என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    ரூ.14.88 லட்சத்தில் மின் விளக்குகள்-அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
    X

    மின்விளக்குகள் குடியிருப்பு முழுவதும் பொருத்தப்பட்டது. இதனை அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்த காட்சி.

    ரூ.14.88 லட்சத்தில் மின் விளக்குகள்-அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

    • புதுவை உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட அப்துல் கலாம் அரசு குடியிருப்பு பகுதிகளில் பல வருடங்களாக பல இடங்களில் மின் விளக்குகள் இயங்காமல் இருந்து வந்தது.
    • அதிகாரியிடம் கென்னடி எம்.எல்.ஏ. அனிபால் மனு கொடுத்து மின்விளக்குகளை அமைத்துக் கொடுக்கும்படி வலியுறுத்தி வந்தார்.

    புதுச்சேரி:

    புதுவை உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட அப்துல் கலாம் அரசு குடியிருப்பு பகுதிகளில் பல வருடங்களாக பல இடங்களில் மின் விளக்குகள் இயங்காமல் இருந்து வந்தது.

    அரசு குடியிருப்புகளில் வசிக்கும் பொதுமக்கள் உப்பளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி எம்.எல்.ஏ.விடம் தெரிவித்து வந்தனர்.

    இது குறித்து தொடர்ச்சியாக பொதுப்பணித்துறை பிரிவு அதிகாரியிடம் கென்னடி எம்.எல்.ஏ. அனிபால் மனு கொடுத்து மின்விளக்குகளை அமைத்துக் கொடுக்கும்படி வலியுறுத்தி வந்தார்.

    அதன் பிரதிபலிப்பாக தற்பொழுது சுமார் ரூ.14,88,000 செலவில் மின்விளக்குகள் குடியிருப்பு முழுவதும் பொருத்தப்பட்டது. இதனை அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

    உடன் பொதுப்பணி துறை உதவி பொறியாளர் பார்த்தசாரதி , மின்துறை உதவி பொறியாளர் மோகன்ராஜ் , கிளை செயலாளர் ராகேஷ் மற்றும் ஊர் பொது மக்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.

    இந்த தொகுதியில் இதுவரை 15 மோட்டார் புதிதாக அமைத்து கொடு த்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×