என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    அப்பாவி மக்களை கேடயமாக பயன்படுத்தி கொரோனாவுக்கு சவால் விடுவது தவறானது என அ.தி.மு.க. கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
    புதுச்சேரி :

    புதுவை அ.தி.மு.க. கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    புதுவை மாநிலத்தில் கொரோனா தொற்று  சமூக பரவலாக மாறி அகில இந்திய அளவில் கொரோனா தொற்று  அதிகம் பரவக்கூடிய மாநிலமாக புதுவை மாறி உள்ளது. இதற்கு மாநில அரசின் தவறான வழிகாட்டுல் காரணமாகும். 

    கொரோனா தொற்று அதிவேகமாக பரவி வரும் இந்த நேரத்தில் முழு ஊரடங்கு உத்தரவு அவசியம் இல்லை என்றாலும், வெளிமாநில மக்கள் அதிகம் கூடுவதையும்,  நம் மாநிலத்தில் சண்டே மார்க்கெட், மார்க்கெட் பகுதி, காய்கறி மார்க்கெட், மீன் மார்க்கெட் உள்ளிட்ட பல இடங்களில் அதிகப்படியான மக்கள் கூடுவதை தடுக்க வேண்டியது மாநில அரசின் கடமையாகும்.

    கொரோனா முன் னெச்சரிக்கை தடுப்பு விஷயத்தில் கவர்னரின் செயல்பாடு வேறுபட்டு உள்ளது. அப்பாவி பொது மக்களை கேடயமாக பயன்படுத்தி தொற்றுக் கிருமிகளுக்கு சவால் விட்டு வருவது தவறான ஒன்றாகும். 

    கொரோனாவுடன் நாம் வாழ்ந்தாக வேண்டும். அதற்காக மக்கள் தங்களை தயார் படுத்திக்கொள்ள வேண்டும் என மக்களுக்கு அறிவுரைகளை வழங்குவது ஏற்புடையது அல்ல.

    மாவட்ட பேரிடர் முகமை, மாநில பேரிடர் மேலாண்மை முகமை, மாநில   நிர்வாகக்குழு, இந்த 3 அமைப்புகளும் மக்க ளுக்கு உயிர் பாதுகாப்பு அளிக்கக்கூடிய ஒரு உயர்மட்ட அமைப்பாகும். 
    இந்த 3 குழுக்களும் இன்றுவரை ஒரு ஆலோசனை கூட்டத்தை கூட இணைந்து நடத்த கவர்னர்  நடவடிக்கை எடுக்காதது தவறான ஒன்றாகும். 

    ஒரு மாநிலத்திற்கு வருவாய் என்பது அவசிய மான ஒன்றாக இருந்தாலும், மக்களுடைய  உயிரைப் பற்றி கருத்தில் கொள்வது அவசியமான ஒன்றாகும். 

    எனவே, நம்முடைய மாநிலத்தினுடைய கவர்னர்  இந்த நோய் தோற்று அதிகம் பரவுவதை தடுக்க உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். 

    மேலும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில கவர்னர், முதல்& அமைச்சர் ஆகியோர் திருவிழாக்கள், அரசு விழாக்கள் போன்றவற்றில் பங்கேற்பதை தடுக்க வேண்டும். 

    இது சம்பந்தமாக மாவட்ட நிர்வாகம், சுகாதாரத்துறை, காவல்துறை ஆகியவற்றின் உயர்மட்ட கூட்டத்தை முதல்& அமைச்சர் உடனடியாக கூட்டி, அரசு  நேர்வழியில் செல்வதை உறுதிப்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அன்பழகன் அறிக்கையில் கூறியுள்ளார்.
    புதுவை சிந்தனையாளர்கள் பேரவை சார்பில் தபால் அனுப்பும் போராட்டம் நடந்தது.
    புதுச்சேரி: 

    புதுவை சிந்தனையாளர்கள் பேரவை சார்பில் பிரதமர் மோடிக்கு தபால் அனுப்பும் போராட்டம் நடந்தது.

    போராட்டத்துக்கு பேரவை தலைவர் புதுவை கோ.செல்வம் தலைமை வகித்தார். இணை செயலர் சண்முககார்த்திக், துணைத் தலைவர்கள் கவுசல்யாதேவி, ஜெகதீசன், பொருளாளர் சரஸ்வதி, விசாலாட்சி, பைரவி, மணிமேகலை, ராஜாராம், செழியன்  ஆகியோர் முன்னிலை  வகித்தனர். 

    டெல்லியில் குடியரசு தினவிழாவில் தமிழக விடுதலை வீரர்கள் பட அலங்கார ஊர்தி நிராகரிக்கப்பட்டதை கண்டித்து கண்டன  அஞ்சல் அட்டைகளை நிர்வாகிகள் அனுப்பினர். 

    இதில் மக்கள் வாழ்வுரிமை இயக்கம் ஜெகநாதன், தமிழர்களம் அழகர், கலாச்சார புரட்சி  இயக்கம் பிராங்க்ளின் பிரான்சுவா, இலக்கிய மறுமலர்ச்சி பேரவை அமுதவேந்தன், மற்றும் பல்வேறு சமூக அமைப்பு பிரதிநிதிகள் சரவணன்,  சுகுமார், வீரசேகரன், ரகுபதி, சசிக்குமார், தமிழ் முத்து உட்பட பலர் கலந்து கொண்டனர்.
    புதுவை சுதேசி மில் அருகே சி.ஐ.டி.யூ. விவசாயிகள் சங்கம், விவசாய தொழிலாளர்கள் சங்கம் ஆகியவை ஆர்ப்ட்டபாம் நடத்தியது
    புதுச்சேரி:

    புதுவை  சுதேசி மில் அருகே சி.ஐ.டி.யூ. விவசாயிகள் சங்கம், விவசாய தொழிலாளர்கள் சங்கம் ஆகியவை இணைந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது.

    ஆர்ப்பாட்டத்துக்கு சீனுவாசன் தலைமை தாங்கினார். சங்கர் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் முருகன், பெருமாள், பிரபுராஜ்,  மது,   உலகநாதன், மணிபாலன், ராமமூர்த்தி,  மதிவாணன், பத்மநாபன்,  தட்சிணாமூர்த்தி,  ரவிச்சந்திரன், சூரியன், தினேஷ்குமார், ராஜ்குமார்  மற்றும் தொழிலாளர்கள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் பங்கேற்றனர். 

    டெல்லி அருகில் விவசாயிகள் சங்கம் ஓராண்டுக்கு மேல்  நடத்திய போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மத்திய அரசு அளித்த உறுதிமொழிகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.  தொழிலாளர் சட்டங்களை 4 தொகுப் பாக மாற்றிடும் முடிவினை கைவிட வேண்டும். 
    தேசிய பணமாக்கல் என்ற பெயரில் அனைத்து   பொதுத்துறை நிறுவனங் களையும் கார்ப்பரேட்டு களுக்கு விற்பனை செய்யும் முயற்சியை கைவிட வேண்டும். 

    புதுவை தொழிற்சாலைகளில்  தொழிலாளர்களை பழிவாங்கும்  போக்கை தடுத்து நிறுத்த வேண்டும்.  சேதாராப்பட்டு தொழிற் சாலை பிரச்னையில் உரிய தலையீடு செய்ய  வேண்டும். அமைப்புசாரா நல வாரியத்தை நிதி ஒதுக்கி செயல்படுத்த வேண்டும். விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். 

    மின்துறை தனியார் மயத்தை கைவிட வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தை முறையாக செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை  வலியுறுத்தி இந்த  ஆர்ப்பாட்டம் நடத்தப் பட்டது. 

    முன்னதாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு உயிரிழந்த தொழிலாளர்கள் அஞ்சான்,  நாகூரான், ஞானசேகரன் ஆகியோருக்கு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.
    கிருமாம்பாக்கம் அருகே மனைவி வீட்டுக்கு வர மறுத்ததால் கணவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    புதுச்சேரி:

    கிருமாம்பாக்கம் அருகே வண்ணாங்குளம் புது நகர் பகுதியை சேர்ந்தவர் அய்யனார் (வயது 32). இவர் முள்ளோடை பகுதியில் உள்ள சாராய கடையில் கூலி வேலை செய்து வந்தார். 

    இவரது மனைவி பூரணி கடந்த ஆண்டு அய்யனார் தனது மனைவி பூரணிக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தி மாமியார் வீட்டுக்கு அனுப்பி வைத்தார். அங்கு  குழந்தை பிறந்து 6 மாதமாகியும் பூரணி குழந்தையுடன் கணவர் வீட்டுக்கு வரவில்லை.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அய்யனார் தனது மனைவியையும், குழந்தையையும் வீட்டிற்கு அழைத்து வர    தனது தந்தை ஆறுமுகத்துடன் மாமியார் வீட்டுக்கு சென்றார்.  ஆனால், பூரணி வர மறுத்து விட்டார். குழந்தைக்கு ஒரு வயது ஆன பின்பு வீட்டுக்கு வருவதாக தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் அய்யனார் மனவருத்தத்தில்  இருந்து வந்தார். 

    இந்த நிலையில்  வீட்டில் இருந்து வெளியே சென்ற அய்யனார் வீடு திரும்பவில்லை. இதனால்  அவரது தந்தை ஆறுமுகத்துக்கு சந்தேகம் வந்து வீட்டின் அருகே சென்று பார்த்தார்.

    அப்போது அங்குள்ள  வேப்ப மரத்தில் அய்யனார் வேட்டியால் தூக்கு போட்டு தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அய்யனாரை மீட்ட போது அவர் இறந்து போனது தெரியவந்தது. 

    இதுகுறித்த புகாரின் பேரில் கிருமாம்பாக்கம் போலீஸ் உதவி சப்&-இன்ஸ்பெக்டர் லூர்துநாதன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருபுவனையில் தொழிலாளியின் சாவுக்கு காரணமானவர்களை கைது செய்யக்கோரி உறவினர்கள் மறியல் செய்தனர்.
    திருபுவனை:

    திருபுவனை காலனி வி.டி.சி. தெருவை சேர்ந்தவர் ரவீந்திரன் (வயது38). கூலி தொழிலாளி. இவருக்கு திருமணமாகி ராஜலட்சுமி என்ற மனைவியும் மற்றும் குழந்தைகளும் உள்ளனர்.

    கடந்த 31&ந் தேதி இரவு இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த கவுரிசங்கர் (23), வினோத்(25), யோகேஸ்வரன்(19) ஆகியோருக்குமிடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது ரவீந்திரனை அவர்கள் சரமாரியாக தாக்கியதாக தெரிகிறது.

    இதில் படுகாயமடைந்த ரவீந்திரனை அவரது மனைவி மற்றும் உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ரவீந்திரன் இறந்து போனார்.

    இதையடுத்து ரவீந்திரனின் உறவினர்கள் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்ககோரி திருபுவனை போலீசில் புகார் அளித்தனர்.  மேலும் குற்றவாளிகளை கைது செய்யக்கோரி உடலை வாங்க மறுத்தனர்.

    இதையடுத்து திருபுவனை  போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன், சப்-இன்ஸ்பெக்டர் குமாரவேலு, அஜய்குமார் ஆகியோர்  சமாதானம் செய்து குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். 

    மேலும் இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து கவுரிசங்கர், வினோத், யோகேஸ்வரன் ஆகியோரை தேடி வருகின்றனர். 

    இந்த நிலையில் குற்றவாளி களை கைது செய்யக்கோரி ரவீந்திரனின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் புதுவை-விழுப்புரம் சாலையில் இன்று காலை திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

    இதுபற்றி தகவல் அறிந்ததும் புதுவை வடக்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு ரங்நாதன், திருபுவனை போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன், சப்-இன்ஸ்பெக்டர்கள் குமாரவேலு, அஜய்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். 

    அப்போது ரவீந்திரன் சாவுக்கு காரணமான 3 பேரையும் இன்று மாலைக்குள் கைது செய்வதாக உறுதி அளித்தனர். இதனையேற்று ரவீந்திரனின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் மறியலை கைவிட்டு களைந்து சென்றனர். இந்த திடீர் சாலை மறியல் போராட்டம் காரணமாக புதுவை&விழுப்புரம் சாலையில் சுமார் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    பாகூர் பைபாஸ் சாலை இருளில் மூழ்கியதால் மதுபிரியர்கள் பாராக பயன்படுத்தி வருகிறார்கள்.
    புதுச்சேரி: 

    பாகூர் தற்போது நகரத்துக்கு நிகராக வளர்ந்து வருகிறது. பாகூர் பகுதியில் தாலுகா அலுவலகம், பத்திரப்பதிவு அலுவலகம், அரசு பள்ளிக்கூடங்கள், கொம்யூன் பஞ்சாயத்து, பொதுப்பணித்துறை, வேளாண் துறை உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வருவதால் தினந்தோறும் பல பகுதிகளை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். 

    இதனால் காலை முதல் மாலை வரை மார்க்கெட் வீதி முழுவதும் போக்குவரத்து நெரிசலாக காணப்பட்டு வருகிறது. போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் விதமாக பாகூர் தூக்கு பாலம் முதல் விநாயகர் கோவில் சந்திப்பு வரை பைபாஸ் சாலை அமைக்கப்பட்டது. பகல் நேரத்தில் போக்கு வரத்து நெரிசலை தவிர்க்க பொதுமக்கள் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் இரவு நேரத்தில் மின்விளக்குகள் இல்லாததால் இதனைப் பயன்படுத்தி மதுபிரியர்கள் இந்த சாலையில் மது அருந்தி வருகின்றனர். 

    மேலும் பாட்டில்களை உடைத்து வீசிவிட்டு செல்கின்றனர்‌. இதனால் இரவு நேரத்தில் இந்த சாலையை பொதுமக்கள் பயன்படுத்த அச்சப்பட்டு வருகின்றனர். மேலும் போலீசார் இரவு நேரத்தில் ரோந்து செல்லும்போது மதுபிரியர்களை அடித்து விரட்டி அனுப்பி விடுகின்றனர். போலீசார் சென்றதும் மீண்டும் சாலையில் அமர்ந்து மதுகுடித்து வருகின்றனர். இந்த பகுதியில் மது அருந்தக்கூடாது என்று போலீசார் எச்சரிக்கை பலகை வைத்தனர். அதையும் கிழித்து விட்டனர். 

    இந்த சாலையில் மின் விளக்கை ஏற்படுத்தித்தர பொதுமக்கள் மற்றும் போலீசாரும் மின்துறைக்கு பல்வேறு முறை கோரிக்கை வைத்துள்ளனர். இதுவரை மின்துறை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.  எனவே, இந்த சாலையில் குற்றச் சம்பவங்கள், அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்கும் வகையில் உடனடியாக மின்விளக்கு, கண்காணிப்பு கேமரா ஏற்படுத்தித்தர பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
    மக்களுக்கு பயன்படும் வகையில் புதுவை அரசு செயல்பட வேண்டும் என வைத்திலிங்கம் எம்.பி. கூறியுள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவை காங்கிரஸ் எம்.பி. வைத்திலிங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பிரதமர் மோடி மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே கட்சி ஆட்சி வந்தால் மாநிலத்தில் வளர்ச்சி இரட்டை என்ஜின் வேகத்தில் இருக்கும் என்று கூறியிருந்தார். ஆனால் மத்திய, மாநில அரசுகளின் என்ஜின் வெவ்வேறு பக்கமாக செல்வதால் வளர்ச்சி இல்லை என்ற நிலைக்கு புதுவை வந்துள்ளது.

    புதுவை கடற்கரை சாலையில் கட்டப்பட்ட மேரி கட்டிடம், பிரதமர் மோடி திறந்த காமராஜர் மணிமண்டபம், சாகர்மாலா திட்டத்தில் மேம்படுத்தப்பட்ட புதுவை துறைமுகம்  ஆகியவை இதுவரை செயல்பாட்டிற்கு வரவில்லை.  உப்பனாறு வாய்க்காலின் மீது மேம்பாலம் கட்டும் பணி  பெரும்பாலும் முடிக்கப்பட்டு காமராஜர், மறைமலையடிகள் சாலைகளை இணைக்க வேண்டிய பணி மட்டுமே உள்ளது.

    எதிர்வரும் மழைக்காலத்திற்கு முன்பாவது உப்பனாறு பாலம் பணியை முடித்து திறக்க வேண்டும். புத்தாண்டைத் தொடர்ந்து  பொங்கலையும் கட்டுப்பாடுகளின்றி கொண்டாடியதால் தற்போது கொரோனா தொற்று எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இனிமேலாவது புதுவை அரசு செயல்பட வேண்டும்.  இந்த அரசின் செயல்படாத தன்மைக்கு தீபாவளி, பொங்கல் பொருட்கள் வழங்கப்படாமல் உள்ள நிலையே உதாரணம் ஆகும். மக்களுக்கு பயன்தரக் கூடிய அளவில் அரசு செயல்பட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
    வில்லியனூர் பகுதியில் 20-ந்தேதி மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
    புதுச்சேரி:

    வில்லியனூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் 20-ந்தேதி காலை 10 மணி முதல் பகல் 11.30 மணி வரை ஜி.என். பாளையம், நடராஜன் நகர், எழில் நகர், வெண்ணிசாமி நகர், திருக்குறளார் நகர், வசந்தம் நகர், ஆனந்தம் நகர், கணபதி நகர், வி.ஐ.பி. நகர், திருமலை தாயார் நகர், திருமலைவாசன் நகர், «நுதாஜ் சுபாஷ் சந்திரபோஸ் நகர், தென்றல் நகர், பாலாஜி நகர், வயல்வெளி, ரோஜா நகர்,  அரும்பார்த்தபுரம், தக்ககுட்டை, மூலகுளம், ஜெ.ஜெ. நகர், அன்னை தெரசா நகர், உழவர்கரை, நண்பர்கள் நகர், மோத்திலால் நகர், டைமண்ட் நகர், மேரி உழவர்கரை, ரங்கா நகர், எம்.ஜி.ஆர். நகர், சிவகாமி நகர், கம்பன் நகர், மரியாள் நகர், தேவா நகர், உழவர்கரை பேட், செல்லம்பாப்பு நகர், அன்னை நகர், அபிராமி நகர், கல்யாண சுந்தரமூர்த்தி நகர், ஜெயா நகர், கமலம் நகர், அணைக்கரை, புது நகர் ஒரு பகுதி, ராமலிங்கம் நகர், தட்சிணாமூர்த்தி நகர் மற்றும் அதனை சார்ந்த பகுதிகள்.

    கணுவாப்பேட், தில்லை நகர், ஒதியம்பட்டு, எஸ்.எஸ். நகர், பெரியபேட், உத்திரவாகினிபேட், அம்பேத்கர் நகர், வின்சிட்டி, வி.தட்டாஞ்சாவடி மெயின் ரோடு, திருவேணி நகர் மற்றும் அதனை சார்ந்த பகுதிகள். வில்லியனூர், பத்மினி நகர், வசந்தம் நகர், ஆத்துவாய்க்கால்பேட், திருக்காமீஸ்வரர் நகர், மூர்த்தி நகர் ஒரு பகுதி, சிவகணபதி நகர்,   ஆரியப்பாளையம், பாரதி நகர், கண்ணகி நகர், கோட்டைமேடு, எஸ்.எம்.வி.புரம் மேற்கு,   பரசுராமபுரம், பெருமாள் புரம், கிருஷ்ணா நகர், பாண்டியன் நகர், சேர்ந்தநத்தம், சுல்தான்பேட், அரசூர் மற்றும் அதனை சார்ந்த பகுதிகள். 

    வி.மணவெளி ஒரு பகுதி, கே.வி. நகர் ஒரு பகுதி,   ஐ.ஓ.சி. ரோடு, கண்ணதாசன் நகர், உயர் மின்னழுத்த நுகர்வோர்கள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
    புதுச்சேரியில் மருத்துவம், செவிலியர் படிப்புகளுக்கு கடந்த ஆண்டு கட்டணத்தையே இந்த ஆண்டும் வசூலிக்க வேண்டும் என்று கவர்னர் உத்தரவிட்டுள்ளார்.
    புதுச்சேரி:

    புதுச்சேரி அரசு சார்பு செயலாளர் புனிதமேரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    புதுவை மாநிலத்தில் கவர்னர் பரிந்துரையின்படி சென்டாக் கலந்தாய்வு மூலம் 2021-22ம் கல்வி ஆண்டுக்கான மருத்துவம், பல் மருத்துவம், பி.பார்ம், செவிலியர் படிப்பிற்கு அரசு ஒதுக்கீட்டில் சேர்க்கை பெறும் மாணவர்களுக்கு கடந்த ஆண்டு வசூலிக்கப்பட்ட கல்வி கட்டணமே வசூலிக்க வேண்டும். இந்த கட்டணத்தில் எந்தவித மாற்றமும் இல்லை.

    இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    புதுவை மாநில மாணவர் பெற்றோர் சங்க தலைவர் வை. பாலா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கொரோனா தொற்று காலத்தில் கடந்த 2 ஆண்டுகளாக புதுச்சேரி மாநிலத்தில் வசிக்கும் அனைத்து மக்களும் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை கருத்தில் கொண்டு புதுச்சேரி மாநில மாணவர்கள் மற்றும் பெற்றோரின் கோரிக்கையை ஏற்று நடப்பு கல்வியாண்டில் மருத்துவம், பல் மருத்துவம், பி.பார்ம், செவிலியர் படிப்பிற்கு எந்தவித கல்விக்கட்டண உயர்வும் இல்லை என்று அறிவித்த கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், முதல்-அமைச்சர் ரங்கசாமி, கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோருக்கு புதுச்சேரி மாநில மாணவர், பெற்றோர் நலச்சங்கம் சார்பில் நன்றியையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

    சுப்ரீம் கோர்ட்டு வழிகாட்டுதலின்படி மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களில் அமைக்கப்பட்ட கட்டண குழுவால் நிர்ணயிக்கப்பட்ட கல்வி கட்டணங்களை காட்டிலும் ஒரு சில கல்லூரி நிர்வாகங்கள் கூடுதல் கட்டணம் பெறுகின்றன. இதன் மீது நடவடிக்கை எடுக்க மற்ற மாநிலங்களில் உள்ளதுபோல் புதுவை அரசும் கல்விக்கட்டண கண்காணிப்பு ஆணையத்தை அமைக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
    காரைக்கால் நகர் பகுதியில் கட்டுப்பாடின்றி சுற்றித்திரியும் கால்நடைகளை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    காரைக்கால்:

    காரைக்கால் நகர் பகுதியில் கடந்த சில மாதங்களாக கால்நடைகள் சுற்றித்திரிகின்றன. முன்பெல்லாம் இரவு நேரத்தில் சுற்றித்திரிந்த கால்நடைகள் தற்போது பகல் நேரத்திலேயே உலா வருகின்றன.

    மாவட்ட கலெக்டர் அலுவலகம், நகராட்சி அலுவலகம், போலீஸ் சூப்பிரண்டு, பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை, பள்ளி, கல்லூரிகள், மார்க்கெட், கடற்கரை, பகுதிகளில் கூட்டம், கூட்டமாக கால்நடைகள் சுற்றித்திரிகின்றன. மாடுகள், நாய்கள், குதிரை, பன்றி போன்றவை சாலைகளில் சுற்றித்திரிவதால் போக்குவரத்து இடையூறு ஏற்படுவது மட்டுமின்றி விபத்துகளும் ஏற்பட்டு வருகின்றன.

    கடந்த 12-ந்தேதி காரைக்கால் பைபாஸ் சாலையில் எருமை மாடு மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் வாலிபர் பலியானார். எருமை மாடும் இறந்து போனது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு கூட குதிரை மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் நாகை மாவட்டம் திட்டச்சேரியை சேர்ந்த அன்வர்தீன் என்பவர் பலியானார்.

    இது போதாதென்று நாய்களும் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிகின்றன. வாகனங்கள் மற்றும் நடந்து செல்வோரை துரத்திச் சென்று கடித்து வருகின்றன. சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளால் நாளுக்கு நாள் விபத்துகள் அதிகரித்த வண்ணம் உள்ளது. எனவே நகர் பகுதியில் கட்டுப்பாடின்றி சுற்றித்திரியும் கால்நடைகளை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    காரைக்காலில் அரசு பஸ்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணியை அமைச்சர் சந்திரபிரியங்கா தொடங்கி வைத்தார்.
    காரைக்கால்:

    புதுச்சேரி சாலை போக்குவரத்துகழகம் சார்பில், 100-க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகின்றன. பயணிகளின் பாதுகாப்பு கருதி அரசு பஸ்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த முடிவு செய்யப்பட்டது. முதற்கட்டமாக புதுச்சேரியில் இயங்கும் 3 பஸ்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக நேற்று காரைக்காலில் 3 பஸ்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன.

    இதனை அமைச்சர் சந்திர பிரியங்கா தொடங்கி வைத்து பஸ்சில் பயணம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமையிலான அரசு, பொதுமக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக பஸ் பயணிகளுக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகின்றன.

    பயணிகள் ஏதேனும் குறைகள் தெரிவிக்க விரும்பினால், பஸ்சில் ஒட்டியிருக்கும் செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம். புகார் கொடுத்த சில மணி நேரங்களிலேயே நடவடிக்கை எடுக்கப்படும். பஸ்களில் பயணம் செய்வோர் சமூக இடைவெளியை கடைபிடிப்பதோடு, முக கவசம் அணிவது கட்டாயம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    காரைக்கால் மேற்கு புறவழிச்சாலை, மக்கள் பயன்பாட்டிற்கு வந்து வெகு நாட்களாகியும், மின் விளக்குகள் இல்லாததால் தொடர்ந்து விபத்துகள் ஏற்பட்டு வருவதாக புகார் எழுந்தது.

    இதையடுத்து நேற்று முன்தினம் இரவு மேற்கு புறவழிச்சாலையில் அமைச்சர் ஆய்வு செய்தார். அப்போது அங்கு மின்விளக்குகளை பொருத்த நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.

    அதற்கு மாவட்ட கலெக்டர் அர்ஜூன் சர்மா, பொதுப்பணித்துறை மூலம் ரூ.2 கோடியில் சூரியசக்தி உயர் மின்விளக்கு பொருத்த திட்டம் தயார் நிலையில் உள்ளதாக தெரிவித்தார்.

    ஆய்வின் போது பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் வீரசெல்வம், நகராட்சி ஆணையர் செந்தில்நாதன், மின்துறை உதவி செயற்பொறியாளர் அனுராதா, போலீஸ் சூப்பிரண்டு ரகுநாயகம் ஆகியோர் உடன் இருந்தனர்.
    தமிழக கவர்னர் ஆர்.என். ரவி தலைமையில் ஆரோவில் 58-வது ஆட்சிமன்ற குழு கூட்டம் இன்று நடைபெற்றது.
    சேதராப்பட்டு:

    புதுவை அருகே சர்வதேச நகரமான ஆரோவில் அமைந்துள்ளது. இப்பகுதியில் ஏராளமான வெளிநாட்டினர் வசித்து வருகிறார்கள்.

    மேலும் அரவிந்தர் அன்னையின் கனவு நகரமாக ஆரோவில்லை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்ற திட்டத்தின் அடிப்படையில் கடந்த மாதம் விரிவாக்க பணிகள் நடைபெற்றபோது மரங்கள் வெட்டப்பட்டது.

    இதற்கு ஆரோவில்லில் உள்ள வெளிநாட்டினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் சென்னை பசுமை தீர்ப்பாயம் மரம் வெட்டும் பணிக்கு இடைக்கால தடை விதித்தது. இதனால் பணிகள் நிறுத்தப்பட்டது.

    ஆனால், ஆரோவில் நிர்வாகம் விரிவாக்க பணியை மேற்கொள்ள தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில் இன்று தமிழக கவர்னர் ஆர்.என். ரவி தலைமையில் ஆரோவில் 58-வது ஆட்சிமன்ற குழு கூட்டம் இன்று நடைபெற்றது.

    ஆரோவில் அறக்கட்டளை மையத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் புதுவை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், ஆட்சி மன்றக் குழு செயலர் ஜெயந்தி ரவி மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    இந்த ஆலோசனை கூட்டத்தில், அன்னையின் கனவு திட்டமான ஆரோவில் விரிவாக்க பணிகள் தொடங்கியபோது ஏற்பட்ட எதிர்ப்புகள். ஆரோவில் நிர்வாகத்திற்கு எதிராக பசுமை தீர்ப்பாயம் கொண்டுவந்த தடை ஆணை. தற்போது உயர்நீதிமன்றம் ஆரோவில் நிர்வாகத்திற்கு அளித்துள்ள தீர்ப்பு குறித்து விவாதிக்கப்பட்டது.

    ஆரோவில் நிர்வாக குழு கூட்டத்தில் பங்கேற்க இரு மாநில கவர்னர்கள் வருகை தந்ததையொட்டி கோட்டக்குப்பம் துணை போலீஸ் சூப்பிரண்டு அருண் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.



    ×