என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    முருங்கப்பாக்கம் அரவிந்தர் நகரில் சாலையை சீரமைக்காததை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    புதுச்சேரி: 

    இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் அரியாங்குப்பம் தொகுதி குழு சார்பில் முருங்கப்பாக்கம் அரவிந்தர் நகர் குடியிருப்பு பகுதிகளில்   மோசமான சாலைகளை கண்டித்தும், இந்த சாலைகளை தார் சாலைகளாக   அமைத்து கொடுக்க வேண்டும். 

    கழிவுநீர் வாய்க்கால்  அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள் ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வில்லியனூர்& முருங்கப்பாக்கம் அரவிந்தர் நகரில் பிரதான நெடுஞ்சாலை சந்திப்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது. 

    மறியல் போராட்டத்துக்கு  சுகதேவ், கண்ணன், கலியபெருமாள்,  சுப்பிர மணியன் ஆகியோர் தலைமை தாங்கினர். பூபதி,   பச்சையப்பன், முத்துவேல்,  வாழ்முனி, சிவராமகிருஷ்ணன், வசந்தா, வேலு, செல்வராஜ், பாலசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

    முன்னதாக   மறியல் போராட்டத்தில்   ஈடுபட்ட வர்கள்   முருங்கப்பாக்கம்& கடலூர் சாலையில் இருந்து வில்லியனூர்   சாலை வழியாக அரவிந்தர் நகருக்கு ஊர்வலமாக வந்தனர். 

    ஊர்வலம் மற்றும் மறியல்   போராட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் சலீம், முன்னாள் அமைச்சர்   விசுவநாதன், மாநில நிர்வாக குழு உறுப்பினர்கள் அபிஷேகம், கீதநாதன், சரளா மற்றும் மாநில குழு உறுப்பினர்கள் கணேசன்,   அந்துவான், அந்தோணி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    புதுவையில் கொரோனா தொற்று எண்ணிக்கை 3 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.
    புதுச்சேரி:

    புதுவையில் 19-ந் தேதி 6 ஆயிரத்து 444 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.

    இதில் புதிதாக 2 ஆயிரத்து 783 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. புதுவையில் 2 ஆயிரத்து 230, காரைக்காலில் 462, ஏனாமில்  68,  மாகியில் 23 பேர் புதிதாக தொற்றுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

    புதுவையில் 81, காரைக்காலில் 35, ஏனாமில் 12, மாகியில் 15 பேர் என 144 பேர் தொற்றுடன் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். புதுவையில் ஆயிரத்து 20, காரைக்காலில் 25, ஏனாமில் 2, மாகியில் 26  பேர் என ஆயிரத்து 73 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பினர். 

    புதுவை மாநிலத்தில் ஒட்டுமொத்தமாக இதுவரை ஒரு லட்சத்து 45 ஆயிரத்து 342 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்து 30 ஆயிரத்து 392 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

    புதுவையில் 10 ஆயிரத்து 745, காரைக்காலில் ஆயிரத்து 792, ஏனாமில் 225, மாகியில் 147 பேர் என 12 ஆயிரத்து 909 பேர் வீட்டு தனிமையில் உள்ளனர். 

    புதுவை மாநிலத்தில் இப்போது 13 ஆயிரத்து 53 பேர் கொரோனா  தொற்றுடன் உள்ளனர். புதுவை சுதந்திர பொன்விழா நகரை சேர்ந்த 95 வயது மூதாட்டி கொரோனா சிகிச்சை பலனின்றி இறந்தார். இதனால் மாநிலத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்து 897 ஆக உயர்ந்துள்ளது. 

    புதுவையில்  2-வது  தவணை உட்பட 15 லட்சத்து 12 ஆயிரத்து 236 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். 

    இத்தகவலை சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
    கொரோனா பாதித்த வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் குடும்பத்துக்கு ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று அன்பழகன் வலியுறுத்தியுள்ளார்.
    புதுச்சேரி: 

    புதுவை அ.தி.மு.க. கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    புதுவை மாநிலத்தில் கொரோனா தொற்று உச்சநிலைக்கு செல்கிறது. பரிசோதனை செய்பவர்களில் 40 சதவீதத்துக்கு மேல் தொற்று கண்டறியப்படுகிறது. தேவைப்படும் அனை வருக்கும் பரிசோதனை செய்வதை அரசு உறுதி செய்ய வேண்டும். 

    அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், தனி குழுக்கள் அமைத்து பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். முடிவுகளை உடனுக்குடன் அறிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பரிசோதனை முடிவு வருவதற்குள் அந்த குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் தொற்று ஏற்படுகிறது. 

    பரிசோதனை முடிவுகள் உடனுக்குடன் வழங்க உரிய கட்டமைப்பு வசதிகளை கவர்னர் ஏற்படுத்த வேண்டும்.  கூடுதல் வருவாயை மட்டும் கருத்தில் கொண்டு அரசு நிர்வாகம் செயல்பட்டதால் புதுவை மாநிலம் முழுவதும் கொரோனா நோய்த்தொற்று சமூக பரவலாக மாறியுள்ளது. 

    அரசு அலுவலகங்களில் 50 சதவீத ஊழியர்கள் பணிக்கு வந்தால் போதும் என அரசு முடிவெடுத்துள்ளது.  அதே வேளையில் பஸ் நிலையம், உழவர் சந்தை, சண்டே மார்க்கெட், சுற்றுலாத்தலங்கள், காய்கறி, மீன், அங்காடிகள் ஆகிய பல்வேறு இடங்களில் மக்கள் அதிகமாக கூடுவதை தடுக்க உரிய அறிவிப்புகளை வெளியிட வேண்டும். 

    தொற்று பாதித்தவர்களை வீட்டு தனிமையில் இருக்க அறிவுறுத்துவதால் குடும்பத்தினரும் பாதிக்கப்படுகின்றனர். கூலிதொழிலாளர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், கட்டட தொழிலாளர்கள், அமைப்புசாரா தொழிலாளர் கள், விவசாயிகள், மீன்பிடித் தொழிலாளர்கள் என வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பத்தினர் தொற்றால் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கின்றனர். 

    எனவே முதல்-அமைச்சர் உண்மை நிலையை உணர்ந்து கொரோனாவால் பாதிக்கப்பட்டு வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பத்துக்கு ரூ.5 ஆயிரம் நிவாரணம்  வழங்க வேண்டும். 

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    தனியார் மயத்தை அமுல்படுத்த ஏழைகளை பாதிக்கும் வகையில் மின் கட்டண உயர்வுக்கு பரிந்துரை செய்துள்ளதாக தி.மு.க. குற்றம் சாட்டியுள்ளது.
    புதுச்சேரி :

    புதுவை சட்ட மன்ற எதிர்கட்சி தலைவர் சிவா எம்.எல்.ஏ. வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:&

    இணை மின்சார ஒழுங்கு முறை ஆணையத்திற்கு இந்த ஆண்டு 100 யூனிட் வரையிலான பயன்பாட்டிற்கு ரூ.35 பைசாவும், 100&ல் இருந்து 200 யூனிட் வரையிலான பயன்பாட்டிற்கு ரூ.15 பைசாவும் உயர்த்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அதேசமயம் அதற்கு மேலான பயன்பாட்டிற்கு கட்டணம் உயர்த்த பரிந்துரை செய்யப் படவில்லை.

    வீட்டு உபயோக பயன் பாட்டிற்கு மொத்தமாக உயர்த்தப்பட்ட ரூ.50 பைசாவை மின்துறை வசூலிக்கும் 4 பிரிவிற்கும் பிரித்து போட்டால் முதல் 100 யூனிட் வரை பயன்படுத்தும் மிகவும் ஏழைகளுக்கு ரூ.5 பைசா அளவிற்கே உயரும். ஆனால் திட்டமிட்டு ஏழைகள் அதிகம் பாதிக்கும் வகையில் கட்டணத்தை உயர்த்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 

    மேலும் மக்கள்  குறைந்த யூனிட் பயன்படுத்தினாலும் அதிக கட்டணத்தை செலுத் தச் செய்யும் வகையிலும்  இந்த பரிந்துரை உள்ளது.  குறிப் பாக இந்த பரிந்துரை மின்துறையை தனியார் மயமாக்கு வதற்கான முடிவை அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் ஒன்றாக தெரிகிறது. 

    அதாவது கார்ப்ரேட் நிறுவனங்களின் கொள்கை முடிவின்படி ஏழைகளிடம் அதிகம் பணத்தை பறிக்கும் செயலாக தெரிகிறது. 

    எனவே 200 யூனிட் வரையிலான பயன்பாட்டி ற்கு மட்டும் மின் கட்டணத்தை உயர்த்த பரிந் துரைக்கப் பட்டதை உடனடியாக அரசு திரும்பப் பெற வேண்டும். அதுபோல் எந்த வகையில் தனியார் மயமாக்க முயற்சித்தாலும் தி.மு.க. அதை கடுமையாக எதிர்க்கும் என்றும் அரசுக்கு எச்சரிக்கையாக தெரிவித்துக் கொள்கிறோம்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    உழவர்கரை நகராட்சி நடத்திய சுவர் ஓவிய போட்டியில் பேட்ரிக் பள்ளி முதலிடம் பிடித்தது.
    புதுச்சேரி:

    உழவர்கரை நகராட்சி சுவச் சர்வேஷன்-2022 சார்பில்  (தூய்மையான நகரங்கள்) சுற்றுச்சூழல் விழிப்புணர்வு என்ற தலைப்பில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது.

    இதில் பேட்ரிக் பள்ளி மாணவர்கள் போஸ்டர்
    பெயிண்டிங், சுவரோவியம், தெருக்கூத்து போட்டிகளில் முதல் பரிசாக ரூ.5 ஆயிரம் வென்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு உழவர்கரை நகராட்சி ஆணையர் பரிசு வழங்கி  பாராட்டினார்.

    முதல் பரிசுக்குரிய சுவர் ஓவியத்தை பள்ளி தாளாளர்  பிரெட்ரிக், முதல்வர்  அல்போன்ஸ் ஹில்டா, ஓவிய ஆசிரியர் சரவணகுமார்  ஆகியோர் பார்வையிட்டு மாணவர்களை பாராட்டினர். 

    மேலும் சுவர் ஓவியம் வரைந்த மாணவர்கள்  ஜித்தின் பிரகாஷ், தனுவர்ஷன், பூங்குழலி, சுபஸ்ரீ, ஜூடித் நிர்மலா, காவியா ஆகியேர் கவுரவிக்கப்பட்டனர்.
    திருக்கனூர் அருகே பெண்களை பாட்டுபாடி கிண்டல் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    புதுச்சேரி:

    திருக்கனூர் அருகே சந்தைபுதுக்குப்பம்&மயிலம் பாதை சந்திப்பில் 19-&ந் தேதி மாலை ஒரு வாலிபர் நின்றுக்கொண்டு அவ்வழியே செல்லும் இளம்பெண்களை பாட்டுப்பாடி கிண்டல் செய்து கொண்டிருந்தார்.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் காட்டேரிக்குப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரண்யா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அந்த வாலிபரை மடக்கி பிடித்தனர்.

    விசாரணையில் அவர் சந்தைபுதுக்குப்பம் காலனி ஒத்தவாடை வீதியை சேர்ந்த முத்துலிங்கம்(வயது28) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
    அரியாங்குப்பத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் பலியானார்.
    புதுச்சேரி:

    அரியாங்குப்பம் அம்பேத்கர்நகர் முதல் குறுக்கு தெருவை சேர்ந்தவர் கணபதி (வயது86). இவருக்கு 3 மகன்கள் மற்றும் 3 மகள்கள் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணமாகி  தனித்தனியே வசித்து வருகின்றனர்.

    கணபதி தனது மகள் கிருஷ்ண வேணியுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் 18-&ந் தேதி மாலை 6 மணிக்கு டீ குடிப்பதற்காக அரியாங்குப்பம் பைபாஸ் சாலையில் சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் கணபதி மோதி நிற்காமல் சென்று விட்டது.

    இதில் தூக்கி வீசப்பட்ட கணபதி படுகாயமடைந்தார். அப்போது அங்கிருந்த கணபதியின் பக்கத்து வீட்டுக்காரர் சுபாஷ் என்பவர் பார்த்து இதுபற்றி கணபதியின் மகன் சின்ன துரைக்கு தகவல் தெரிவித்தார். அவர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஆட்டோ மூலம் கணபதியை புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதித்தார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி கணபதி இறந்து போனார்.

    இதுகுறித்து அவரது மகன் சின்னதுரை கொடுத்த புகாரின் பேரில் கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.
    பொது அறிவு போட்டியில் அமலோற்பவம் பள்ளி மாணவர்கள் மாநில அளவில் வெற்றி பெற்றனர்.
    புதுச்சேரி :

    இந்திய தேர்தல் ஆணையத்தின் 12-வது தேசிய வாக்காளர் தினத்தையொட்டி நடை பெற்ற பொது அறிவு போட்டியில் அமலோற்பவம் பள்ளி மாணவர்கள் மாநில அளவில் வெற்றி பெற்றனர். 

    புதுவை தேர்தல் ஆணை யத்தின் கீழ் ஆண்டு தோறும் தேர்தல் தொடர்பான வினாடி- வினா போட்டிகள் நடைபெறுகின்றன.

    அதுபோல் இந்திய அரசியல்,   மக்களாட்சி தேர்தல் அமைப்பு முறை தொடர்பாக மாணவர்களின் பொது அறிவு திறனை சோதிக்கும் விதமாக இப்போட்டிகள் நடத்தப்பட்டன. 

    புதுவை மாநில அளவி லான பள்ளி மாணவர்கள் பங்கேற்ற இப்போட்டியில் வாணரப்பேட்டை &அமலோற்பவம் மேல் நிலைப்பள்ளியில் பயிலும்  11&ம் வகுப்பு மாணவர்களான திவாகரன், சஞ்சய் ஆகியோர் 2-ம் இடமும்,  கொம்பாக்கம்- அமலோற்பவம் லூர்து அகாடமியில் பயிலும் 9-ம் வகுப்பு மாணவர்களான நவீன பிரியன், பூவராகவன் ஆகியோர் 3-ம் இடமும் பிடித்து வெற்றி பெற்றுள்ளனர். 

    வெற்றி பெற்று சாதனை புரிந்த மாணவர்களை பள்ளியின் நிறுவனர் மற்றும் தாளாளர் லூர்துசாமி பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்கி பாராட்டினார்.
    காரைக்கால் அருகே நடந்த விபத்தில் அக்காள்-தங்கை உள்பட 4 பேர் படுகாயமடைந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காரைக்கால்:

    காரைக்கால் அருகே உள்ள குரும்பகரம் பகுதியைச் சேர்ந்தவர் கணேஷ். இவருக்கு திவ்யா(வயது26), அபிநயா(21) ஆகிய 2 மகள்கள் உள்ளனர்.

    இதில் திவ்யா தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று திவ்யா மற்றும் அவரது தங்கை அபிநயா ஆகியேர் மொபட்டில் காரைக்கால் நோக்கி சென்றனர். காரைக்கால் அருகே உள்ள காஞ்சிபுரம் கோவில்பத்து பகுதியில் சென்றபோது எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த திருவாரூரைச் சேர்ந்த விக்னேஷ்(20), மதன்(19) ஆகிய இருவரும் எதிர்பாராதவிதமாக திவ்யாவின் மொபட் மீது மோதினர். இதில் தூக்கி வீசப்பட்ட 4 பேரும் பலத்த காயம் அடைந்தனர்.

    இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் காயமடைந்த 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். தகவல் அறிந்த காரைக்கால் நகர போக்குவரத்து போலீசார் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    புதுவையில் கொரோனாவுக்கு 3 பேர் பலியாகி உள்ளனர்.
    புதுச்சேரி:

    புதுவையில் 6 ஆயிரத்து 116 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.  இதில் புதிதாக ஆயிரத்து 849 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. புதுவையில் ஆயிரத்து 316, காரைக்காலில் 447, ஏனாமில்  58,  மாகியில் 28 பேர் புதிதாக தொற்றுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  புதுவையில் 79, காரைக் காலில் 31, ஏனாமில் 6, மாகியில் 11 பேர் என 127 பேர் தொற்றுடன் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

    புதுவையில் 793, காரைக்காலில் 77, ஏனாமில் 1, மாகியில்24  பேர் என 895 பேர் சிகிச்சையில் குண மடைந்து வீடு திரும்பினர்.  புதுவை மாநிலத்தில் ஒட்டு மொத்தமாக இதுவரை ஒரு லட்சத்து 42 ஆயிரத்து 559 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்து 29 ஆயிரத்து 319 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

    புதுவையில் 9 ஆயிரத்து 538, காரைக்காலில் ஆயிரத்து 360, ஏனாமில் 165, மாகியில் 154 பேர் என 11 ஆயிரத்து 217 பேர் வீட்டு தனிமையில் உள்ளனர். புதுவை மாநிலத்தில் இப்போது 11 ஆயிரத்து 344 பேர் கொரோனா  தொற்றுடன் உள்ளனர். 

    புதுவையில் 3-வது நாளாக 3 பேர் கொரோனா சிகிச்சை பலனின்றி இறந்தனர். இதனால் மாநிலத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்து 896 ஆக உயர்ந்துள்ளது.  புதுவையில்  2-வது  தவணை உள்பட 15 லட்சத்து 8 ஆயிரத்து 290 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர்.
     
    இந்த தகவலை சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
    புதுவை காவல்துறையில் போலீஸ் தேர்வு- தொடங்கியது.
    புதுச்சேரி:
    புதுவை காவல்துறையில் காலியாக உள்ள 390 போலீசார், 12 ரேடியோ டெக்னீஷியன்கள் உள்பட  431 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இந்த பணிகளுக்காக விண்ணப்பித்தவர்களில் 14 ஆயிரத்து 787 பேர் தகுதியுடையவர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கான உடல் தகுதி தேர்வு இன்று  கோரிமேடு ஆயுதப்படை  மைதானத்தில் தொடங்கியது. 

     20 நாட்களுக்கு தேர்வு நடக்கிறது. காலை 6 மணிக்கே வந்த தேர்வர்கள் மைதானத்திற்கு வெளியே அமர வைக்கப்பட்டு சான்றிதழ்கள் சரி பார்க்கப்பட்டு அனுமதிக் கப்பட்டனர். கொரோனா தொற்று இல்லை என்ற சான்றிதழ் இருந்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். 

    உடல் எடை,  உயரம், மார்பு அளவு குறித்த பின் நீளம், உயரம் தாண்டுதல், ஓட்டம், கயிறு ஏறுதல் போன்ற உடல் தகுதி தேர்வு நடத்தப்பட்டது.  தேர்வை நேர்மையாக நடத்த டிஜிட்டல் முறையில் கம்ப்யூட்டர் சிப் பொருத்தப்பட்ட பட்டை அணிவிக்கப்பட்டு துல்லியமாக உடல் தகுதி தேர்வு குறிக்கப்பட்டது. 

    தேர்வுக்கு வருவோருக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது. தேர்வுக்கு வந்தவர்கள் மொபைல் போன் எடுத்து வர அனுமதி இல்லை.  தேர்வு நடத்தும் போலீசாரும் மொபைல் போன் கொண்டுவர தடை விதிக்கப்பட்டிருந்தது. 

    தேர்வு நடத்தும் அதிகாரிகளுக்கு சுழற்சி அடிப்படையில் பணிகள் மாற்றி வழங்கப்பட்டது.  முதல் நாளில் 500 பேருக்கு உடல் தகுதி தேர்வு நடத்தப்பட்டது. நாள்தோறும் 750 பேர் வீதம் உடல் தகுதி தேர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.  கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மற்றொரு நாளில் தேர்வு நடத்த ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளது. 

    7 1/2  ஆண்டுக்கு பிறகு புதுவையில் போலீஸ் உடல் தகுதி தேர்வு நடைபெறுவதால் விண்ணப்பித்தவர்கள் உற்சாகத்தோடு கலந்து கொண்டனர். 

    புதுவையில் ஐ.டி.ஐ. நிறுவனங்களுக்கும் 31-ந்தேதி வரை விடுமுறை விடப்பட்டுள்ளது.
    புதுச்சேரி:-

    புதுவையில் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இதையொட்டி புதுவை மாநிலத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகளுக்கு  வருகிற 31-ந்தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

    இந்த நிலையில் அரசு தொழில்நுட்ப பயிற்சி நிறுவனங்களுக்கு (ஐ.டி.ஐ.) விடுமுறை அளிப்பது தொடர்பாக முதல்-அமைச்சர் ரங்கசாமியுடன் போக்குவரத்துத்துறை அமைச்சர் சந்திர பிரியங்கா ஆலோசனை நடத்தினார்.  இதன்பின் பள்ளிகள் போலவே ஐ.டி.ஐ. நிறுவனங்களுக்கும் வருகிற  31-ந்தேதி வரை விடுமுறை அளிக்கப்படுவதாக அமைச்சர் சந்திரபிரியங்கா அறிவித்துள்ளார்.
    ×