என் மலர்
நீங்கள் தேடியது "Yercaud BJP"
ஏற்காடு:
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் மழைவாழ் மாணவர்களுக்கு சாதி சான்றிதழ் விரைவாக வழங்க கோரி, பா.ஜ.கவினர் கண்டன ஆர்பாட்டம் நடத்தினர். ஏற்காடு தொகுதி செயலாளர் பிரபாகரன் தலைமையில் ஆர்பாட்டம் தொடங்கியது. பா.ஜ.க முன்னாள் எம்.எல்.ஏ ரவிராஜன், மாவட்ட தலைவர் மாணிக்கம், எஸ்.சி. அணி மாநில செயலாளர் மதியழகன், கோட்ட பொறுப்பாளர் முருகேசன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். பா.ஜ.க. எஸ்.சி. அணி மாநில தலைவர் வெங்கடேசன் கலந்துக் கொண்டு ஆர்பாட்ட உரையாற்றினார். அவர் பேசியதாவது:-
மழைவாழ் மக்கள் தங்களது பிள்ளைகளுக்கு சாதி சான்றிதழ் வேண்டி விண்ணப்பித்து பல மாதங்கள் காத்து கிடக்கின்றனர். எனவே அவர்களுக்கு விரைவாக சாதி சான்றிதழ் வழங்க வேண்டும். ஏற்காடு அரசு மருத்துமைனைக்கென்று ஆம்புலன்ஸ் வழங்க வேண்டும், ஏற்காடு அரசு மருத்துவமனையிலேயே போஸ்ட்மார்டம் செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த ஆர்பாட்டத்தில், ஏற்காடு ஒன்றிய தலைவர் சிவக்குமார், ஒன்றிய செயலாளர் ராஜன், தியாகு உள்ளிட்ட கட்சியினர் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.






