என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    புதுவை கருவடிகுப்பத்தில் கோஷ்டி மோதலில் 2 வீடுகள் சூறை

    கருவடிகுப்பத்தில் கோஷ்டி மோதலில் 2 வீடுகள் சூறையாடப்பட்டது.
    புதுச்சேரி:

    புதுவை லாஸ்பேட்டை கருவடிகுப்பம் கங்கையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மகன் சூர்யா என்ற கேப் சூர்யா.  இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த எல்லாடை என்ற அருணுக்கும் ஏற்கனவே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்துவந்தது.

    இந்த நிலையில் 17-ந்தேதி இவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இது கோஷ்டி மோதலாக மாறியது.  இதில், சூர்யாவுக்கு ஆதரவாக அவரது தரப்பை சேர்ந்த ஐஸ் என்ற புஷ்பராஜ், பூரி, ரைஸ் என்ற அஜி, பச்சைக்கிளி என்ற பிரதாப், லட்டு, நாகராஜ் ஆகியோர் ஒரு தரப்பாகவும், மற்றொரு தரப்பில் எல்லாடை என்ற அருண், தர்மா, வினோத், பாலு, லோகு என்ற லோகேஷ், பிரசாந்த் ஆகிய 6 பேரும்  சேர்ந்து மோதலில் ஈடுபட்டனர்.

    இருதரப்பினரும் தடி, கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களால் தாக்கிக் கொண்டனர். மேலும்  எல்லாடை என்ற அருண் வீட்டை சூர்யா என்ற கேப் சூர்யா அவரது தரப்பை சேர்ந்தவர்கள் சூறையாடினர்.  அதுபோல் சூர்யா என்ற கேப் சூர்யாவின்  நண்பரான ஜெகன் வீட்டை எல்லாடை அருண் தரப்பினர் பொருட்களை அடித்து உடைத்து சூறையாடினர். 

    இதுகுறித்து இரு தரப்பினரும் தனித்தனியே புகார் செய்தனர். போலீசார் இருதரப்பையும் சேர்ந்த 13 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×