என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    பப்பாளியுடன் ஊடுபயிராக சாமந்தி விளைவிக்கும் விவசாயி
    X

    புதிதாக பப்பாளியை பயிரிட்ட அப்துல்

    பப்பாளியுடன் ஊடுபயிராக சாமந்தி விளைவிக்கும் விவசாயி

    • புதுவையில் கிராமப் பகுதியில் விவசாயிகள் கரும்பு, வாழை, சவுக்கு, நெல் அதிகம் பயிரிடுவர். அத்துடன் துணை பயிர்களையும் விளைவித்து லாபத்தை ஈட்டுகிறார்கள்.
    • புதுவைக்கு தமிழகம், ஆந்திரம், கேரளம், பெங்களூரில் இருந்து பப்பாளி வந்தது. அதனால் பெங்களூரில் இருந்து ரூ.21-க்கு ஒரு செடி வீதம் ஒரு ஏக்கருக்கு பப்பாளி பயிரிட்டேன்.

    புதுச்சேரி:

    புதுவையில் கிராமப் பகுதியில் விவசாயிகள் கரும்பு, வாழை, சவுக்கு, நெல் அதிகம் பயிரிடுவர். அத்துடன் துணை பயிர்களையும் விளைவித்து லாபத்தை ஈட்டுகிறார்கள்.

    தற்போதைய சூழலுக்கு ஏற்ப புதிய பயிர்களையும் விளைவித்து லாபம் ஈட்டுகின்றனர்.

    காட்டேரிக்குப்பத்தைச் சேர்ந்த விவசாயி அப்துல், சொட்டுநீர் பாசனத்தில் கத்தரி, மிளகாய், பூச்செடிகள் மூலம் லாபம் ஈட்டி வருகிறார். அத்துடன் புதிதாக பப்பாளியையும் பயிரிட்டுள்ளார். இதுபற்றி அவர் கூறியதாவது:-

    புதுவைக்கு தமிழகம், ஆந்திரம், கேரளம், பெங்களூரில் இருந்து பப்பாளி வந்தது. அதனால் பெங்களூரில் இருந்து ரூ.21-க்கு ஒரு செடி வீதம் ஒரு ஏக்கருக்கு பப்பாளி பயிரிட்டேன். நல்ல விளைச்சல் வந்துள்ளது. புதுவையில் புதிதாக பப்பாளி பயிரிட்டு நல்ல லாபம் கிடைத்துள்ளது. பப்பாளியில் பூச்சித்தாக்குதல் வரும். அதனால் ஊடுபயிராக சாமந்தி வைத்தேன்.

    இதனால் அதில் கிடைக்கும் லாபம் ஆள்கூலி தர பயன்படும். மரத்திலேயே இயற்கையாக பழுக்க வைத்து விற்கிறேன். ரசாயனம் பயன்படுத்துவதில்லை. பப்பாளிக்கு அரசு மானியம் தந்தால் உதவியாக இருக்கும். பழைய பயிர்களை மட்டும் பயிரிடாமல் புதிய பயிர்களை புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தினால் நிச்சயம் லாபம் ஈட்டலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×