என் மலர்
உள்ளூர் செய்திகள்

மத்திய மந்திரி முருகனுக்கு அமைச்சர் தேனீ.ஜெயகுமார் பழக்கூடை வழங்கிய காட்சி.
கால்நடை மருத்துவமனைகளை மேம்படுத்த நிதி- மத்திய மந்திரி முருகனிடம் வலியுறுத்தல்
புதுவையில் கால்நடை மருத்துவமனைகளை மேம்படுத்த நிதி வழங்க கோரி மத்திய மந்திரி முருகனிடம் அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் வலியுறுத்தினார்.
புதுச்சேரி:
மத்திய கால்நடைத்துறை மந்திரி முருகனை புதுவை கால்நடைத்துறை அமைச்சர் தேனீஜெயக்குமார் டெல்லியில் சந்தித்தார். அப்போது நடமாடும் கால்நடை மருத்துவமனைகள் அமைக்க நிதி ஒதுக்கித்தர வேண்டும் என வலியுறுத்தினார். இதற்காக 5 ஆம்புலன்ஸ்கள் வாங்க ரூ.90 லட்சம் நிதி ஒதுக்கித்தரவேண்டும் என்றார்.
மேலும் புதுவையில் உள்ள 25 சிறிய கால்நடை மருத்துவமனைகளையம், பெரிய கால்நடை மருத்துவ மனைகளையும் மேம்படுத்தவும், கால்நடைகளுக்கு மருந்து, ஊசி தடையின்றி வழங்கவும் நிதி அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். இதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாகவும், ஆம்புலன்சுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய மந்திரி தெரிவித்துள்ளார்.
Next Story






