search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    மக்களுக்கு பயன்படும் வகையில் அரசு செயல்பட வேண்டும்- வைத்திலிங்கம் எம்.பி. அறிக்கை

    மக்களுக்கு பயன்படும் வகையில் புதுவை அரசு செயல்பட வேண்டும் என வைத்திலிங்கம் எம்.பி. கூறியுள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவை காங்கிரஸ் எம்.பி. வைத்திலிங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பிரதமர் மோடி மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே கட்சி ஆட்சி வந்தால் மாநிலத்தில் வளர்ச்சி இரட்டை என்ஜின் வேகத்தில் இருக்கும் என்று கூறியிருந்தார். ஆனால் மத்திய, மாநில அரசுகளின் என்ஜின் வெவ்வேறு பக்கமாக செல்வதால் வளர்ச்சி இல்லை என்ற நிலைக்கு புதுவை வந்துள்ளது.

    புதுவை கடற்கரை சாலையில் கட்டப்பட்ட மேரி கட்டிடம், பிரதமர் மோடி திறந்த காமராஜர் மணிமண்டபம், சாகர்மாலா திட்டத்தில் மேம்படுத்தப்பட்ட புதுவை துறைமுகம்  ஆகியவை இதுவரை செயல்பாட்டிற்கு வரவில்லை.  உப்பனாறு வாய்க்காலின் மீது மேம்பாலம் கட்டும் பணி  பெரும்பாலும் முடிக்கப்பட்டு காமராஜர், மறைமலையடிகள் சாலைகளை இணைக்க வேண்டிய பணி மட்டுமே உள்ளது.

    எதிர்வரும் மழைக்காலத்திற்கு முன்பாவது உப்பனாறு பாலம் பணியை முடித்து திறக்க வேண்டும். புத்தாண்டைத் தொடர்ந்து  பொங்கலையும் கட்டுப்பாடுகளின்றி கொண்டாடியதால் தற்போது கொரோனா தொற்று எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இனிமேலாவது புதுவை அரசு செயல்பட வேண்டும்.  இந்த அரசின் செயல்படாத தன்மைக்கு தீபாவளி, பொங்கல் பொருட்கள் வழங்கப்படாமல் உள்ள நிலையே உதாரணம் ஆகும். மக்களுக்கு பயன்தரக் கூடிய அளவில் அரசு செயல்பட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
    Next Story
    ×