என் மலர்
புதுச்சேரி
புதுவை சட்டசபைக்கு வரும் பொதுமக்களுக்கு இலவச முகக்கவசம், சானிடைசர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
கொரோனாவின் மறு உருவமான ஒமைக்ரான் தொற்று உலகம் முழுவதும் மிகவேகமாக பரவி வருகிறது. புதுவையிலும் இதன் வேகம் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
இதன் காரணமாக புதுவை சட்டசபை வளாகத்தில் கொரோனா தொற்றை தடுக்கும் விதமாகவும், கூட்டம் கூடுவதை தடுப்பதற்காகவும் சட்டசபைக்கு வரும் பொதுமக்கள் அனைவரும் சட்டசபை வாசலில் காவலர்களால் தடுத்து நிறுத்தப்பட்டு கொரோனா 2-வது டோஸ் தடுப்பு ஊசி செலுத்தியதற்கான சான்று, குறுந்தகவல், முகக்கவசம் அணிந்திருப்பதை ஆய்வு செய்த பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.
மேலும் சட்டசபைக்கு வரும் பொதுமக்களுக்கு இலவச முகக்கவசம், சானிடைசர் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்...மதுரையில் “கலைஞர் நூலகம்”- மு.க.ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டினார்
பஞ்சாப் தேர்தலுக்காக பா.ஜனதா நாடகமாடுகிறது என்று புதுவை காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் குற்றம் சாட்டினார்.
புதுச்சேரி:
புதுவை மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்ரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பஞ்சாபில் பிரதமர் மோடி பாதுகாப்பில் குளறுபடி ஏற்பட்டது தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் 4 பேர் கொண்ட விசாரணை குழு அமைத்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக நடந்து வரும் பிற விசாரணைகளையும் ரத்து செய்துள்ளது. பஞ்சாப் மாநிலம் பதிண்டா என்ற இடத்துக்கு பிரதமர் சென்றபோது விவசாயிகள் மறியலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதனால் பிரதமர் சென்ற வாகனங்கள் செல்ல முடியவில்லை. 20 நிமிடம் மேம்பாலத்தில் பிரதமர் நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டதால் நிகழ்ச்சிகளை ரத்து செய்து திரும்பி விட்டார். இதற்காக மாநில அரசை கலைக்கும் அளவு திட்டமிட்டு கட்சியினரை தூண்டிவிட்டு பா.ஜனதா போராட்டம் நடத்துகிறது.
புதுவையிலும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் போராட்டம் நடத்துவது வேடிக்கையாக உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக பிரதமர் பாதுகாப்பு குழு மீதுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாநில அரசு மீது குற்றம் சாட்டுவது நியாயமற்றது. இது பஞ்சாபில் நடக்க உள்ள தேர்தலுக்காக பா.ஜனதா நடத்தும் நாடகம். பா.ஜனதாவின் திட்டமிட்ட சதி குறித்து மக்களிடம் தெரிவிக்க காங்கிரஸ் சார்பில் போராட்டம், சமூக வலைதளங்களில் பிரசாரம் செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
புதுவை கண்டாக்டர் தோட்டத்தில் காசு வைத்து சூதாடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி:
புதுவை கண்டாக்டர் தோட்டத்தில் காசு வைத்து சூதாடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஒதியஞ்சாலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தமிழரசன் மற்றும் போலீசார் 10--ந் தேதி கண்டாக்டர் தோட்டம் பகுதியில் ரோந்து சென்றனர். பிரியதர்ஷினி நகரில் ரோந்து சென்ற போது அங்கு 3 பேர் கொண்ட கும்பல் காசு வைத்து சூதாடி கொண்டிருந்ததை போலீசார் கண்டனர். உடனே அவர்கள் 3 பேரையும் போலீசார் மடக்கிபிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் அவர்கள் முத்தியால்பேட்டை செந்தாமரை நகரை சேர்ந்த ஏழுமலை(40), உருளையன்பேட்டை பெரியார்நகரை அடுத்த ஜாபர்பாய்தோட்டம் பகுதியை சேர்ந்த சுரேஷ்(32) மற்றும் கண்டாக்டர் தோட்டம் பகுதியை சேர்ந்த சந்துரு(28) என்பது தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து சீட்டு கட்டுகள் மற்றும் சூதாட்ட பணம் ரூ.850 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
புதுவை அருகே ரெயில்வே கேட் கீப்பர் அறையில் கார் மோதியது.
புதுச்சேரி:
புதுவை அருகே ரெயில்வே கேட் கீப்பர் அறையில் கார் மோதியது.
விழுப்புரத்தில் இருந்து புதுவைக்கு வந்த கார் அதிகாலை கண்டமங்கலம் சின்னபாபு சமுத்திரம் ரெயில்வே கேட்டை கடக்க முயன்றது.
அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை மீறி புதுவை& -விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிள் பறந்து சென்று ரெயில்வே கேட் அருகே விழுந்தது.
அடுத்ததாக கார் சின்னபாபு சமுத்திரம் ரெயில்வே கேட் கீப்பர் அறை மீது மோதியது. கார் டிரைவர் தூங்கியதால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த விபத்தில் உயிர் சேதம் ஏதும் இல்லை.
சம்பவ இடத்துக்கு கண்டமங்கலம் போலீசார் விரைந்து வந்து காரை அங்கிருந்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுத்தனர்.
இதுகுறித்து கண்ட மங்கலம் ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுவை எம்.ஐ.டி. கல்லூரியில் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது.
புதுச்சேரி:
புதுவை கலிதீர்த்தாள்குப்பம் மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் (எம்.ஐ.டி.) சென்னை அமெரிக்கன் மெகா ட்ரென்ட்ஸ் நிறுவனம் சார்பில் பொது வளாக வேலைவாய்ப்பு முகாமை நடத்தியது.
நிகழ்ச்சிக்கு மணக்குள விநாயகர் கல்வி குழும தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் தனசேகரன், துணை தலைவர் சுகுமாறன் மற்றும் செயலாளர் டாக்டர் நாராயணசாமி கேசவன் ஆகியோர் தலைமை தாங்கினர். முகாமை கல்லூரி முதல்வர் மலர்க்கண் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அனைத்து துறையை சேர்ந்த வேலைவாய்ப்பு ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
இந்த முகாமில் புதுவை மற்றும் தமிழகத்தை சேர்ந்த பல்வேறு பொறியியல் கல்லூரிகளில் இருந்து நடப்பு கல்வி ஆண்டில் பயிலும் பட்டதாரிகள் 200-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு 20 மாணவர்கள் வேலைவாய்ப்பை பெற்று பயன் அடைந்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கல்லூரி வேலை வாய்ப்பு துறை அதிகாரி ஜெயக்குமார் செய்து இருந்தார்.
புதுவை ரேடியோ நிலையத்தை தபால் நிலையமாக மாற்றும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் என சிந்தனையாளர்கள் பேரவை வலியுறுத்தி உள்ளது.
புதுச்சேரி:
புதுவை சிந்தனையாளர் பேரவை தலைவர் கோ.செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நாட்டின் கலை, கலாச்சாரம், மொழி, இலக்கியம், பண்பாடு காக்கப்பட தகவல் மற்றும் செய்திகள் மக்களுக்கு சென்று சேர்ந்திட இந்திய அரசியல் சாசனப்படி, மத்திய அரசு அதிகாரத்தில் அகில இந்திய வானொலி மற்றும் அரசு தொலைக்காட்சி (தூர்தர்ஷன்) நிலையங்கள் நாடெங்கும் இயங்கி வருகின்றன. இவை அந்தந்த வட்டாரத்தின் கிராமியக் கலைஞர்கள், சங்கீத வித்வான்கள் மற்றும் படைப்பாளர்களை ஊக்குவிக்கும் பணியை கடந்த 80 ஆண்டுகளாக செய்து வருகின்றன.
ஆனால், கடந்த பல ஆண்டுகளாக இந்தப்பணி மத்திய அரசின் கடமை அல்ல எனக்கூறி பல காலக்கட்டங்களில் இதன் நிதி ஆதாரங்கள் வெகுவாக குறைக்கப்பட்டுவிட்டது. தற்போது இதன் தலைமை நிறுவனமான பிரசார்பாரதி ஆணைப்படி வருகிற 14-ந்தேதி தமிழர் திருநாளன்று (பொங்கல்) தொடங்கி இனி புதுவை உள்பட தமிழ்நாட்டின் இதர வானொலி நிலையங்களின் முதன்மை அலைவரிசைகள் சென்னை நிலையத்தின் அஞ்சல் நிலையங்களாக புது அவதாரம் எடுக்க உள்ளன.
இதனால் வட்டார படைப்பாளர்கள், விவசாயிகள், கலைஞர்கள், நேயர்கள் பெருமளவில் பாதிப்படைவர். எனவே, புதுவை கவர்னர் மற்றும் முதல்-அமைச்சர் மற்றும் எம்.பி.க்கள், இதர அமைப்புகள், 65 ஆண்டுகால புதுவை வானொலி நிலையத்தை பாதுகாக்கவும் இதர தமிழ்நாட்டு நிலையங்கள் தமது அடையாளங்களை இழக்காமல் காக்கப்படவும் உரிய நடவடிக்கையை விரைந்து எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
புதுவை கடற்கரை காந்தி திடலில் கைவினை பொருட்கள் கண்காட்சியை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தொடங்கி வைத்தார்.
புதுச்சேரி:
மத்திய ஜவுளி அமைச்சகம், கைவினை அபிவிருத்தி ஆணையர் அலுவலகம் மற்றும் புதுவை மாநில கூட்டுறவு கைவினை மற்றும் கைத்தறி இணையம் சார்பில் கிராப்ட் பஜார் என்ற அனைத்திந்திய கைவினை பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனை புதுவை கடற்கரை சாலையில் உள்ள காந்தி திடலில் தொடங்கியது. இந்த கண்காட்சியை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
நிகழ்ச்சியில் கூட்டுறவுத்துறை சிறப்பு செயலர் மலர்க்கண்ன், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் முகமது மன்சூர், மத்திய ஜவுளி அமைச்சகத்தின் கைவினை அபிவிருத்தி ஆணையர் அலுவலகத்தின் தென்மண்டல இயக்குனர் பிரபாகரன், துணை இயக்குனர் வினோத்குமார், கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் ராகினி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த கண்காட்சி வருகிற 19-ந் தேதி வரை தொடர்ந்து 10 நாட்களுக்கு தினமும் காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை நடக்கிறது. கைத்திறன் சந்தை படுத்துததல் மற்றும் சேவை மையங்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட சுமார் 100 கைவினை கலைஞர்கள் அவர்களின் தனிச்சிறப்பு வாய்ந்த பாரம்பரியமிக்க கைத்திறன் மற்றும் தேசிய மரபு சார்ந்த படைப்புகளை இக்கண்காட்சியில் பார்வைக்கும், விற்பனைக்கும் வைத்துள்ளனர்.
குறிப்பாக உத்தரபிரதேசத்தின் கலை உலோக பொருட்கள், கலைநயமிக்க கல்படைப்புகள், அச்சிடப்பட்ட துணி வகைகள், பீகாரின் மதுப்பணி ஓவியங்கள், பஞ்சாப்பின் புல்காரி வகைகள், தோல் பொருட்கள், அரக்கு வளையல்கள், மத்தியபிரதேசத்தின் டோக்ரா வகை உலோக வகைகள் மகாராஷ்டிராவின் கலைநயமிக்க தோல்காலணி வகைகள், துணி பொம்மைகள், கட்ச்பூத் தையல் வேலைகள், குஜராத்தின் பட்டோலா புடவைகள், பட்ட சித்திர ஓவியங்கள் உள்ளிட்டவை இக்காண்காட்சியில் காட்சிக்கும், விற்பனைக்கும் வைக்கப்பட்டுள்ளன.
வில்லியனூர் புதுமாப்பிள்ளை கொலையில் தம்பதி உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டது.
வில்லியனூர்:
வில்லியனூர் மூர்த்தி நகரை சேர்ந்த சங்கர் மகன் சதீஷ் என்ற மணிகண்டன் (வயது 28). ஏ.சி. மெக்கானிக். இவருக்கு கடந்த 4 மாதத்துக்கு முன் மதிவதனா (25) என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது.
சம்பவத்தன்று இரவு சதீசின் எதிர்வீட்டை சேர்ந்த சங்கர் (32), அவரது மனைவி ரமணி (28) ஆகியோர் தங்களது திருமண நாளை தெருவில் கேக் வெட்டி கொண்டாடினர். விழாவில் பங்கேற்ற ரமணியின் தம்பி ராஜா உள்பட சிலர் நடுரோட்டில் குடித்து விட்டு அநாகரிகமாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனை சதீஷ் மற்றும் அப்பகுதியை சேர்ந்த சிலர் தட்டிக்கேட்டனர்.
இதில் ஆத்திரம் அடைந்த ரமணியின் தம்பி ராஜா அங்கிருந்து சென்று விட்டார். பின்னர் இரவில் மீண்டும் அங்கு வந்து தனது வீட்டின் முன் செல்போனில் பேசிக் கொண்டிருந்த சதீசை, ராஜா உள்ளிட்ட அவரது நண்பர்கள் சரமாரியாக கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்றனர்.
இதில் பலத்த காயம் அடைந்த அவரை, உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி சதீஷ் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து வில்லியனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். குற்றவாளிகளை கைது செய்யக்கோரி சதீசின் உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் சமாதானம் செய்தனர்.
இதற்கிடையே குற்றவாளிகளை கைது செய்ய போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணையை முடுக்கி விட்டனர்.
வில்லியனூரில் பரபரப்பை ஏற்படுத்திய சதீஷ் கொலை தொடர்பாக மூர்த்தி நகரை சேர்ந்த சங்கர் (35), அவரது மனைவி ரமணி (28), கோபாலன்கடை பகுதியை சேர்ந்த ரமணியின் தம்பி ராஜா (26), வில்லியனூர் கணுவாப்பேட்டை பகுதியை சேர்ந்த தமிழ் செல்வன் என்ற தமிழ் (25), விழுப்புரம் மாவட்டம் தென்னல் பகுதியை சேர்ந்த அசாருதீன் என்ற அசார் (23) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கொலைக்கு பயன்படுத்திய 2 கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டன.
கைதான 5 பேரையும் கொரோனா பரிசோதனைக்குப் பின் கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் போலீசார் அடைத்தனர்.
சிறப்பாக செயல்பட்டு குற்றவாளிகளை விரைந்து கைது செய்த வில்லியனூர் போலீசாரை, சீனியர் போலீஸ் சூப்பிரண்டு லோகேஸ்வரன் வெகுவாக பாராட்டினார்.

வார இறுதி நாட்களில் ஊரடங்கு இல்லை. மக்களை பாதிக்காத வகையில் கொரோனா கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்துமாறு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் அறிவுறுத்தினார்.
புதுச்சேரி:
புதுவை கொரோனா மேலாண்மை குழுவின் அவசர கூட்டம் கவர்னர் மாளிகையில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் தலைமை செயலாளர் அஸ்வனிகுமார், போலீஸ் ஏ.டி.ஜி.பி. ஆனந்தமோகன், சுகா தாரத்துறை செயலாளர் உதய குமார், கலெக்டர் வல்லவன், கவர்னரின் செயலாளர் அபிஜித் விஜய் சவுத்ரி, சுகாதாரத்துறை இயக்குனர் ஸ்ரீராமுலு, கொரோனா தலைமை அதிகாரி டாக்டர் ரமேஷ், உலக சுகாதார நிறுவனத்தின் புதுவை பிரதிநிதி சாய்ரா பானு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
அப்போது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் ஸ்ரீராமுலு படக்காட்சி மூலம் தற்போதைய கொரோனா நிலவரம் குறித்து விளக்கினார். கூட்டத்தில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பேசியதாவது:-
நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும்போது மருத்துவர்களுக்கும், மருத்துவ பணியாளர்களுக்கும் பாதுகாப்பு திட்டத்தை உடனடியாக வகுக்க வேண்டும். மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாத வகையில் கொரோனா கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்த வேண்டும்.
திருமணங்கள், விளையாட்டு நிகழ்ச்சிகள், விழாக்கள் போன்றவற்றுக்கு கட்டுப்பாடுகளோடு அனுமதி வழங்கலாம். மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும். அறிவியல் பூர்வமான அணுகுமுறையை கடை பிடிக்க வேண்டும். கொரோனா மிக வேகமாக பரவி வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டால் நீண்ட நாட்களுக்கு பின் விளைவுகளை சந்திக்க நேரிடலாம்.
எனவே பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்ற தகவலை மக்களிடம் கொண்டு சேர்க்கவேண்டும். வார இறுதி நாட்களில் போடப்படும் ஊரடங்கு மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தும் என்பதால் மக்கள் கூடும் இடங்களில் கூட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும். அதிகாரிகள் எந்த நேரமும் ஆய்வு செய்யலாம் என்ற நிலையை ஏற்படுத்த வேண்டும்.
பொங்கல் விழா கொண்டாட தடையில்லை என்றாலும் காணும் பொங்கலன்று மக்கள் கூட்டம் கூடுவதை கட்டுப்படுத்த வேண்டும். இனி தடுப்பூசி தேவைப்படுவோர் மருத்துவமனைகளுக்கு சென்றுதான் போட்டுக்கொள்ள வேண்டும் என்ற எச்சரிக்கை உணர்வை மக்களிடம் ஏற்படுத்த வேண்டும்.
அவசியம் மற்றும் அவசர காரணங்களுக்காக மட்டும் மக்கள் மருத்துவமனைகளுக்கு வரலாம். அவ்வாறு இல்லாத நிலையில் இணைய வழியாக ஆலோசனை வழங்க ஏற்பாடு செய்யவேண்டும். அதற்காக முறையான முன்பதிவு முறையை நடைமுறைப்படுத்த வேண்டும்.
ஆஸ்பத்திரிகளில் போதிய அளவு படுக்கை வசதி, பிராணவாயு, மருந்துகள், மருத்துவ பணியாளர்களை தயார் நிலையில் வைக்கவேண்டும். புதுச்சேரியில் தடுப்பூசி போடுவதும் அதற்கான ஆவணத்தை வைத்துக்கொள்வதும் அவசியம் என்ற எண்ணத்தை மக்களிடம் ஏற் படுத்த வேண்டும். சுகாதாத்துறையும் மற்ற அரசுத்துறைகளும் இணைந்து சூழ்நிலையை கூர்ந்து கவனிக்கவேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.

ஒமைக்கரான் தொற்றை கண்டறியும் ஆய்வை சென்னை பரிசோதனை கூடத்தில் நடத்த அனுமதி அளிக்க கவர்னர் தமிழிசை கேட்டுக்கொண்டுள்ளார்.
புதுச்சேரி:
புதுவை ராஜீவ்காந்தி அரசு பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடும் முகாமினை கவர்னர் தமிழிசை தொடக்கி வைத்தார். அதைத்தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:--
2 தடுப்பூசி செலுத்தி, 9 மாதங்களுக்கு பிறகு பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம். பொது மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக இந்த பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும். பூஸ்டர் டோஸ் ஒரு மிகப்பெரிய பூஸ்ட்.
முதல் டோஸ் போடாதவர்கள் கட்டாயம் போட்டு கொள்ள வேண்டும். அரசு ஊழியர்கள் கட்டாயம் தடுப்பூசி போட வேண்டும் என கூறியிருந்தோம். 5 சதவீதம் பேர் தான் தடுப்பூசி செலுத்தாமல் உள்ளனர்.
தடுப்பூசியை அனைவரும் செலுத்திக்கொள்ள வேண்டும்.
கொரோனா அதிகரிப்பால் அதிக கட்டுப்பாடுகள் போடுவது குறித்து கோவிட் மேலாண்மை அவசரக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும்.
ஏற்கனவே நான் அறிவுறுத்தி வந்தபடி தடுப்பூசி செலுத்தியதற்கான ஆவணங்கள் தற்போது நாடுமுழுவதும் கேட்கத்தொடங்கியுள்ளார்கள்.
ஆகவே தடுப்பூசி செலுத்துவது கட்டாயமாக உள்ளது. புதுவையை பொருத்தவரை தடுப்பூசி தட்டுப்பாடும் இல்லை. தடுப்பூசியால் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.உருமாறிய கொரோனா தொற்று ஏற்பட்டாலும் நாம்தான் பாதுகாப்பாக இருக்கவேண்டும்.
தற்போது ஒமைக்ரான் தொற்றுள்ளதா என்பதை அறிய பரிசோதனை மாதிரிகளை பெங்களூருக்கு அனுப்பி வருகிறோம். அதை சென்னை பரிசோதனை கூடத்துக்கு அனுப்ப அனுமதி கோரி நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
புதுவையிலும் பரிசோதனை கூடம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பொதுமுடக்கம் மட்டும் கொரோனா விஷயத்தில் தீர்வாகாது. சூழ்நிலைக்கு ஏற்ப விஞ்ஞானபூர்வமாக ஆலோசிப்போம். மக்களின் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு தடுப்பு நடவடிக்கையோடு கண்காணிப்பிலும் ஈடுபடுகிறோம்
இவ்வாறு கவர்னர் தமிழிசை கூறினார்.
கொரோனா நிவாரண நிதியை அமைச்சர் சாய். ஜெ. சரவணன்குமார் வீடுகளுக்கே சென்று வழங்கினார்.
புதுச்சேரி:
கொரோனாவால் உயிரிழந்த குடும்பங்களுக்கு வீட்டிற்கு சென்று அரசின் நிவாரண தொகையை அமைச்சர் சாய்.ஜெ. சரவணன்குமார் வழங்கினார். கொரோனாவால் உயிரிழந்த நபரின் குடும்பத்திற்கு ரூ.50 ஆயிரம் அரசின் நிவாரண தொகையாக வழங்கப்படும் என முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிவித்திருந்தார்.
கடந்த ஆண்டிலிருந்து கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களுக்கு அரசு நிவாரணத் தொகையாக ரூ. 50ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஊசுடு தொகுதியைச் சேர்ந்த பயனாளிகளுக்கு அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார் அவர்களது வீடுகளுக்கு சென்று ரூ.50 ஆயிரத்திற்கான நிவாரணத் தொகையை வழங்கினார்.
பாதிக்கப்பட்டவர்களில் வீட்டுக்கே சென்று நிவார ணத் தொகையை அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார் நிவாரணம் வழங்கி வருகிறார்.
ஸ்பைடர் கைப்பந்து போட்டியில் கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ. தலைமையிலான அணிகள் சாம்பியன்ஷிப் கோப்பை வென்றது.
புதுச்சேரி:
புதுவை மாநில கைப்பந்து கழகம் சார்பில் 2 நாட்கள் சீனியர் ஆண்கள், பெண்களுக்கான மாநில சாம்பியன்ஷிப் போட்டிகள் இந்திராகாந்தி உள்விளையாட்டரங்கில் நடந்தது. காலாப்பட்டு ஸ்பைடர் கைப்பந்து கழகத்தின் ஆண்கள், பெண்கள் அணியினர் கைப்பந்து கழக தலைவர் கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ. தலைமையில் பங்கேற்றனர்.
இந்த போட்டிகளில் ஸ்பைடர் கைப்பந்து கழகத்தின் சீனியர் ஆண்கள், பெண்கள் அணியினர் சிறப்பாக விளையாடி 2022-ம் ஆண்டுக்கான சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றனர். 20 ஆண்டாக சாம்பியன்ஷிப் பெறாத அணியினர் கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ. கழக தலைவர் பதவியேற்றவுடன் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர். கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ.வே நேரடியாக களத்தில் இறங்கி சக வீரர்களோடு விளையாடி இந்த வெற்றியை பெற்றுத்தந்துள்ளார்.
வெற்றி பெற்ற அணிகளுக்கு அமைச்சர் நமச்சிவாயம், செல்வகணபதி எம்.பி., பிரகாஷ்குமார் எம்.எல்.ஏ. ஆகியோர் சாம்பியன்ஷிப் சுழற்கேடயத்தை வழங்கினர்.