என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    ஒமைக்கரான் தொற்றை கண்டறியும் ஆய்வை சென்னை பரிசோதனை கூடத்தில் நடத்த அனுமதி - கவர்னர் தமிழிசை

    ஒமைக்கரான் தொற்றை கண்டறியும் ஆய்வை சென்னை பரிசோதனை கூடத்தில் நடத்த அனுமதி அளிக்க கவர்னர் தமிழிசை கேட்டுக்கொண்டுள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவை ராஜீவ்காந்தி அரசு பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடும் முகாமினை கவர்னர் தமிழிசை தொடக்கி வைத்தார். அதைத்தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:--

    2 தடுப்பூசி செலுத்தி, 9 மாதங்களுக்கு பிறகு பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம். பொது மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக இந்த பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும். பூஸ்டர் டோஸ் ஒரு மிகப்பெரிய பூஸ்ட். 

    முதல் டோஸ் போடாதவர்கள் கட்டாயம் போட்டு கொள்ள வேண்டும். அரசு ஊழியர்கள் கட்டாயம் தடுப்பூசி போட வேண்டும் என கூறியிருந்தோம்.  5 சதவீதம் பேர் தான் தடுப்பூசி செலுத்தாமல் உள்ளனர். 

    தடுப்பூசியை அனைவரும் செலுத்திக்கொள்ள வேண்டும்.
    கொரோனா அதிகரிப்பால் அதிக கட்டுப்பாடுகள் போடுவது குறித்து கோவிட் மேலாண்மை அவசரக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும்.

    ஏற்கனவே நான் அறிவுறுத்தி வந்தபடி தடுப்பூசி செலுத்தியதற்கான ஆவணங்கள் தற்போது நாடுமுழுவதும் கேட்கத்தொடங்கியுள்ளார்கள். 

    ஆகவே தடுப்பூசி செலுத்துவது கட்டாயமாக உள்ளது. புதுவையை பொருத்தவரை தடுப்பூசி தட்டுப்பாடும் இல்லை. தடுப்பூசியால் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.உருமாறிய கொரோனா தொற்று ஏற்பட்டாலும் நாம்தான் பாதுகாப்பாக இருக்கவேண்டும்.

    தற்போது ஒமைக்ரான் தொற்றுள்ளதா என்பதை அறிய பரிசோதனை மாதிரிகளை பெங்களூருக்கு அனுப்பி வருகிறோம். அதை சென்னை பரிசோதனை கூடத்துக்கு அனுப்ப அனுமதி கோரி நடவடிக்கை எடுத்து வருகிறோம். 

    புதுவையிலும் பரிசோதனை கூடம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பொதுமுடக்கம் மட்டும் கொரோனா விஷயத்தில் தீர்வாகாது. சூழ்நிலைக்கு ஏற்ப விஞ்ஞானபூர்வமாக ஆலோசிப்போம். மக்களின் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு தடுப்பு நடவடிக்கையோடு கண்காணிப்பிலும் ஈடுபடுகிறோம் 

    இவ்வாறு கவர்னர் தமிழிசை கூறினார்.
    Next Story
    ×