search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புதுமாப்பிள்ளை கொலை"

    • ஹோம் தியேட்டர் மியூசிக் சிஸ்டத்தை ஆய்வு செய்த போது அதில் வெடிப்பொருட்கள் நிரப்பப்பட்டு இருந்தது தெரியவந்தது.
    • திருமணத்தின் போது யாரெல்லாம் பரிசு பொருட்கள் வழங்கினார்கள் என்று போலீசார் ஆய்வு செய்தனர்.

    ராய்ப்பூர்:

    சத்தீஷ்கர் மாநிலம் கபீர்தனம் மாவட்டம் ரெங்காகர் பகுதியை சேர்ந்தவர் ஹேமேந்திரா மெராவி (வயது 22). இவருக்கு கடந்த 1-ந்தேதி திருமணம் நடந்தது.

    திருமணத்தில் பல்வேறு பரிசு பொருட்கள் குவிந்தன. அதில் ஒன்று ஹோம் தியேட்டர் (ஸ்பீக்கர்) மியூசிக் சிஸ்டம். இதை புது மாப்பிள்ளை ஹேமேந்திரா மெராவியும் அவரது சகோதரர் ராஜ்குமாரும் இயக்க முயன்றார்.

    இதற்காக ஹோம் தியேட்டர் மியூசிக் சிஸ்டத்தை மின் இணைப்போடு இணைத்த போது அது வெடித்து சிதறியது. இதில் மணமகன், அவரது சகோதரர், 1½ வயது குழந்தை உள்பட 6 பேர் படுகாயம் அடைந்தனர். இதில் மருத்துவமனையில் சிகிச்சை பலன் அளிக்காமல் புதுமாப்பிள்ளை ஹேமேந்திரா, அவரது சகோதரர் ராஜ்குமார் ஆகியோர் உயிரிழந்தனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். ஹோம் தியேட்டர் மியூசிக் சிஸ்டத்தை ஆய்வு செய்த போது அதில் வெடிப்பொருட்கள் நிரப்பப்பட்டு இருந்தது தெரியவந்தது.

    இதை தொடர்ந்து திருமணத்தின் போது யாரெல்லாம் பரிசு பொருட்கள் வழங்கினார்கள் என்று ஆய்வு செய்தனர். மணமகளின் முன்னாள் காதலன் சர்ஜூ மார்கம் ஹோம் தியேட்டர் மியூசிக் சிஸ்டத்தை பரிசாக வழங்கியது தெரியவந்தது. இதை தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர்.

    இது தொடர்பாக கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மனிஷா தாகூர் கூறியதாவது:-

    விசாரணையின் போது குற்றம் சாட்டப்பட்ட சர்ஜூ தனது முன்னாள் காதலியை திருமணம் செய்து கொண்ட ஹேமேந்திரா மெராவி மீது கோபமாக இருந்ததை ஒப்புக்கொண்டார். எனவே அவர் வெடிப்பொருட்கள் நிரப்பிய ஹோம் தியேட்டரை பரிசாக கொடுத்து கொலை சம்பவத்தை நிகழ்த்தி இருக்கிறார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கடந்த 8-ந்தேதி ஹோலி பண்டிகையன்று சிந்துவுக்கும் அதே பகுதியை சேர்ந்த மகதோ என்ற வாலிபருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
    • கொலையாளிகளை உடனடியாக கைது செய்யக்கோரி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    பாட்னா:

    பீகார் மாநிலத்தில் உள்ள சீதாமர்கி நகரை சேர்ந்த வாலிபர் சிந்து. 20 வயதான இவருக்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தான் திருமணம் நடந்துள்ளது.

    இந்நிலையில் 2 நாட்களுக்கு முன்பு அவர் வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ளார். அதன் பிறகு சிந்து வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடி பார்த்தும் அவர் கிடைக்கவில்லை.

    இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்நிலையில் நேற்று அப்பகுதியில் உள்ள முட்புதரில் சிந்து படுகொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். அவரது உடலிலும், முகத்திலும் ஆழமான வெட்டுக்காயங்கள் இருந்தன.

    மேலும் உடல் முழுவதும் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் கத்திக்குத்து காயங்களும் இருந்தன. இதைப்பார்த்து அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

    போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். கடந்த 8-ந்தேதி ஹோலி பண்டிகையன்று சிந்துவுக்கும் அதே பகுதியை சேர்ந்த மகதோ என்ற வாலிபருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த விரோதத்தில் தான் கொலை நடந்திருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.

    இதற்கிடையே கொலையாளிகளை உடனடியாக கைது செய்யக்கோரி அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என போலீசார் உறுதி அளித்ததை ஏற்று பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

    • தாமோதர் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பது கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் இதுகுறித்து பெத்த பஞ்சாயத்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து நகைக்காக தாமோதர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் திருவ பத்தலாபுரம் பகுதியை சேர்ந்தவர் தாமோதர் (வயது 24). பினுகூறு பகுதியை சேர்ந்தவர் அனுராதா (20) என்பவருக்கும் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

    கார்த்திகை மாத சோமவாரத்தையொட்டி தம்பதியினர் இருவரும் அனுராதா வீட்டிற்கு பைக்கில் சென்றனர்.

    பின்னர் நேற்று இரவு 10 மணியளவில் இருவரும் பைக்கில் வந்து கொண்டு இருந்தனர். இடுக்க நெல்லூர் என்ற இடத்தில் வந்த போது ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் இவர்களது பைக்கை 3 பேர் கும்பல் வழிமறித்தனர்.

    அவர்கள் பைக்கில் இருந்த தாமோதரை இழுத்து கீழே தள்ளி கல்லால் சரமாரியாக தாக்கினர். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அனுராதா கத்தி கூச்சலிட்டார். அவர் மீதும் தாக்குதல் நடத்தினர்.

    அப்போது அந்த வழியாக வந்த சங்கரப்பா என்பவர் இதனைக் கண்டு ஊருக்குள் சென்று அங்குள்ள பொதுமக்களிடம் தகவலை தெரிவித்தார். பொதுமக்கள் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் மர்ம நபர்கள் தாமோதரை கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு அனுராதா அணிந்திருந்த நகைகளை பறித்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டனர்.

    தாமோதர் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பது கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் இதுகுறித்து பெத்த பஞ்சாயத்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் வழக்கு பதிவு செய்து நகைக்காக தாமோதர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • முத்தரசன் திருமணத்திற்கு முன்பே குடிபோதையில் ரவிச்சந்திரன் மற்றும் அவரது மகள் அரவிந்தியா ஆகியோரிடம் தகராறு செய்து ஊர் பஞ்சாயத்தார் சமாதானம் செய்து வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
    • தற்போது திருமணத்திற்கு பிறகும் குடிபோதையில் தகராறு செய்வதை மாமனார் கண்டித்துள்ளார்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே வீராபுரம் கிராமத்தில் வசித்து வருபவர் சிற்றரசன். இவரது மகன் முத்தரசன். முத்தரசன் நிரந்தர வேலை இன்றி டிரைவர் உள்ளிட்ட கிடைக்கும் அனைத்து வேலைகளையும் செய்து வந்துள்ளார்.

    இவருக்கு மங்களநாயகிபுரம் பகுதியை சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவரது மகள் அரவிந்தியா(25) என்ற பெண்ணுடன் கடந்த 13-ந்தேதி திருமணம் நடைபெற்றது.

    இந்நிலையில் நேற்று முத்தரசன் தனது மனைவியை அழைத்துக்கொண்டு மாமனார் வீட்டிற்கு விருந்திற்கு வந்துள்ளார். அப்போது முத்தரசன் குடிபோதையில் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. முத்தரசன் திருமணத்திற்கு முன்பே குடிபோதையில் ரவிச்சந்திரன் மற்றும் அவரது மகள் அரவிந்தியா ஆகியோரிடம் தகராறு செய்து ஊர் பஞ்சாயத்தார் சமாதானம் செய்து வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    தற்போது திருமணத்திற்கு பிறகும் குடிபோதையில் தகராறு செய்வதை மாமனார் கண்டித்துள்ளார். அதனை முத்தரசன் கேட்கவில்லையாம். இதனால் இவர் மீது மாமனார் ரவிச்சந்திரன் ஆத்திரத்தில் இருந்துள்ளார்.

    இந்நிலையில் நேற்று இரவு தனது மாமனார் ரவிச்சந்திரன் வீட்டின் வெளியே முத்தரசன் நின்று கொண்டு இருந்த போது ரவிச்சந்திரன் தனது மருமகனை அரிவாளால் வெட்டியுள்ளார். சரமாரியாக வெட்டியதில் சம்பவ இடத்திலேயே முத்தரசன் இறந்தார். இதையடுத்து ரவிச்சந்திரன் தலைமறைவானார்.

    இது குறித்து தகவலறிந்த திருத்துறைப்பூண்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து முத்தரசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் தனது மருமகனை வெட்டிக் கொலை செய்துவிட்டதாக கூறி ரவிச்சந்திரன் போலீசில் சரணடைந்துள்ளார். போலீசார் ரவிச்சந்திரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமணமான 5 நாட்களில் புது மாப்பிள்ளை வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×