என் மலர்
உள்ளூர் செய்திகள்

தொழிலாளர்கள் சங்கம் சார்பில் போராட்டம் நடத்திய காட்சி
சி.ஐ.டி.யூ. விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்
புதுவை சுதேசி மில் அருகே சி.ஐ.டி.யூ. விவசாயிகள் சங்கம், விவசாய தொழிலாளர்கள் சங்கம் ஆகியவை ஆர்ப்ட்டபாம் நடத்தியது
புதுச்சேரி:
புதுவை சுதேசி மில் அருகே சி.ஐ.டி.யூ. விவசாயிகள் சங்கம், விவசாய தொழிலாளர்கள் சங்கம் ஆகியவை இணைந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது.
ஆர்ப்பாட்டத்துக்கு சீனுவாசன் தலைமை தாங்கினார். சங்கர் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் முருகன், பெருமாள், பிரபுராஜ், மது, உலகநாதன், மணிபாலன், ராமமூர்த்தி, மதிவாணன், பத்மநாபன், தட்சிணாமூர்த்தி, ரவிச்சந்திரன், சூரியன், தினேஷ்குமார், ராஜ்குமார் மற்றும் தொழிலாளர்கள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் பங்கேற்றனர்.
டெல்லி அருகில் விவசாயிகள் சங்கம் ஓராண்டுக்கு மேல் நடத்திய போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மத்திய அரசு அளித்த உறுதிமொழிகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். தொழிலாளர் சட்டங்களை 4 தொகுப் பாக மாற்றிடும் முடிவினை கைவிட வேண்டும்.
தேசிய பணமாக்கல் என்ற பெயரில் அனைத்து பொதுத்துறை நிறுவனங் களையும் கார்ப்பரேட்டு களுக்கு விற்பனை செய்யும் முயற்சியை கைவிட வேண்டும்.
புதுவை தொழிற்சாலைகளில் தொழிலாளர்களை பழிவாங்கும் போக்கை தடுத்து நிறுத்த வேண்டும். சேதாராப்பட்டு தொழிற் சாலை பிரச்னையில் உரிய தலையீடு செய்ய வேண்டும். அமைப்புசாரா நல வாரியத்தை நிதி ஒதுக்கி செயல்படுத்த வேண்டும். விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.
மின்துறை தனியார் மயத்தை கைவிட வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தை முறையாக செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப் பட்டது.
முன்னதாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு உயிரிழந்த தொழிலாளர்கள் அஞ்சான், நாகூரான், ஞானசேகரன் ஆகியோருக்கு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.
Next Story






