என் மலர்
புதுச்சேரி
புதுவையில் நடைபெறும் போலீஸ் தேர்வில் யாருடைய குறுக்கீடும் இருக்காது என அமைச்சர் நமச்சிவாயம் உறுதி அளித்தார்.
புதுச்சேரி:
புதுவை காவல்துறையில் காலியாக உள்ள 390 போலீசார், 12 ரேடியோ டெக்னீஷியன் உள்ளிட்ட காலி பணியிடங்கள் நிரப் பப்பட உள்ளது.
இந்த பணிகளுக்காக விண்ணபித்தவர்களில் 14 ஆயிரத்து 787 பேர் தகுதி உடையவர்களாக தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இவர்களுக்கான உடல் தகுதி தேர்வு 19-ந்தேதி கோரிமேடு போலீஸ் மைதானத்தில் தொடங்குகிறது.
எவ்வித தவறுகளுக்கும் இடமளிக்காமல் நேர்மை யாக நடைபெறும் வகை யில் கம்ப்யூட்டர் சிப் பொருத்தப்பட்ட பட்டை அணிந்து ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் உள்ளிட்ட உடல் தகுதிகள் துல்லியமாக கணக்கிடப்பட உள்ளது.
தேர்வுக்கு வருவோருக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கு வருவோர் செல்போன் எடுத்து வர அனுமதி கிடையாது. தேர்வில் ஈடுபடும் போலீசாரும் செல்போன் பயன்படுத்தக்கூடாது. மீறி வைத்திருந்தால் அவர்கள் சஸ்பெண்டு செய்யப்படுவார்கள் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
தேர்வில் ஈடுபடும் போலீசாரின் உறவினர்கள் தேர்வில் பங்கேற்றால், அவர்களை மாற்றுப்பணிக்கு அனுப்பவும் உத்தரவிடப் பட்டுள்ளது. தேர்வு நடத்தும் அதிகாரிகளை சுழற்சி அடிப்படையில் பணிகள் மாற்றி வழங்கப்பட உள்ளது.
தேர்வுக்கு வருவோர் கொரோனா இல்லை என சான்றிதழ் அளிக்க வேண்டும். இவர்கள் எளிதாக சான்றிதழ் பெறும் வகையில் சிறப்பு ஏற்பாடுகளும் செய் யப்பட்டுள்ளது. ஒருவேளை பரிசோதனை யில் கொரோனா தொற்று இருந்தால் வேறு தேதியில் உடல் தகுதி தேர்வுக்கு அழைக்கப்பட உள்ளனர்.
இதற்கிடையே உடல் தகுதி தேர்வை நேர்மையாக நடத்த அனைத்து முயற்சிகளையும் எடுத்திருப்பதாக உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது:-
யாருடைய குறுக்கீடும் இருக்கக்கூடாது என உத்தரவிடப்பட்டு உள்ளது. அதிகாரிகள் மீது புகார்களோ, குற்றச்சாட்டுகளோ எழுந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அதிகார துஷ்பிரயோகம் செய்ததாக தெரியவந்தால், துறைரீதியிலான விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும். பணம் கொடுத்தால் போலீஸ் வேலை வாங்கித் தருவதாக கூறுபவர்களிடம் யாரும் ஏமாற வேண்டாம்.
இவ்வாறு நமச்சிவாயம் தெரிவித்தார்.
கவர்னர் மாளிகை புதுப்பிக்கும் பணி நடைபெறுவதையொட்டி நீதிபதிகள் தங்கும் விடுதிக்கு தமிழிசை இடம் மாறுகிறார்.
புதுச்சேரி:
புதுவை கடற்கரை சாலையையொட்டி கவர்னர் மாளிகை உள்ளது.
பிரெஞ்சு ஆட்சியர் காலத்தில் கட்டப்பட்ட கவர்னர் மாளிகை பிரெஞ்சு கட்டிடக்கலையை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. புதுவை மாநிலம் சுதந்திரம் அடைந்த பிறகு இந்த மாளிகை கவர்னர் மாளிகையாக செயல்பட்டு வருகிறது.
இங்கு கவர்னர் தங்கும் அறைகள், அலுவலகம், கவர்னர் செயலகம் மற்றும் அலுவலக ஊழியர்களின் குடியிருப்பு ஆகியவை செயல்பட்டு வருகிறது. நீண்டகாலமாக பரா மரிக்கப்படாமல் இருந்த கவர்னர் மாளிகையை இப்போது பராமரிப்பு செய்ய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான பணிகள் தொடங்கியுள்ளது.
இதனால் மாளிகையிலிருந்து மாற்று இடத்தில் தங்க கவர்னர் முடிவு செய்துள்ளார். கடற்கரை சாலையில் புதுப்பிக்கப்பட்டு கட்டப்பட்டுள்ள நீதிபதிகள் தங்கும் விடுதியில் கவர்னர் தங்க உள்ளார். கவர்னரின் அலுவலகம் மற்றும் செயலகம் கடற்கரை சாலையில் புதிதாக கட்டப்பட்டுள்ள நகராட்சி கட்டிடத்தில் செயல்பட உள்ளது.
இந்த வார இறுதியில் கவர்னர் இடம் மாறுவார் என தெரிகிறது. 2 கட்டிடங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள், கவர்னருக்கான வசதிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
புதுவையில் இந்திய மருத்துவ முறை டாக்டர்களின் பணி வயது 65 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
புதுவை சுகாதாரத்துறை சார்பு செயலர் புனிதமேரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி புதுவை கவர்னர் இந்திய மருத்துவமுறை, ஹோமியோபதியில் பணிபுரியும் டாக்டர்களின் பணிக்கால வயது வரம்பை 62-ல் இருந்து 65-ஆக உயர்த்தி உத்தரவிட்டுள்ளார்.
62 வயதை கடக்கும் டாக்டர்கள் தொடர்ந்து 65 வயது வரை பணியாற்றலாம்.இவர்கள் சீனியர் முதன்மை மருத்துவ அதிகாரியாக பணி அமர்த்தப்படுவர். கடந்த 6 மாதத்துக்குள் 62 வயதை கடந்த டாக்டர்கள் இந்த வயது உச்சவரம்பு தளர்வை பயன்படுத்தி கொண்டு பணியில் நீடிக்கலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
பாகூர் அருகே அணைக் கட்டில் மீன் பிடித்த தொழிலாளி தவறி விழுந்து இறந்து போனார்.
புதுச்சேரி:
கடலூர் மாவட்டம் இரண்டாயிர விளாகம் கிராமத்தை சேர்ந்தவர் அய்யப்பன் (வயது32). கூலி தொழிலாளி. இவருக்கு திருமணமாகி ஜீவா என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர். தமிழகத்தில் முழு ஊரடங்கால் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்த அய்யப்பன் பாகூர் அருகில் உள்ள தென்பெண்ணை ஆற்றில் சித்தேரி அணைக் கட்டில் மீன் பிடிக்க சென்றார்.
மீன் பிடித்துக்கொண்டிருந்த போது நிலை தடுமாறி அய்யப்பன் ஆற்றில் விழுந்தார். இதனை யாரும் கவனிக்கவில்லை. இந்த நிலையில் நீரில் மூழ்கிய அய்யப்பன் பிணமாக மிதப்பதை அதே பகுதியை சேர்ந்த ஒருவர் இறந்தவரின் உறவினருக்கு தெரிவித்தார்.
இதையடுத்து அவரது தாயார் பழனியம்மாள் (48) கொடுத்த புகாரின் பேரில் பாகூர் போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர் விஜயகுமார், ஏட்டு அன்பழகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோ தனைக்காக கதிர்காமம் மருத்துவக்கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருக்கனூர் பகுதியில் தைப்பூச விழா கொண்டாடப்பட்டது.
புதுச்சேரி:
திருக்கனூர் அருகே உள்ள செட்டிப்பட்டு வள்ளி தெய்வானை சமேத திருமுருகர் கோவிலில் தைப்பூசத்தை முன்னிட்டு அங்கு உள்ள சங்கராபரணி ஆற்றில் கரகம் ஜோடித்து பொதுமக்கள் ஊர்வலமாக சென்று முருகர் கோவிலை அடைந்தனர்.
அங்கு முருகனுக்கு பல்வேறு அபிஷேகங்கள் நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்கள் மஞ்சள் இடித்தல், மிளகாய் பொடி அபிஷேகம், அக்னி சட்டி எடுத்தல், ஆகாய விமானம் இழுத்தல் ஆகியவற்றை செய்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.தொடர்ந்து பக்தர்கள் காவடிகளை எடுத்துக் கொண்டு வீதி உலா சென்றனர். சாமி வீதி உலா காட்சியும் நடைபெற்றது.
இதேபோன்று கூனிச்சம் பட்டில் உள்ள சுப்பிரமணியர் கோவிலிலும் தைப்பூசத்தை முன்னிட்டு முருகனுக்கு பல்வேறு அபிஷேகங்கள் நடைபெற்று அலகு குத்துதல், காவடி எடுத்தல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது. திருக்கனூரில் உள்ள பாலமுருகன் கோவிலில் முருகருக்கு பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டு காவடி எடுக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. மேலும் சுற்றுவட்டாரத்தில் உள்ள பல்வேறு கிராமங் களிலும் தைப்பூச விழா சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டது.
பி.எஸ்.என்.எல்.அலுவலகம் முன்பு செல்பி எடுத்து வாலிபர் சங்கத்தினர் நூதன போராட்டம் நடத்தினர்.
புதுச்சேரி:
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் பி.எஸ்.என்.எல். தலைமை அலுவலகம் முன்பு நூதன போராட்டம் நடந்தது.
தனியார் செல்போன் நிறுவனங்களின் கட்டண கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டும். பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல்.லை பாதுகாக்க 4-ஜி, 5-ஜி சேவையை மேம்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடந்தது. போராட்டத்துக்கு பிரதேச தலைவர் பாஸ்கர் தலைமை வகித்தார். செயலாளர் சஞ்சய் முன்னிலை வகித்தார். செயலாளர் ஆனந்த், மாநிலக்குழு உறுப்பினர் லீலாவதி கண்டன உரையாற்றினர்.
நிர்வாகிகள் வினோத், ரஞ்சித், நிலவழகன், நவீன், ராஜ்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு கோரிக்கையை வலியுறுத்தி செல்பி எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டனர்.
இந்த போராட்டம் தமிழகம் முழுவதிலும் நடத்தப்பட்டது.
கிருமாம்பாக்கம் அருகே காயங்களுடன் கிடந்த மயிலை மீட்ட பெண்ணை பொதுமக்கள் பாராட்டினர்.
புதுச்சேரி:-
கிருமாம்பாக்கம் அருகே பிள்ளையார்குப்பம் நாடார் வீதியை சேர்ந்தவர் சித்ரா (வயது 46). கூலித் தொழிலாளி.
இவர் தனது வீட்டின் அருகே நடைபயிற்சி மேற்கொண்டார். அப்போது, அங்குள்ள ஒரு வாய்க்காலில், பெண்மயில் ஒன்று அடிபட்டு காயங்களுடன் கிடந்தது. இதனை பார்த்த சித்ரா மயிலை மீட்டு தனது வீட்டிற்கு கொண்டு சென்று முதலுதவி அளித்து, உணவு வழங்கி மயிலின் உயிரை காப்பாற்றினார். பின்னர் இது குறித்து போலீசாருக்கும், வனத்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் கிருமாம்பாக்கம் சப்-இன்ஸ்பெக்டர் முருகானந்தம், உதவி சப்--இன்ஸ்பெக்டர் லூர்துநாதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மயிலை பார்வையிட்டு, இது குறித்து விசாரணை நடத்தினர்.
இதனிடையே, அங்கு வந்த வனத்துறை ஊழியர்கள் சக்திவேல், வேலாயுதம் ஆகியோரிடம் சித்ரா மயிலை ஒப்படைத்தார். வனத்துறை ஊழியர்கள் மயிலுக்கு சிகிச்சை அளிக்க கொண்டு சென்றனர். காயங்களுடன் கிடந்த மயிலை காப்பாற்றிய சித்ராவை, போலீசாரும், வனத்துறை ஊழியர்களும் பாராட்டினர்.
புதுவையில் கொரோனா புதிய உச்சம் தொட்டுள்ளது. இதில் 2 ஆயிரம் பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. 3 பேர் பலியாகி உள்ளனர்.
புதுச்சேரி:
புதுவையில் புத்தாண்டுக்கு பிறகு கொரோனா தொற்று வெகு வேகமாக பரவி வருகிறது. நாள்தோறும் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டி வந்தது.
இந்த நிலையில் இந்த ஆண்டின் புதிய உச்சமாக ஒரே நாளில் கொரேனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டியது. 16-ந்தேதி 3 பேர் சிகிச்சை பலனின்றி இறந்திருந்தனர். இந்த நிலையில் 17-ந்தேதி தொற்றால் சிகிச்சை பலனின்றி 3 பேர் இறந்துள்ளனர். புதுவையில் பரிசோதனை செய்யும் 3-ல் ஒருவருக்கு தொற்று உறுதியாகி வருகிறது.
புதுவையில் 17-ந்தேதி 6 ஆயிரத்து 28 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் புதிதாக 2 ஆயிரத்து 93 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இது பரிசோதனையில் 34.72 சதவீதமாகும்.
புதுவையில் ஆயிரத்து 715, காரைக்காலில் 279, ஏனாமில் 54, மாகியில் 45 பேர் புதிதாக தொற்றுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். புதுவையில் 114, காரைக்காலில் 27, ஏனாமில் 6, மாகியில் 16 பேர் என 163 பேர் தொற்றுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். புதுவையில் 194, காரைக்காலில் 37, ஏனாமில் 1, மாகியில் 24 பேர் என 256 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.
புதுவை மாநிலத்தில் ஒட்டு மொத்தமாக இதுவரை ஒரு லட்சத்து 40 ஆயிரத்து 710 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஒரு லட்சத்து 28 ஆயிரத்து 424 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். புதுவையில் 8 ஆயிரத்து 983, காரைக்காலில் 994, ஏனாமில் 108, மாகியில் 145 பேர் என 10 ஆயிரத்து 230 பேர் வீட்டு தனிமையில் உள்ளனர். புதுவை மாநிலத்தில் இப்போது 10 ஆயிரத்து 393 பேர் கொரோனா தொற்றுடன் உள்ளனர்.
புதுவை வெங்கட்டா நகரை சேர்ந்த 81 வயது முதியவர், சாந்தி நகரை சேர்ந்த 32 வயது பெண், காரைக்காலை சேர்ந்த 59 வயது ஆண் ஆகியோர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். இதனால் மாநிலத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்து 893 ஆக உயர்ந்துள்ளது. புதுவையில் 2-வது தவணை உள்பட 15 லட்சத்து 3 ஆயிரத்து 355 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர்.
கொரோனா தொற்று எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டியதோடு, பலி எண்ணிக்கையும் உயர்ந்து வருவது பொதுமக்களிடையே பீதியையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது. பொதுமக்கள் சமூக இடைவெளியுடன் முக கவசம் அணிய வேண்டும். கொரோனா முன்னெச் சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.
கொரோனா வேகமாக பரவுவதால் புதுவையில் பள்ளி- கல்லூரிகளுக்கு 31-ந்தேதி வரை விடுமுறை விடப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் வருகிற 31-ந் தேதி வரை பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. ஆனால், மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தி வருவதால் 10 முதல் 12-ம் வகுப்பு வரை புதுவையில் பள்ளி கள் இயங்கும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதே வேளையில் 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வை ஒத்தி வைப்பதாக கல்வித்துறைஅறிவித்தது. இந்த நிலையில் புதுவையில் கடந்த 2 நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. மேலும் பலி எண்ணிக்கையும் கூடி வருகிறது.
இதனை கருத்தில் கொண்டு தமிழகத்தை போல் புதுவையில் பள்ளி - கல்லூரிகளுக்கு வருகிற 31-ந்தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வித்துறை அதிகாரிகளுடன் நடந்த ஆலோசனை கூட்டத்துக்கு பின்னர் கல்வி அமைச்சர் நமச்சிவாயம் இதனை அறிவித்தார்.
கருவடிகுப்பத்தில் கோஷ்டி மோதலில் 2 வீடுகள் சூறையாடப்பட்டது.
புதுச்சேரி:
புதுவை லாஸ்பேட்டை கருவடிகுப்பம் கங்கையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மகன் சூர்யா என்ற கேப் சூர்யா. இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த எல்லாடை என்ற அருணுக்கும் ஏற்கனவே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்துவந்தது.
இந்த நிலையில் 17-ந்தேதி இவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இது கோஷ்டி மோதலாக மாறியது. இதில், சூர்யாவுக்கு ஆதரவாக அவரது தரப்பை சேர்ந்த ஐஸ் என்ற புஷ்பராஜ், பூரி, ரைஸ் என்ற அஜி, பச்சைக்கிளி என்ற பிரதாப், லட்டு, நாகராஜ் ஆகியோர் ஒரு தரப்பாகவும், மற்றொரு தரப்பில் எல்லாடை என்ற அருண், தர்மா, வினோத், பாலு, லோகு என்ற லோகேஷ், பிரசாந்த் ஆகிய 6 பேரும் சேர்ந்து மோதலில் ஈடுபட்டனர்.
இருதரப்பினரும் தடி, கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களால் தாக்கிக் கொண்டனர். மேலும் எல்லாடை என்ற அருண் வீட்டை சூர்யா என்ற கேப் சூர்யா அவரது தரப்பை சேர்ந்தவர்கள் சூறையாடினர். அதுபோல் சூர்யா என்ற கேப் சூர்யாவின் நண்பரான ஜெகன் வீட்டை எல்லாடை அருண் தரப்பினர் பொருட்களை அடித்து உடைத்து சூறையாடினர்.
இதுகுறித்து இரு தரப்பினரும் தனித்தனியே புகார் செய்தனர். போலீசார் இருதரப்பையும் சேர்ந்த 13 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்யும் ஆயுள் கைதிகளின் மறுவாழ்விற்கு அரசு கொள்கை முடிவு எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் சிவா எம்.எல்.ஏ. வலியுறுத்தி உள்ளார்.
புதுச்சேரி:
புதுவை சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் சிவா எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
புதுவையில் ஆயுள் தண்டனை பெற்ற கைதிகள் 14 ஆண்டுகள் கழித்தும் கூட விடுதலை செய்யப்படாமல் உள்ளனர். இதன் காரணமாக பலர் 17, 18 ஆண்டுகளாக சிறையிலேயே இருந்து வருகின்றனர். மேலும் 14 ஆண்டுகள் கழிந்தவுடன் விடுதலை கிடைக்கும் என்ற எண்ணத்தில் இருந்த கைதிகளும், அவர்களது குடும்பத்தினரும் மிகுந்த மனவேதனைக்கு ஆளாகி உள்ளனர்.
தேசிய மனித உரிமை ஆணையமும், மத்திய உள்துறை அமைச்சகமும் கைதிகளை நன்னடத்தை அடிப்படையில் முன் கூட்டியே விடுதலை செய்ய பல்வேறு வழிகாட்டுதல்களையும், பரிந்துரைகளையும் மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு வழங்கியுள்ளது. புதுவையில் மட்டும் இதனை நடைமுறைப்படுத்துவதில் அரசியல் தலையீடு உள்ளது. ஆனால், தமிழகத்தில் 10 ஆண்டு தண்டனை முடித்த ஆயுள் கைதிகள் முன்கூட்டியே விடுதலை செய்யப்படு கின்றனர்.
மேலும் ஆயுள் கைதிகளில் நோய்வாய்ப்பட்டவர்கள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், முதன்முறை குற்றவாளிகள் போன்ற வர்களை நன்னடத்தை அடிப்படையில் முன் கூட்டியே விடுதலை செய்ய தமிழக அரசு நீதிபதி தலைமையிலான குழு அமைத்து உத்தரவிட்டுள்ளது. அதுபோல் புதுவை அரசும் ஆயுள் தண்டனை கைதிகளின் மறுவாழ்விற்கு ஒரு வாய்ப்பளிக்க கொள்கை முடிவு எடுத்து நன்னடத்தையுள்ள கைதிகளை, அவர்கள் குடும்பத்தோடு கடைசி காலத்தில் வாழ வழி செய்ய வேண்டும்.
இவ்வாறு சிவா எம்.எல்.ஏ. அறிக்கையில் கூறியுள்ளார்.
எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை மத்திய அரசு தொடர்ந்து புறக்கணித்து வருவதாக புதுச்சேரி முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி குற்றம்சாட்டி உள்ளார்.
புதுச்சேரி:
புதுச்சேரி முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி சமூக வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-
வருகிற 26-ந் தேதி டெல்லியில் நடைபெறும் பாரம்பரிய குடியரசு தின விழாவில் தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி நடப்பதால் அலங்கார ஊர்திக்கு மத்திய அரசு அனுமதி வழங்கவில்லை. இதேபோல் மேற்கு வங்காளம், கேரள அரசின் வாகனங்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்திற்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பா.ஜ.க. கூட்டணியில் உள்ள புதுவை மாநிலத்திற்கு அனுமதி கொடுத்திருக்கலாம். புதுவைக்கு அனுமதி கொடுக்கப்பட்டதா? இல்லையா? என்பது இதுவரை தெரியவில்லை. கடந்த 3 ஆண்டுகள் நாங்கள் வாய்ப்பு கேட்டும் மத்திய அரசு தொடர்ந்து புதுவையை புறக்கணித்துள்ளது. எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை மத்திய அரசு தொடர்ந்து புறக்கணித்து வருகிறது.
இந்தியாவில் உள்ள மாநிலங்களில் கொரோனா தொற்று பரவுவதில் முதல் மாநிலமாக புதுவை திகழ்கிறது. இதற்கு கவர்னரும், முதல்-அமைச்சரும் பொறுப்பேற்பார்களா? தமிழகம், கேரளாவில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. ஆனால் புதுவையில் இன்னும் பள்ளிகள் மூடப்படவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
புதுச்சேரி முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி சமூக வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-
வருகிற 26-ந் தேதி டெல்லியில் நடைபெறும் பாரம்பரிய குடியரசு தின விழாவில் தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி நடப்பதால் அலங்கார ஊர்திக்கு மத்திய அரசு அனுமதி வழங்கவில்லை. இதேபோல் மேற்கு வங்காளம், கேரள அரசின் வாகனங்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்திற்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பா.ஜ.க. கூட்டணியில் உள்ள புதுவை மாநிலத்திற்கு அனுமதி கொடுத்திருக்கலாம். புதுவைக்கு அனுமதி கொடுக்கப்பட்டதா? இல்லையா? என்பது இதுவரை தெரியவில்லை. கடந்த 3 ஆண்டுகள் நாங்கள் வாய்ப்பு கேட்டும் மத்திய அரசு தொடர்ந்து புதுவையை புறக்கணித்துள்ளது. எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை மத்திய அரசு தொடர்ந்து புறக்கணித்து வருகிறது.
இந்தியாவில் உள்ள மாநிலங்களில் கொரோனா தொற்று பரவுவதில் முதல் மாநிலமாக புதுவை திகழ்கிறது. இதற்கு கவர்னரும், முதல்-அமைச்சரும் பொறுப்பேற்பார்களா? தமிழகம், கேரளாவில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. ஆனால் புதுவையில் இன்னும் பள்ளிகள் மூடப்படவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.






