என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் சாவு
Byமாலை மலர்20 Jan 2022 4:33 AM GMT (Updated: 20 Jan 2022 4:33 AM GMT)
அரியாங்குப்பத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் பலியானார்.
புதுச்சேரி:
அரியாங்குப்பம் அம்பேத்கர்நகர் முதல் குறுக்கு தெருவை சேர்ந்தவர் கணபதி (வயது86). இவருக்கு 3 மகன்கள் மற்றும் 3 மகள்கள் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணமாகி தனித்தனியே வசித்து வருகின்றனர்.
கணபதி தனது மகள் கிருஷ்ண வேணியுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் 18-&ந் தேதி மாலை 6 மணிக்கு டீ குடிப்பதற்காக அரியாங்குப்பம் பைபாஸ் சாலையில் சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் கணபதி மோதி நிற்காமல் சென்று விட்டது.
இதில் தூக்கி வீசப்பட்ட கணபதி படுகாயமடைந்தார். அப்போது அங்கிருந்த கணபதியின் பக்கத்து வீட்டுக்காரர் சுபாஷ் என்பவர் பார்த்து இதுபற்றி கணபதியின் மகன் சின்ன துரைக்கு தகவல் தெரிவித்தார். அவர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஆட்டோ மூலம் கணபதியை புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதித்தார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி கணபதி இறந்து போனார்.
இதுகுறித்து அவரது மகன் சின்னதுரை கொடுத்த புகாரின் பேரில் கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×