்க வேண்டிய நிலை ஏற்படும்
இவ்வாறு விவசாயிகள் கூறினர்.
புதுவையில் மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
புதுவையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 25 பேர் கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரியிலும், கடலூர் மாவட்டத்தை சேர்ந்த 3 பேர் ஜிப்மரிலும், கேரளா கன்னூர் மற்றும் சென்னையில் தலா ஒருவரும், மாகியில் 2 பேரும் என மொத்தம் 32 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுவரை புதுவை மாநிலத்தில் கொரோனா வால் 43 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். அவர்களில் 12 பேர் குணமடைந்துள்ளனர். மீதி 32 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தற்போது புதுவையில் மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. மூகாம்பிகை நகரை சேர்ந்த 55 வயது மதிக்கத்தக்க ஒருவரும், மற்றொருவர் 26 வயதுடைய நெட்டப்பாக்கம் தனியார் கம்பெனி ஊழியரும் ஆவார்கள்.
இவர்கள் கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்த தகவலை அமைச்சர் மல்லாடிகிருஷ்ணாராவ் தெரிவித்துள்ளார்.

மாமியாருடன் ஏற்பட்ட தகராறில் காதல் திருமணம் செய்த பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
புதுச்சேரி:
புதுவை முத்துமாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் மணிகண்டன்.இவரது மனைவி அன்னலட்சுமி (வயது 24). இவர் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர் . இவர்களுக்கு குழந்தை இல்லை.
மணிகண்டன் தனது மனைவி மற்றும் தாயார் செண்பகவடிடன் கூட்டு குடும்பமாக வசித்து வந்தார். நேற்று முன்தினம் அன்னலட்சுமிக்கும் அவரது மாமியார் செண்பகவடிவுக்கும் குடும்ப தகராறு ஏற்பட்டது.அப்போது செண்பக வடிவு கோபித்து கொண்டு உறவினர் வீட்டுக்கு சென்று விட்டார். இதனால் அன்னலட்சுமி சோகமாக இருந்து வந்தார். அவரை அவரது தாயார் அம்சவள்ளி மற்றும் கணவர் மணிகண்டன் சமாதானம் செய்து வந்தனர்.ஆனாலும் அன்னலட்சமி சோகத்துடன் இருந்து வந்தார்.
இந்தநிலையில் நேற்று காலை மணிகண்டன் தனிக்குடுத்தனம் செல்வதற்காக வாடகை வீடு பார்க்க வெளியே சென்று விட்டார்.
அப்போது தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்த அன்னலட்சுமி துப்பட்டாவால் மின் விசிறியில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து தகவல் அறிந்த பெரியக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.