என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணியை கவர்னர் தொடங்கி வைத்தார்.
    X
    பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணியை கவர்னர் தொடங்கி வைத்தார்.

    புதுவை: முன்கள பணியாளர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி- கவர்னர் தமிழிசை தொடங்கி வைத்தார்

    முன்கள பணியாளர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணியை கவர்னர் தொடங்கி வைத்தார்.
    புதுச்சேரி:

    கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. புதுவையில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது. 2-வது தவணை தடுப்பூசியும் போடப்பட்டு வருகிறது. 

    புதுவையில் இதுவரை முதல் தவணை தடுப்பூசியை 8 லட்சத்து 85 ஆயிரத்து 544 பேரும், 2-வது தவணை தடுப்பூசியை 5 லட்சத்து 80 ஆயிரத்து 223 பேர் என மொத்தம் 14 லட்சத்து 65 ஆயிரத்து 767 பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். சுமார் ஒரு லட்சம் பேர் தடுப்பூசி செலுத்த வேண்டியுள்ளது. 

    இந்நிலையில் கடந்த 6-ந் தேதி 15 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுவர் களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியும் தொடங்கியுள்ளது. அரசு, தனியார் பள்ளிகளில் முகாம் நடத்தி சுகாதாரத்துறையினர் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். 

    சுமார் 25 ஆயிரம் மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இன்னும் 55 ஆயிரம் மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டியுள்ளது. இதுதவிர கல்வி பயிலாத சிறுவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. 5 வருகிறது.

    இந்நிலையில் நாடு முழுவதும் பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது.  புதுவை எல்லைபிள்ளை சாவடி ராஜீவ்காந்தி மகளிர், குழந்தைகள் நல ஆஸ்பத்திரியில் பூஸ்டர் தடுப்பூசி போடும் பணியை மதியம் ஒரு மணிக்கு கவர்னர் தமிழிசை தொடங்கி வைத்தார்.  நிகழ்ச்சியில் கே.எஸ்.பி.ரமேஷ் எம்.எல்.ஏ., சுகாதாரத்துறை இயக்குனர் ஸ்ரீராமுலு உட்பட பலர் கலந்துகொண்டனர். 

    முதல்கட்டமாக சுகாதார ஊழியர்கள், முன்கள பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்ட ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உட்பட இணை நோய் உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது. 2-வது தடுப்பூசி செலுத்தி 9 மாதம் நிறைவடைந்தவர்கள் பூஸ்டர் தடுப்பூசி செலுத்த தகுதியானவர்கள். அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு ஆஸ்பத்திரிகளில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.

    புதுவையில் புத்தாண்டுக்கு பிறகு கொரோனா தொற்று அதிவேகமாக பரவி வருகிறது. கொரோனா பாதித்தவர்களில் 140 பேருக்கு ஒமைக்ரான் அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இவர்களின் மாதிரிகள் பெங்களூருவுக்கு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

    வெளிநாடுகளில் இருந்து புதுவைக்கு வருவோர் கட்டாயம் ஒரு வாரம் வீடுகளில் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
    Next Story
    ×