பீகாரில் 100 முறை கத்தியால் குத்தி புதுமாப்பிள்ளை படுகொலை

கடந்த 8-ந்தேதி ஹோலி பண்டிகையன்று சிந்துவுக்கும் அதே பகுதியை சேர்ந்த மகதோ என்ற வாலிபருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. கொலையாளிகளை உடனடியாக கைது செய்யக்கோரி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பீகாரில் 100 முறை கத்தியால் குத்தி புதுமாப்பிள்ளை படுகொலை
Published on

பாட்னா:

பீகார் மாநிலத்தில் உள்ள சீதாமர்கி நகரை சேர்ந்த வாலிபர் சிந்து. 20 வயதான இவருக்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தான் திருமணம் நடந்துள்ளது.

இந்நிலையில் 2 நாட்களுக்கு முன்பு அவர் வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ளார். அதன் பிறகு சிந்து வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடி பார்த்தும் அவர் கிடைக்கவில்லை.

இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் நேற்று அப்பகுதியில் உள்ள முட்புதரில் சிந்து படுகொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். அவரது உடலிலும், முகத்திலும் ஆழமான வெட்டுக்காயங்கள் இருந்தன.

மேலும் உடல் முழுவதும் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் கத்திக்குத்து காயங்களும் இருந்தன. இதைப்பார்த்து அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். கடந்த 8-ந்தேதி ஹோலி பண்டிகையன்று சிந்துவுக்கும் அதே பகுதியை சேர்ந்த மகதோ என்ற வாலிபருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த விரோதத்தில் தான் கொலை நடந்திருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.

இதற்கிடையே கொலையாளிகளை உடனடியாக கைது செய்யக்கோரி அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என போலீசார் உறுதி அளித்ததை ஏற்று பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com