search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காரைக்கால் சாலைகளில் சுற்றித்திரியும் நாய்கள், மாடுகளை காணலாம்
    X
    காரைக்கால் சாலைகளில் சுற்றித்திரியும் நாய்கள், மாடுகளை காணலாம்

    காரைக்காலில் சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகளால் விபத்து- ஒரு வாரத்தில் 2 பேர் பலி

    காரைக்கால் நகர் பகுதியில் கட்டுப்பாடின்றி சுற்றித்திரியும் கால்நடைகளை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    காரைக்கால்:

    காரைக்கால் நகர் பகுதியில் கடந்த சில மாதங்களாக கால்நடைகள் சுற்றித்திரிகின்றன. முன்பெல்லாம் இரவு நேரத்தில் சுற்றித்திரிந்த கால்நடைகள் தற்போது பகல் நேரத்திலேயே உலா வருகின்றன.

    மாவட்ட கலெக்டர் அலுவலகம், நகராட்சி அலுவலகம், போலீஸ் சூப்பிரண்டு, பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை, பள்ளி, கல்லூரிகள், மார்க்கெட், கடற்கரை, பகுதிகளில் கூட்டம், கூட்டமாக கால்நடைகள் சுற்றித்திரிகின்றன. மாடுகள், நாய்கள், குதிரை, பன்றி போன்றவை சாலைகளில் சுற்றித்திரிவதால் போக்குவரத்து இடையூறு ஏற்படுவது மட்டுமின்றி விபத்துகளும் ஏற்பட்டு வருகின்றன.

    கடந்த 12-ந்தேதி காரைக்கால் பைபாஸ் சாலையில் எருமை மாடு மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் வாலிபர் பலியானார். எருமை மாடும் இறந்து போனது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு கூட குதிரை மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் நாகை மாவட்டம் திட்டச்சேரியை சேர்ந்த அன்வர்தீன் என்பவர் பலியானார்.

    இது போதாதென்று நாய்களும் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிகின்றன. வாகனங்கள் மற்றும் நடந்து செல்வோரை துரத்திச் சென்று கடித்து வருகின்றன. சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளால் நாளுக்கு நாள் விபத்துகள் அதிகரித்த வண்ணம் உள்ளது. எனவே நகர் பகுதியில் கட்டுப்பாடின்றி சுற்றித்திரியும் கால்நடைகளை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    Next Story
    ×