என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புதுவை சட்டசபைக்கு வந்தவர்களிடம் 2 தவணை தடுப்பூசி செலுத்தி உள்ளார்களா? என சபை காவலர்கள் பரிசோதித்த காட்சி.
    X
    புதுவை சட்டசபைக்கு வந்தவர்களிடம் 2 தவணை தடுப்பூசி செலுத்தி உள்ளார்களா? என சபை காவலர்கள் பரிசோதித்த காட்சி.

    கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே புதுவை சட்டசபைக்குள் வர அனுமதி

    புதுவை சட்டசபைக்கு வரும் பொதுமக்களுக்கு இலவச முகக்கவசம், சானிடைசர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    புதுச்சேரி:

    கொரோனாவின் மறு உருவமான ஒமைக்ரான் தொற்று உலகம் முழுவதும் மிகவேகமாக பரவி வருகிறது. புதுவையிலும் இதன் வேகம் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

    இதன் காரணமாக புதுவை சட்டசபை வளாகத்தில் கொரோனா தொற்றை தடுக்கும் விதமாகவும், கூட்டம் கூடுவதை தடுப்பதற்காகவும் சட்டசபைக்கு வரும் பொதுமக்கள் அனைவரும் சட்டசபை வாசலில் காவலர்களால் தடுத்து நிறுத்தப்பட்டு கொரோனா 2-வது டோஸ் தடுப்பு ஊசி செலுத்தியதற்கான சான்று, குறுந்தகவல், முகக்கவசம் அணிந்திருப்பதை ஆய்வு செய்த பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.

    மேலும் சட்டசபைக்கு வரும் பொதுமக்களுக்கு இலவச முகக்கவசம், சானிடைசர் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.



    Next Story
    ×