search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "run away"

    • கோவிலில் திருட்டு முயற்சி நடந்தபோது அலாரம் ஒலித்ததால் மர்மநபர்கள் தப்பி ஓடினர்.
    • போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் கடைவீதி அருகே பூசாரி தெரு சாலையில் ரேணுகாம்பாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று முன்தினம் இரவு பூஜை முடிந்த பின்னர் பூசாரி கோவிலை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார். நேற்று அதிகாலை மர்மநபர்கள் அந்த கோவில் கதவின் பூட்டை உடைத்து திருட்டில் ஈடுபட முயன்றுள்ளனர். அப்போது கோவிலில் பொருத்தப்பட்டிருந்த அலாரம் ஒலித்ததால் மர்மநபர்கள் கோவிலில் திருடாமல் அங்கிருந்து தப்பி சென்றனர். தொடர்ந்து அலாரம் ஒலித்ததால், சத்தம் கேட்டு கோவிலை சுற்றி வசிக்கும் பொதுமக்கள் எழுந்து கோவிலுக்கு வந்து பார்த்தனர். பின்னர் அவர்கள் இதுகுறித்து பெரம்பலூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் அந்த தெருவில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியுள்ள காட்சிகளை பார்வையிட்டு மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    • புதுவை 3-வது கல்வே பங்களா வீதியை சேர்ந்தவர் பச்சையப்பன் . இவர் அண்ணாசாலை செட்டிதெரு சந்திப்பில் டீக்கடை வைத்துள்ளார்.
    • பீர் முழுவதையும் குடித்து விட்டு பாட்டீலை வீசி விட்டு வாருங்கள் உணவு தருகிறேன் என பச்சையப்பன் கூறினார்.

    புதுச்சேரி:

    புதுவை 3-வது கல்வே பங்களா வீதியை சேர்ந்தவர் பச்சையப்பன்(வயது53). இவர் அண்ணாசாலை செட்டிதெரு சந்திப்பில் டீக்கடை வைத்துள்ளார்.

    மேலும் அந்த பகுதியில் 3 வேளையும் அன்னதானம் வழங்கி வருகிறார். பச்சையப்பன் கடையில் இருந்தார். அந்த நேரத்தில் மது போதையில் 2 வாலிபர்கள் வந்தனர். அவர்கள் கையில் பீர் பாட்டில்களை வைத்துக்கொண்டு உணவு கேட்டனர்.

    பீர் முழுவதையும் குடித்து விட்டு பாட்டீலை வீசி விட்டு வாருங்கள் உணவு தருகிறேன் என பச்சையப்பன் கூறினார். இதனால் ஆத்திரமடைந்த அந்த வாலிபர்கள் கத்தியால் பச்சையப்பனை வெட்டினர். அவர் கடையில் இருந்து சாலையில் ஓடினார். வாலிபர்கள் அவரை ஓடஓட விரட்டி வெட்டினர். இதில் அவருக்கு கைகள், தலை பகுதிகளில் வெட்டு விழுந்தது.

    பச்சையப்பன் அங்கிருந்த கடை ஒன்றில் புகுந்து கதவை அடைத்துக்கொண்டார். இதனால் வாலிபர்கள் கொலை மிரட்டல் விடுத்தப்படி அங்கிருந்து சென்று விட்டனர். அக்கம் பக்கத்தினர் பச்சையப்பனை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    பெரியக்கடை போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து வாலிபர்களை தேடி வருகின்றனர். பரபரப்பாக காணப்படும் அண்ணாசாலையில் நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • ஆங்கில புத்தாண்டு பிறப்பினை கொண்டாடும் விதமாக குடித்து விட்டு முழு போதையில் 3 வாலிபர்கள் நள்ளிரவு 3 மணிக்கு பஸ்சின் அருகில் வந்தனர்.
    • பக்கவாட்டில் நின்ற 3 பேரும் பஸ்சினை தட்டினர்.

    கடலூர்:

    விருத்தாசலத்திலிருந்து பண்ருட்டி அருகே முத்தாண்டிக்குப்பத்திற்கு தடம் எண்.12-ல் அரசு பஸ் இயக்கப்படுகிறது. இரவு நேரங்களில் பேர்பெரியான்குப்பம் அனந்தீஸ்வரன் கோவில் அருகே பஸ்சினை நிறுத்திவிட்டு காலையில் விருத்தாசலத்திற்கு இந்த பஸ் இயக்கப்படும்.

    அதுபோல கடந்த 31-ந் தேதி இரவு இந்த பஸ்சினை நிறுத்திவிட்டு டிரைவர் முருகன் (வயது 46), கண்டக்டர் எம்பெருமான் 2 பேரும் ஓய்வு எடுத்தனர். ஆங்கில புத்தாண்டு பிறப்பினை கொண்டாடும் விதமாக குடித்து விட்டு முழு போதையில் 3 வாலிபர்கள் நள்ளிரவு 3 மணிக்கு பஸ்சின் அருகில் வந்தனர். பக்கவாட்டில் நின்ற 3 பேரும் பஸ்சினை தட்டினர். பஸ்சினுள் இருந்து இறங்கி வந்த டிரைவர் முருகன், எதற்காக பஸ்சினை தட்டுகிறீர்கள் என்று போதை வாலிபர்களிடம் கேட்டுள்ளார்.ஆத்திரமடைந்த போதை வாலிபர்கள் 3 பேரும் டிரைவர் முருகனை தாக்கிவிட்டு, பஸ்சின் பக்கவாட்டில் உள்ள கண்ணாடியை உடைத்து விட்டு தப்பிவிடுகின்றனர்.இதில் பலத்த காயமடைந்த டிரைவர் முருகன் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது தொடர்பான புகாரின் பேரில் முத்தாண்டிக்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜதாமரைபாண்டியன், சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் மானடிக்குப்பம் ராஜதுரை (வயது 24), முத்தாண்டிக்குப்பம் பிரவின் குமார் (23), வீரசிங்ககுப்பம் செல்வமணி (23) ஆகியோர் இச்சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்களை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்க பண்ருட்டிக் கு அழைத்து வந்தனர். அப்போது பிரவின்குமார் என்ற வாலிபர் தப்பி ஓடிவிட்டார்.

    இதையடுத்து பண்ருட்டி உதவி போலீஸ் சுப்பிரண்டு சபியுல்லா, முத்தாண்டி க்குப்பம் இன்ஸ்பெக்டர் ராஜதாமரைபாண்டியன் தலைமையில் தனிப்படை அமைத்து தப்பி ஒடிய வாலிபரை தேடி வருகின்றனர்.

    • முத்து இசக்கி சாகுபுரம் அருகே உள்ள உப்பளத்தில் வேலை செய்து வருகிறார்
    • மோட்டார் சைக்கிளில் 2 நபர்கள் நகைகளை கழற்றி தருமாறு கத்தியை காட்டி மிரட்டி உள்ளனர்

    ஆறுமுகநேரி:

    ஆறுமுகநேரி செல்வராஜபுரத்தை சேர்ந்தவர் இசக்கி குமார். கூலி தொழிலாளி.

    இவரது மனைவி முத்து இசக்கி (வயது 43). சாகுபுரம் அருகே உள்ள உப்பளத்தில் வேலை செய்து வருகிறார். இவர் வழக்கம் போல நேற்று உப்பளத்திற்கு சென்றுள்ளார். இவருடன் இவரது பக்கத்து வீட்டை சேர்ந்த தங்கராஜ் மனைவி குடியரசு என்பவரும் வேலைக்கு சென்றுள்ளார்.

    அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் இரண்டு நபர்கள் வந்துள்ளனர். அவர்கள் முத்து இசக்கி, குடியரசு ஆகிய இருவரிடமும் நகைகளை கழற்றி தருமாறு கத்தியை காட்டி மிரட்டி உள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த முத்து இசக்கி, குடியரசு இருவரும் பயத்தில் சத்தம் போட்டுள்ளனர்.

    இதை கேட்டு பக்கத்து உப்பளங்களில் வேலை பார்த்துக் கொண்டிருந்த சிலர் அங்கு வந்துள்ளனர். இதன் காரணமாக அந்த மர்ம நபர்கள் இருவரும் தங்கள் மோட்டார் சைக்கிளை அங்கேயே விட்டுவிட்டு ஓட்டம் பிடித்தனர். பலர் துரத்திச் சென்ற போதும் அவர்களை பிடிக்க முடியவில்லை.

    இச்சம்பவம் குறித்து ஆறுமுகநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.இன்ஸ்பெக்டர் செந்தில், சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ் நாராயணன் ஆகியோர் மர்ம நபர்கள் விட்டுச் சென்ற மோட்டார் சைக்கிளை கைப்பற்றி அவர்கள் யார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்

    ×