என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    மீன்பிடி தடைக்காலம் குறைப்பு

    மீன்பிடி தடைக்காலம் 47 நாட்களாக குறைத்து மத்திய மீன்வள அமைச்சகம் அறிவித்துள்ளது.
    புதுச்சேரி:

    புதுச்சேரியில் கடந்த ஏப்ரல் 15-ந் தேதி முதல் ஜூன் 14-ந் தேதி வரை 61 நாட்களுக்கு மீன்பிடி தடைக்காலமாக மீன்வளத்துறை அறிவித்து இருந்தது. இந்த நிலையில் கொரோனா பரவலை தடுக்க கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் மீனவர்கள் யாரும் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்லவில்லை.

    இதனை கருத்தில் கொண்டு மீன்பிடி தடைக்காலத்தை 61 நாட்களில் இருந்து 47 நாட்களாக குறைக்க வேண்டுமென மீனவர்கள் வேண்டுகோள் விடுத்து வந்தனர்.

    இதையடுத்து தமிழகம், புதுச்சேரி அரசுகள் மற்றும் தேசிய மீனவர் பேரவை உள்ளிட்ட மீனவர் அமைப்புகளின் கோரிக்கையை ஏற்று இந்திய மத்திய அரசு மீன்வள அமைச்சகம், கிழக்கு கடற்கரை பகுதி மீனவர்களுக்கான வங்க கடல் மீன்பிடி தடை காலத்தின் அளவை 61 நாட்களில் இருந்து 47 நாட்களாக குறைத்து உத்தரவிட்டுள்ளது.

    அதன்படி இந்த ஆண்டுக்கான மீன்பிடி தடை காலத்தை ஏப்ரல் 15 முதல் மே 31 வரையிலான 47 நாட்களாக குறைத்துக்கொள்வதாக மத்திய மீன்வள அமைச்சகம் அறிவித்துள்ளது. அதேபோல் மேற்கு கடல் பகுதியில் ஜூன் 15 முதல் ஜூலை 31 வரை 47 நாட்களாக தடைக்காலம் குறைக்கப்பட்டுள்ளது.

    மத்திய மீன்வள அமைச்சக உதவி ஆணையர் டாக்டர் சஞ்சய் பாண்டே இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளதாக தேசிய மீனவர் பேரவை தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான இளங்கோ தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×