என் மலர்
புதுச்சேரி
- ஒரு திட்டத்தின் அறிவிப்பு செயல் வடிவம் பெற குறைந்தது 3 மாத காலமாவது ஆகும். அதுவரை தாக்குப் பிடிக்க முடியாமல் நாராயணசாமி இந்த திட்டத்துக்கு ஏது பணம், எங்கிருந்து வரும்?
- முதல்-அமைச்சரை பார்த்து சின்ன மோடி என்று சொல்வது பெருமைக்குரிய விஷயம் தான்.
புதுச்சேரி:
புதுவை மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-
மக்களுக்கு நன்மை பயக்கும் கியாஸ் மானியம், குடும்ப தலைவிக்கு மானியம், மாதாந்திர நிதி உதவி போன்ற திட்டங்களின் பயன் மக்களை சென்றடைய கூடாது என்கின்ற தனிமனித விரக்தியில் தவறான கருத்துக்களை நாராயணசாமி பரப்புகிறார்.
ஒரு திட்டத்தின் அறிவிப்பு செயல் வடிவம் பெற குறைந்தது 3 மாத காலமாவது ஆகும். அதுவரை தாக்குப் பிடிக்க முடியாமல் நாராயணசாமி இந்த திட்டத்துக்கு ஏது பணம், எங்கிருந்து வரும்? எப்படி வரும்? என ஒன்றும் புரியாதவர் கேள்வி எழுப்புகிறார்.
இந்த திட்டத்தை செயல்படுத்த நிதி செயலர், தலைமைச் செயலாளர், கவர்னர் ஆகியோருடைய அனுமதி பெற்று தான் பட்ஜெட்டில் இந்த அறிவிப்பு வெளியிடப்படும் என்பதை முன்னாள் முதல்-அமைச்சர் நாராயண சாமிக்கு புரியாமல் இருப்பது நகைப்பாக உள்ளது.
முதல்-அமைச்சரை பார்த்து சின்ன மோடி என்று சொல்வது பெருமைக்குரிய விஷயம் தான். கடந்த ஆட்சியின் போது கவர்னருக்கு எதிராக ஒரு வாரத்துக்கு மேலாக வீதியில் அமர்ந்து பகோடாவும், மீன், எறா பஜ்ஜியும் சுட்டவருக்கு பழைய ஞாபகம் வந்து விட்டது போல் உள்ளது.
முதல்-அமைச்சராக இருந்த போது அப்போதைய பெண் கவர்னருக்கு எதிராக வீதியில் அமர்ந்து கொண்டு பஜ்ஜி சுட்டவருக்கு வேறு எதைப்பற்றி உதாரணமாக சொல்ல முடியும். அரசியல் விமர்சனங்கள் என்பது உயரிய பண்புள்ளதாக இருக்க வேண்டும். அதை புரிந்து நடப்பது முன்னாள் முதல்-அமைச்சர் நாராயண சாமிக்கு அழகாகும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- புதுவை அரசின் தீயணைப்புத்துறை சார்பில் தீயணைப்பு சேவை வாரம் கடை பிடிக்கப்படுகிறது.
- தீயணைப்பு வீரர்களோடு, தன்னார்வலர்களான ஆத்ம மித்ரா, சிவில் டிபன்ஸ் ஆகியோரும் பேரணியில் பங்கேற்றனர்.
புதுச்சேரி:
புதுவை அரசின் தீயணைப்புத்துறை சார்பில் தீயணைப்பு சேவை வாரம் கடை பிடிக்கப்படுகிறது.
இதையொட்டி 20-ந் தேதி வரை தீயணைப்பு வீரர்கள் பொதுமக்களுக்கு பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரம், நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். தீ விபத்திலிருந்து எப்படி தற்காத்துக் கொள்வது? என செயல்முறை விளக்கமும் அளித்து வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக இன்று கடற்கரை சாலையில் தீ விபத்து விழிப்புணர்வு நடைபயணம் மேற்கொள்ளப்பட்டது. அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார் தீயணைப்பு வீரர்களின் நடைபயணத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
கோட்ட தீயணைப்பு அதிகாரி இளங்கோ, உதவி கோட்ட தீயணைப்பு அதிகாரி ரித்தோஷ் சந்திரா, நிலைய அதிகாரிகள் முகுந்தன், சுரேஷ், கிருஷ்ணமூர்த்தி, லட்சுமணன், மனோகர்,பக்கிரி, கார்த்திகேயன் மற்றும் தீயணைப்பு வீரர்கள், ஓய்வு பெற்ற தீயணைப்பு ஊழியர்கள், அதிகாரிகள் இதில் பங்கேற்றனர்.
தீயணைப்பு வீரர்களோடு, தன்னார்வலர்களான ஆத்ம மித்ரா, சிவில் டிபன்ஸ் ஆகியோரும் பேரணியில் பங்கேற்றனர். துணை தாசில்தார்கள் விபீஷணன், ராஜலட்சுமி ஆகியோர் தீயணைப்பு வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். பேரணியில் பங்கேற்ற தீயணைப்பு வீரர்கள், தீ விபத்து குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு விநியோகம் செய்தனர்.
- பாகூர் தொகுதி காங்கிரஸ் சார்பில் ராகுல்காந்தி எம்.பி. பதவி பறிப்பை கண்டித்து கன்னியக் கோவில், பச்சைவாழியம்மன் கோவில் அருகே சத்தியாகிரக போராட்டம் நடந்தது.
- போராட்டத்தில் பஞ்சாயத்து தராஜ் அமைப்பு தலைவர் கோவிந்தராஜ், எஸ்.சி. பிரிவு இணை செயலர் அன்பழகன், விவசாய அணி தலைவர் அரிகிருஷ்ணன், மீனவரணி போத்திராஜ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
புதுச்சேரி:
பாகூர் தொகுதி காங்கிரஸ் சார்பில் ராகுல்காந்தி எம்.பி. பதவி பறிப்பை கண்டித்து கன்னியக் கோவில், பச்சைவாழியம்மன் கோவில் அருகே சத்தியாகிரக போராட்டம் நடந்தது.
பொதுச்செயலாளர் மணவாளன் தலைமை வகித்தார். வட்டார தலைவர் கோபு முன்னிலை வகித்தார். மாநில தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன், முன்னாள் முதல்- அமைச்சர் நாராயணசாமி, எம்.பி. வைத்திலிங்கம், வைத்தியநாதன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் கந்தசாமி, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் அனந்தராமன், விஜயவேணி மற்றும் கூட்டணி கட்சியினர் பங்கேற்றனர்.
போராட்டத்தில் பஞ்சாயத்து தராஜ் அமைப்பு தலைவர் கோவிந்தராஜ், எஸ்.சி. பிரிவு இணை செயலர் அன்பழகன், விவசாய அணி தலைவர் அரிகிருஷ்ணன், மீனவரணி போத்திராஜ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
போராட்டத்தில் முன்னாள் முதல்- அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-
சிலிண்டருக்கு ரூ.300 மானியம் அறிவித்துள்ள முதல்-அமைச்சர் ரங்கசாமி, பட்ஜெட்டில் ஒரு பைசா கூட ஒதுக்கவில்லை. புதுவையில் மதுக்கடைகளை திறக்க வேண்டாம். குடித்துவிட்டு பலர் இறப்பதால் பெண்கள் அதிகமாகி, ஆண்கள் எண்ணிக்கை குறைந்துவிட்டது என்று சொன்னால், வேலைவாய்ப்பு இல்லை.
நடன பார் திறந்தால் தான் வேலைவாய்ப்பு கிடைக்கும் என ரங்கசாமி கூறுகிறார். பிரதமர் பெரிய மோடி என்றால், ரங்கசாமி சின்ன மோடி. வேலை இல்லாத இளைஞர்கள் பக்கோடா சுடுங்கள் என்றார் மோடி. ரங்கசாமி படித்த இளைஞர்களை மதுக்கடையில் எச்சில் கிளாசை கழுவுங்கள் என்கிறார். ரங்கசாமி ஆட்சியில் சட்ட-ஒழுங்கு சீர்கெட்டுள்ளது.
போதைப் பொருட்களான கஞ்சா, அபின் தாராளமாக கிடைக்கிறது. இளைஞர்கள் சீரழிந்து, மதுபோதையில் நள்ளிரவில் ஆட்டம் போடுகின்றனர். மக்களின் நிம்மதியை கெடுத்துவிட்டு சுற்றுலாவை வளர்க்கப்போவதாக ரங்கசாமி கூறுகிறார்.
இரவில் போடும் ஆட்டத்தால் மக்கள் நிம்மதியாக தூங்க முடியவில்லை.ரங்கசாமி ஆட்சியில் வளர்ச்சி இல்லை. எல்லாவற்றையும் அறிவிப்பார், ஒன்றையும் செய்ய மாட்டார். மக்களை ஏமாற்றி முதல அமைச்சர் ஆகியுள்ளார்.
அவர் போலி சித்தர். மக்களை ஏமாற்றும் சித்தர். ரங்கசாமி ஆட்சியில் குடுமிப்பிடி சண்டை நடக்கிறது. புதுவையில் உள்ள இடங்களை எம்.எல்.ஏ.க்கள் பட்டா போட்டுக்கொள்கின்றனர்.
இப்படி ஊழல் நிறைந்த மக்களை மதிக்காத ஆட்சி நடக்கிறது. இதற்கு முடிவு கட்ட காங்கிரசார் ஒன்றிணைந்து செயல்பட ஒத்துழைப்பு தர வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- சென்னை - நாகப்பட்டினம் சாலை, விழுப்புரம்- புதுவை தேசிய நெடுஞ்சாலையில் 4 வழி சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகின்றது.
- பாலத்தின் வழியாக மதகடிப்பட்டுபாளையம் மற்றும் புதுவைக்கு செல்லும் வாகனங்கள், திருவோனை ஊருக்குள் செல்லும் வாகனங்கள் அருகில் இருக்கும் வியாபார கடைகளால் திரும்ப முடியாமல் குறுகிய சாலையில் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.
புதுச்சேரி:
சென்னை - நாகப்பட்டினம் சாலை, விழுப்புரம்- புதுவை தேசிய நெடுஞ்சாலையில் 4 வழி சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகின்றது. இதற்காக திருபுவனையில் மேம்பாலம் அமைக்கப்பட்டு ஒருவழி பாதையில் தற்போது வாகனங்கள் சென்று வருகின்றன.
தற்போது சாலையின் ஓரம் உள்ள பனை மரங்களை அகற்றாமல் மேம்பால பணிகள் நடைபெறுவதால், திருபுவனையில் ஒரு வழி பாதையாக தற்காலிக சாலை அமைக்கப்பட்டுள்ளது.
இதனால் புதுவையில் இருந்து திருபுவனை வழியாக மதகடிப்பட்டுபாளையம் செல்லும் சாலை கடலூர் வரை செல்கின்றது. இந்த சாலை தற்போது வாகனங்கள் திரும்ப முடியாமல், போதிய இடவசதி இல்லாமல் நான்கு பக்கமும் வாகனங்கள் செல்ல முடியாமல், தினந்தோறும் இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
அணிவகுத்து நிற்கின்றன பாலத்தின் வழியாக மதகடிப்பட்டுபாளையம் மற்றும் புதுவைக்கு செல்லும் வாகனங்கள், திருவோனை ஊருக்குள் செல்லும் வாகனங்கள் அருகில் இருக்கும் வியாபார கடைகளால் திரும்ப முடியாமல் குறுகிய சாலையில் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.
சாலை விரிவாக்க அதிகாரிகள் இப்பகுதியில் உள்ள கட்டிடங்களை அகற்றாமல் அவசரக் கதியில் சாலை போடும் பணியை செய்து வருகின்றனர்.
இதனால் திருபுவனைக்கு செல்ல சர்வீஸ் ரோடு இல்லாத நிலையில் கடலூர் சாலை குறுகிய சாலையாகவும் மாறி உள்ளது.
மேலும் சாலையின் இரு புறமும் இரண்டு சக்கர வாகனங்களை பொதுமக்கள் நிறுத்தி சென்று விடுகின்றனர். இதனால் இன்னும் குறுகிய சாலையாக இந்த சாலை மாறி உள்ளது. இதுவரை போக்குவரத்து போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத இந்நிலையில் சாலை உள்ளது.
இதனை சம்பந்தப்பட்ட தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டு அங்குள்ள வியாபாரக் கடைகளை அகற்றி வாகனங்கள் முறையாக திரும்பி செல்ல வழிவகை செய்ய வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
மேலும் வாகனங்கள் திரும்பும் போது அங்குள்ள கட்டிடங்கள் மீது மோதி செல்கின்றன. அங்கு பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள், வாகன ஓட்டிகள் மற்றும் பொது மக்களுக்கு விபத்து அபாயம் உள்ளது. சாலை போடும் பணி முடிந்தவுடன் திருபுவனைக்கு செல்வதற்கு சாலை வசதி இல்லாத பகுதியாக மாறும் நிலையில் திருபுவனை இருக்கப் போகின்றது.
இதற்கு தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.
- புதுவை, தமிழகம் மாநில அளவிலான பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகளை பெற்று வந்தனர்.
- இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் முதல்வர் விவேக் கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
புதுச்சேரி:
திருவாண்டார்கோவில் நவதுர்கா மேல்நிலைப் பள்ளியின் சார்பில் மாணவர்கள் புதுவை கல்வித்துறை நடத்திய வட்ட அளவிளான விளையாட்டுப் போட்டிகள் மற்றும் மழலையர் விழா மற்றும் தமிழகம், புதுவை மாநில அளவிலான பல்வேறு விளையாட்டுப் போட்டி களில் கலந்துகொண்டு பரிசுகளை பெற்று வந்தனர்.
பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களை பாராட்டும் விதமாக பரிசளிப்பு விழா நவதுர்கா மேல்நிலை பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. பள்ளி நிர்வாகி சத்தியா நடராஜன் தலைமை தாங்கி பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் முதல்வர் விவேக் கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாணவர்க ளுக்கு பரிசுகளை வழங்கினார். இந்தப் பள்ளியை சேர்ந்த 6-ம் வகுப்பு மாணவர் தமிழ் இனியன் தமிழகம் மற்றும் புதுவை மாநில அளவில் சென்னையில் நடைபெற்ற இறகு பந்து ஆடவர் ஒற்றை பிரிவில் முதல் பரிசும், விழுப்புரம் மாவட்ட அளவில் நடைபெற்ற இறகு பந்து லீக் போட்டியில் 2-ம் பரிசு பெற்றுள்ளார்.
அதேபோல் புதுவை கல்வித்துறை நடத்திய 4-ம் வட்ட அளவிளான விளையாட்டுப் போட்டிகள் மதகடிப்பட்டு கலைஞர் கருணாநிதி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற தடகளப் போட்டியில் மாணவர்கள் நவீன், மோகித்தீஸ்வரன், லோகேஸ்வரன், விக்னேஷ், ஆகியோர் 2-ம் பரிசும், ரோலர் ஸ்கேட்டிங் ரிங் ஒன் பிரிவில் 2-ம் பரிசும், ரிங் டூ பிரிவில் 2-ம் பரிசும், மாணவர் அஷ்வின்ராஜ் வெற்றி பெற்றார்.
உடற்கல்வி ஆசிரியர்கள் விஜய்அரசன், தியாகு ஆகியோர் விளையாட்டு ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு, மாணவர்களை பல்வேறு போட்டியில் வெற்றி பெற பயிற்சி அளித்தார்கள்.
பொறுப்பாசிரியர் வினோதினி நன்றி கூறினார்.
- புதுவை உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட அப்துல் கலாம் அரசு குடியிருப்பு பகுதிகளில் பல வருடங்களாக பல இடங்களில் மின் விளக்குகள் இயங்காமல் இருந்து வந்தது.
- அதிகாரியிடம் கென்னடி எம்.எல்.ஏ. அனிபால் மனு கொடுத்து மின்விளக்குகளை அமைத்துக் கொடுக்கும்படி வலியுறுத்தி வந்தார்.
புதுச்சேரி:
புதுவை உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட அப்துல் கலாம் அரசு குடியிருப்பு பகுதிகளில் பல வருடங்களாக பல இடங்களில் மின் விளக்குகள் இயங்காமல் இருந்து வந்தது.
அரசு குடியிருப்புகளில் வசிக்கும் பொதுமக்கள் உப்பளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி எம்.எல்.ஏ.விடம் தெரிவித்து வந்தனர்.
இது குறித்து தொடர்ச்சியாக பொதுப்பணித்துறை பிரிவு அதிகாரியிடம் கென்னடி எம்.எல்.ஏ. அனிபால் மனு கொடுத்து மின்விளக்குகளை அமைத்துக் கொடுக்கும்படி வலியுறுத்தி வந்தார்.
அதன் பிரதிபலிப்பாக தற்பொழுது சுமார் ரூ.14,88,000 செலவில் மின்விளக்குகள் குடியிருப்பு முழுவதும் பொருத்தப்பட்டது. இதனை அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
உடன் பொதுப்பணி துறை உதவி பொறியாளர் பார்த்தசாரதி , மின்துறை உதவி பொறியாளர் மோகன்ராஜ் , கிளை செயலாளர் ராகேஷ் மற்றும் ஊர் பொது மக்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.
இந்த தொகுதியில் இதுவரை 15 மோட்டார் புதிதாக அமைத்து கொடு த்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- புதுவையில் கிராமப் பகுதியில் விவசாயிகள் கரும்பு, வாழை, சவுக்கு, நெல் அதிகம் பயிரிடுவர். அத்துடன் துணை பயிர்களையும் விளைவித்து லாபத்தை ஈட்டுகிறார்கள்.
- புதுவைக்கு தமிழகம், ஆந்திரம், கேரளம், பெங்களூரில் இருந்து பப்பாளி வந்தது. அதனால் பெங்களூரில் இருந்து ரூ.21-க்கு ஒரு செடி வீதம் ஒரு ஏக்கருக்கு பப்பாளி பயிரிட்டேன்.
புதுச்சேரி:
புதுவையில் கிராமப் பகுதியில் விவசாயிகள் கரும்பு, வாழை, சவுக்கு, நெல் அதிகம் பயிரிடுவர். அத்துடன் துணை பயிர்களையும் விளைவித்து லாபத்தை ஈட்டுகிறார்கள்.
தற்போதைய சூழலுக்கு ஏற்ப புதிய பயிர்களையும் விளைவித்து லாபம் ஈட்டுகின்றனர்.
காட்டேரிக்குப்பத்தைச் சேர்ந்த விவசாயி அப்துல், சொட்டுநீர் பாசனத்தில் கத்தரி, மிளகாய், பூச்செடிகள் மூலம் லாபம் ஈட்டி வருகிறார். அத்துடன் புதிதாக பப்பாளியையும் பயிரிட்டுள்ளார். இதுபற்றி அவர் கூறியதாவது:-
புதுவைக்கு தமிழகம், ஆந்திரம், கேரளம், பெங்களூரில் இருந்து பப்பாளி வந்தது. அதனால் பெங்களூரில் இருந்து ரூ.21-க்கு ஒரு செடி வீதம் ஒரு ஏக்கருக்கு பப்பாளி பயிரிட்டேன். நல்ல விளைச்சல் வந்துள்ளது. புதுவையில் புதிதாக பப்பாளி பயிரிட்டு நல்ல லாபம் கிடைத்துள்ளது. பப்பாளியில் பூச்சித்தாக்குதல் வரும். அதனால் ஊடுபயிராக சாமந்தி வைத்தேன்.
இதனால் அதில் கிடைக்கும் லாபம் ஆள்கூலி தர பயன்படும். மரத்திலேயே இயற்கையாக பழுக்க வைத்து விற்கிறேன். ரசாயனம் பயன்படுத்துவதில்லை. பப்பாளிக்கு அரசு மானியம் தந்தால் உதவியாக இருக்கும். பழைய பயிர்களை மட்டும் பயிரிடாமல் புதிய பயிர்களை புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தினால் நிச்சயம் லாபம் ஈட்டலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கப்பல் பயணத்துக்கு குறைவான கட்டணமே வசூலிக்க முடிவு செய்துள்ளனர்.
- பெரும்பாலான பயணிகள் இனி புதுவை வழியாக இலங்கைக்கு செல்ல விரும்புவார்கள் என தெரிகிறது.
புதுச்சேரி:
நாடு முழுவதும் உள்ள 2-ம் கட்ட நகர துறைமுகங்களில் சரக்கு கப்பல் சேவை மற்றும் பயணிகள் கப்பல் சேவையை அதிகப்படுத்தி துறைமுகங்களின் வருவாயை பெருக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
புதுவை உப்பளம் துறைமுகத்தில் இருந்து இலங்கை, யாழ்பாணத்தில் உள்ள காங்கேசன் துறைமுகத்துக்கு 300 பயணிகள் பயணிக்கும் ஏ.சி. வசதியுடன் கூடிய கப்பல் சேவை விரைவில் தொடங்கப்பட உள்ளது.
இதற்காக உப்பளம் துறைமுகத்தில் உள்ள ஒரு குடோனில் இதற்கான அலுவலகம் செயல்பட கோரப்பட்டுள்ளது. ஏற்கனவே இங்கு சுங்கத்துறை அலுவலகம் செயல்பாட்டில் உள்ளது.
புதுவையில் இருந்து செல்லும் கப்பல் பயணத்துக்கு குறைவான கட்டணமே வசூலிக்க முடிவு செய்துள்ளனர்.
இதனால் தமிழக பகுதியை சேர்ந்த பெரும்பாலான பயணிகள் இனி புதுவை வழியாக இலங்கைக்கு செல்ல விரும்புவார்கள் என தெரிகிறது.
இலங்கை செல்லும் பயணிகள் கப்பல் சேவையால் புதுவை உப்பளம் துறைமுகத்துக்கு அதிகளவு வருவாயும், மேலும் உள்ளூர் இளைஞர்களுக்கு மறைமுக வேலை வாய்ப்பும் ஏற்படும் என அதிகாரிகள் கூறினர்.
- ஒவ்வொரு மகளுக்கும், தந்தைதான் ரியல் ஹீரோ என்ற கருத்தை மையமாக் கொண்டு ஞானகாரவேல் பாடல் எழுத, அதிதி ஆனந்த் பாட குமரன் இசையமைத்திருந்தார்.
- மணக்குள விநாயகா கல்வி அறக்கட்டளையின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர் தனசேகரன் தலைமை தாங்கினார்.
புதுச்சேரி:
மதகடிப்பட்டு, ஸ்ரீ மணக்குள விநாயகர் என்ஜினீயரிங் கல்லூரியும் பீக் மியூசிக் குழுவும் இணைந்து ரியல் ஹீரோ எனும் தலைப்பில் இசைவெளீயீட்டு விழா நிகழ்ச்சி கல்லூரி நடத்தியது.
குடும்ப உறவுகளில் தந்தை-மகள் பாச உணர்வுகளையும், தந்தையின் அர்ப்ப ணிப்பையும், அவரின் தியாக உணர்வை வெளிப்படுத்தும் வகையில், ஒவ்வொரு மகளுக்கும், தந்தைதான் ரியல் ஹீரோ என்ற கருத்தை மையமாக் கொண்டு ஞானகாரவேல் பாடல் எழுத, அதிதி ஆனந்த் பாட குமரன் இசையமைத்திருந்தார்.
இந்த இசைவெளியீட்டு விழா நிகழ்ச்சியில் தக்கஷஷீலா பல்கலை க்கழகத்தின் வேந்தர் மற்றும் மணக்குள விநாயகா கல்வி அறக்கட்டளையின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர் தனசேகரன் தலைமை தாங்கினார்.
துணைத்தலைவர் சுகுமாறன், செயலாளர் நாராயணசாமி கேசவன், பொருளாளர் ராஜராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரியின் இயக்குனர் மற்றும் முதல்வருமான வெங்கடாசலபதி வரவேற்று பேசினார்.
பதிவாளர் அப்பாஸ் மொய்தீன் கல்லூரியின் தேர்வு கட்டுப்பாட்டாளர் ஜெயக்குமார், அகாடமிக் டீன் அன்புமலர், அகாடமி டீன் அறிவழகர், கல்லூரியின் ஆராய்ச்சி துறையின் டீன் வேல்முருகன், கல்லூரியின் வேலைவாய்ப்புத்துறை அதிகாரி கைலாசம், ஸ்கூல் ஆப் ஆர்க்கிடெக்சர் முதல்வர் மனோகரன், கலை மற்றும் அறிவியல் துறை டீன் முத்துலட்சுமி, அலைட் ஹெல்த் சயின்ஸ் டீன், கோபால், வேளாண்மை மற்றும் தோட்டக்கலைதுறை டீன் முகம்மது யாசின், பிசியோதெரபி டீன் சிரம்பரம், சட்ட கல்வித்துறை டீன் சந்திரசேகர் மற்றும் அனைத்து துறைத்தலைவர்கள் பேராசிரியர்கள் 800-க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்துகொண்டனர். முடிவில் குமரன் நன்றி கூறினார்.
- புதுவை அருகே மணவெளி தொகுதி தி.மு..க சார்பில் தவளக்குப்பம் 4 முனை சந்திப்பில் மோர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
- சட்டமன்ற எதிர் கட்சி தலைவர் சிவா எம்.எல்.ஏ. மோர் பந்தல் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்
புதுச்சேரி:
கோடை வெயில் தாக்கம் குறைக்க தமிழக முதல் -அமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆணைக்கு இணங்க, மணவெளி தொகுதி தி.மு..க சார்பில் தவளக்குப்பம் 4 முனை சந்திப்பில் மோர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. பொதுக்குழு உறுப்பினர் சன்.சண்முகம் தலைமை தாங்கினார்.
சிறப்பு விருந்தி னராக மாநில அமைப்பாளர் மற்றும் சட்டமன்ற எதிர் கட்சி தலைவர் சிவா எம்.எல்.ஏ. மோர் பந்தல் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்
இந்த நிகழ்ச்சியில் தொகுதி செயலாளர் கே.ஆர்.வி. ராஜாராமன் வரவேற்று பேசினார். ஆதிதிராவிடர் நலப் பிரிவு மாநில நிர்வாகிகள் ரவிச்சந்திரன், சக்திவேல், மீனவர் அணி மாநில நிர்வாகிகள் வீரபத்திரன், குமணன், தகவல் தொழில்நுட்ப அணி ரமேஷ், அவைத்தலைவர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பொருளாளர் செல்லப்பன், துணைச் செயலாளர் ஆனந்தகுமார், ராஜவேலு, ஜெகதீஸ்வரி, மாநில பிரதிநிதி ராஜாமணி, விஜய் கிருஷ்ணன், செயற்குழு உறுப்பினர்கள் பாஸ்கர், நல்லவாடு ரகு, பாக்கியராஜ், புதுக்குப்பம் வேலாயுதம், தேவன், கார்த்திக், டோல்கேட் சக்திவேல், செந்தில், திவாகர்,
வேலாயுதம், சாந்தபாலன், இளைஞர் அணி அமர், செல்வம், விமல், கலை, கவுதம், கலைவாணன், தன
சேகரன், ராமு ஹரி, பவி, முருகன், ஹரிபிரசாந்த், தேவா, அவினாஷ், பூரணாங் குப்பம் தயாளன், டி.என். பாளையம் இளவயதன், ஆண்டியார்பாளையம் மணி, டாக்டர் இளங்கோ மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- புதுவை அக்னி சிறகுகள் திருநங்கைகள் கூட்டமைப்பு சார்பில் கடற்கரை சாலை காந்தி சிலை எதிரே திருநங்கைகள் கேக் வெட்டி ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர்.
- புதுவையில் எங்களுக்கான அங்கீகார த்திற்காகவும், குறைகளை தீர்ப்பதற்காகவும் தனி நலவாரியத்தை அரசு உடனடியாக அமைத்துத்தர வேண்டும்.
புதுச்சேரி:
சர்வதேச திருநங்கைகள் தினம் கொண்டாடப்பட்டது.
புதுவை அக்னி சிறகுகள் திருநங்கைகள் கூட்டமைப்பு சார்பில் கடற்கரை சாலை காந்தி சிலை எதிரே திருநங்கைகள் கேக் வெட்டி ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர்.
பின்னர் திருநங்கைகள் கூட்டமைப்பு தலைவர் ஷீத்தல் நாயக் கூறும்போது, தமிழகத்தில் திருநங்கைகளுக்கு தனி நலவாரியம் உள்ளது. வடமாநிலங்களிலும் இதேபோல வாரியம் அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல புதுவையில் எங்களுக்கான அங்கீகார த்திற்காகவும், குறைகளை தீர்ப்பதற்காகவும் தனி நலவாரியத்தை அரசு உடனடியாக அமைத்துத்தர வேண்டும்.
புதுவை திருநங்கைகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும். திருநங்கைகளுக்கு வீடு, மாத உதவித்தொகை வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நள்ளிரவு நடன பார் எனப்படும் நடனமேடையுடன் கூடிய மதுபார்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து இளைஞர் காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தினோம்.
- நடன பார் மூலம்தான் அரசுக்கு வருமானம் என்ற எண்ணத்தில் நாள்தோறும் உரிமம் வழங்கப்பட்டு வருகிறது.
புதுச்சேரி:
புதுவை மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆனந்தபாபுநடராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியி ருப்பதாவது:-
நள்ளிரவு நடன பார் எனப்படும் நடனமேடையுடன் கூடிய மதுபார்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து இளைஞர் காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தினோம்.
இந்நிலையில் மண்ணாடிப்பட்டு தொகுதியில் நடந்த அரசு விழாவில் முதல்-அமைச்சர் ரங்கசாமி, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கவே நடன பார்களை அரசு திறக்கிறது என பேசியுள்ளார்.
நடன பார் மூலம்தான் அரசுக்கு வருமானம் என்ற எண்ணத்தில் நாள்தோறும் உரிமம் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் வெளியே செல்ல முடியாமல், பயந்து மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். புதுவை அரசு பொதுமக்களுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டும்.
ஆயிரக்கணக்கான அரசு நிறுவன ஊழியர்களுக்கு சம்பளம் தரவில்லை. தன் தொகுதி மருத்துவமனை ஊழியர்களுக்கு மட்டும் பணி நிரந்தர ஆணை வழங்கியுள்ளார். இது நியாயம்தானா? அரசின் அனைத்து நிறுவன ஊழியர்களுக்கும் நிலுவை சம்பளத்தை வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.






