search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதுபானம்
    X
    மதுபானம்

    காரைக்காலில் மது விற்பனை மந்தம்

    காரைக்காலில் மது பிரியர்கள் கூடுதல் விலையால் மதுபாட்டில்கள் வாங்க முன்வரவில்லை. மதுக்கடை திறந்த முதல் நாளே விற்பனை மந்தமாகவே நடந்ததாக மதுக்கடை உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
    காரைக்காலில் மொத்தம் மற்றும் சில்லறை விற்பனைக்காக 58 கடைகள் உள்ளன. இதில் 13 மதுபான கடைகளின் உரிமம் தற்காலிக ரத்து செய்யப்பட்டு 45 மதுபான கடைகள் மட்டும் நேற்று திறக்கப்பட்டன. 25 சாராயக்கடைகளில் 4 கடைகள் உரிமம் ரத்து செய்யப்பட்டு 21 சாராயக்கடை கடைகள் திறக்கப்பட்டன. கள்ளுக் கடைகள் திறக்கப்பட்டன. திறக்கப்பட்ட அனைத்து கடைகளிம், கொரோனா வரியுடன் மதுபாட்டில்கள் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாலும், தமிழகப்பகுதி மற்றும் சுற்றுலாப் பயணிகள் வருகை ரத்தாலும், ஏராளமான மதுக்கடைகளில் சில மணிநேரம் மட்டுமே கூட்டம் இருந்தது.

    அதன்பிறகு மாலை வரை கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. இதனால், மதுக்கடை உரிமையாளர்கள் பெருத்த ஏமாற்றம் அடைந்ததோடு, வருவாய் இன்றி அதிருப்தி தெரிவித்துள்ளனர். மது பிரியர்களும் கூடுதல் விலையால் மதுபாட்டில்கள் வாங்க முன்வரவில்லை. குறைந்த விலைக்கு விற்கப்படும் சாராயத்தை வாங்கிச் சென்றனர். மதுக்கடை திறந்த முதல் நாளே விற்பனை மந்தமாகவே நடந்ததாக மதுக்கடை உரிமையாளர்கள் தெரிவித்தனர்.


    Next Story
    ×