என் மலர்
புதுச்சேரி
ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனியாக சிகிச்சை அளிக்கப்படுவதில்லை. கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்படும் அதே சிகிச்சை முறைகள் தான் வழங்கப்பட்டு வருகிறது.
புதுச்சேரி:
உலகம் முழுவதும் கொரோனாவின் 3-வது அலை மற்றும் ஒமைக்ரான் தொற்று அதிவேகமாக பரவி வருகிறது. புதுச்சேரியில் ஒமைக்ரான் வைரஸ் அறிகுறி உள்ளவர்களின் சளி மாதிரிகள் பரிசோதனைக்காக பெங்களூருவுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. பரிசோதனை முடிவுகள் வர 20 முதல் 25 நாட்கள் ஆகிறது.
இந்த நிலையில் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனியாக சிகிச்சை அளிக்கப்படுவதில்லை. கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்படும் அதே சிகிச்சை முறைகள் தான் வழங்கப்பட்டு வருகிறது.
எனவே ஒமைக்ரான் பரிசோதனை முடிவுகள் வர காலதாமதம் ஏற்படுவதாலும், பரிசோதனை கட்டணம் அதிகம் என்பதாலும் தற்போது ஒமைக்ரான் பரிசோதனை நிறுத்தப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் எதிரொலியாக 50 சதவீத அரசு ஊழியர்கள் பணிக்கு வந்தால் போதுமானது என்று புதுவை அரசு அறிவித்துள்ளது.
புதுச்சேரி:
புதுவை அரசின் நிர்வாக சீர்திருத்தத்துறை சார்பு செயலாளர் ஜெய்சங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கொரோனா தொற்று பரவல் அதிகரிப்பு எதிரொலியாக மத்திய அரசின் உத்தரவின்படி அரசு அலுவலகங்கள் செயல்படுவது தொடர்பாக சில வழிகாட்டுதல்கள் வெளியிடப்படுகிறது. இதன்படி அனைத்து ‘ஏ’ பிரிவு அதிகாரிகளும் அலுவலகம் வரவேண்டும்.
அதேபோல் சார்பு செயலாளர்கள், துறைத்தலைவர்கள், அலுவலக தலைமை பொறுப்பில் இருப்பவர்கள், பிற நிர்வாக தலைவர்கள் அனைவரும் பணிக்கு வரவேண்டும். குரூப் ‘பி’ மற்றும் ‘சி’ பிரிவு அலுவலர்கள் 50 சதவீதம் பேர் சுழற்சி முறையில் பணிக்கு வந்தால் போதுமானது.
மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணி ஊழியர்களுக்கு அலுவலகம் வருவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. அவர்கள் வீட்டிலிருந்தே பணி செய்யலாம்.
அத்தியாவசிய தேவை பணிகளில் இருப்பவர்களுக்கு இந்த 50 சதவீத பணியாளர்கள் வருகை என்பது பொருந்தாது. கட்டுப்பாட்டு மண்டலங்களில் வசிப்பவர்கள் அலுவலகங்களுக்கு வருவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. வீட்டிலிருந்து பணி செய்பவர்கள் தொலைபேசி உள்ளிட்ட எலக்ட்ரானிக் சாதனங்களை எந்த நேரமும் தயார் நிலையில் வைத்திருக்கவேண்டும்.
கூட்டங்களை காணொலி காட்சி மூலம் நடத்த வேண்டும். தனிப்பட்ட கூட்டங்கள், பார்வையாளர்களை சந்திப்பதை தவிர்க்கலாம். அனைத்து நேரங்களிலும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். அலுவலக தலைமை பொறுப்பில் இருப்பவர்கள் அனைத்து ஊழியர்களும் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருப்பதை உறுதி செய்யவேண்டும்.
பணியிடங்களை முறையாக சுத்தம் செய்ய வேண்டும், அலுவலகங்களில், உணவகங்களில் தேவையற்ற கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

பாரதிதாசன் மகளிர் கல்லூரியில் முதலாமாண்டு வகுப்புகள் நாளை மறுநாள் தொடங்கப்படும் என்று கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி:
பாரதிதாசன் மகளிர் கல்லூரி முதல்வர் ராஜிசுகுமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
புதுச்சேரி பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரியில் 2021-22 கல்வியாண்டில் முதலாமாண்டு வகுப்புகள் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) தொடங்க உள்ளன. காலைநேர சுழற்சியில் (காலை 8.30 முதல் 12.40 வரை) அனைத்து அறிவியல் துறைகள், வணிகவியல் மற்றும் வணிகத்துறை செயலர் இயல் பிரிவுகளுக்கும், மதியநேர சுழற்சியில் (மதியம் 1 முதல் 5.10 மணி வரை) அனைத்து கலை இயல் துறைகளுக்கும் வகுப்புகள் நடைபெறும்.
அனைத்து மாணவிகளும் கல்லூரிக்கு வரும் முதல் நாள் அன்றே 11-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், ஆதார் அட்டை, தடுப்பூசி சான்றிதழ் ஆகியவற்றின் நகல்களை அந்தந்த துறை தலைவர்களிடம் ஒப்படைக்க வேண்டும். மாணவிகள் கட்டாயம் முககவசம் அணிந்திருக்கவேண்டும். கொரோனா கட்டுப்பாடு முறைகளை அவசியம் கடைபிடிக்க வேண்டும்.

மின் கட்டண பாக்கியை உடனே செலுத்தாவிட்டால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்று புதுவை மின்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
புதுச்சேரி:
புதுவை மின்துறை செயற்பொறியாளர் அலுவலக செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
வில்லியனூர், பூமியான்பேட்டை, லாஸ்பேட்டை, கோரிமேடு, அசோக்நகர், முத்திரையர்பாளையம், காலாப்பட்டு, ராமநாதபுரம், சேதராப்பட்டு, திருக்கனூர், காட்டேரிக்குப்பம் ஆகிய மின் அலுவலகத்துக்கு உட்பட்ட மின்நுகர்வோர்கள் தங்களுடைய மின் கட்டண பாக்கியை உடனே செலுத்த வேண்டும். இல்லையெனில் மின்பாக்கி வைத்துள்ள இணைப்புகள் துண்டிக்கப்படும். அதன்பிறகு நிலுவைத்தொகை முழுவதையும் செலுத்திய பிறகே மறுமின் இணைப்பு வழங்கப்படும்.

விமானம், கப்பன் போக்குவரத்தை மேம்படுத்தும் மத்திய அரசு திட்டத்தில் புதுவை இணைக்கப்பட்டுள்ளதாக கவர்னர் தமிழிசை தெரிவித்தார்.
புதுச்சேரி:
புதுவை அரசு செய்தி மற்றும் விளம்பரத்துறை சார்பில் தமிழக முன்னாள் முதல்- அமைச்சர் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா கொணடாடப்பட்டது. விழாவையொட்டி புதிய பஸ் நிலையம் எதிரே உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு கவர்னர் தமிழிசை மாலை அணிவித்து மரியாதை செலுத்ததினார்.
தொடர்ந்து முதல்- அமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர்கள் லட்சுமிநாராயணன், சாய்.ஜெ.சரவணன்குமார், துணை சபாநாயகர் ராஜவேலு, எம்.எல்.ஏ.க்கள் கே.எஸ்.பி.ரமேஷ், ஏ.கே.டி. ஆறுமுகம், பாஸ்கரன் ஆகியோரும் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பின்னர் கவர்னர் தமிழிசை நிருபர்களிடம் கூறியதாவது:-
எம்.ஜி.ஆரின் பிறந்தநாளில் அவருக்கு அஞ்சலி செலுத்துவதில் பெருமை கொள்கிறோம். நான் பார்த்த வகையில் ஒரு மனித நேயம் மிக்க தலைவர். காமராஜர் கொண்டு வந்த மதிய உணவு திட்டத்தை குழந்தைகளுக்கும் நீட்டித்தவர்.
மத்திய மந்திரி நிதின் கட்கரி தலைமையில் நாட்டு முன்னேற்றங்களை விரிவுபடுத்துவதற்கு வேகசக்தி என்ற திட்டத்தை தொடங்கி உள்ளனர். நாட்டின் 18 துறைகள் ஒன்றிணைந்து எப்படி இந்தியா முழுவதும் முன்னேற்றத்தை ஏற்படுத்துவது என திட்டமிடப்படுகிறது. இந்த திட்டத்தில் புதுவையும் சேர்க்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.
இதற்கான இணைய வழி மாநாட்டில் நானும், முதல்-அமைச்சர் ரங்கசாமியும் பங்கேற்கிறோம். இது புதுவைக்கு மிகப்பெரிய பெருமை. புதுவைக்கு சாலை, விமானம், கப்பல் போக்குவரத்து சேவைகளை மேம்படுத்துவது தொடர்பாக ஆலோசிக்கப்படுகிறது. இதன் மூலம் புதுவை, காரைக்காலில் துறைமுக விரிவாக்கம், அதிக சாலைகள் அமைப்பது, விமான போக்குவரத்து மேம்பாடு போன்றவை பலப்படுத்தப்படும்.
ஒட்டுமொத்த புதுவை வளர்ச்சிக்கு இந்த நாள் அமைந்துள்ளது. இத்திட்டத்தின் மூலம் ரூ.100 லட்சம் கோடி பிரதமர் முதலீடு செய்ய உள்ளார். இதில் புதுவை மிக முக்கிய இடம் பெற்றுள்ளது.
இவ்வாறு கவர்னர் தமிழிசை தெரிவித்தார்.
புதுவை பல்கலைக்கழக ஊழியர் வீட்டில் புகுந்து மர்ம நபர்கள் நகையை கொள்ளையடித்து சென்று விட்டனர்.
புதுச்சேரி:
தவளக்குப்பம் அருகே அபிஷேகப்பாக்கத்தை சேர்ந்தவர் சிவராமகிருஷ்ணன். இவர் காலாப்பட்டு மத்திய பல்கலைகழகத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். பணிக்கு செல்ல வசதியாக இவர் கடந்த சில ஆண்டுகளாக புதுவை அருகே கோட்டக்குப்பம் ஜமித் நகரில் வாடகை வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
பொங்கல் பண்டிகையையொட்டி சிவராமகிருஷ்ணன் வீட்டை பூட்டி விட்டு அபிஷேகப்பாக்கத்தில் உள்ள தனது சொந்த வீட்டுக்கு குடும்பத்துடன் சென்றார். அங்கு பாங்கல் பண்டிகை கொண்டாடி விட்டு கோட்டக்குப்பம் திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தது. அதில் வைத்திருந்த 5 பவுன் நகையை காணவில்லை. யாரோ மர்ம நபர்கள் வீட்டை பூட்டி சென்றதை நோட்டமிட்டு வீட்டின் கதவை திறந்து நகையை கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ. 2 லட்சமாகும்.
இதுகுறித்து சிவராமகிருஷ்ணன் கோட்டக்குப்பம் போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரித்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை தேடிவருகிறார்கள்.
பொதுமக்கள் எந்நேரமும் நடமாட்டம் மிகுந்த இப்பகுதியில் வீட்டில் புகுந்து மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
புதுவையில் 10, 12-ம் வகுப்பு திருப்புதல் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக கல்வித்துறை அறிவித்துள்ளது.
புதுச்சேரி:
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வருகிற (புதன்கிழமை) முதல் தொடங்கவிருந்த திருப்புதல் தேர்வையும் தமிழக அரசு ஒத்திவைத்தது. புதுவையில் 1 முதல் 9-ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுவையில் 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த பள்ளிகள் தொடர்ந்து இயங்கும் என சுகாதாரத்துறை தெரிவித்திருந்தது.
இந்த ஆண்டு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு புதுவை கல்வித்துறை தயாரிக்கும் வினாத்தாள் அடிப்படையில் தேர்வு நடைபெறும் என்று அரசு அறிவித்திருந்தது.
இந்த நிலையில் வருகிற (19-ந்தேதி) தொடங்க இருந்த திருப்புதல் தேர்வை புதுவை அரசின் கல்வித்துறை ஒத்திவைத்துள்ளது.
இதற்கான அறிவிப்பை கல்வித்துறை இணை இயக்குனர் சிவகாமி வெளியிட்டுள்ளார்.
புதுவை உள்கட்டமைப்புகளை மேம்படுத்த மத்திய அரசு ஒத்துழைக்க வேண்டும் என்று ரங்கசாமி வலியுறுத்தி உள்ளார்.
புதுச்சேரி:
மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைதுறை மந்திரி நிதின் கட்காரி தலைமையில் தென்மண்டல கதி சக்தி மாநாடு வீடியோ கான்பரன்சிங்கில் நடந்தது.முதல்-அமைச்சர் ரங்கசாமி, உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் மற்றும் துறை அதிகாரிகள் இதில் பங்கேற்றனர். மாநாட்டில் முதல்-அமைச்சர் ரங்கசாமி பேசியதாவது:-
புதுவையில் இந்திரா காந்தி சதுக்கம் முதல் ராஜீவ்காந்தி சதுக்கம் வரை சாலை சந்திப்புகளை மேம்படுத்த ரூ.450 கோடிக்கு அனுமதி அளித்த மத்திய மந்திரிக்கு நன்றி. இத்திட்டம் நெரிசலை குறைப்பதோடு, காத்திருக்கும் நேரத்தையும் குறைக்கும். புதுவையில் விமான நிலைய வசதிகளை விரிவு படுத்த மத்திய மந்திரி ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். புதுவை விமான நிலைய விரிவாக்கத்துக்கு கூடுதலாக ஆயிரத்து 828 மீட்டர் ஓடுபாதை தேவை.
விமான நிலைய மேம்பாட்டு தேவைகளை பூர்த்தி செய்ய 3 ஆயிரத்து 330 மீட்டர் ஓடுபாதை தேவை. புதுவையில் விமான நிலைய உள்கட்டமைப்பை மேம்படுத்த நிலம் கையகப்படுத்தும் செயல்முறை அவசர தேவையாக உள்ளது. காரைக்கால் சனீஸ்வர பகவானை வழிபட பிற மாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர்.
காரைக்காலில் விமான நிலைய வசதி இல்லை. காரைக்காலில் ஹெலிபேட், விமான நிலைய கட்டமைப்பு காலத்தின் தேவை. மத்திய மந்திரி இதற்கு முக்கியத்துவம் தர வேண்டும்.
காரைக்கால்- புதுவை இடையே மத்திய அரசு நிதியுதவியுடன் படகு சேவை வழங்க வேண்டும். புதுவை, காரைக்கால் துறைமுக உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த தாராளமாக மத்திய அரசு உதவ வேண்டும். புதுவை- கடலலூர் இடையே போக்குவரத்து நெரிசல் அதிகரித்து உயிரிழப்புகள் ஏற்படுகிறது. இதிலிருந்து பொது மக்களை விடுவிக்க மரப்பாலம் சந்திப்பு முதல் முள்ளோடை வரை மேம் படுத்தப்பட்ட சாலை அமைப்பது அவசர தேவை மத்திய உதவியால் மட்டுமே இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த முடியும்.
புதுவை, தமிழகத்தின் அண்டை மாவட்டங்களுக்கு இடையிலான ரெயில் இணைப்பு போதியதாகவும், தரமற்றதாகவும் உள்ளது. தரங்கம்பாடி, சீர்காழி வழியாக காரைக்கால், கடலூர் வரை இணைக்கும் ரெயில்பாதை விரிவாக்கம், புதுவை, காரைக்கால் இணைப்பை எளிதாக்கும். அதிக எண்ணிக்கையிலான ரெயில் இணைப்புகளுடன் மாகி பிராந்தியத்தில்
ரெயில்வே அமைப்பை மேம் படுத்த வேண்டும்.
சென்னை,- மகாபலிபுரம், புதுவைக்கு சாலை போக்குவரத்து மட்டுமே உள்ளது. புதுவையின் வருங்கால வளர்ச்சிக்கும், தொழில் வளர்ச்சிக்கும் சென்னை-- புதுவை வர்த்தக வழித்தடத்தில் ரெயில் இணைப்பை உருவாக்குவது பயனுள்ளதாக இருக்கும். மத்திய மந்திரி முன்னுரிமை அடிப்படையில் இவ் விஷயத்தை பரிசீலிக்க வேண்டும். ரெயில் இணைப்பு காக்கிநாடாவில் இருந்து ஏனாம் வரை நீட்டிக்கப்பட வேண்டும். மத்திய மந்திரி புதுவை மாநில தேவைகளை உரிய முறையில் நிறைவேற்றவும், உதவிகளை வழங்கவும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
புதுவை கிழக்கு மாநில அ.தி.மு.க. சார்பில் மறைந்த தமிழக முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரின் 105-வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
புதுச்சேரி:
புதுவை கிழக்கு மாநில அ.தி.மு.க. சார்பில் மறைந்த தமிழக முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரின் 105-வது பிறந்த நாள் விழா உப்பளம் கட்சி தலைமை அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது. அங்குள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன் மாலை அணிவித்து தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கி பேசினார்.
விழாவில், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பாஸ்கர், ராஜாராமன், அ.தி.மு.க. நிர்வாகிகள் எம்.ஏ.கே. கருணாநிதி, அன்பழக உடையார், ரவி பாண்டுரங்கன், அன்பானந்தம், கணேசன், குமுதன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

புதுவை மேற்கு மாநில அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆ.ர் பிறந்தநாள் விழா மேற்கு மாநில செயலாளர் ஓம்சக்திசேகர் தலைமையில் கொண்டாடப்பட்டது. முன்னதாக பஸ் நிலையம் எதிரே உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மேற்கு மாநில செயலாளர் ஓம்சக்தி சேகர் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் தொண்டர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
தொடர்ந்து குயவர்பாளையம் லெனின் வீதியில் உள்ள மேற்கு மாநில அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த எம்ஜிஆர் திருவுருவ படத்திற்கு மாநில செயலாளர் ஓம்சக்தி சேகர் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதே போல் மேற்கு மாநில தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் கொண்டாடப்பட்டு ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சிகளில் மேற்கு மாநில அ.தி.மு.க. நிர்வாகிகள் பேராசிரியர் ராமதாஸ், காசிநாதன், மாநில துணை தலைவர்கள் நந்தன், ஓவியா ஆனந்தன், மாநில இணை செயலாளர் மகாதேவி, மாநில துணைச் செயலாளர்கள் நாகமணி, கோவிந்தம்மாள், சதாசிவம், கணேசன், மாநில பொருளாளர் சங்கர் உடையார், மாநில அணி செயலா ளர்கள் சிவாலயா இளங்கோ சுத்துக்கேணி பாஸ்கர், வெரோனிக்கா, வக்கீல் குணசேகரன்,, விக்னேஷ் காசிநாதன், லட்சுமணன், புகழ்பாரி,முருகன்,கணேசன், மாநில அணி தலை வர்கள் லியோ ராஜசேகர், ராதாகிருஷ்ணன் உடையார், மாசிலா குப்புசாமி, முருகதாஸ் மற்றும் தொகுதி செயலாளர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
புதுவை முத்தியால் பேட்டை அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழ.ழா கொண்டாடப்பட்டது. முத்தியால்பேட்டை மணிக்கூண்டு அருகே வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வைக்கப் பட்டிருந்த எம்.ஜி.ஆர். உருவப்படத்துக்கு அ.தி. மு.க. கிழக்கு மாநில தேர்தல் பிரிவு செயலாளர் வையாபுரிமணிகண்டன் மலர்தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து நிர்வாகிகள், தொண்டர்கள், பொது மக்களுக்கு இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கினார்.
நிகழ்ச்சியில் அ.தி.மு.க. நிர்வாகிகள் கஜேந்திரன், பழனிசாமி, உதயசூரியன், செல்வம், மோகன், முருகேசன், விஸ்வநாதன், கண்ணன், மண்ணாங்கட்டி, ஹரிகிருஷ்ணா, முனி யாண்டி, வாசு, தனஞ்செயன், பிரபா, கஜேந்திரன், குமார், ராமலிங்கம், சிவா, நடராஜ், முத்து, ராதா, தனலட்சுமி, ஜமுனா மற்றும் ஊர் பிரமுகர்கள், தொண்டர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
மனித நேய மக்கள் சேவை இயக்கம் சார்பில் நேரு எம்.எல்.ஏ. தலைமையில் எம்.ஜி.ஆர். உருவ படத்திற்கு படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடந்து ஊர்வலமாக சென்று எம்.ஜி.ஆர். சிலைக்கு நேரு எம்.எல்.ஏ. தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது.
புதிய நீதி கட்சி சார் பில் மாநில தலைவர் பொன்னுரங்கம் தலைமையில் நிர்வாகிகள் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
கொரோனாவை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காமல் வியாபாரிகளை திருப்திபடுத்த அரசு செயல்படுகிறது என காங்கிரஸ் குற்றம் சாட்டி உள்ளது.
புதுச்சேரி:
புதுவை மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி. சுப்ரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கொரோனா வேகமாக பரவுவதில், புதுவை மாநிலம், இந்தியாவில் நம்பர் ஒன் இடத்தை பிடித்துள்ளது. கவர்னரின் வானளாவிய அதிகாரத்தில் ஆட்பட்டுள்ள என்.ஆர். காங்கிரஸ்- பா.ஜனதா அரசு ஊரடங்கு போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சரியான காலத்தில் காலத்தோடு செய்யாமல் ஒரு சில வியாபாரிகளை திருப்திப்படுத்துவதற்காக செயல்படுவதாக தெரிகிறது.
நம்மை விட 50 மடங்கு மக்கள் தொகையில் பெரிய மாநிலமான தமிழ்நாட்டில் சுற்றுலாத்தலங்களை மூடுவது, வழிபாட்டு தலங்களை மூடுவது, டாஸ்மாக் உள்ளிட்ட வியாபார ஸ்தாபனங்களை மூடுவது போன்றவை செய்யப்படுகிறது. இதனைஅறியாமையால் செய்யப்படுகிறது என்று புதுவை ஆட்சியாளர்கள் நினைக்கிறார்கள்.
புதுவை மக்கள் மீது அக்கறை ஆட்சியாளர்களுக்கு இருந்தால் இதுபோல் செயல்பட மாட்டார்கள். புதுவை மாநில மக்களின் உடல்நலம் மற்றும் உயிரை விட பெரியது என்று இவர்கள் எதை மதிப்பிடுகிறார்கள்? அஞ்சத்தக்கவை என்று தெரிந்தும் அஞ்சாமல் இருப்பது அறியாமை என வள்ளுவர் கூறியுள்ளதை ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு ஏ.வி. சுப்ரமணியன் அறிக்கையில் கூறியுள்ளார்.
புதுவையில் கொரோனாவுக்கு 3 பேர் பலியாகி உள்ளனர்.
புதுச்சேரி:
புதுவையில் ஆயிரத்து 579 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.
புதிதாக 907 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இது பரிசோதனையில் 57 சதவீதமாகும். புதுவையில் 801, காரைக்காலில் 77, ஏனாமில் 8, மாகியில் 21 பேர் புதிதாக தொற்றுடன் சிகிச்சை பெற்று வரு கின்றனர்.
புதுவையில் 83, காரைக்காலில் 26, ஏனாமில் 4, மாகியில் 17 பேர் என 130 பேர் தொற்றுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். புதுவையில் 72, காரைக்காலில் 59, மாகியில் 16 பேர் என 147 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பினர்.
புதுவை மாநிலத்தில் ஒட்டு மொத்தமாக இதுவரை ஒரு லட்சத்து 38 ஆயிரத்து 617 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்து 28 ஆயிரத்து 168 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
புதுவையில் 7 ஆயிரத்து 295, காரைக்காலில் 754, ஏனாமில் 57, மாகியில் 123 பேர் என 8 ஆயிரத்து 229 பேர் வீட்டு தனிமையில் உள்ளனர். புதுவை மாநி லத்தில் இப்போது 8 ஆயிரத்து 359 பேர் கொரோனா தொற்றுடன் உள்ளனர்.
புதுவை கலிதீர்த்தாள் குப்பத்தை சேர்ந்த 85 வயது முதியவர், ரெட்டி யார்பாளையத்தை சேர்ந்த 65 வயது பெண், காரைக்காலை சேர்ந்த 67 வயது ஆண் ஆகியோர் கொரோனா சிகிச்சை பலனின்றி இறந்தனர். இதனால் மாநிலத்தில் கொரோனாவுக்கு பலியா னோர் எண்ணிக்கை ஆயிரத்து 890 ஆக உயர்ந் துள்ளது. புதுவையில் 2-வது தவணை உட்பட 14 லட்சத்து 97 ஆயிரத்து 771 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர்.
இத்தகவலை சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
புதுவையில் கொரோனா தொற்று எண்ணிக்கையோடு, பலி எண்ணிக்கையும் உயர்ந்து வருவது பொதுமக்களிடையே பீதியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக திருப்புதல் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
இந்தியா முழுவதும் கொரோனா பரவல் அதிவேகமாக அதிகரித்து வருகிறது. புதுச்சேரியில் இன்றைய நிலவரப்படி 907 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும் கடந்த ஒரே நாளில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் புதுச்சேரியில் வரும் 19 ஆம் தேதி 10,12- ம் வகுப்புகளுக்கு தொடங்கவிருந்த திருப்புதல் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.
கொரோனா பரவல் குறைந்த பிறகு திருப்புதல் தேர்வுக்கான மாற்று தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் புதுச்சேரி மாநில கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வரும் 19-ம் தேதி தொடங்க இருந்த திருப்புதல் தேர்வு ஒத்திவைக்கப்பட்ட நிலையில் இன்று புதுச்சேரியிலும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.