என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புதுவை பா. ஜனதாவினர் அண்ணாசிலை அருகே ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    X
    புதுவை பா. ஜனதாவினர் அண்ணாசிலை அருகே ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    பஞ்சாப் காங்கிரஸ் அரசை கண்டித்து பா.ஜனதாவினர் போராட்டம்

    புதுவையில் பஞ்சாப் காங்கிரஸ் அரசை கண்டித்து புதுவை பாரதீய ஜனதாவினர் போராட்டம் நடத்தினர்.
    புதுச்சேரி:

    பஞ்சாப் சென்ற பிரதமர் மோடிக்கு பாதுகாப்பு குளறுபடியை அம்மாநில காங்கிரஸ் அரசு ஏற்படுத்தியது.
    இதனை கண்டித்து பஞ்சாப் காங்கிரஸ் அரசு பதவி விலக வலியுறுத்தி புதுவை பாரதீய ஜனதாவினர் தொடர் போராட்டம் நடத்தி வகிறார்கள். பா.ஜனதா பட்டியல் அணி சார்பில் அண்ணாசிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. 

    பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதன் தலைமை வகித்தார். அமைச்சர் நமச்சிவாயம் முன்னிலை வகித்தார். இதில் எம்.எல்.ஏ.க்கள் அசோக் பாபு, ராமலிங்கம், பொதுச்செயலாளர் மோகன்குமார், துணைத் தலைவர்கள் செல்வம், ரவிச்சந்திரன், செயலாளர்கள் அகிலன், நாகராஜ், விவசாய அணி தலைவர் புகழேந்தி, பட்டியல் அணி பொதுச்செயலாளர் தமிழ்மாறன், இளைஞரணி துணைத்தலைவர் சபரி உட்பட பலர் பங்கேற்றனர்.
    Next Story
    ×