என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    புதுவையில் காசு வைத்து சூதாடிய 3 பேர் கைது

    புதுவை கண்டாக்டர் தோட்டத்தில் காசு வைத்து சூதாடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
    புதுச்சேரி:
    புதுவை கண்டாக்டர் தோட்டத்தில் காசு வைத்து சூதாடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

    ஒதியஞ்சாலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தமிழரசன் மற்றும் போலீசார் 10--ந் தேதி கண்டாக்டர் தோட்டம் பகுதியில் ரோந்து சென்றனர். பிரியதர்ஷினி நகரில் ரோந்து சென்ற போது அங்கு 3 பேர் கொண்ட கும்பல் காசு வைத்து சூதாடி கொண்டிருந்ததை போலீசார் கண்டனர். உடனே அவர்கள் 3 பேரையும் போலீசார் மடக்கிபிடித்து விசாரித்தனர். 

    விசாரணையில் அவர்கள் முத்தியால்பேட்டை செந்தாமரை நகரை சேர்ந்த ஏழுமலை(40), உருளையன்பேட்டை பெரியார்நகரை அடுத்த ஜாபர்பாய்தோட்டம் பகுதியை சேர்ந்த சுரேஷ்(32) மற்றும் கண்டாக்டர் தோட்டம் பகுதியை சேர்ந்த சந்துரு(28) என்பது தெரியவந்தது.

    இதையடுத்து  அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து சீட்டு கட்டுகள் மற்றும் சூதாட்ட பணம் ரூ.850 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    Next Story
    ×