என் மலர்
புதுச்சேரி
புதுவையில் பஞ்சாப் காங்கிரஸ் அரசை கண்டித்து புதுவை பாரதீய ஜனதாவினர் போராட்டம் நடத்தினர்.
புதுச்சேரி:
பஞ்சாப் சென்ற பிரதமர் மோடிக்கு பாதுகாப்பு குளறுபடியை அம்மாநில காங்கிரஸ் அரசு ஏற்படுத்தியது.
இதனை கண்டித்து பஞ்சாப் காங்கிரஸ் அரசு பதவி விலக வலியுறுத்தி புதுவை பாரதீய ஜனதாவினர் தொடர் போராட்டம் நடத்தி வகிறார்கள். பா.ஜனதா பட்டியல் அணி சார்பில் அண்ணாசிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதன் தலைமை வகித்தார். அமைச்சர் நமச்சிவாயம் முன்னிலை வகித்தார். இதில் எம்.எல்.ஏ.க்கள் அசோக் பாபு, ராமலிங்கம், பொதுச்செயலாளர் மோகன்குமார், துணைத் தலைவர்கள் செல்வம், ரவிச்சந்திரன், செயலாளர்கள் அகிலன், நாகராஜ், விவசாய அணி தலைவர் புகழேந்தி, பட்டியல் அணி பொதுச்செயலாளர் தமிழ்மாறன், இளைஞரணி துணைத்தலைவர் சபரி உட்பட பலர் பங்கேற்றனர்.
புதுவையில் கால்நடை மருத்துவமனைகளை மேம்படுத்த நிதி வழங்க கோரி மத்திய மந்திரி முருகனிடம் அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் வலியுறுத்தினார்.
புதுச்சேரி:
மத்திய கால்நடைத்துறை மந்திரி முருகனை புதுவை கால்நடைத்துறை அமைச்சர் தேனீஜெயக்குமார் டெல்லியில் சந்தித்தார். அப்போது நடமாடும் கால்நடை மருத்துவமனைகள் அமைக்க நிதி ஒதுக்கித்தர வேண்டும் என வலியுறுத்தினார். இதற்காக 5 ஆம்புலன்ஸ்கள் வாங்க ரூ.90 லட்சம் நிதி ஒதுக்கித்தரவேண்டும் என்றார்.
மேலும் புதுவையில் உள்ள 25 சிறிய கால்நடை மருத்துவமனைகளையம், பெரிய கால்நடை மருத்துவ மனைகளையும் மேம்படுத்தவும், கால்நடைகளுக்கு மருந்து, ஊசி தடையின்றி வழங்கவும் நிதி அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். இதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாகவும், ஆம்புலன்சுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய மந்திரி தெரிவித்துள்ளார்.
அரசு பள்ளி மாணவர்களுக்கு -மருத்துவ கல்லூரியில் உள்ஒதுக்கீடு வழங்க வேண்டும் என அ.தி.மு.க. வலியுறுத்தி உள்ளது.
புதுச்சேரி:
புதுவை கிழக்கு மாநில அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்தநாளை கொண்டாடுவது குறித்து கிழக்கு மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
மாநில ஜெ.பேரவை செயலாளர் பாஸ்கர், மாநில இணைச் செயலாளர் அன்பானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட் டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
எம்.ஜி.ஆரின் 105--வது பிறந்த நாளை முன்னிட்டு புதுவை கிழக்கு மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் ஒவ்வொரு தொகுதி வாரியாக உள்ள ஏழை-எளிய மக்களுக்கு, இலவச வேட்டி, சேலை, தட்டு வண்டி, தள்ளுவண்டி, சலவைப்பெட்டி மாணவர் களுக்கு பாட புத்தகங்கள், அன்னதானம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவி களை வழங்கி சிறப்பாக கொண்டாடுவது.
நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில் தற்பொழுது அகில இந்திய மருத்துவம் சார்ந்த கல்வி இடஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 27 சதவீதம் வழங்க வேண்டும் என்ற அ.தி.மு.க.வின் கோரிக்கையை ஏற்று தீர்பபு வழங்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பை புதுவை அ.தி.மு.க. வரவேற்கிறது.
தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் மருத்துவ கல்வியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கிய உள் ஒதுக்கீடு போன்று புதுவையிலும் அரசு பள்ளி யில் பயிலும் மாணவர் களுக்கு மருத்துவ கல்வியில் உரிய உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும்.
மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. ராஜாராம், இணை செயலாளர் திருநாவுக்கரசு, முன்னாள் கவுன்சிலர் கணேசன், துணை செயலாளர்கள் கீர்த்தி, உமாமூர்த்தி, மணவாளன், ஸ்ரீதர், அமுதன் உள்பட பலர் பங்கேற்றனர்.
முன்கள பணியாளர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணியை கவர்னர் தொடங்கி வைத்தார்.
புதுச்சேரி:
கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. புதுவையில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது. 2-வது தவணை தடுப்பூசியும் போடப்பட்டு வருகிறது.
புதுவையில் இதுவரை முதல் தவணை தடுப்பூசியை 8 லட்சத்து 85 ஆயிரத்து 544 பேரும், 2-வது தவணை தடுப்பூசியை 5 லட்சத்து 80 ஆயிரத்து 223 பேர் என மொத்தம் 14 லட்சத்து 65 ஆயிரத்து 767 பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். சுமார் ஒரு லட்சம் பேர் தடுப்பூசி செலுத்த வேண்டியுள்ளது.
இந்நிலையில் கடந்த 6-ந் தேதி 15 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுவர் களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியும் தொடங்கியுள்ளது. அரசு, தனியார் பள்ளிகளில் முகாம் நடத்தி சுகாதாரத்துறையினர் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர்.
சுமார் 25 ஆயிரம் மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இன்னும் 55 ஆயிரம் மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டியுள்ளது. இதுதவிர கல்வி பயிலாத சிறுவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. 5 வருகிறது.
இந்நிலையில் நாடு முழுவதும் பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. புதுவை எல்லைபிள்ளை சாவடி ராஜீவ்காந்தி மகளிர், குழந்தைகள் நல ஆஸ்பத்திரியில் பூஸ்டர் தடுப்பூசி போடும் பணியை மதியம் ஒரு மணிக்கு கவர்னர் தமிழிசை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் கே.எஸ்.பி.ரமேஷ் எம்.எல்.ஏ., சுகாதாரத்துறை இயக்குனர் ஸ்ரீராமுலு உட்பட பலர் கலந்துகொண்டனர்.
முதல்கட்டமாக சுகாதார ஊழியர்கள், முன்கள பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்ட ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உட்பட இணை நோய் உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது. 2-வது தடுப்பூசி செலுத்தி 9 மாதம் நிறைவடைந்தவர்கள் பூஸ்டர் தடுப்பூசி செலுத்த தகுதியானவர்கள். அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு ஆஸ்பத்திரிகளில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.
புதுவையில் புத்தாண்டுக்கு பிறகு கொரோனா தொற்று அதிவேகமாக பரவி வருகிறது. கொரோனா பாதித்தவர்களில் 140 பேருக்கு ஒமைக்ரான் அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இவர்களின் மாதிரிகள் பெங்களூருவுக்கு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் இருந்து புதுவைக்கு வருவோர் கட்டாயம் ஒரு வாரம் வீடுகளில் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
புதுவை இந்திராகாந்தி சதுக்கத்தில் தடுப்பு கட்டையில் பஸ் மோதி 6 பயணிகள் காயம் அடைந்தனர்.
புதுச்சேரி:
புதுவை இந்திராகாந்தி சதுக்கத்தில் தனியார் பஸ் தடுப்பு கட்டையில் மோதி மற்றொரு பஸ் மீது மோதிய விபத்தில் 6 பயணிகள் காயமடைந்தனர்.
மதகடிப்பட்டில் இருந்து ஒரு தனியார் பஸ் பயணிகளை ஏற்றிக்கொண்டு புதுவைக்கு வந்து கொண்டி ருந்தது. அந்த பஸ் இந்திராகாந்தி சிலை சிக்னலை கடந்து சென்றது. அப்போது பின்னால் பயணிகளை ஏற்றிக் கொண்டு மற்றொரு தனியார் பஸ்சும் வந்து கொண்டிருந்தது. அந்த நேரத்தில் திடீரென சைக்கிளில் வந்த ஒருவர் ரோட்டை கடக்க முயன்றதால் அவர் மீது மோதாமல் இருக்க டிரைவர் பஸ்சை திருப்பினார்.
இதனால் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையோர தடுப்பு கட்டையில் மோதி அந்த வழியாக முதலியார்பேட்டை விடுதலை நகரை சேர்ந்த அமுதா (வயது32) என்ற பெண் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. மேலும் முன்னால் சென்ற பஸ் மீதும் மோதி நின்றது.
இதில் அதிர்ஷ்டவசமாக மோட்டார் சைக்கிளில் வந்த அமுதா சிறிய சிராய்ப்பு காயத்துடன் உயிர் தப்பினார். அதே வேளையில் பின்னால் வந்த பஸ்சில் பயணம் செய்த மூலக்குளத்தை கமலபிரியன் உள்பட 6 பயணிகள் காயமடைந்தனர். இவர்களில் 3 பேர் கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிலும், 2 பேர் ஜிப்மர் ஆஸ்பத்திரியிலும், ஒருவர் புதுவை அரசு ஆஸ்பத்திரியிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்து குறித்து கோரிமேடு போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்தவிபத்து காரணமாக இந்திராகாந்தி சிலை அருகே சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
புதுவையில் கொரோனா தொற்று நாள்தோறும் வேகமாக அதிகரித்து வருவது மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி:
புதுவை மாநிலத்தில் நேற்று ஆயிரத்து 570 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.
இதில் புதிதாக 489 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. புதுவையில் 438, காரைக்காலில் 49, ஏனாமில் 1, மாகியில் ஒருவர் புதிதாக தொற்றுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
புதுவையில் 85, காரைக்காலில் 16, மாகியில்11 பேர் என 112 பேர் தொற்றுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். புதுவையில் 11, காரைக்காலில் 6 பேர் என 17 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பினர்.
புதுவை மாநிலத்தில் ஒட்டுமொத்தமாக இதுவரை ஒரு லட்சத்து 31 ஆயிரத்து 211 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்து 27 ஆயிரத்து 607 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
புதுவையில் ஆயிரத்து 300, காரைக்காலில் 158, ஏனாமில் 4, மாகியில் 48 பேர் என ஆயிரத்து 610 பேர் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
புதுவை மாநிலத்தில் இப்போது ஆயிரத்து 722 பேர் கொரோனா தொற்றுடன் உள்ளனர். மாநிலத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்து 882 ஆக உள்ளது.
புதுவையில் 2-வது தவணை உட்பட 14 லட்சத்து 65 ஆயிரத்து 767 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர்.
இத்தகவலை சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
பரிசோதனை நடத்தியதில் 31 சதவீதத்தினருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. பரிசோதனை எண்ணிக்கை அதிகரிக்கும்போது தொற்றால் பாதித்தோர் எண்ணிக்கை கூடும் அபாயம் உள்ளது. புதுவையில் கொரோனா தொற்று நாள்தோறும் வேகமாக அதிகரித்து வருவது மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

வில்லியனூர் அருகே திருநங்கை எலி மருந்து தின்று தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி:
வில்லியனூர் அருகே ஆரியபாளையம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் துளசிங்கம். இவரது மகன் பிரவந்தி(வயது21).திருநங்கையான இவர் கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு அவதியடைந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சம்பவத்தன்று நோய் கொடுமை அதிகமானதால் பிரவந்தி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். வீட்டில் இருந்த எலி மருந்தை (விஷம்) எடுத்து தின்று விட்டார்.
இதில் மயங்கி விழுந்த பிரவந்தியை உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த பிரவந்தி நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்து போனார்.
இதுகுறித்து அவரது உறவினர் வீரப்பன் கொடுத்த புகாரின் பேரில் வில்லியனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு அனுமதி வழங்கியதால் புதுவையில் தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளது. மேலும் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி குற்றம் சாட்டினார்.
புதுச்சேரி:
புதுச்சேரி முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி சமூக வலைத்தள பதிவில் கூறியிருப்பதாவது:-
மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு செல்லும் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கி உள்ளது. இதனால் பல ஆயிரக்கணக்கான பிற்படுத்தப்பட்ட சமுதாய மாணவர்கள் பயனடைவார்கள். தமிழக அரசு நீட் தேர்வு இல்லாமல் மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என்று சட்டமன்றத்தில் ஒரு சட்டத்தை நிறைவேற்றி உள்ளது. அதற்கு தமிழக கவர்னர் தடையாக உள்ளார். மாநில அரசும், மத்திய அரசும் இணைந்து செயல்பட வேண்டும்.
மாநில அரசானது மக்கள் நலனுக்காக கொண்டு வருகிற சட்டங்களை நிறுத்துவது எப்படி பொருத்தமாக இருக்கும். நீட் தேர்வை ரத்து செய்வதன் மூலம் தமிழகம், புதுச்சேரியில் உள்ள ஏழை மாணவர்கள் மருத்துவம் படிப்பதற்கான வாய்ப்பை பெற முடியும். எனவே நீட் தேர்வை ரத்து செய்ய பிரதமர் மோடி உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புதுவை அரசு புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு அனுமதி வழங்கியதால் தொற்று அதிகரித்துள்ளது. இதற்கு கவர்னரும், முதல்-அமைச்சரும் பொறுப்பேற்க வேண்டும். கவர்னரிடம், முதல்-அமைச்சர் ஆலோசனை பெறலாம். முடிவு எடுக்கும் அதிகாரம் முதல்-அமைச்சருக்கு தான் உண்டு.
புதுவையில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. காவல்துறை வேடிக்கை பார்க்கிறது. சட்டம்-ஒழுங்கை கட்டுக்குள் கொண்டுவர முதல்-அமைச்சர் ரங்கசாமி தனது அதிகாரத்தை பயன்படுத்த வேண்டும். கவர்னரிடம் அதிகாரத்தை கொடுத்து விட்டு வேடிக்கை பார்க்கக் கூடாது.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

புதுவையில் அனைத்து ரேஷன்கார்களுக்கும் தலா ரூ.490 மதிப்பிலான பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகத்தை முதல்-அமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்.
புதுச்சேரி:
பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகத்தில் 21 வகையான பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. புதுவையில் ஆண்டுதோறும் 6 வகையான பொருட்கள் மட்டுமே வழங்கப்பட்டு வந்த நிலையில் முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமையிலான அரசு தற்போது அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா ரூ.490 மதிப்பிலான 10 வகையான பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பினை வழங்க முடிவு செய்தது.
அதாவது 100 கிராம் மஞ்சள் பொடி, 2 கிலோ பச்சரிசி, துவரம் பருப்பு, வெல்லம் ஆகியன தலா 1 கிலோ, முந்திரி பருப்பு, திராட்சை தலா 50 கிராம், ஏலக்காய் 10 கிராம், உளுந்து, கடலை பருப்பு, பாசிபருப்பு தலா 500 கிராம் என 10 வகையான பொருட்கள் ஒரே பையில் வைத்து வழங்கப்படுகிறது.
இந்த பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகம் நேற்று தொடங்கி வைக்கப்பட்டது. கதிர்காமம் தில்லையாடி வள்ளியம்மை அரசு உயர்நிலைப்பள்ளி எதிரே உள்ள ரேஷன்கடையில் நடந்த நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் ரங்கசாமி கலந்து கொண்டு பயனாளிகளுக்கு பொங்கல் பொருட்களை வழங்கினார்.
நிகழ்ச்சியில் அமைச்சர் சாய்.சரவணன் குமார், எம்.எல்.ஏ.க்கள் ஏ.கே.டி. ஆறுமுகம், கே.எஸ்.பி. ரமேஷ், குடிமை பொருள் வழங்கல் துறை செயலாளர் உதய குமார், கூட்டுறவு சிறப்பு செயலாளர் மலர்க்கண்ணன், குடிமை பொருள் வழங்கல் துறை மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை இயக்குனர் சக்திவேல் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
தொடர்ந்து முதல்-அமைச்சர் ரங்கசாமி கூறியதாவது:-
எங்கள் அரசு, அறிவித்த திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. முதியோர், மழை நிவாரணம் அனைவருக்கும் வழங்கப்பட்டுள்ளது. தற்போது பொங்கல் பொருட்கள் வழங்கும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் ரேஷன் கடைகளில் இன்று (திங்கட் கிழமை) முதல் பரிசு தொகுப்பினை பெற்றுக்கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதன் மூலம் புதுவையில் உள்ள சுமார் 3 லட்சத்து 42 ஆயிரம் குடும்பத்தினர் பயனடைவார்கள்.

புதுச்சேரியில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வரும் நிலையில் விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடுகள் விதித்த போதிலும், புதுச்சேரியில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படவில்லை. மதுபானக் கடைகள் நள்ளிரவு வரை திறந்து வைக்க அனுமதி வழங்கப்பட்டது. அதன்பின், நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து நள்ளிரவு வரை திறக்கப்படுவதற்கு தடைவிதிக்கப்பட்டது.
கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டத்திற்குப் பிறகு கொரோனா வைரஸ் தொற்று புதுச்சேரியில் அதிகரிக்க தொடங்கியுள்ளது. பள்ளி மாணவ- மாணவிகளும் பாதிப்புக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும், தற்போது இந்தியாவில் 3 அலை உருவாகி கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனால் 1 முதல் 9-ம் வகுப்பு பள்ளிக மாணவர்களுக்கு நாளை முதல் மறு அறிவிப்பு வரும் வரை விடுமுறை அளிக்கப்படுகிறது என அம்மாநில கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.
மேலும், வகுப்புகள் இணைய வழி மூலமாக பள்ளிகள் தொடர்ந்து நடைபெறும் என அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
அதிகாலை 5 மணி முதல் 10-ந் தேதி அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும். கடைகள், மால்கள், திரையரங்குகள் செயல்படவில்லை. பஸ்கள், ஆட்டோ, மெட்ரோ ரெயில் ஓடவில்லை. இதனால் தமிழகத்தில் இருந்து புதுவை வழியாக செல்லும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்படவில்லை.
அதுபோல் புதுவையில் இருந்து தமிழகத்திற்கு இயக்கப்படும் தமிழக அரசு பஸ்களும் இயங்கவில்லை. இதனால் புதுவை பஸ் நிலையத்தின் பெரும்பகுதி வெறிச்சோடி காணப்பட்டது. புதுவைக்குள் இயக்கப்படும் பஸ்கள் மட்டுமே புதுவையில் இயங்கியது. புதுவை மாநில எல்லைகளில் கொரோனா பரிசோதனை செய்யப்படும் என புதுவை சுகாதாரத்துறை அறிவித்திருந்தது.
ஆனால், மாநில எல்லைகளான கனக செட்டிக்குளம், கோரிமேடு, மதகடிப்பட்டு, முள்ளோடை, உள்ளிட்ட பகுதிகளில் எந்த பரிசோதனையும் செய்யப் படவில்லை. ஆனால், எல்லைப் பகுதியில் தமிழக போலீசார் சோதனை மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். புதுவையில் இருந்து செல்லும் வாகனங்களை தமிழக பகுதிக்குள் நுழைய தடை விதித்தனர்.
மருத்துவம், அரசு பணி மற்றும் அத்தியாவசிய பணிக்காக செல்லும் வாகனங்களை மட்டுமே அனுமதித்தனர். இதனால் மாநில எல்லைகளில் தமிழக போலீசாருடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட னர்.
விதிமுறைகளை மீறுபவர்கள், முககவசம் அணியாதவர்களிடம் தமிழக போலீசார் அபராதம் விதித்தனர்.
அதே நேரத்தில், தமிழகத்தில் இருந்து புதுவைக்கு வரும் வாகனங் களுக்கு எந்த தடையும் விதிக்கப்படவில்லை. வழக் கம் போல புதுவைக்குள் வாகனங்கள் வந்தன. வழக்கமாக ஞாயிற்றுக்கிழமைகளில் புதுவையை ஒட்டியுள்ள தமிழக பகுதியில் உள்ளவர்கள் புதுவைக்கு வருவது வழக்கம். அவர் களுக்கு எந்த தடையும் விதிக்கப்படவில்லை.
70 வயதுக்கு மேற்பட்ட முதியோர் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் புற நோயாளிகள் சிகிச்சை மையத்தில் மருத்துவ பதி வேடு பதியப்பட்டு, பொது மருத்துவ சிகிச்சை பிரிவுக்கு செல்ல வேண்டும்.
தற்போது கொரோனா தொற்று பரவல் உள்ள சூழ்நிலையில், நுழைவு வாயில் அருகே புற நோயாளிகள் சிகிச்சை மையத்தில், 80 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய முதியவர்களுக்கு சிகிச்சை பெற தனி பிரிவு தொடங்கப்பட்டது.
இந்த நிலையில், 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட முதியவர்களுக்கும் ஜிப்மர் நுழைவு வாயில் அருகே உள்ள புறநோயாளிகள் சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நடைமுறை வரும் செவ்வாய்கிழமை முதல் அமலுக்கு வருகிறது.
இது தொடர்பாக அனைத்து துறைகளுக்கும் மருத்துவமனை கண்காணிப்பாளர் சுற்ற றிக்கை அனுப்பியுள்ளார்.