search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "central government scheme"

    பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 11 லட்சம் குடும்பங்களுக்கு இலவச கியாஸ் இணைப்புகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. #CentralGovernment #gascylinder

    சென்னை:

    பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் மேலாளர் செந்தில்குமார் சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் 2018 டிசம்பர் மாதத்துக்குள் நாடு முழுவதும் 6 கோடி கியாஸ் இணைப்புகள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்திலேயே அந்த இலக்கு எட்டப்பட்டது. இந்த நிலையில் இந்த திட்டம் தற்போது விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

    இதன்படி வருகிற மார்ச் மாதத்துக்குள் நாடு முழுவதும் வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் மக்களுக்கு 2 கோடி இலவச சமையல் கியாஸ் இணைப்புகள் வழங்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

    இந்த திட்டத்தின் கீழ் தமிழகத்தில் மட்டும் இதுவரை 27லட்சத்து 87 ஆயிரம் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. சென்னையில் மட்டும் 25 ஆயிரம் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் மேலும் 11 லட்சம் இலவச இணைப்புகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

    வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் பெண்களின் குடும்ப மாத வருமானம் ரூ.10 ஆயிரத்துக்குள் இருக்க வேண்டும். இந்த திட்டத்தில் பயனடைய விரும்புபவர்கள் வரும் மார்ச் மாதத்துக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

    ஆதார் அட்டை, ஸ்மார்ட் ரே‌ஷன் அட்டை, வங்கி பாஸ்புத்தகம், 3 புகைப்படங்கள் அடங்கிய ஆவணங்களை அருகில் உள்ள கியாஸ் ஏஜென்சியில் வழங்கி இத்திட்டத்தின் கீழ் இலவச இணைப்பை பெறலாம்.

    கிராமப் பகுதிகளில் இந்த திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ஊழியர்கள் வீடுதோறும் விண்ணப்ப படிவங்கள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார். #CentralGovernment #gascylinder

    கோவையை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு வீடு கட்டுவதற்காக மத்திய அரசின் ஆவாஜ் யோஜனா திட்டம் மூலம் தவறுதலாக பணம் டெபாசிட் செய்யப்பட்ட சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
    கவுண்டம்பாளையம்:

    கோவை பெரியநாயக்கன்பாளையம் அடுத்துள்ள வெள்ளமடை ஊராட்சி காளிபாளையம் பகுதியை சேர்ந்தவர் அன்புசெல்வன். இவரது மனைவி பிருந்தா (வயது 25). இவர் சாமிநாயக்கன்பாளையம் பகுதியிலுள்ள கனரா வங்கியில் கடந்த 2014 ம் ஆண்டு சேமிப்பு கணக்கு தொடங்கினார்.

    இந்த நிலையில் கடந்த 28-ந்தேதி இவரது செல்போனுக்கு ஒரு மெசேஜ் வந்தது. அதில் மத்திய அரசின் பிரதான் மந்திரி ஆவாஜ் யோஜனா திட்டம் மூலம் 45 ஆயிரம் ரூபாய் பணம் வந்ததாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து பிருந்தா தனது வங்கி கணக்கை சரிபார்த்தார்.

    பிருந்தா செல்போனுக்கு வந்திருந்த மெசேஜ்.

    அப்போது கணக்கில் ரூ. 45 ஆயிரம் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து பிருந்தா தனது கணவர் அன்புசெல்வனுடன் வங்கிக்கு சென்றார். வங்கி அதிகாரிகளை சந்தித்து இதுபற்றி தெரிவித்தனர்.

    அப்போது வங்கி அதிகாரி, பெண்கள் வீடு கட்டுவதற்காக மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஜ் யோஜனா திட்டம் மூலம் பணம் தருகிறது. அதில் உங்களுக்கு வந்திருக்கும் என்று கூறினார்.

    இது குறித்து பிருந்தா கூறியதாவது, நாங்கள் இதுவரை எந்த விதமான திட்டத்திற்கும் விண்ணப்பிக்கவில்லை. அதனால் எனக்கு பணம் வருவதற்கு வாய்ப்பு இல்லை. பாரத பிரதமர் கடந்த 2015ம் ஆண்டு ஒவ்வொரு குடிமகன் வங்கி கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் பணம் போடுவதாக கூறியிருந்தார். அதற்காக முன்தொகையாக இந்த பணம் வங்கி கணக்கில் அளிக்கப்பட்டுள்ளதா? அப்படி என்றால் மீதி பணம் எப்போது வரும்? என்றார்.

    ஒருவேளை அதிகாரிகள் தவறாக வேறு பயனாளிக்கு பணம் அனுப்புவதற்கு பதிலாக எனக்கு அனுப்பி விட்டார்களா? என்று தெரியவில்லை. ஒரு வேளை அப்படி நடந்திருந்தால் எனது வங்கி கணக்கிற்கு வந்த பணத்தை திருப்பி தந்து விடுவேன் என்று கூறினார்.

    பிரதான் மந்திரி ஆவாஜ் யோஜனா திட்டத்தின் மூலம் பணம் வருகிறது என்ற தகவல் கிடைத்தவுடன் அந்த பகுதி மக்கள் எல்லோரும் அந்த திட்டத்தில் சேர முயற்சி செய்து வருகின்றனர்.



    ×