என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • வரும் காலத்தில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற முனைப்பில் புதுவை திமுகவினர் தீவிரமாக இறங்கியுள்ளனர்.
    • பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதன் மூலம் 4 பிராந்தியங்களிலும் கட்சியை கொண்டு சேர்க்கும் என கருதுகின்றனர்.

    புதுச்சேரி:

    அடுத்த ஆண்டு 2024 மே மாதம் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.

    பாராளுமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு அனேகமாக அடுத்த ஆண்டு (ஜனவரி) இறுதியில் அல்லது பிப்ரவரி முதல் வாரத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதுவை மாநிலத்தில் ஒரே ஒரு பாராளுமன்ற தொகுதி மட்டுமே உள்ளது.

    புதுவையில் முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமையில் என்.ஆர். காங்கிரஸ்- பா.ஜனதா கூட்டணி ஆட்சி நடக்கிறது. கூட்டணியில் அ.தி.மு.க. இடம் பெற்றிருந்தாலும், சட்டசபையில் எம்.எல்.ஏ.க்கள் இல்லை. புதுவை எம்.பி. தொகுதியை பெறுவதில் ஆளும் கூட்டணியான என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா, அ.தி.மு.க. இடையே போட்டி நிலவுகிறது.

    கடந்த பாராளுமன்ற தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் டாக்டர் நாராயணசாமி போட்டியிட்டு தோல்வியடைந்தார். வரும் பாராளுமன்ற தேர்தலிலும் என்ஆர்.காங்கிரஸ் போட்டியிட வேண்டும் என என்.ஆர். காங்கிரஸ் தலைவரும், முதல்-அமைச்சருமான ரங்கசாமி விரும்புவதாக தெரிகிறது.

    கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரிலும் இது எதிரொலித்தது. பட்ஜெட்டில் குடும்ப தலைவிகளுக்கு ரூ.ஆயிரம், கியாஸ் மானியம் ரூ.300, அரசு தினக்கூலி ஊழியர்களின் சம்பளம் ரூ.18 ஆயிரமாக உயர்வு என்பது உள்ளிட்ட பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

    இந்த அறிவிப்புகளை செயல்வடிவம் கொடுப்பதிலும் ரங்கசாமி முனைப்பாக உள்ளார். இதன்மூலம் பாராளுமன்ற தேர்தலில் மக்களை எளிதில் கவர முடியும் என ரங்கசாமி நினைக்கிறார்.

    அதேநேரத்தில் கூட்டணியில் இடம் பெற்றுள்ள பா.ஜனதா கடந்த ஆண்டே பாராளுமன்ற தேர்தல் பணிகளை தொடங்கி விட்டது. மத்திய மந்திரி எல்.முருகன் புதுவை பாராளுமன்ற தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தொடர்ந்து புதுவைக்கு வந்து பல்வேறு தரப்பினரை சந்தித்து பேசி, ஆதரவு திரட்டி வருகிறார்.

    எம்.பி. தேர்தலில் போட்டியிடுவதன் மூலம் கட்சியை மாநிலத்தின் 4 பிராந்தியங்களிலும் வேரூன்ற செய்ய முடியும் என்று பா.ஜனதாவினர் எண்ணுகின்றனர். இதனால் அவர்களும் கூட்டணியில் தொகுதியை பெறுவதில் முனைப்புடன் உள்ளனர்.

    இதனிடையே கடந்த சட்டமன்ற தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ், பா.ஜனதா கூட்டணியில் 5 தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை அதிமுக இழந்தது. இதனால் வரும் பாராளுமன்ற தேர்தலில் எம்.பி. தொகுதியை பெற்று போட்டியிடுவதன் மூலம் சரிந்த அ.தி.மு.க. செல்வாக்கை நிலைநிறுத்த முடியும் என புதுவை அ.தி.மு.க.வினர் எண்ணுகின்றனர். இதனால் கட்சி தலைமையை அணுகி கூட்டணியில் அ.தி.மு.க.வுக்கு தொகுதியை பெற வலியுறுத்தி வருகின்றனர்.

    இதேபோல எதிர்கட்சியான தி.மு.க., காங்கிரஸ் கூட்டணியிலும் எம்.பி. தொகுதியை பெறுவதில் போட்டி உருவாகியுள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தலில் 15 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் 2 தொகுதியில் மட்டும்தான் வெற்றி பெற்றது. இதனால் எதிர்கட்சி என்ற அந்தஸ்தை இழந்தது.

    புதுவை காங்கிரசின் கோட்டை என நீண்டகாலமாக கருதப்பட்டு வருகிறது. அதை மீண்டும் நிரூபிக்கும் வகையில் வரும் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் எம்.பி. தொகுதியில் போட்டியிட விரும்புகிறது. இதற்கான காய்களை முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி நகர்த்த தொடங்கியுள்ளார்.

    அதே கூட்டணியில் இடம் பெற்றுள்ள தி.மு.க. சட்டமன்ற தேர்தலில் 6 எம்.எல்.ஏ.க்களை பெற்று எதிர்கட்சி அந்தஸ்தை பெற்றுள்ளது. வரும்காலத்தில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற முனைப்பில் புதுவை திமுகவினர் தீவிரமாக இறங்கியுள்ளனர். அதற்கு பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதன் மூலம் 4 பிராந்தியங்களிலும் கட்சியை கொண்டு சேர்க்கும் என கருதுகின்றனர்.

    இதனால் கூட்டணியில் தொகுதியை பெறுவதில் தி.மு.க.வினரும் முனைப்பாக செயல்பட்டு வருகின்றனர். இதனால் பாராளுமன்ற தேர்தலுக்கு ஓராண்டே உள்ள நிலையில் புதுவையில் ஆளும், எதிர்கட்சி கூட்டணி கட்சிகளிடையே எம்.பி. தொகுதியை பெறுவதில் போட்டா போட்டி ஏற்பட்டு உள்ளது.

    • 100 சதவீதம் சிறப்பாக இருக்க வேண்டும் என்று தான் செயல்திட்டம் வகுக்கப்படுகிறது. ஆனால் அதில் ஓரிரு குறைகள் இருக்கத்தான் செய்யும்.
    • முதல்-அமைச்சர் ரங்கசாமி மாநிலத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என்ற ஒற்றை இலக்கத்தோடு அரசு அதிகாரிகளின் ஆலோசனை களை பெற்று அயராது பணியாற்றி வருகிறார்.

    புதுச்சேரி:

    என்.ஆர்.இலக்கிய பேரவை தலைவர் தனசேகரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கடற்கரையைத் தவிர எந்த கனிம வளமும் இல்லாத நம் புதுவைக்கு சுற்றுலா மட்டுமே அரசு நிர்வாகம் சுவாசிக்க ஆக்சிஜனாக இருக்கிறது. அதை மேம்படுத்தும் விதத்தில் ஒரு சில திட்டங்கள் செயல்படுத்த வேண்டிய கட்டாயம் அரசுக்கு உள்ளது. அது 100 சதவீதம் சிறப்பாக இருக்க வேண்டும் என்று தான் செயல்திட்டம் வகுக்கப்படுகிறது. ஆனால் அதில் ஓரிரு குறைகள் இருக்கத்தான் செய்யும்.

    அரசின் மொத்த பட்ஜெட்டில் 75 சதவீதம் நிதி அரசு ஊழியர்களுக்கு சம்பளத்துக்கே சரியாக இருக்கின்றது. மீதி நிதியை கொண்டு மக்கள் நல திட்டங்கள் புதிய அறிவிப்புகள் போன்றவைகளை செய்தாக வேண்டிய நிலையில் கூடுதல் நிதியை பெருக்க சில யுத்திகளை கையாள வேண்டியது அரசின் கடமை, நிர்வாக திறமையின் நிரந்தர அடையாளமாக திகழும் முதல்-அமைச்சர் ரங்கசாமி மாநிலத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என்ற ஒற்றை இலக்கத்தோடு அரசு அதிகாரிகளின் ஆலோசனை களை பெற்று அயராது பணியாற்றி வருகிறார்.

    மாநிலம் பெருமை கொள்ளும் திட்டங்களை செயல்படுத்தி மக்களின் நன்மதிப்பை பெற்று வருபவர் முதல்-அமைச்சர் மாநில வளர்ச்சி, வருவாய் திட்டங்களை விமர்சிப்போரை என். ஆர். இலக்கியப் பேரவை வன்மையாக கண்டிக்கிறது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • அரசு ஊழியர்கள் மத்திய கூட்டமைப்பின் புதுவை மாநில பொதுச் செயலாளர் லட்சுமணசாமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பெயர் பலகையை திறந்து வைத்து பேசினார்.
    • அந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், நகராட்சி கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்களுக்கு அரசு நேரடியாக ஊதியம் வழங்க வேண்டும்.

    புதுச்சேரி:

    அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் சங்கத்தின் புதிய பெயர் பலகை திறப்பு விழா மற்றும் சங்க கூட்டம் நடைபெற்றது.

    அரசு ஊழியர்கள் மத்திய கூட்டமைப்பின் புதுவை மாநில பொதுச் செயலாளர் லட்சுமணசாமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பெயர் பலகையை திறந்து வைத்து பேசினார்.

    அதனைத் தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் தலைவர் கந்தவேல் தலைமை தாங்கினார். மாநில பொதுச் செயலாளர் லட்சுமணசாமி சிறப்புரை ஆற்றினார்.

    முன்னதாக செயலாளர் செழியன் வரவேற்றார். முடிவில் பொருளாளர் பாலமுருகன் நன்றி கூறினார்.

    இந்த கூட்டத்தில் புதுவை நகராட்சி ஊழியர்களும் சங்கத்தின் ஆலோசகர்க ளுமான கணேசன் என்ற மனோகரன், பத்ரீஸ் தெலமாஷ், அரியாங்குப்பம் மற்றும் பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் பலர் கலந்து கொண்டு சங்கத்தின் வளர்ச்சிகள் குறித்து தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.

    அந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், நகராட்சி கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்களுக்கு அரசு நேரடியாக ஊதியம் வழங்க வேண்டும்.

    12 ஆண்டுகள் பணி புரிந்து வருகிற கிராம பஞ்சாயத்து தினக்கூலி ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்துக்கு புதிய கட்டிடம் அமைத்து தர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    • புதுவை மாநில தி.மு.க. சார்பில் வில்லியனூர் சுல்தான்பேட்டை முகம்மதியா மஹாலில் இப்தார் விருந்து நடந்தது.
    • தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர்கள் கோபால், ராமசாமி, செல்வநாதன், தர்மராஜ் உள்ளிட்ட மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சித் தலைவர்கள், இஸ்லாமி யர்கள் பங்கேற்றனர்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில தி.மு.க. சார்பில் வில்லியனூர் சுல்தான்பேட்டை முகம்மதியா மஹாலில் இப்தார் விருந்து நடந்தது.எதிர்கட்சி தலைவர் சிவா தலைமை தாங்கினார்.

    வில்லியனூர் தொகுதி தி.மு.க. செயலாளர் மணிகண்டன் வரவேற்றார்.தொகுதி அவைத் தலைவர் ஜலால், சுல்தான்பேட்டை அவைத் தலைவர்கள் ஜலீல், இததுல்லா, அப்துல் கபூர், நிசார் அகமது, அபுசாலி, கிளைச் செயலாளர்கள் முகம்மது ஹாஜி, முகம்மது அன்சாரி, கமாலுதீன், சிராஜிதீன், முகம்மது சுல்தான், கட்சி நிர்வாகிகள் அக்பர், முஜிபூர் ரஹமான், ரபீக், ராஜா முகம்மது, பக்ருதீன், தாகா, ராஜ் முகம்மது, அப்துல் அஹது, நிஜாமுதீன், முகம்மது இலூர், அஷரப் அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில், அரசு டவுன் காஜி ஜியாவுதீன், முகம்மதியா பள்ளிவாசல் நிர்வாகிகள் தலைவர் முகம்மது யாசின், செயலாளர் உபையதூர் ரஹ்மான், ஜமாத்தில் உலமா சபை தலைவர் முகம்மது மூசா, ஜமாத்தார்கள், முன்னாள் முதல்- அமைச்சர் நாராயணசாமி, வைத்திலிங்கம் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் அனிபால் கென்னடி, செந்தில்குமார், வைத்தியநாதன், காங்கிரஸ் மாநில தலைவர் ஏ.வி. சுப்ரமணியன், மார்க்சிஸ்ட்டு கம்யூனிஸ்ட்டு மாநில தலைவர் ராஜாங்கம், விடுதலை சிறுத்தைகள் கட்சி முதன்மைச் செயலாளர் தேவ. பொழிலன், மனித நேய மக்கள் கட்சி சகாபுதீன், தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர்கள் கோபால், ராமசாமி, செல்வநாதன், தர்மராஜ் உள்ளிட்ட மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சித் தலைவர்கள், இஸ்லாமி யர்கள் பங்கேற்றனர்.

    • அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த 1999 மற்றும் 2000 -ம் ஆண்டில் 9 மற்றும் 10-ம் வகுப்பு படித்த மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
    • ஆசிரியர் மற்றும் ஆசிரியைகளை நினைவு கூர்ந்து, அப்போது நடைபெற்ற சுவாரஸ்யமான நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    கிருமாம்பாக்கம் அம்பேத்கர் அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த 1999 மற்றும் 2000 -ம் ஆண்டில் 9 மற்றும் 10-ம் வகுப்பு படித்த மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் விஜய் கணேஷ் தலைமை தாங்கினார். கூட்டத்தில் முன்னாள் மாணவர்கள் பங்கேற்று தங்களின் பள்ளி பருவ நாட்களையும், ஆசிரியர் மற்றும் ஆசிரியைகளை நினைவு கூர்ந்து, அப்போது நடைபெற்ற சுவாரஸ்யமான நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டனர்.

    தொடர்ந்து, பள்ளிக்கு தேவையான உதவிகள் என்னென்ன என்பது குறித்தும், அதனை மேற்கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது. முடிவில் முன்னாள் மாணவர்கள் அனைவரும் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டு மகிழ்ந்தனர்.

    • திருபுவனை தொகுதிக் குட்பட்ட திருபுவனை ரைஸ் மில் மெயின் ரோட்டில் சன்னியாசி குப்பம் இணைப்பு சாலை பகுதியில் உள்ள ராதாகிருஷ்ணன் நகரில் தொடர்ந்து குறைந்த மின் அழுத்தம் நிலவி வருகிறது.
    • இளநிலை பொறியாளர் பழனிவேல், மற்றும் மின்துறை ஊழியர்கள் மற்றும் எம்.எல்.ஏ.வின் ஆதரவாளர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    திருபுவனை தொகுதிக் குட்பட்ட திருபுவனை ரைஸ் மில் மெயின் ரோட்டில் சன்னியாசி குப்பம் இணைப்பு சாலை பகுதியில் உள்ள ராதாகிருஷ்ணன் நகரில் தொடர்ந்து குறைந்த மின் அழுத்தம் நிலவி வருகிறது.

    இந்நிலையில் அப்பகுதி மக்கள் எம்.எல்.ஏ.விடம் கேட்டுக் கொண்டதின் பெயரில் அங்கு 200 கிலோ வாட்ஸ் கொண்ட புதிய மின் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது. இதனை அங்களான் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் போது மின் துறை உதவி பொறியாளர் பேரம்பலம், இளநிலை பொறியாளர் பழனிவேல், மற்றும் மின்துறை ஊழியர்கள் மற்றும் எம்.எல்.ஏ.வின் ஆதரவாளர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.

    • கணவரும் தொடர்ந்து பிரச்சினை செய்து வந்ததால் குழந்தையை கொன்றுவிட முடிவு செய்தேன்.
    • விசாரணையில் பெற்ற தாயே குழந்தையை கொலை செய்தது தெரியவந்தது.

    புதுச்சேரி:

    சென்னை கொரட்டூர் பகுதியை சேர்ந்தவர் குமரேசன் (32). இவருக்கு ராஜேஸ்வரி என்ற பெண்ணுடன் ஏற்கனவே திருமணமாகி 4 ஆண் குழந்தைகள் உள்ளது. இந்நிலையில் அவர் மற்றொருவரின் மனைவி சங்கீதா(24)வை 2-வது திருமணம் செய்து கொண்டார்.

    பழங்குடி நாடோடிகளான குமரேசன் தம்பதி சமீபத்தில் புதுவையை அடுத்த கிருமாம்பாக்கம் புதுக்குப்பத்துக்கு வந்தனர். புதுக்குப்பம் குளக்கரையில் இவர்கள் குடும்பத்தோடு வசித்து வந்தனர். கர்ப்பிணியாக இருந்த சங்கீதாவுக்கு கடந்த 29 நாட்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது.

    நேற்று முன்தினம் இரவு குழந்தையோடு சங்கீதா அங்கு படுத்திருந்தார். நேற்று காலை கண் விழித்து பார்த்தபோது குழந்தையை காணவில்லை. இதையடுத்து அப்பகுதி முழுவதும் குழந்தையை தேடினர்.

    அப்போது புதுக்குப்பம் சுடுகாடு அருகே கடற்கரையில் பெண் சிசு புதைக்கப்பட்ட நிலையில் கிடந்ததை கண்ட அப்பகுதி மக்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

    போலீசார் அங்கு வந்த விசாரித்தபோது, அது சங்கீதாவின் குழந்தை என தெரியவந்தது. குழந்தையை கண்டு சங்கீதா, குமரேசன் கதறி அழுதனர். அப்பகுதியை சேர்ந்த மர்ம ஆசாமிகள் குழந்தையை தூக்கி சென்றிருக்கலாம் என போலீசில் தெரிவித்தனர்.

    சங்கீதாவின் பேச்சில் சந்தேகமடைந்த போலீசார் அவரை தனியே அழைத்து தீவிர விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் பெற்ற தாயே குழந்தையை கொலை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் சங்கீதாவை கைது செய்தனர்.

    இதுகுறித்து சங்கீதா போலீசில் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:-

    குழந்தை பிறந்த பிறகு என் கணவர் அடிக்கடி சந்தேகப்பட்டு, அடித்து துன்புறுத்தினார். குழந்தை எனக்கு பிறந்ததா? எனக்கேட்டு தகராறு செய்தார். ஏற்கனவே குழந்தை குறை பிரசவத்தால் பிறந்ததால் வளர்ப்பதற்கு சிரமப்பட்டேன். கணவரும் தொடர்ந்து பிரச்சினை செய்து வந்ததால் குழந்தையை கொன்றுவிட முடிவு செய்தேன்.

    நேற்று அதிகாலை எல்லோரும் அசந்து தூங்கும்நேரத்தில் குழந்தையை புதுக்குப்பம் கடற்கரைக்கு கொண்டுசென்றேன். அங்கு மணலில் குழந்தை தலையை அழுத்தி கொலை செய்து புதைத்துவிட்டு வந்துவிட்டேன். காலையில் ஒன்றும் தெரியாதது போல இருந்தேன். போலீசார் என்னை கண்டுபிடித்துவிட்டனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மர்மநபர் ஒருவரின் நடமாட்டம் இருந்ததாகவும், அவர் தனது குழந்தையை கடத்தி கொலை செய்திருக்கலாம் என குமரேசன் தெரிவித்துள்ளார்.
    • பயங்கர சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    புதுச்சேரி:

    சென்னை கொரட்டூர் பகுதியை சேர்ந்தவர் குமரேசன் (வயது32). நாடோடி பழங்குடி வகுப்பை சேர்ந்த இவர் சென்னை, புதுவை பகுதியில் சாலையோரங்களில் வசித்து வந்தார்.

    இவருக்கு ஏற்கனவே ராஜேஸ்வரி என்ற பெண்ணுடன் திருமணமாகி 4 ஆண் குழந்தைகள் உள்ளனர்.

    இதனிடையே மற்றொருவரின் மனைவியான சங்கீதாவை 2-வதாக திருமணம் செய்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சங்கீதா கர்ப்பமானார்.

    இந்நிலையில் குமரேசன் சங்கீதாவை அழைத்துக்கொண்டு புதுவை கிருமாம்பாக்கத்துக்கு வந்தனர். அங்குள்ள சமுதாய கூடம் அருகே உள்ள காலி இடத்தில் வசித்தனர்.

    பின்னர் புதுக்குப்பம் குளக்கரை அருகே தங்கியிருந்தனர்.

    இந்நிலையில் கடந்த 29 நாட்களுக்கு முன்பு சங்கீதாவுக்கு பெண் குழந்தை பிறந்தது. குழந்தையுடன் அவர்கள் சந்தோஷமாக வாழ்ந்தனர்.

    நேற்று இரவு குளக்கரையில் குமரேசன், சங்கீதா இருவரும் குழந்தையை அருகில் படுக்க வைத்துவிட்டு தூங்கினர். இன்று காலை கண்விழித்த போது குழந்தையை காணவில்லை.

    இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் அந்த பகுதியில் குழந்தையை தேடினர்.

    இதற்கிடையே புதுக்குப்பம் கடற்கரையில் இன்று காலை ஒரு குழந்தையின் கால் மட்டும் மணலில் புதைந்த நிலையில் தெரிந்தது.

    அப்பகுதி வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்து கிருமாம்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    கிருமாம்பாக்கம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜய குமார், உதவி சப்-இன்ஸ்பெக்டர் லூர்து நாதன், ஏட்டு பிரீமியர் ரமேஷ் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து குழந்தையின் உடலை மீட்டு விசாரணை நடத்தினர்.

    இதுபற்றி தகவல் அறிந்த குமரேசன் சங்கீதா தம்பதியினர் அங்கு வந்தனர். அப்போது மணலில் புதைக்கப்பட்டு இருந்தது அவர்களது குழந்தைதான் என்பது தெரியவந்தது. அவர்கள் அழுது துடித்தனர். போலீசார் குழந்தை உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி உள்ளனர்.

    நேற்று இரவு குழந்தை அழுததால் குமரேசன் குழந்தையை கவனித்துக்கொண்டிருந்தார். குழந்தையோடு, தானும் தூங்கிவிட்டதாக தெரிவித்துள்ளார்.

    அப்பகுதியில் மர்மநபர் ஒருவரின் நடமாட்டம் இருந்ததாகவும், அவர் தனது குழந்தையை கடத்தி கொலை செய்திருக்கலாம் என குமரேசன் தெரிவித்துள்ளார்.

    பச்சிளம் குழந்தையை கடற்கரை மணலில் உயிரோடு புதைத்து கொலை செய்து இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து போலீசார் குமரேசன், சங்கீதா தம்பதியிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த பயங்கர சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • வில்லியனூர் திருக்காஞ்சி கங்கைவராக நதீஸ்வரர் ஆலயத்தில் அரசு சார்பில் வருகிற 22-ந் தேதி முதல் மே 3-ந் தேதி வரை மகா புஷ்கரணி விழா நடைபெற உள்ளது.
    • புஷ்கரணி விழா ஏற்பாடுகளுக்காக கோவில் நிர்வாகம் சார்பில் 12 கமிட்டிகள் அமைக்கப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    வில்லியனூர் திருக்காஞ்சி கங்கைவராக நதீஸ்வரர் ஆலயத்தில் அரசு சார்பில் வருகிற 22-ந் தேதி முதல் மே 3-ந் தேதி வரை மகா புஷ்கரணி விழா நடைபெற உள்ளது.

    இதற்கான ஏற்பாடுகளை புதுவை இந்து சமய அறநிலையத்துறை செய்து வருகிறது. விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள் என எதிர் பார்க்கப்படுகிறது. விழாவின் ஒரு பகுதியாக வாரந்தோறும் சனிக்கிழமைகளில் சங்கராபரணி ஆற்றில் கங்கா ஆரத்தி விழா நடைபெற்று வருகிறது.

    புஷ்கரணி விழாவிற்கு வரும் பக்தர்கள் புனித நீராடி செல்ல சங்கராபரணி ஆற்றில் திருக்காஞ்சி பகுதியில் படித்துறை அமைத்து தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் வந்து செல்வதற்காக கணுவாப்பேட்டை சாலை, ஒதியம்பட்டு புதிய மேம்பால சாலை, திருக்காஞசி மற்றும் உட்புற சாலைகள் சீரமைக்கப்பட்டு வருகிறது.

    புஷ்கரணி விழா ஏற்பாடுகளுக்காக கோவில் நிர்வாகம் சார்பில் 12 கமிட்டிகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கமிட்டிகளுடன் அமைச்சர் தேனீ. ஜெயக்குமார் கோவிலில் ஆலோசனை கூட்டம் நடத்தினார்.

    அப்போது நடைபெற்ற இடம் பணிகள் குறித்தும் யார் யாருக்கு என்னென்ன பணிகள் ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறித்தும் பொதுமக்களின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் அடிப்படை வசதிகள் குறித்தும் சிரமமின்றி வந்து செல்ல சாலை மேம்பாட்டு வசதிகள் குறித்தும் ஆலோசனை நடத்தினார்.

    மேலும் இதனை தொடர்ந்து விழா நடைபெற இருக்கும் சங்கராபரணி ஆற்றங்கரையில் படித்துறைக்கு சென்ற ஆய்வு செய்தார். அப்போது பொதுமக்கள் பாதுகாப்பாக ஆற்றில் இறங்கி குளிப்பதற்கும் ஆற்றில் இறங்க முடியாதவர்கள் அங்கே அமைக்கப்பட்டுள்ள ஷவர் மூலம் குளிப்பதற்கான ஏற்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.

    கோவில் சிவாச்சாரியார் சரவணன் நிருபர்களிடம் கூறும்போது,

    புஷ்கரணி விழா 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் விழாவில் பொதுமக்கள் கலந்து கொண்டு சங்கராபரணி ஆற்றில் நீராடினால் முன்னோர்கள் தோஷம் தீரும் திருமண தோஷம் புத்திர பாக்கியம் நினைத்த காரியங்கள் கைகூடும் என்றார்.

    • புதுவை அரசின் சமூக நலத்துறை மற்றும் சகோதரன் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் திருநங்கைகள் தின விழா கம்பன் கலையரங்கில் நடந்தது.
    • திருக்காஞ்சியில் 2 திருநங்கைகளுக்கு கடைகள் வைத்து வியாபாரம் செய்ய வாய்ப்பு தரப்படும்.

    புதுச்சேரி

    புதுவை அரசின் சமூக நலத்துறை மற்றும் சகோதரன் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் திருநங்கைகள் தின விழா கம்பன் கலையரங்கில் நட ந்தது.

    துறை இயக்குனர் குமரன் வரவேற்றார். சமூகநலத்துறை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் தலைமை வகித்தார். அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார் வாழ்த்தி பேசினார். சபாநாயகர் ஏம்பலம் செல்வம் திருநங்கை சாதனையாளர்களுக்கு விருது வழங்கினார்.

    விழாவில் சமூக நலத்துறை செயலர் உதயகுமார், கலெக்டர் வல்லவன், எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க திட்ட இயக்குனர் சித்ராதேவி, இந்தியாவின் முதல் திருநங்கை வக்கீல் சத்யஸ்ரீஷர்மிளா, மகாத்மாகாந்தி மருத்துவக்கல்லூரி பொது மேலாளர் ஆஷாசுரேஷ்பாபு, புதுவை மாநில ஊரக வளர்ச்சி முகமை பாலின ஒருங்கிணைப்பாளர் சாவித்ரி, சகோதாரன் மேம்பாட்டு நிறுவனர் ஷீத்தல் உட்பட பலர் கலந்து கொண்டனர். கள அதிகாரி கனகராஜ் நன்றி கூறினார்.

    இதைத்தொடர்ந்து அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தேசிய ஜனநாயக கூட்டணி முதல்- அமைச்சர் ரங்கசாமி ஆட்சியில் முதல்முறையாக திருநங்கைகள் தின விழா கொண்டாடப்படுகிறது. முதல்-அமைச்சருடன் ஆலோசனை நடத்தி, 18 வயது நிரம்பிய திருநங்கைகளின் வங்கி கணக்கில் ரூ.1 லட்சம் டெப்பாசிட் செய்யப்படும். திருக்காஞ்சியில் 2 திருநங்கைகளுக்கு கடைகள் வைத்து வியாபாரம் செய்ய வாய்ப்பு தரப்படும்.

    மாநிலம் முழுவதும் கணக்கெடுப்பு நடத்தி இலவச மனைப்பட்டா வழங்கி வீடு கட்டித்தரப்படும். அடுத்த ஆண்டுக்குள் இதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.

    மாநிலத்தில் 500-க்கும் குறைவான திருநங்கைகளே உள்ளனர். இதனால் சதவீத அடிப்படையில் அரசு வேலையில் ஒதுக்கீடு வழங்க முடியாது. அதற்கு பதிலாக அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

    மாவட்ட தொழில் மையம் மூலம் சுயதொழில் செய்ய மானியத்தில் கடனுதவி வழங்கப்படும். பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பல்வேறு திட்டங்களை திருநங்கைகளுக்காக செயல்படுத்தி வருகிறது.

    அவை அனைத்தும் புதுவையில் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். திருநங்கைகளின் கோரி க்கைகள் அனைத்தையும் நிறைவேற்றித்தர முதல்- அமைச்சர் ரங்கசாமி தலைமையிலான அரசு தயாராக உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • புதுவையில் 840 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை நடத்தப்பட்டது.
    • புதுவையில் 55, காரைக்காலில் 2 பேர் என 57 பேர் தொற்று பாதிப்பிலிருந்து மீண்டனர். புதுவையில் இதுவரை கொரோனாவுக்கு 1978 பேர் பலியாகியுள்ளனர்.

    புதுச்சேரி:

    புதுவையில் 840 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை நடத்தப்பட்டது.

    இதில் புதுவையில் 62, காரைக்காலில் 23, ஏனாமில் 3 பேர் என மொத்தம் 88 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் புதுவையில் 21, காரைக்காலில் 2 பேர் என 23 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    புதுவையில் 331, காரைக்காலில் 147, ஏனாமில் 24, மாகியில் 7 பேர் என மொத்தம் 509 பேர் கொரோனா தொற்றுடன் வீட்டு தனிமையில் உள்ளனர்.

    புதுவையில் 55, காரைக்காலில் 2 பேர் என 57 பேர் தொற்று பாதிப்பிலிருந்து மீண்டனர். புதுவையில் இதுவரை கொரோனாவுக்கு 1978 பேர் பலியாகியுள்ளனர்.

    புதுவையில் கொ ரோனா தொற்று வேகமாக பரவுவதால் முக கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது போன்ற தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி சுகாதாரத்துறை அறிவுறு த்தியுள்ளது.

    • மதுபான தொழிற்சாலைகளால் வேலைவாய்ப்பு உருவாகும், அவை குறைந்த தண்ணீரைத் தான் பயன்படுத்தி, வெளி மாநிலங்களில்தான் விற்பனை செய்யும் என தெரிவித்துள்ளார்.
    • எதிர்காலத்தில் 10 லட்சம் சுற்றுலாப் பயணிகள் புதுவைக்கு வருவார்கள் என சுற்றுலாத்துறை அமைச்சர் கூறுகிறார். புதுவையை ஏற்கனவே மதுச்சேரியாக மாற்றி விட்டனர்.

    புதுச்சேரி:

    புதுவை முன்னாள் எம்.பி. பேராசிரியர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

    மண்ணாடிப்பட்டில் நடந்த அரசு விழாவில் பேசிய முதல்-அமைச்சர், மதுபான தொழிற்சாலைகளால் வேலைவாய்ப்பு உருவாகும், அவை குறைந்த தண்ணீரைத் தான் பயன்படுத்தி, வெளி மாநிலங்களில்தான் விற்பனை செய்யும் என தெரிவித்துள்ளார்.

    மதுபான தொழிற்சாலை கள் மூலமாகத்தான் வேலை வாய்ப்பு வர வேண்டுமா? தொழில்நுட்ப பூங்கா தொடங்குவது,

    5 பஞ்சாலைகளை திறப்ப தால் அதிக வேலை வாய்ப்பை உருவாக்க முடியாதா? மதுபான ஆலைகளால் புதுவையின் கிராமங்கள் பாலைவனமாகி சுற்றுச் சூழல் பெரிதும் பாதிக்கப்படும்.

    எதிர்காலத்தில் 10 லட்சம் சுற்றுலாப் பயணிகள் புதுவைக்கு வருவார்கள் என சுற்றுலாத்துறை அமைச்சர் கூறுகிறார். புதுவையை ஏற்கனவே மதுச்சேரியாக மாற்றி விட்டனர்.

    கவர்னர் கூறிய ஆண், பெண் சமத்துவத்தை போற்றும் வகையில் பெண்களுக்காக மது பார்கள் திறக்கப்பட்டுள்ளது. தேவை அதிதமாகிவிட்ட பிறகு புதுவையில் உற்பத்தியாகும் மதுபானத்தை வெளியில் அனுப்ப வேண்டிய அவசியம் இருக்காது. அவற்றை உள்ளூரிலே விற்கலாம். மதுபான தொழிற்சாலை கள் ஆரம்பிக்க முதல்-அமைச்சர் கூறும் எந்த காரணத்தையும்ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

    இவற்றுக்கு அப்பாற்பட்ட வேறு விஷயங்கள்தான் மதுபான தொழிற்சாலைகளுக்கு அனுமதி கொடுக்க காரண மாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×