என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    நவதுர்கா பள்ளி மாணவர்கள் சாதனை
    X

    விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொண்ட மாணவர்களுக்கு கேடயம் வழங்கிய காட்சி.

    நவதுர்கா பள்ளி மாணவர்கள் சாதனை

    • புதுவை, தமிழகம் மாநில அளவிலான பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகளை பெற்று வந்தனர்.
    • இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் முதல்வர் விவேக் கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

    புதுச்சேரி:

    திருவாண்டார்கோவில் நவதுர்கா மேல்நிலைப் பள்ளியின் சார்பில் மாணவர்கள் புதுவை கல்வித்துறை நடத்திய வட்ட அளவிளான விளையாட்டுப் போட்டிகள் மற்றும் மழலையர் விழா மற்றும் தமிழகம், புதுவை மாநில அளவிலான பல்வேறு விளையாட்டுப் போட்டி களில் கலந்துகொண்டு பரிசுகளை பெற்று வந்தனர்.

    பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களை பாராட்டும் விதமாக பரிசளிப்பு விழா நவதுர்கா மேல்நிலை பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. பள்ளி நிர்வாகி சத்தியா நடராஜன் தலைமை தாங்கி பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் முதல்வர் விவேக் கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாணவர்க ளுக்கு பரிசுகளை வழங்கினார். இந்தப் பள்ளியை சேர்ந்த 6-ம் வகுப்பு மாணவர் தமிழ் இனியன் தமிழகம் மற்றும் புதுவை மாநில அளவில் சென்னையில் நடைபெற்ற இறகு பந்து ஆடவர் ஒற்றை பிரிவில் முதல் பரிசும், விழுப்புரம் மாவட்ட அளவில் நடைபெற்ற இறகு பந்து லீக் போட்டியில் 2-ம் பரிசு பெற்றுள்ளார்.

    அதேபோல் புதுவை கல்வித்துறை நடத்திய 4-ம் வட்ட அளவிளான விளையாட்டுப் போட்டிகள் மதகடிப்பட்டு கலைஞர் கருணாநிதி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற தடகளப் போட்டியில் மாணவர்கள் நவீன், மோகித்தீஸ்வரன், லோகேஸ்வரன், விக்னேஷ், ஆகியோர் 2-ம் பரிசும், ரோலர் ஸ்கேட்டிங் ரிங் ஒன் பிரிவில் 2-ம் பரிசும், ரிங் டூ பிரிவில் 2-ம் பரிசும், மாணவர் அஷ்வின்ராஜ் வெற்றி பெற்றார்.

    உடற்கல்வி ஆசிரியர்கள் விஜய்அரசன், தியாகு ஆகியோர் விளையாட்டு ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு, மாணவர்களை பல்வேறு போட்டியில் வெற்றி பெற பயிற்சி அளித்தார்கள்.

    பொறுப்பாசிரியர் வினோதினி நன்றி கூறினார்.

    Next Story
    ×