என் மலர்
உள்ளூர் செய்திகள்

பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு வாலிபர் சங்கத்தினர் நூதன போராட்டம் நடத்திய காட்சி.
பி.எஸ்.என்.எல்.அலுவலகம் முன்பு செல்பி எடுத்து வாலிபர் சங்கம் நூதன போராட்டம்
பி.எஸ்.என்.எல்.அலுவலகம் முன்பு செல்பி எடுத்து வாலிபர் சங்கத்தினர் நூதன போராட்டம் நடத்தினர்.
புதுச்சேரி:
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் பி.எஸ்.என்.எல். தலைமை அலுவலகம் முன்பு நூதன போராட்டம் நடந்தது.
தனியார் செல்போன் நிறுவனங்களின் கட்டண கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டும். பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல்.லை பாதுகாக்க 4-ஜி, 5-ஜி சேவையை மேம்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடந்தது. போராட்டத்துக்கு பிரதேச தலைவர் பாஸ்கர் தலைமை வகித்தார். செயலாளர் சஞ்சய் முன்னிலை வகித்தார். செயலாளர் ஆனந்த், மாநிலக்குழு உறுப்பினர் லீலாவதி கண்டன உரையாற்றினர்.
நிர்வாகிகள் வினோத், ரஞ்சித், நிலவழகன், நவீன், ராஜ்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு கோரிக்கையை வலியுறுத்தி செல்பி எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டனர்.
இந்த போராட்டம் தமிழகம் முழுவதிலும் நடத்தப்பட்டது.
Next Story






