என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • புதுவை ஒருங்கிணைந்த ஆதிதிராவிடர் இயக்க ங்களின் கூட்டமைப்பில் இணைந்துள்ள சமூக இயக்கங்களின் சார்பில் அம்பேத்கரின் 132 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
    • அம்பேத்கர் சிலைக்கு கூட்டமைப்பு சார்பில் மூத்த வழக்கறிஞர் அமாவாசை மாலை அணிவித்து மரியாதை செய்தார். 500 பேருக்கு இனிப்பு மற்றும் உணவும் வழங்கப்பட்டது.

    புதுச்சேரி:

    புதுவை ஒருங்கிணைந்த ஆதிதிராவிடர் இயக்க ங்களின் கூட்டமைப்பில் இணைந்துள்ள சமூக இயக்கங்களின் சார்பில் அம்பேத்கரின் 132 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

    இந்த நிகழ்ச்சிக்கு ஒருங்கிணைந்த ஆதிதி ராவிடர் இயக்கங்களின் கூட்டமைப்பு தலைவர் ரோக.அருள்தாஸ் தலை மையில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    நிகழ்ச்சியில் பொதுச் செயலாளர் கலைமணி, கவுரவத் தலைவர் திருமால், பியூச்சர் அரசு ஊழியர் கூட்டமைப்பு தலைவர் செல்வம், அம்பேத்கர் தொண்டர் படை கவுரவத் தலைவர் மணிமாறன், முதன்மைச் செயலர் பாபுராஜ் பொன்றோ, செயல் தலைவர் முத்துகிருஷ்ணன் அமைப்புச்செயலாளர் பொன்னிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் தலைமை நிலையச் செயலாளர் இளவயதன், நகரத் தலைவர் செல்வபாண்டியன், நகரத் அமைப்பாளர் ஆதிகேசவன், நகரச் செயலாளர் முனியன், கொள்கை பரப்புச் செயலாளர் பரமசிவம், பொருளாளர் வேல்முருகன், தொண்டர் அணி தலைவர் மாயகிருஷ்ணன், மாணவர் கூட்டமைப்பு தலைவர் மகேந்திரவேலன், அமைப்பாளர் நாகமுத்து, ஒருங்கிணைப்பாளர் ரஞ்சித் மாநில செயலாளர்கள் நாகராஜன், பாலச்சந்திரன் நிர்வாகச் செயலாளர் போத்திராஜ் ஆகியோர் கலந்துகொண்டு மரியாதை செலுத்தினர்.

    அதை தொடர்ந்து ஏம்பலம் தொகுதி கம்பளிகாரன்குப்பத்தில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலைக்கு கூட்டமைப்பு சார்பில் மூத்த வழக்கறிஞர் அமாவாசை மாலை அணிவித்து மரியாதை செய்தார். 500 பேருக்கு இனிப்பு மற்றும் உணவும் வழங்கப்பட்டது.

    • மத்திய பணியாளர் தேர்வாணையம் ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவை தேர்வு, தேசிய பாதுகாப்பு அகாடமி, கடற்படை தேர்வு நடத்துகிறது.
    • தேசிய பாதுகாப்பு, கடற்படை அகாடமி தேர்வு லாஸ்பேட்டை வள்ளலார் அரசு பெண்கள் பள்ளியில் காலை 10 முதல் மதியம் 12.30 வரையிலும், மதியம் 2 முதல் 4.30 மணி வரையிலும் என 2 பிரிவுகளாக நடக்கிறது.

    புதுச்சேரி:

    மத்திய பணியாளர் தேர்வாணையம் ஒருங்கி ணைந்த பாதுகாப்பு சேவை தேர்வு, தேசிய பாதுகாப்பு அகாடமி, கடற்படை தேர்வு நடத்துகிறது.

    இந்த தேர்வு மையங்களில் ஒன்றாக புதுவையும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. லாஸ்பேட்டை மகளிர் பொறியியல் கல்லூரியில் ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவை தேர்வு நாளை காலை 9 முதல் 11 மணி வரையும், மதியம் 12 முதல் 2 மணி வரையும், மதியம் 3 மணி முதல் 5 மணி வரையும் என 3 பிரிவுகளாக நடக்கிறது.

    இதில் 147 பேர் தேர்வு எழுதுகின்றனர். தேசிய பாதுகாப்பு, கடற்படை அகாடமி தேர்வு லாஸ்பேட்டை வள்ளலார் அரசு பெண்கள் பள்ளியில் காலை 10 முதல் மதியம் 12.30 வரையிலும், மதியம் 2 முதல் 4.30 மணி வரையிலும் என 2 பிரிவுகளாக நடக்கிறது. 172 பேர் தேர்வு எழுதுகினற்னர்.

    தேர்வுகளை நேர்மையாக நடத்த அரசு ஏற்பாடு செய்துள்ளது. முக கவசம் கட்டாயமாக்கப் பட்டுள்ளது. தேர்வு வளாகத்தில் கொரோனா விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    மேலும் விபரங்களுக்கு 0413 223228 என்ற எண்ணை தொடர்புகொள்ளலாம் என புதுவை அரசின் பணியாளர் நிர்வாக சீர்திருத்த துறை சார்பு செயலர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

    • நாய்கள் கடித்து தின்றது அழுகிய நிலையில் இருந்த குழந்தையின் தலை என்பது தெரியவந்தது.
    • சுடுகாட்டு பகுதியில் இருந்து நாய்கள் குழந்தையின் தலையை எடுத்து வந்ததா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுச்சேரி:

    புதுவை அரியாங்குப்பம் சண்முகாநகர் ராமசிங் வீதியில் அரசு கழிவறை கட்டிடம் உள்ளது.

    இதன் அருகே உள்ள காலி இடத்தில் நேற்று ஏராளமான தெரு நாய்கள் உருண்டையான பொருள் ஒன்றை கடித்து குதறி தின்றன.

    அப்போது நாய்களுக்கு இடையே சண்டை ஏற்பட்டு ஒன்றுக்கொன்று குரைத்தன.

    இதனை அப்பகுதியில் மருந்து கடை வைத்துள்ள விக்கி என்பவர் பார்த்தார். நாய்கள் கடித்து கொண்டிருந்தது குழந்தையின் தலை போல இருந்தது.

    இதனால் சந்தேகமடைந்த அவர் அப்பகுதி பொது மக்கள் உதவியுடன் நாய்களை விரட்டி அடித்தனர்.

    அப்போதுதான் நாய்கள் கடித்து தின்றது அழுகிய நிலையில் இருந்த குழந்தையின் தலை என்பது தெரியவந்தது. இதனை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

    மேலும் இதுகுறித்து அரியாங்குப்பம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து குழந்தையின் தலையை மீட்டனர்.

    மேலும் அந்த பகுதியில் குழந்தையின் மற்ற உடல் பாகங்கள் உள்ளதா? என தேடினர். ஆனால் எதுவும் கிடைக்கவில்லை. தலை அழுகிய நிலையில் இருப்பதால் இறந்து 2 நாட்களுக்கு மேல் இருக்கும் என தெரிகிறது.

    அந்த பகுதியில் குழந்தை ஏதாவது கொலை செய்து வீசப்பட்டதா? அல்லது சுடுகாட்டு பகுதியில் இருந்து நாய்கள் குழந்தையின் தலையை எடுத்து வந்ததா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • ஆஞ்சநேயர் திருக்கோவிலில் லட்சதீப சித்திரை திருவிழாவை முன்னிட்டு ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
    • ராமர் சீதை ஆஞ்சநேயர் சாமிகள் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வீதிஉலா நிகழ்ச்சி நடைபெற்றது.

    புதுச்சேரி:

    மதகடிப்பட்டு அருகே உள்ள எல். ஆர். பாளையத்தில் அமைந்துள்ள ஆஞ்சநேயர் திருக்கோவிலில் லட்சதீப சித்திரை திருவிழாவை முன்னிட்டு ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.

    ராமர் சீதை திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. திருமணத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் அறுசுவை விருந்து வழங்கப்பட்டது.

    தொடர்ந்து ராமர் சீதை ஆஞ்சநேயர் சாமிகள் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வீதிஉலா நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் அப்பகுதியை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சிகான ஏற்பாடு களை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

    • புதுவை உப்பளம் தொகுதிக்குட்பட்ட வம்பாகீரப் பாளையம் சன்னியாசி தோப்பு மயான கொள்ளை நடைபெறும் இடத்தை தற்போது பேச்சி யம்மன் உருவ பொம்மை அமைக்கும் பணி நடந்தது.
    • பொதுமக்கள் போராட்டம் நடத்த முடிவு செய்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை உப்பளம் தொகுதிக்குட்பட்ட வம்பாகீரப் பாளையம் சன்னியாசி தோப்பு மயான கொள்ளை நடைபெறும் இடத்தை தற்போது பேச்சி யம்மன் உருவ பொம்மை அமைக்கும் பணி நடந்தது.

    இதனை தனியார் ஒருவர் என்னுடைய இடம் என்று கூறி கோவில் பணிகளை தடுத்து நிறுத்தினார். இதனால் பொதுமக்கள் போராட்டம் நடத்த முடிவு செய்தனர்.

    இதுகுறித்து அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. பேச்சுவார்த்தை நடத்தினார். இடத்திற்கு உரிமை கொண்டாடுபவரிடம் ஊர்மக்களின் தெய்வவழி பாட்டில் எந்த தடையும் பிரச்சினையும் வரக்கூடாது என்றும் கோவிலுக்கே அந்த இடத்தை தந்து விடுமாறும் முதல்-அமைச்சரிடம் இந்த பிரச்சினையை கூறி தங்களுக்கு இடத்திற்கு உண்டான தொகையினை பெற்றுத்தருவதாக உறுதியளித்தார்.

    அவரின் கோரிக்கையை ஏற்று இடத்தின் உரிமையா ளர் சம்மதம் தெரிவித்தார். இதனால் அப்பகுதி பொதுமக்களின் மகிழ்ச்சி அடைந்தனர்.

    அனிபால் கென்னடி எம்.எல்.ஏ.வுக்கு நன்றியைத் தெரிவித்தனர். இந்த பேச்சுவார்த்தையின் போது வக்கீல் பரிமளம் உடனிருந்தார்.

    • புதுவை அருகே நெட்டப்பாக்கம் அருகே சிறுவந்தாடு மோட்ச குளத்தில் அமைந்துள்ள வீர ஆஞ்சநேயர் கோவிலில் சித்திரை தமிழ் புத்தாண்டையொட்டி லட்சத்தீப பெருவிழா நடந்தது.
    • பின்னர் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. பக்தர்கள் விளக்கு ஏற்றி ஆஞ்சநேயரை வழிபட்டனர்.

    புதுச்சேரி:

    நெட்டப்பாக்கம் அருகே சிறுவந்தாடு மோட்ச குளத்தில் அமைந்துள்ள வீர ஆஞ்சநேயர் கோவிலில் சித்திரை தமிழ் புத்தாண்டையொட்டி லட்சத்தீப பெருவிழா நடந்தது.

    முன்னதாக மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது. அதனை யடுத்து ராதே கிருஷ்ணன் திருக்கல்யாணம் நடை பெற்றது. திருக்கல்யா ணத்தை காண சுற்றுப்புற பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் ஜோடிக்கப்பட்டு, வீதி உலா நடைபெற்றது. பின்னர் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. பக்தர்கள் விளக்கு ஏற்றி ஆஞ்சநேயரை வழிபட்டனர்.

    விழாவிற்கான ஏற்பா டுகளை சரவணன் குடும்பத்தார் மற்றும் ஊர் பொதுமக்கள் கணபதி, பாஸ்கரன் உட்பட பொதுமக்கள் செய்து இருந்தனர்.

    • ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகம், விடுதியில் துறை இயக்குனர் இளங்கோவன் அம்பேத்கர் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தி பேசியதாவது:-
    • புதுவை மாணவர்கள் ஐ.ஏ.எஸ். தேர்வில் பங்கேற்று தேர்ச்சி பெற்று மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என முதல்-அமைச்சர் ரங்கசாமி எண்ணுகிறார்.

    புதுச்சேரி:

    ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா நடந்தது.

    ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகம், விடுதியில் துறை இயக்குனர் இளங்கோவன் அம்பேத்கர் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தி பேசியதாவது:-

    ஆதிதிராவிடர் நலத்துறையில் பணியாற்றும் அதிகாரிகள், ஊழியர்கள் மக்களின் தேவையை அறிந்து உண்மையாக பணியாற்ற வேண்டும். குறைகள் இருந்தால் தயக்கமின்றி என்னிடம் தெரிவிக்கலாம். விடுதியில் தங்கி அரசு பள்ளியில் படித்த நான், தற்போது அதிகாரியாக உள்ளேன்.

    ஒரு எண்ணத்தை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டதால் இந்த நிலைக்கு வந்துள்ளேன். புதுவை மாணவர்கள் ஐ.ஏ.எஸ். தேர்வில் பங்கேற்று தேர்ச்சி பெற்று மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என முதல்-அமைச்சர் ரங்கசாமி எண்ணுகிறார்.

    அவரின் எண்ணத்தை நிறைவேற்றும் வகையில் அமைச்சர் சந்திரபிரியங்கா, ஆதிதிராவிடர் நலத்துறை யில் சிறந்த ஆசிரியர்களை கொண்டு ஐ.ஏ.எஸ். சிறப்பு பயிற்சி இலவசமாக நடத்த நடவடிக்கை எடுத்து வருகிறார்.

    இவ்வாறு இளங்கோவன் பேசினார்.

    நிகழ்ச்சியில் துணை இயக்குனர், அதிகாரிகள், ஊழியர்கள், விடுதி காப்பாளர்கள், மாணவர்கள் பலர் பங்கேற்றனர்.

    • புதுவை பல்கலைக்கழகத்தில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
    • பல்கலை துணைவேந்தர் குர்மீத்சிங் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    புதுச்சேரி:

    புதுவை பல்கலை க்கழகத்தில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

    இடஒதுக்கீடு பிரிவு தொடர்பு அதிகாரி அருள் வரவேற்றார். பல்கலை துணைவேந்தர் குர்மீத்சிங் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    அவர் கூறும்போது, புதுவை பல்கலைக்கழகத்தில் தலித் வரலாறு மதம் என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கம் மத்திய மந்திரி முருகன் தலைமையில் நடத்தப்படும் என தெரிவித்தார்.

    இயக்குனர் தர ணிக்கரசு, சிறப்பு அதிகாரி ராஜீவ்ஜெயின், பதிவாளர் ரஜ்னீஸ்புட்னி, நிதி அதிகாரி லாசர், தேர்வு கட்டுப்பாட்டாளர் சதனாந்தஜிசாமி, நூலகர் விஜயகுமார், உதவி பதிவாளர்கள் மகேஷ், முருகையன் உட்பட பலர் அம்பேத்கர் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

    • கூடுதலாக பணம் முதலீடு செய்தால்தான் பணம் எடுக்க முடியும் என தெரிவிக்கப்பட்டது.
    • தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த வேதபிரகாஷ் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.

    புதுச்சேரி:

    கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டம் சிரியாரா கிராமத்தை சேர்ந்தவர் வேதபிரகாஷ் (வயது 26).

    புதுவை பிரியதர்ஷினி நகரில் தங்கி, ஜிப்மரில் முதுகலை மருத்துவம் படித்து வருகிறார்.

    இவரது வாட்ஸ்அப் எண்ணுக்கு அடையாளம் தெரியாத நபரிடம் இருந்து ஒரு குறுந்தகவல் வந்தது.

    அதில் ஆன்லைனில் பகுதி நேர வேலையில் அதிகம் சம்பாதிக்கலாம். யூடிப் சேனல்களை லைக் செய்தால் ரூ.150 கிடைக்கும் என குறிப்பிடப்பட்டிருந்தது. இதை நம்பிய அவர் அந்த யூடிப் சேனலை லைக் செய்து போட்டோ எடுத்து அனுப்பினார். அவர் வங்கி கணக்கில் ரூ.150 செலுத்தப்பட்டது.

    இதன்பின் கிரிப்டோ கரன்சி, பிட்காயின் டாஸ்க் முடித்தால் அதிக பணம் கிடைக்கும் என்ற செய்தி வந்தது.

    இதை நம்பி சோதனை முறையில் ரூ.ஆயிரம் செலுத்தினார்.

    டாஸ்க் முடிந்தவுடன் பிட்காயின் வேலட்டில் ரூ.ஆயிரத்து 300 வந்தது. அந்த பணத்தை தனது வங்கி கணக்கிற்கு மாற்றினார். இதைத்தொடர்ந்து ரூ.3 ஆயிரம் செலுத்தினார். அதற்கான தொகையும் காண்பித்தது.

    இதனால் அந்த தளத்தை முழுமையாக நம்பிய வேதபிரகாஷ் ரூ.26.30 லட்சம் பணத்தை முதலீடு செய்தார். அப்போது அவரது கணக்கில் ரூ.36.34 லட்சம் பணம் இருந்தது. இந்த பணத்தை தனது வங்கி கணக்குக்கு மாற்ற முயன்றார்.

    மேலும் கூடுதலாக பணம் முதலீடு செய்தால்தான் பணம் எடுக்க முடியும் என தெரிவிக்கப்பட்டது. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த வேதபிரகாஷ் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.

    போலீசார் வழக்கு பதிவு செய்து மோசடி நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வருகிற 16-ந் தேதி வரை சித்திரை கடற்கரை திருவிழா கொண்டாடப்படுகிறது.
    • சித்திரை கடற்கரை திருவிழாவின் தொடக்கவிழா கடற்கரை சாலை காந்தி திடலில் நடந்தது.

    புதுச்சேரி:

    புதுவை சுற்றுலாத்துறை மாநிலத்தில் பல்வேறு கடற்கரைகள், இடங்களை தேர்வு செய்து சுற்றுலா தலங்களாக அழகுபடுத்தி உள்ளது.

    கோடை விடுமுறையையொட்டி புதுவையில் சுற்றுலா யணிகள் வருகை அதிகரித்துள்ளது. சுற்றுலா பயணிகளை கவரவும், அவர்களின் வருகையை அதிகரிக்கவும் கடந்த ஆண்டு தமிழ் புத்தாண்டில் சித்திரை கடற்கரை திருவிழா கொண்டாடப்பட்டது.

    இதேபோல இந்த ஆண்டும் வருகிற 16-ந் தேதி வரை சித்திரை கடற்கரை திருவிழா கொண்டாடப்படுகிறது. 3 நாட்கள் நடைபெறும் சித்திரை விழாவில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள், விழாக்கள் நடத்தப்படுகிறது.

    புதுவை கடற்கரை சாலை காந்தி திடல், பாண்டி மெரீனா, அரியாங்குப்பம் ரூபி கடற்கரை, சின்ன வீராம்பட்டினம் ஈடன் கடற்கரை, சீகல்ஸ், பாரதி பூங்கா, ஊசுடு படகு குழாம் ஆகிய இடங்களில் கலை நிகழ்ச்சிகள், பீச் வாலிபால் போட்டிகள் நடத்தப்படுகிறது.

    சித்திரை கடற்கரை திருவிழாவின் தொடக்கவிழா கடற்கரை சாலை காந்தி திடலில் நடந்தது. முதல்-அமைச்சர் ரங்கசாமி விழாவை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். அமைச்சர் லட்சுமிநாராயணன் வாழ்த்தி பேசினார்.

    நிகழ்ச்சியில் சுற்றுலாத்துறை செயலர் ஜவகர், இயக்குனர் பிரியதர்ஷினி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    சித்திரை திருவிழாவில் முதல் நாளான இன்று புதுவை கடற்கரைகளில் பலவிதமான நிகழ்ச்சிகள் நடந்தது. இசையுடன் கூடிய நடனம், இசைக்கச்சேரிகள், பீச் வாலிபால், பேஸ் பெயிண்டிங், ரெயின் நடனம், குழு விளையாட்டுகள், நீர் விளையாட்டுக்கள், நீச்சல் போன்றவை நடந்தது.

    இந்த நிகழ்ச்சிகள் அனைத்தையும் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் இலவசமாக கண்டு ரசிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    கடற்கரைகளில் கைவினை பொருட்கள் அதிக அளவில் விறபனைக்கு வைத்திருந்தனர். தொடர் விடுமுறையால் புதுவையில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. நகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு வாகனம் நிறுத்தும் இடங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

    • தி.மு.க. பொதுக்குழு உறுப்பினருமான எஸ். கோபால் தனது பிறந்த நாளையொட்டி, மாநில தி.மு.க. அமைப்பாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சிவாவை அவரின் இல்லத்தில் குடும்பத்துடன் சந்தித்து பொன்னாடை அணிவித்து வாழ்த்து பெற்றார்.
    • தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் முன்னிலையில் பொதுக்குழு உறுப்பினர் எஸ்.கோபால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடினார்.

    புதுச்சேரி:

    உருளையன்பேட்டை தொகுதி தி.மு.க. பொறுப்பாளரும், தி.மு.க. பொதுக்குழு உறுப்பினருமான எஸ். கோபால் தனது பிறந்த நாளையொட்டி, மாநில தி.மு.க. அமைப்பாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சிவாவை அவரின் இல்லத்தில் குடும்பத்துடன் சந்தித்து பொன்னாடை அணிவித்து வாழ்த்து பெற்றார்.

    பின்னர்  10 மணிக்கு லப்போர்த் வீதியில் உள்ள தி.மு.க. தலைமை அலுவலகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சிவா தலைமையில் தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் முன்னிலையில் பொதுக்குழு உறுப்பினர் எஸ்.கோபால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடினார்.

    இதில் தி.மு.க. அவைத்தலைவர் எஸ்.பி. சிவக்குமார், எம்.எல்.ஏ.க்கள் அனிபால் கென்னடி, செந்தில்குமார், சம்பத், முன்னாள் சபாநாயகர் செல்வம், தி.மு.க. மாநில துணை அமைப்பாளர்கள் தைரியநாதன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் சி.பி. திருநாவுக்கரசு, சண். குமரவேல், முன்னாள் எம்.எல்.ஏ. மூர்த்தி, லோகையன், ஜே.வி.எஸ். ஆறுமுகம், பொதுக்குழு உறுப்பினர்கள் ராமசாமி, சக்திவேல், சோமசுந்தரம், தங்கவேலு, செல்வநாதன், கார்த்திகேயன், வேலவன், சன். சண்முகம், கோகுல், தர்மராஜ், ரவிச்சந்திரன்,

    இளம்பரிதி, பழநி, பிரபாகரன், கோபால–கிருஷ்ணன், நர்கீஸ், தொகுதி கழகச் செயலாளர்கள் சக்திவேல், திராவிடமணி, சீத்தாராமன், தியாகராஜன், பாண்டு அரிகிருஷ்ணன், சவுரிராஜன், ராஜா–ராமன், நடராஜன், சக்திவேல், சிவக்குமார், ஆறுமுகம், வடிவேல், மோகன், பார்த்திபன், இளஞ்செழியப்பாண்டியன், மணிகண்டன், அசோக், சிறப்பு அழைப்பாளர் முகிலன், மற்றும் பல்வேறு அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், தொகுதி நிர்வாகிகள், தொண்டர்கள், தொழில் அதிபர்கள் கோபாலுக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

    தொடர்ந்து அண்ணா சாலையில் ஆயிரம் ஏழை, எளிய மக்களுக்கு அசைவ உணவும், சின்னப்பொய்கை, பாரதிபுரம் உள்ளிட்ட உருளையன்பேட்டை தொகுதியின் பல பகுதிகளில் பொதுமக்களுக்கு சைவ உணவும் வழங்கினார்.

    தொடர்ந்து செயின்ட் தெரசோ வீதியில் உள்ள ஆதரவற்றோர் பள்ளியில் உள்ள குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கினார். அதனை தொடர்ந்து கழகத்தின் மூத்த முன்னோடிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி–னார்.

    • புதுவை அருகே கடற்கரை சாலையில் உள்ள அம்பேத்கர் மணி மண்டபத்தில் உள்ள அவரின் சிலைக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
    • புதுவை மாநில தி.மு.க. சார்பில் மாநில அமைப்பா ளர் சிவா தலைமையில் பாரதி பூங்காவில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.

    புதுச்சேரி:

    புதுவை அரசு சார்பில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. பாரதி பூங்காவில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர்கள் லட்சுமிநாராயணன், சந்திரபிரியங்கா, அரசு கொறடா ஆறுமுகம், எம்.எல்.ஏ. ரமேஷ் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    இதைத்தொடர்ந்து கடற்கரை சாலையில் உள்ள அம்பேத்கர் மணி மண்டபத்தில் உள்ள அவரின் சிலைக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    புதுவை மாநில பா.ஜனதா பட்டியல் அணி சார்பில் ராஜா தியேட்டர் அருகிலிருந்து ஊர்வலம் கிளம்பியது. பட்டியல் அணி தலைவர் தமிழ்மாறன் தலைமை வகித்தார். பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதன், செல்வகணபதி எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கல்யாணசுந்தரம், சிவசங்கர், அசோக்பாபு, ராமலிங்கம், வெங்கடேசன், வெற்றிச்செல்வன், செல்வம் ஆகியோர் ஊர்வலமாக வந்து பாரதி பூங்காவில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தனர்.

    புதுவை மாநில தி.மு.க. சார்பில் மாநில அமைப்பா ளர் சிவா தலைமையில் பாரதி பூங்காவில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.

    முன்னதாக லப்போர்த் வீதியில் உள்ள தி.மு.க. தலைமை அலுவலகத்தில் இருந்து தி.மு.க.வினர் ஊர்வலமாக வந்து மாலை அணிவித்தனர். நிகழ்ச்சியில் அவைத் தலைவர் எஸ்.பி. சிவக்குமார், எம்.எல்.ஏ.க்கள் அனிபால்கென்னடி, செந்தில்குமார், சம்பத், துணை அமைப்பாளர்கள் தைரியநாதன், கல்யாணி கிருஷ்ணன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் திருநாவுக்கரசு, சண். குமரவேல், மூர்த்தி, லோகை யன், ஜெ.வி.எஸ். ஆறுமுகம் என்கிற சரவணன், காந்தி, அருட்செல்வி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    புதுவை மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் மாநில தலைவர் ஏ.வி.சுப்பிர மணியன் தலைமையில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் முன்னாள் முதல்-அமைச்சர் நாராயண சாமி, வைத்தியநாதன்

    எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் கந்தசாமி, முன்னாள் எம்.எல்.ஏ.க் கள் நீலகங்காதரன், அனந்தராமன், காங்கிரஸ் நிர்வாகிகள் இளையராஜா, கருணாநிதி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    அ.தி.மு.க. சார்பில் மாநில செயலாளர் அன்பழகன் தலைமையில் தலைமை கழகத்திலிருந்து அ.தி.மு.க.வினர் ஊர்வலமாக வந்தனர். அம்பேத்கர் சாலையில் உள்ள அவரின் சிலைக்கும், பாரதிபூங்காவில் உள்ள சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் மாநில துணைத் தலைவர் முன்னாள் எம்.எல்.ஏ. ராஜாராமன், மாநில இணைச் செயலாளர்கள் வீரம்மாள், கணேசன், பொருளாளர் ரவி பாண்டுரங்கன், நகர செயலாளர் அன்பழகன் உடையார், துணைச் செயலாளர்கள், கருணா நிதி, கணேசன், மூர்த்தி, நாகமணி, காந்தி, கிருஷ்ணமூர்த்தி உட்படபலர் கலந்து கொண்டனர்.

    புதுவை மாநில அ.தி.மு.க. துணை செயலாளர் வையாபுரி மணிகண்டன் தலைமையில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் இருசக்கர வாகனங்களில் ஊர்வலமாக வந்து பாரதி பூங்காவில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    ×