என் மலர்
நீங்கள் தேடியது "Academy exam"
- மத்திய பணியாளர் தேர்வாணையம் ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவை தேர்வு, தேசிய பாதுகாப்பு அகாடமி, கடற்படை தேர்வு நடத்துகிறது.
- தேசிய பாதுகாப்பு, கடற்படை அகாடமி தேர்வு லாஸ்பேட்டை வள்ளலார் அரசு பெண்கள் பள்ளியில் காலை 10 முதல் மதியம் 12.30 வரையிலும், மதியம் 2 முதல் 4.30 மணி வரையிலும் என 2 பிரிவுகளாக நடக்கிறது.
புதுச்சேரி:
மத்திய பணியாளர் தேர்வாணையம் ஒருங்கி ணைந்த பாதுகாப்பு சேவை தேர்வு, தேசிய பாதுகாப்பு அகாடமி, கடற்படை தேர்வு நடத்துகிறது.
இந்த தேர்வு மையங்களில் ஒன்றாக புதுவையும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. லாஸ்பேட்டை மகளிர் பொறியியல் கல்லூரியில் ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவை தேர்வு நாளை காலை 9 முதல் 11 மணி வரையும், மதியம் 12 முதல் 2 மணி வரையும், மதியம் 3 மணி முதல் 5 மணி வரையும் என 3 பிரிவுகளாக நடக்கிறது.
இதில் 147 பேர் தேர்வு எழுதுகின்றனர். தேசிய பாதுகாப்பு, கடற்படை அகாடமி தேர்வு லாஸ்பேட்டை வள்ளலார் அரசு பெண்கள் பள்ளியில் காலை 10 முதல் மதியம் 12.30 வரையிலும், மதியம் 2 முதல் 4.30 மணி வரையிலும் என 2 பிரிவுகளாக நடக்கிறது. 172 பேர் தேர்வு எழுதுகினற்னர்.
தேர்வுகளை நேர்மையாக நடத்த அரசு ஏற்பாடு செய்துள்ளது. முக கவசம் கட்டாயமாக்கப் பட்டுள்ளது. தேர்வு வளாகத்தில் கொரோனா விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் விபரங்களுக்கு 0413 223228 என்ற எண்ணை தொடர்புகொள்ளலாம் என புதுவை அரசின் பணியாளர் நிர்வாக சீர்திருத்த துறை சார்பு செயலர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.






