என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
சாலையை சீரமைக்காததை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு மறியல்
Byமாலை மலர்20 Jan 2022 7:13 AM GMT (Updated: 20 Jan 2022 7:13 AM GMT)
முருங்கப்பாக்கம் அரவிந்தர் நகரில் சாலையை சீரமைக்காததை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி:
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் அரியாங்குப்பம் தொகுதி குழு சார்பில் முருங்கப்பாக்கம் அரவிந்தர் நகர் குடியிருப்பு பகுதிகளில் மோசமான சாலைகளை கண்டித்தும், இந்த சாலைகளை தார் சாலைகளாக அமைத்து கொடுக்க வேண்டும்.
கழிவுநீர் வாய்க்கால் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள் ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வில்லியனூர்& முருங்கப்பாக்கம் அரவிந்தர் நகரில் பிரதான நெடுஞ்சாலை சந்திப்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
மறியல் போராட்டத்துக்கு சுகதேவ், கண்ணன், கலியபெருமாள், சுப்பிர மணியன் ஆகியோர் தலைமை தாங்கினர். பூபதி, பச்சையப்பன், முத்துவேல், வாழ்முனி, சிவராமகிருஷ்ணன், வசந்தா, வேலு, செல்வராஜ், பாலசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முன்னதாக மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட வர்கள் முருங்கப்பாக்கம்& கடலூர் சாலையில் இருந்து வில்லியனூர் சாலை வழியாக அரவிந்தர் நகருக்கு ஊர்வலமாக வந்தனர்.
ஊர்வலம் மற்றும் மறியல் போராட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் சலீம், முன்னாள் அமைச்சர் விசுவநாதன், மாநில நிர்வாக குழு உறுப்பினர்கள் அபிஷேகம், கீதநாதன், சரளா மற்றும் மாநில குழு உறுப்பினர்கள் கணேசன், அந்துவான், அந்தோணி ஆகியோர் கலந்து கொண்டனர்.
Next Story
×