search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "BJP struggle"

    • ராமநாதபுரத்தில் தி.மு.க. அரசை கண்டித்து பா.ஜ.க. சார்பில் நூதன போராட்டம் நடந்தது.
    • பல்வேறு நலத்திட்டங்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்காமல் தி.மு.க. அரசு துரோகம் செய்கிறது என குறிப்பிடப்பட்டிருந்தது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் பா.ஜ.க. பட்டியல் அணி சார்பில் தி.மு.க. அரசை கண்டித்து அம்பேத்கர் வேடமிட்டவரிடம் கோரிக்கை மனுக்களை அளித்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். ராமநாதபுரம் அரண்மனை முன்பு நடந்த பா.ஜ.க. (எஸ்.சி) அணி போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் ரமேஷ் கண்ணன் தலைமை தாங்கினார்.

    இதில் பா.ஜனதா மாவட்ட தலைவர் இ.எம்.டி.கதிரவன், மாவட்ட துணைத்தலைவர் முத்துசாமி, ஐகோர்ட்டு வக்கீலும், பா.ஜனதா பிரமுகருமான சண்முகநாதன், மாநில எஸ்.சி. அணி செயலாளர் பிரபு, நகர தலைவர் சுப நாகராஜன், மாநில செயற்குழு உறுப்பினர் இளங்கண்ணன், மாநில சிறப்பு செயற்குழு உறுப்பினர் சேகர், ஓ.பி.சி. அணி மாவட்ட தலைவர் பாரதிராஜன், மாவட்ட பொது செயலாளர் காளிராஜா மற்றும் நேதாஜி உள்பட பா.ஜனதா மாநில, மாவட்ட, நகர நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

    அந்த மனுவில், மத்திய அரசு பட்டியல் என சமுதாய மக்களுக்கு ஒதுக்கீடு செய்யும் நிதியை தி.மு.க. அரசு முறையாக செலவு செய்யாமல் திருப்பி அனுப்புகிறது. மேலும் பட்டியலின மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்காமல் தி.மு.க. அரசு துரோகம் செய்கிறது என குறிப்பிடப்பட்டிருந்தது.

    இந்த போராட்டத்தில் நகர தலைவர் பிச்சை, மாவட்ட செயலாளர் உமாரமணி, மாநில செயற்குழு உறுப்பினர் இளங்கண்ணன், கடலாடி தெற்கு ஒன்றிய தலைவர் செந்தில்குமார், கடலாடி கிழக்கு ஒன்றிய தலைவர் ஸ்டாலின் ஹீரோ கார்த்தி உள்பட பலர் பங்கேற்றனர்.

    புதுவையில் முன்னறிவிப்பு இன்றி மின் கட்டணம் திடீரென உயர்த்தப்பட்டதை கண்டித்து மின்சாதன பொருட்களை உடைத்து பா.ஜனதா கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    புதுச்சேரி:

    புதுவையில் முன்னறிவிப்பு இன்றி மின் கட்டணம் திடீரென உயர்த்தப்பட்டுள்ளது. தேர்தல் முடிவு வெளியான மறுநாளே மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

    மேலும் பா.ஜனதா, அ.தி.மு.க. உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் இந்த கட்டண உயர்வை கடுமையாக கண்டித்து உள்ளன. பொதுமக்களை பாதிக்கும் மின்கட்டண உயர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.



    இந்த நிலையில் மின் கட்டண உயர்வை கண்டித்து பா.ஜனதா கட்சியினர் இன்று காலை உப்பளம் சோனாம் பாளையத்தில் உள்ள மின்துறை தலைமை அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜனதா கட்சியினர் மின்சாதன பொருட்களை அடித்து உடைத்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

    மேலும் போராட்டத்தில் பங்கேற்ற பெண்கள் அம்மிக்கல்லை வைத்து மசாலா அரைத்து தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

    சேலம் மாவட்டம் ஏற்காட்டில் பா.ஜ.கவினர் கண்டன ஆர்பாட்டம் நடத்தினர். #BJp

    ஏற்காடு:

    சேலம் மாவட்டம் ஏற்காட்டில் மழைவாழ் மாணவர்களுக்கு சாதி சான்றிதழ் விரைவாக வழங்க கோரி, பா.ஜ.கவினர் கண்டன ஆர்பாட்டம் நடத்தினர். ஏற்காடு தொகுதி செயலாளர் பிரபாகரன் தலைமையில் ஆர்பாட்டம் தொடங்கியது. பா.ஜ.க முன்னாள் எம்.எல்.ஏ ரவிராஜன், மாவட்ட தலைவர் மாணிக்கம், எஸ்.சி. அணி மாநில செயலாளர் மதியழகன், கோட்ட பொறுப்பாளர் முருகேசன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். பா.ஜ.க. எஸ்.சி. அணி மாநில தலைவர் வெங்கடேசன் கலந்துக் கொண்டு ஆர்பாட்ட உரையாற்றினார். அவர் பேசியதாவது:-

    மழைவாழ் மக்கள் தங்களது பிள்ளைகளுக்கு சாதி சான்றிதழ் வேண்டி விண்ணப்பித்து பல மாதங்கள் காத்து கிடக்கின்றனர். எனவே அவர்களுக்கு விரைவாக சாதி சான்றிதழ் வழங்க வேண்டும். ஏற்காடு அரசு மருத்துமைனைக்கென்று ஆம்புலன்ஸ் வழங்க வேண்டும், ஏற்காடு அரசு மருத்துவமனையிலேயே போஸ்ட்மார்டம் செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த ஆர்பாட்டத்தில், ஏற்காடு ஒன்றிய தலைவர் சிவக்குமார், ஒன்றிய செயலாளர் ராஜன், தியாகு உள்ளிட்ட கட்சியினர் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    ×