என் மலர்
புதுச்சேரி

தவளக்குப்பத்தில் தி.மு.க. சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு நிகழ்ச்சியை மாநில அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
தி.மு.க. சார்பில் இலவச மோர் பந்தல்- மாநில அமைப்பாளர் சிவா தொடங்கி வைத்தார்
- புதுவை அருகே மணவெளி தொகுதி தி.மு..க சார்பில் தவளக்குப்பம் 4 முனை சந்திப்பில் மோர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
- சட்டமன்ற எதிர் கட்சி தலைவர் சிவா எம்.எல்.ஏ. மோர் பந்தல் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்
புதுச்சேரி:
கோடை வெயில் தாக்கம் குறைக்க தமிழக முதல் -அமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆணைக்கு இணங்க, மணவெளி தொகுதி தி.மு..க சார்பில் தவளக்குப்பம் 4 முனை சந்திப்பில் மோர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. பொதுக்குழு உறுப்பினர் சன்.சண்முகம் தலைமை தாங்கினார்.
சிறப்பு விருந்தி னராக மாநில அமைப்பாளர் மற்றும் சட்டமன்ற எதிர் கட்சி தலைவர் சிவா எம்.எல்.ஏ. மோர் பந்தல் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்
இந்த நிகழ்ச்சியில் தொகுதி செயலாளர் கே.ஆர்.வி. ராஜாராமன் வரவேற்று பேசினார். ஆதிதிராவிடர் நலப் பிரிவு மாநில நிர்வாகிகள் ரவிச்சந்திரன், சக்திவேல், மீனவர் அணி மாநில நிர்வாகிகள் வீரபத்திரன், குமணன், தகவல் தொழில்நுட்ப அணி ரமேஷ், அவைத்தலைவர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பொருளாளர் செல்லப்பன், துணைச் செயலாளர் ஆனந்தகுமார், ராஜவேலு, ஜெகதீஸ்வரி, மாநில பிரதிநிதி ராஜாமணி, விஜய் கிருஷ்ணன், செயற்குழு உறுப்பினர்கள் பாஸ்கர், நல்லவாடு ரகு, பாக்கியராஜ், புதுக்குப்பம் வேலாயுதம், தேவன், கார்த்திக், டோல்கேட் சக்திவேல், செந்தில், திவாகர்,
வேலாயுதம், சாந்தபாலன், இளைஞர் அணி அமர், செல்வம், விமல், கலை, கவுதம், கலைவாணன், தன
சேகரன், ராமு ஹரி, பவி, முருகன், ஹரிபிரசாந்த், தேவா, அவினாஷ், பூரணாங் குப்பம் தயாளன், டி.என். பாளையம் இளவயதன், ஆண்டியார்பாளையம் மணி, டாக்டர் இளங்கோ மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.






