என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • புதுவையில் ஆயிரத்து 19 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை நடத்தப்பட்டது.
    • புதுவையில் 325, காரைக்காலில் 144, ஏனாமில் 21, மாகேவில் 7 பேர் என மொத்தம் 497 பேர் கொரோனா தொற்றுடன் வீட்டு தனிமையில் உள்ளனர்.

    புதுச்சேரி:

    புதுவையில் ஆயிரத்து 19 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை நடத்தப்பட்டது.

    இதில் புதுவையில் 100, காரைக்காலில் 32, ஏனாமில் 5, மாகியில் 2 பேர் என மொத்தம் 139 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் புதுவையில் 15, காரைக்காலில் 2, ஏனாமில் ஒருவர் என 18 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    புதுவையில் 325, காரைக்காலில் 144, ஏனாமில் 21, மாகேவில் 7 பேர் என மொத்தம் 497 பேர் கொரோனா தொற்றுடன் வீட்டு தனிமையில் உள்ளனர்.

    புதுவையில் 36, காரைக்காலில் 4 பேர் என 40 பேர் தொற்று பாதிப்பிலிருந்து மீண்டனர்.

    புதுவையில் இதுவரை கொரோனாவுக்கு ஆயிரத்து 978 பேர் பலியாகியுள்ளனர். புதுவையில் கொரோனா தொற்று வேகமாக பரவுவதால் முக கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது போன்ற தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி சுகாதாரத்துறை அறிவுறு த்தியுள்ளது. 

    • புதுவை கவர்னர் மாளிகையில் கடந்த காலங்களில் கவர்னர் சார்பில் ஆண்டு தோறும் இப்தார் விருந்து நடைபெறும்.
    • இந்நிலையில் காரைக்கால் மாவட்ட தி.மு.க. அமைப்பாளர் நாஜிம் எம்.எல்.ஏ. கவர்னர் மாளிகையில் இப்தார் விருந்து நடத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

    புதுச்சேரி:

    புதுவை கவர்னர் மாளிகையில் கடந்த காலங்களில் கவர்னர் சார்பில் ஆண்டு தோறும் இப்தார் விருந்து நடைபெறும்.

    புதுவை கவர்னராக கிரண்பேடி இருந்தபோது சைவ உணவுகளை இப்தார் விருந்தில் பரிமாறினர். அதன்பிறகு தமிழிசை பொறுப்பேற்ற பிறகு இப்தார் விருந்து நடைபெறவில்லை.

    இந்நிலையில் காரைக்கால் மாவட்ட தி.மு.க. அமைப்பாளர் நாஜிம் எம்.எல்.ஏ. கவர்னர் மாளிகையில் இப்தார் விருந்து நடத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

    அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுவை மாநிலத்தில் மத நல்லிணக்கத்தை போற்றும் வகையிலும்,இஸ்லாமிய மக்களை கவுரவிக்கும் வகையிலும் கவர்னர் மாளி கையில் பாரம்பரியமாக நடைபெற்று வந்த இப்தார் விருந்து நிறுத்தப்பட்டுள்ளது. கவர்னர் தமிழிசை இந்த ஆண்டு இப்தார் விருந்து நடத்தி மத நல்லிணக்கத்தை நிலைநாட்ட வேண்டும் என கூறியுள்ளார்.

    • புதுவை மகளிர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டுக்கழக மேலாண் இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
    • எம்பராய்டரிங், கோலம், மனையறை பயிற்சி, செயற்கை பூ தயாரித்தல், மெகந்தி, பொம்மலாட்டம் உட்பட பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.

    புதுச்சேரி:

    புதுவை மகளிர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டுக்கழக மேலாண் இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியி ருப்பதாவது:-

    மகளிர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் பயன்பெறும் வகையில் ஒலாந்திரே நிறுவனத்துடன் இணைந்து கோடை விடுமுறையில் 10 வயது முதல் இருக்கும் பெண் குழந்தைகளுக்கு பாரம்பரிய கலைகள் பயிற்சி வருகிற 20-ந் தேதி தொடங்க உள்ளது. சிலம்பம், தற்காப்பு கலை, எம்பராய்டரிங், கோலம், மனையறை பயிற்சி, செயற்கை பூ தயாரித்தல், மெகந்தி, பொம்மலாட்டம் உட்பட பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.

    பயிற்சி பெற விரும்பு வோர் 2 போட்டோ, ஆதார் நகலுடன் அலுவலகத்துக்கு வந்து பதியலாம். முதலில் வரும் 50 நபர்கள் பயிற்சியில் சேர்க்கப்படுவர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • போலீசார் பணியில் இருக்கும் போது இறந்தால், இறுதி சடங்கில் போலீஸ் மரியாதை அளிக்கப்படும்.
    • இந்திய காவல் பணி அதிகாரிகளின் இறுதி சடங்கில் போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையில் 16 காவ லர்கள் கறுப்பு பேட்ஜ், மலர்வளையம் வைத்து வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுடுவர்.

    புதுச்சேரி:

    போலீசார் பணியில் இருக்கும் போது இறந்தால், இறுதி சடங்கில் போலீஸ் மரியாதை அளிக்கப்படும். கேரளா போலீசில் ஓய்வு பெற்ற போலீசார் இறந்தா லும், போலீஸ் சார்பில் மரியாதை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதை பின்பற்றி புதுவையிலும் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரிகள் இறந்தால் போலீஸ் சார்பில் மரியாதை செலுத்த வேண்டும் என ஓய்வு பெற்ற போலீசார், அதிகாரிகள் சங்கத்தினர் கோரிக்கை வைத்தனர்.

    இந்த கோரிக்கையை ஏற்று டி.ஜி.பி. மனோஜ்குமார் லால் ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளார். அதில், ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரிகள் இறந்தால் போலீஸ் இறுதி மரியாதை செலுத்தப்பட வேண்டும். இதற்கான நடைமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளது.

    இந்திய காவல் பணி அதிகாரிகளின் இறுதி சடங்கில் போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையில் 16 காவ லர்கள் கறுப்பு பேட்ஜ், மலர்வளையம் வைத்து வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுடுவர். ஆய்வாளர் முதல் முதுநிலை கண்காணிப்பாளர் இறுதி சடங்கில் துணை உதவி ஆய்வாளர் தலைமையில் 8 காவலர்கள் கருப்பு பேட்ஜ், மலர்வளையம் வைத்து துப்பாக்கியால் சுடுவர்.

    சப்-இன்ஸ்பெக்டர் முதல் காவலர் வரையிலான இறுதி சடங்கில் உதவி சப் இன்ஸ்பெக்டர் தலைமையில் 4 காவலர்கள் கருப்பு பேட்ஜ், மலர் வளையம் வைத்து வானத்தை நோக்கி துப்பாக்கியுடன் இறுதி சடங்கு செலுத்துவர் என குறிப்பிட்டுள்ளார்.

    இந்த நிலையில் ஓய்வு பெற்ற எஸ்.பி. முனிசாமி யின் இறுதிசடங்கு கருவடிக்குப்பத்தில் நடந்தது. அப்போது சப்-இன்ஸ்பெக்டர், 8 போலீசார் அடங்கிய குழு சார்பில் இறுதி அரசு மரியாதை செலுத்தப்பட்டது. இந்த உத்தரவை பிறப்பித்த டி.ஜி.பி., ஏ.டி.ஜி.பி.,

    ஐ.ஜி., தலைமையக சீனியர் எஸ்.பி. ஆகியோருக்கு ஓய்வு பெற்றோர் சங்கத்தினர் துணைத்தலைவர் செல்வராஜ் தலைமையில், செயலாளர் சற்குணன், இணை செயலாளர் பிரபாகரன், பொருளாளர் வீரப்பன், துணை ெபாருளாளர் அப்துல்ரசாக், உறுப்பினர்கள் காஞ்சன், சுப்பிரமணியின் ஆகியோர் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

    • பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
    • பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    தமிழ் புத்தாண்டான சோபகிருது ஆண்டு இன்று பிறந்தது.

    புதுவையில் பிரசித்தி பெற்ற மணக்குள விநாயகர் கோவிலில் தமிழ் புத்தாண்டையொட்டி இன்று சிறப்பு பூஜைகள் நடந்தது.

    காலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு மணக்குள விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. தொடர்ந்து அமெரிக்க வைரம் பொருத்தப்பட்ட கிரீடம், தங்க கவசம் மணக்குள விநாயகருக்கு அணிவிக்கப்பட்டது.

    பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    இதேபோல தமிழ் புத்தாண்டை முன்னிட்டு காந்தி வீதியில் உள்ள வேதபுரீஸ்வரர், வரதராஜ பெருமாள், ரெயில் நிலையம் எதிரே உள்ள கவுசிக பாலசுப்பிரமணியர், முத்தியால்பேட்டை தென்கலை சீனிவாச பெருமாள், முத்தியால்பேட்டை வன்னிய பெருமாள், வில்லியனூர் திருக்காமீஸ்வரர், திருக்காஞ்சி கங்கைவராக நதீஸ்வரர், காசி விஸ்வநாதர் உள்ளிட்ட அனைத்து கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்தது.

    பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.

    • புதுவை 3-வது கல்வே பங்களா வீதியை சேர்ந்தவர் பச்சையப்பன் . இவர் அண்ணாசாலை செட்டிதெரு சந்திப்பில் டீக்கடை வைத்துள்ளார்.
    • பீர் முழுவதையும் குடித்து விட்டு பாட்டீலை வீசி விட்டு வாருங்கள் உணவு தருகிறேன் என பச்சையப்பன் கூறினார்.

    புதுச்சேரி:

    புதுவை 3-வது கல்வே பங்களா வீதியை சேர்ந்தவர் பச்சையப்பன்(வயது53). இவர் அண்ணாசாலை செட்டிதெரு சந்திப்பில் டீக்கடை வைத்துள்ளார்.

    மேலும் அந்த பகுதியில் 3 வேளையும் அன்னதானம் வழங்கி வருகிறார். பச்சையப்பன் கடையில் இருந்தார். அந்த நேரத்தில் மது போதையில் 2 வாலிபர்கள் வந்தனர். அவர்கள் கையில் பீர் பாட்டில்களை வைத்துக்கொண்டு உணவு கேட்டனர்.

    பீர் முழுவதையும் குடித்து விட்டு பாட்டீலை வீசி விட்டு வாருங்கள் உணவு தருகிறேன் என பச்சையப்பன் கூறினார். இதனால் ஆத்திரமடைந்த அந்த வாலிபர்கள் கத்தியால் பச்சையப்பனை வெட்டினர். அவர் கடையில் இருந்து சாலையில் ஓடினார். வாலிபர்கள் அவரை ஓடஓட விரட்டி வெட்டினர். இதில் அவருக்கு கைகள், தலை பகுதிகளில் வெட்டு விழுந்தது.

    பச்சையப்பன் அங்கிருந்த கடை ஒன்றில் புகுந்து கதவை அடைத்துக்கொண்டார். இதனால் வாலிபர்கள் கொலை மிரட்டல் விடுத்தப்படி அங்கிருந்து சென்று விட்டனர். அக்கம் பக்கத்தினர் பச்சையப்பனை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    பெரியக்கடை போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து வாலிபர்களை தேடி வருகின்றனர். பரபரப்பாக காணப்படும் அண்ணாசாலையில் நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • புதுவை அருகே விழுப்புரம் மாவட்டம் திருவக்கரையை சேர்ந்தவர் ராமலிங்கம். இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
    • போதை காரணமாக இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    புதுச்சேரி:

    விழுப்புரம் மாவட்டம் திருவக்கரையை சேர்ந்தவர் ராமலிங்கம் (வயது41). தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவர் புதுவை செட்டிபட்டில் உள்ள சாராயக்கடை பின்புறம் மது குடிக்க சென்றார். சாராயம் குடித்து கொண்டிருந்த அவர் திடீரென மயங்கி விழுந்து இறந்தார்.

    திருக்கனூர் போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    போதை காரணமாக இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • ரூ. 44½ லட்சம் மதிப்பீட்டில் எல் மற்றும் யூ வடிவ வாய்க்கால் அமைக்கும் பணி நடைபெற உள்ளது.
    • மாநில இளைஞர் அணி துணை அமைப்பாளர் வெங்கடாஜலபதி, ஜி.என்.பாளையம் கோவில் அறங்காவல் குழு தலைவர் நாவப்பன், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    புதுச்சேரி:

    வில்லியனூர் ஜி.என்.பாளையம் அய்யனார் கோவில் தொடங்கி அரசூர் பாதை வரை செல்லும் சாலையின் இருபுறமும் பொதுப்பணித்துறை மூலம் ரூ. 44½ லட்சம் மதிப்பீட்டில் எல் மற்றும் யூ வடிவ வாய்க்கால் அமைக்கும் பணி நடைபெற உள்ளது.

    இதற்கான பூமி பூஜை நடந்தது. எதிர்க்கட்சித் தலைவர் சிவா பணியை தொடங்கி வைத்தார்.நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் சத்தியமூர்த்தி கட்டிடங்கள் மற்றும் சாலைகள் வடக்கு கோட்ட செயற் பொறியாளர் சவுந்தர்ராஜன், உதவிப் பொறியாளர் சீனுவாசன் மற்றும் தி.மு.க. தொகுதி செயலாளர் மணிகண்டன், பொதுக்குழு உறுப்பினர்கள் ராமசாமி, சோமு, செல்வநாதன், தர்மராஜ், மாநில இளைஞர் அணி துணை அமைப்பாளர் வெங்கடாஜலபதி, ஜி.என்.பாளையம் கோவில் அறங்காவல் குழு தலைவர் நாவப்பன், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு உலகமெங்கும் வாழும் தமிழ் மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
    • பிறருக்கு உதவி செய்து, நாட்டின் வளர்ச்சியில் நமது பங்களிப்பு இருக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு செயலாற்ற உறுதியேற்று தமிழ்ப் புத்தாண்டை சிறப்பாகக் கொண்டாடுவோம்.

    புதுச்சேரி:

    புதுவை கவர்னர் தமிழிசை வெளியிட்டுள்ள புத்தாண்டு வாழ்த்துச்செய்தியில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு உலகமெங்கும் வாழும் தமிழ் மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இந்த புத்தாண்டு அனைவரது வாழ்விலும் அன்பும், அமைதியும் நிலைக்கவும், இன்பமும் மகிழ்ச்சியும் பெருகவும், ஆரோக்கியமான வாழ்வு சிறக்கவும் வழிவகை செய்யட்டும் என்று வாழ்த்துகிறேன்.

    அனைவரும் மகிழ்ச்சியோடு, பிறருக்கு உதவி செய்து, நாட்டின் வளர்ச்சியில் நமது பங்களிப்பு இருக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு செயலாற்ற உறுதியேற்று தமிழ்ப் புத்தாண்டை சிறப்பாகக் கொண்டாடுவோம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • புதுவை மாநிலத்தில் கஞ்சா பரவி இருப்பதாக தகவல்கள் உள்ளது. இதன் காரணமாக புதுவையில் ஆங்காங்கே சில குற்ற சம்பவங்களும் நடந்து வருவதாக அறியப்படுகிறது.
    • நமச்சிவாயம் மாநில உள்துறை அமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் முதல்வரின் ஒத்துழைப்போடு காவல் துறையினருக்கு தேவையான அனைத்து வசதிகளையும் சலுகைகளையும் அறிவித்து செயல்படுத்தி வருகிறார்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில பா.ஜனதா எம்.எல்.ஏ. வெங்கடேசன் வெளியிட்டு ள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    புதுவை மாநிலத்தில் கஞ்சா பரவி இருப்பதாக தகவல்கள் உள்ளது. இதன் காரணமாக புதுவையில் ஆங்காங்கே சில குற்ற சம்பவங்களும் நடந்து வருவதாக அறியப்படுகிறது.

    இதற்கு முடிவு கட்டும் விதத்தில் நமது மாநில உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் பல்வேறு ஆய்வு கூட்டங்களை நடத்தி காவல்துறை அதிகாரிகளுக்கு பல உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார்.

    முக்கியமாக போலீசாரை சுதந்திரமாக செயல்படவும், பாரபட்சமின்றி தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் அமைச்சர் உறுதி கொண்டு உள்ளார்.

    நமச்சிவாயம் மாநில உள்துறை அமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் முதல்வரின் ஒத்துழைப்போடு காவல் துறையினருக்கு தேவையான அனைத்து வசதிகளையும் சலுகைகளையும் அறிவித்து செயல்படுத்தி வருகிறார்.

    அதேபோன்று கடந்த காலங்களில் கிடைக்காத பல வசதிகள் தற்போதைய பா.ஜனதா, என்.ஆர். காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் போது காவல்து றையினருக்கு தேவையான உள்கட்ட மைப்பு வசதிகள், போலீஸ் வாகன வசதி கள்,அவ ர்களுக்கு தேவையான உபகரணங்கள் வழங்க ப்பட்டுள்ளது.

    கடந்த காலங்களில் சேதம் அடைந்த ரோந்து வாகனங்கள் இருந்த நிலை மாறி தற்போதைய ஆட்சி காலத்தில் புதிய நவீன ரோந்து வாகனங்கள் அதிக அளவில் வாங்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளது. இந்த நிலையில் சட்டம்- ஒழுங்கு விவகாரத்தில் அங்கங்கே நடக்கக்கூடிய சிறு குற்றங்களை ஒடுக்கும் வகையில் இரவு நேரத்தில் ரோந்து பணியை தீவிர படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

    ஆகவே இரவு நேர ரோந்து பணியை புதுவை மாநில அளவில் தீவிர படுத்த வேண்டும். முக்கியமாக சில மாநிலங்களுக்கு செல்லும்போது, அங்கு இரவு நேரத்தில் காவல் துறையினர் ரோந்து வாகனங்களில் வரும் போது சிகப்பு , நீளம் வண்ணங்களில் எரியக்கூடிய விளக்குகளை ஆன் செய்தவாறு சுற்றி வருகின்றனர்.

    அவ்வாறு வருவதன் மூலம் குற்றம் செய்பவர்களுக்கு கண்டிப்பாக அச்சம் ஏற்படும். தற்போதைய ஆட்சி காலத்தில் தான் புதுவை வளர்ச்சி கண்டு வருகிறது.வருவாயும் பெருகி வருகிறது.இதற்கு முக்கிய காரணமாக வெளி மாநில வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இருப்பதை மறுக்க முடியாது.

    ஆகவே அவர்களுக்கு தொல்லை கொடுக்கக்கூடிய போலீசார் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என உள்துறை அமைச்சர் தெரிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.

    மேலும் முக்கியமாக குற்றங்களை தடுப்பதற்கு உறுதுணையாக இருப்பது சி.சி.டி.வி. கேமராக்கள் தான். அது போன்ற சி.சி.டி.வி. கேமராக்கள் அதிகளவில் புதுவை மாநகர் மற்றும் புறநகர் பகுதியில் இருந்தாலும் கூட அவற்றில் பல சி.சி.டி.வி. கேமராக்கள் செயலிழந்து சேதமடைந்து காணப்படுவதாக அறியப்படுகிறது.

    அவற்றை மாற்றும் நோக்கத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மாநகரம் முழுவதும் 180 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் என்ற உள்துறை அமைச்சர் நமச்சிவாயததின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது. அதோடு நில்லாமல் அவற்றை விரைவாக செயல்பாட்டுக்கு கொண்டு வந்தால் மட்டுமே குற்றங்கள் ஒடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • ரெஸ்டோபார் என்று சொல்லி பொதுமக்களுக்கு தொல்லையும், கலாச்சார சீரழிவையும் ஏற்படுத்தி வருகின்றனர்.
    • டூரிஸ்ட் லைசன்ஸ் என்ற பெயரில் கடந்த தி.மு.க. காங்கிரஸ் ஆட்சியில் 55 லைசன்சும் தற்போதைய அரசில் சுமார் 95 லைசன்சும் வழங்கப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    புதுவையில் இயங்கும் 8 மது ஆலையில் உற்பத்தி செய்யும் மதுவையும், வெளிமாநிலங்களில் இருந்து வரும் 800-க்கும் மேற்பட்ட பிராண்டு வகைகளையும் அரசே கொள்முதல் செய்து அதற்காக தனி கார்பரேஷன் அமைத்து சில்லரை கடைகளுக்கு விநியோகம் செய்தால் ரூ.1000 கோடிக்கு மேல் வருவாய் கிடைக்கும்.

    1989-ம் ஆண்டு பிறகு எந்த தனியாருக்கும் சில்லரை மது விற்பனைக்கு அனுமதி வழங்கப்படவில்லை. டூரிஸ்ட் லைசன்ஸ் என்ற பெயரில் கடந்த தி.மு.க. காங்கிரஸ் ஆட்சியில் 55 லைசன்சும் தற்போதைய அரசில் சுமார் 95 லைசன்சும் வழங்கப்பட்டுள்ளது.

    இந்த டூரிஸ்ட் லைசன்ஸ் பெற 15 ஏ.சி. ரூம் மற்றும் 300 சதுர அடி ஹால் ஆகியவை இருக்க வேண்டும். ஆனால் தற்போது இதுபோன்ற வசதிகள் இல்லாதவ ர்களுக்கும் டூரிஸ்ட் லைசன்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இதை தான் ரெஸ்டோபார் என்று சொல்லி பொதுமக்களுக்கு தொல்லையும், கலாச்சார சீரழிவையும் ஏற்படுத்தி வருகின்றனர்.

    ரெஸ்டோ பார் என்ற பெயரில் இதுவரை லைசன்ஸ் வழங்காத சூழ்நிலையில் அதனை மக்களிடம் கலால்துறை தெளிவுபடுத்தவில்லை.புதியதாக 100 சில்லரை லைசன்சுகளை ஏலம் விட்டால் குறைந்த்து ஆண்டுக்கு ரூ.200 கோடிக்கு மேல் வருவாய் வரும் அதையும் அரசு செய்யவில்லை.

    கள்ளுக்கடை, சாராயக்கடை ஏலம் விடுவது போன்று மதுபான விற்பனை உரிமத்தையும் 5 ஆண்டுக்கு ஒருமுறை ஏலம் விட்டால் தற்போது உள்ளதை விட பல மடங்கு வருவாய் வரும். அதையும் அரசு செய்யவில்லை.

    மக்களுக்கு தொல்லை கொடுக்கும் டூரிஸ்ட் பாரை ரத்து செய்துவிட்டு சில்லறை மது பார் அனுமதி வழங்கலாம் முதல்-அமைச்சரிடம் துறையின் அதிகாரிகள் சரியான விபரத்தை எடுத்துக் கூறாததால் அரசின் வருமானம் வீணடிக்கப்பட்டு வருகிறது.

    கலால்துறை சார்பில் பீர் பஸ்சுக்கு அனுமதி கொடுக்கபப்பட்டுள்ளதா.? யார் கொடுத்தது. இதுகுறித்து அரசும், கலால் துறையும் உரிய விளக்கம் தெரிவிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • புதுவை அரசு சுகாதார துறையுடன் இணைந்து ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ வல்லுநர்கள் சேவைக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமையில் நடைபெற்றது.
    • ஆறுபடைவீடு மருத்துவக் கல்லூரியின் மருத்துவ கண்காணிப்பாளர் ஜெய்சீங், துணை முதல்வர் அருணாச்சலம், இணை பதிவாளர் பெருமாள், துணை மருத்துவ கண்காணிப்பாளர் ஜெயக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    புதுவை விநாயகா மிஷன் ரிசர்ச் பவுண்டேஷன் நிகழ்நிலைப் பல்கலைக்கழகம் கீழ் செயல்படும் புதுவை கிருமாம்பாக்கம் ஆறுபடை வீடு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, புதுவை அரசு சுகாதார துறையுடன் இணைந்து ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ வல்லுநர்கள் சேவைக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமையில் நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சியில் புதுவை சுகாதாரத்துறை இயக்குனர் ஸ்ரீராமலு, அலுவலக சிறப்பு அதிகாரி சாவித்திரி, முதல்-அமைச்சர் தனி செயலர் அமுதன், ஆறுபடைவீடு மருத்துவக் கல்லூரியின் மருத்துவ கண்காணிப்பாளர் ஜெய்சீங், துணை முதல்வர் அருணாச்சலம், இணை பதிவாளர் பெருமாள், துணை மருத்துவ கண்காணிப்பாளர் ஜெயக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    இந்த ஒப்பந்தத்தின் படி ஆறுபடை வீடு மருத்துவக் கல்லூரியின் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ வல்லுநர்கள் அபிஷேகப்பாக்கம், அரியாங்குப்பம், ரெட்டியார்பாளையம், முதலியார்பேட்டை ஆகிய சுகாதார நிலையத்தில் மருத்துவ சேவைகள் செய்வார்கள் என தெரிவித்துள்ளனர்.

    ×