என் மலர்
உள்ளூர் செய்திகள்

அமைச்சர் நமச்சிவாயம் சுழற்கோப்பை வழங்கினார்.
ஸ்பைடர் கைப்பந்து: கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ. அணி சாம்பியன்
ஸ்பைடர் கைப்பந்து போட்டியில் கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ. தலைமையிலான அணிகள் சாம்பியன்ஷிப் கோப்பை வென்றது.
புதுச்சேரி:
புதுவை மாநில கைப்பந்து கழகம் சார்பில் 2 நாட்கள் சீனியர் ஆண்கள், பெண்களுக்கான மாநில சாம்பியன்ஷிப் போட்டிகள் இந்திராகாந்தி உள்விளையாட்டரங்கில் நடந்தது. காலாப்பட்டு ஸ்பைடர் கைப்பந்து கழகத்தின் ஆண்கள், பெண்கள் அணியினர் கைப்பந்து கழக தலைவர் கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ. தலைமையில் பங்கேற்றனர்.
இந்த போட்டிகளில் ஸ்பைடர் கைப்பந்து கழகத்தின் சீனியர் ஆண்கள், பெண்கள் அணியினர் சிறப்பாக விளையாடி 2022-ம் ஆண்டுக்கான சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றனர். 20 ஆண்டாக சாம்பியன்ஷிப் பெறாத அணியினர் கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ. கழக தலைவர் பதவியேற்றவுடன் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர். கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ.வே நேரடியாக களத்தில் இறங்கி சக வீரர்களோடு விளையாடி இந்த வெற்றியை பெற்றுத்தந்துள்ளார்.
வெற்றி பெற்ற அணிகளுக்கு அமைச்சர் நமச்சிவாயம், செல்வகணபதி எம்.பி., பிரகாஷ்குமார் எம்.எல்.ஏ. ஆகியோர் சாம்பியன்ஷிப் சுழற்கேடயத்தை வழங்கினர்.
Next Story






