என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  தைப்பூசத்தையொட்டி பக்தர்கள் மிளகாய் பொடி அபிஷேகம் செய்த காட்சி.
  X
  தைப்பூசத்தையொட்டி பக்தர்கள் மிளகாய் பொடி அபிஷேகம் செய்த காட்சி.

  திருக்கனூர் பகுதியில் தைப்பூச விழா கொண்டாட்டம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருக்கனூர் பகுதியில் தைப்பூச விழா கொண்டாடப்பட்டது.
  புதுச்சேரி: 

  திருக்கனூர் அருகே உள்ள செட்டிப்பட்டு  வள்ளி தெய்வானை சமேத திருமுருகர்   கோவிலில் தைப்பூசத்தை முன்னிட்டு அங்கு உள்ள சங்கராபரணி ஆற்றில் கரகம் ஜோடித்து பொதுமக்கள் ஊர்வலமாக சென்று முருகர் கோவிலை அடைந்தனர்.

  அங்கு முருகனுக்கு பல்வேறு அபிஷேகங்கள் நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்கள் மஞ்சள் இடித்தல், மிளகாய் பொடி அபிஷேகம், அக்னி சட்டி எடுத்தல், ஆகாய விமானம் இழுத்தல் ஆகியவற்றை செய்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.தொடர்ந்து பக்தர்கள் காவடிகளை எடுத்துக் கொண்டு வீதி உலா சென்றனர். சாமி வீதி உலா காட்சியும் நடைபெற்றது.

  இதேபோன்று கூனிச்சம் பட்டில்  உள்ள சுப்பிரமணியர் கோவிலிலும் தைப்பூசத்தை முன்னிட்டு   முருகனுக்கு பல்வேறு அபிஷேகங்கள் நடைபெற்று அலகு குத்துதல், காவடி எடுத்தல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது. திருக்கனூரில் உள்ள பாலமுருகன் கோவிலில் முருகருக்கு பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டு காவடி எடுக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. மேலும் சுற்றுவட்டாரத்தில் உள்ள பல்வேறு கிராமங் களிலும் தைப்பூச விழா சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டது.
  Next Story
  ×