என் மலர்
புதுச்சேரி

புதிய பெயர் பலகை திறப்பு விழா மற்றும் சங்க கூட்டம் நடைபெற்ற காட்சி.
தினக்கூலி ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்
- அரசு ஊழியர்கள் மத்திய கூட்டமைப்பின் புதுவை மாநில பொதுச் செயலாளர் லட்சுமணசாமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பெயர் பலகையை திறந்து வைத்து பேசினார்.
- அந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், நகராட்சி கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்களுக்கு அரசு நேரடியாக ஊதியம் வழங்க வேண்டும்.
புதுச்சேரி:
அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் சங்கத்தின் புதிய பெயர் பலகை திறப்பு விழா மற்றும் சங்க கூட்டம் நடைபெற்றது.
அரசு ஊழியர்கள் மத்திய கூட்டமைப்பின் புதுவை மாநில பொதுச் செயலாளர் லட்சுமணசாமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பெயர் பலகையை திறந்து வைத்து பேசினார்.
அதனைத் தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் தலைவர் கந்தவேல் தலைமை தாங்கினார். மாநில பொதுச் செயலாளர் லட்சுமணசாமி சிறப்புரை ஆற்றினார்.
முன்னதாக செயலாளர் செழியன் வரவேற்றார். முடிவில் பொருளாளர் பாலமுருகன் நன்றி கூறினார்.
இந்த கூட்டத்தில் புதுவை நகராட்சி ஊழியர்களும் சங்கத்தின் ஆலோசகர்க ளுமான கணேசன் என்ற மனோகரன், பத்ரீஸ் தெலமாஷ், அரியாங்குப்பம் மற்றும் பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் பலர் கலந்து கொண்டு சங்கத்தின் வளர்ச்சிகள் குறித்து தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.
அந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், நகராட்சி கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்களுக்கு அரசு நேரடியாக ஊதியம் வழங்க வேண்டும்.
12 ஆண்டுகள் பணி புரிந்து வருகிற கிராம பஞ்சாயத்து தினக்கூலி ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்துக்கு புதிய கட்டிடம் அமைத்து தர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.






