என் மலர்
உள்ளூர் செய்திகள்

வேலைவாய்ப்பு முகாமில் வேலைவாய்ப்பு பெற்ற மாணவ--மாணவிகள் படத்தில் காணலாம்.
எம்.ஐ.டி. கல்லூரியில் வேலை வாய்ப்பு முகாம்
புதுவை எம்.ஐ.டி. கல்லூரியில் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது.
புதுச்சேரி:
புதுவை கலிதீர்த்தாள்குப்பம் மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் (எம்.ஐ.டி.) சென்னை அமெரிக்கன் மெகா ட்ரென்ட்ஸ் நிறுவனம் சார்பில் பொது வளாக வேலைவாய்ப்பு முகாமை நடத்தியது.
நிகழ்ச்சிக்கு மணக்குள விநாயகர் கல்வி குழும தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் தனசேகரன், துணை தலைவர் சுகுமாறன் மற்றும் செயலாளர் டாக்டர் நாராயணசாமி கேசவன் ஆகியோர் தலைமை தாங்கினர். முகாமை கல்லூரி முதல்வர் மலர்க்கண் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அனைத்து துறையை சேர்ந்த வேலைவாய்ப்பு ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
இந்த முகாமில் புதுவை மற்றும் தமிழகத்தை சேர்ந்த பல்வேறு பொறியியல் கல்லூரிகளில் இருந்து நடப்பு கல்வி ஆண்டில் பயிலும் பட்டதாரிகள் 200-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு 20 மாணவர்கள் வேலைவாய்ப்பை பெற்று பயன் அடைந்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கல்லூரி வேலை வாய்ப்பு துறை அதிகாரி ஜெயக்குமார் செய்து இருந்தார்.
Next Story






