என் மலர்
புதுச்சேரி
- பயனாளிகளுக்கு பரிசீலிக்கப்பட்டு தவணைத் தொகை ஆணையை தொகுதி எம்.எல்.ஏ. அனிபால் கென்னடி வழங்கினார்.
- கழிவறையுடன் கல்வீடு கட்ட வேண்டும் அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. அறிவுறுத்தினார்.
புதுச்சேரி:
உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட பொதுமக்கள் வீடு கட்டுவதற்கான தவணைத் தொகை ரூ.3,50,000 பெற வேண்டி விண்ணப்பித்த பயனாளிகளுக்கு பரிசீலிக்கப்பட்டு தவணைத் தொகை ஆணையை தொகுதி எம்.எல்.ஏ. அனிபால் கென்னடி வழங்கினார்.
வீடு கட்டுவதற்கான மானியத்தொகை பயனா ளிகளின் வங்கிக் கணக்கில் குடிசை மாற்று வாரியத்தின் மூலம் செலுத்தப்படும் மானிய தவணைத் தொகை பெற்ற தேதியில் இருந்து 4 மாத காலத்திற்குள் அதற்கான கட்டிட வேலையை முடித்து விட வேண்டும்.
கழிவறையுடன் கல்வீடு கட்ட வேண்டும் அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. அறிவுறுத்தினார். நிகழ்ச்சியில் இளநிலை பொறியாளர் சத்தியவாணி, ஆய்வாளர் சங்கர், சக்திவேல், தொகுதி செயலாளர் சக்திவேல், பொருளாளர் மணிமாறன், கிளைச் செயலாளர்கள் ராகேஷ் மற்றும் ரவிக்குமார், ரகுமான் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
- புதுவை அருகே பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் கார்த்திகேயன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
- கோடைகாலங்களில் கிராமங்களுக்கு குடிநீர் தடையின்றி விநியோகிக்கப்படுவது போன்ற ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
புதுச்சேரி:
புதுவை கலெக்டர் தலைமையில் நடைபெற்ற கோடைகால வெயிலின் தாக்கம் தொடர்பான ஆலோசனை கூட்ட அறிவுறுத்தலின் படி சித்திரையை வரவேற்போம் என்ற தலைப்பில் பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் கார்த்திகேயன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து அனைத்து நிலை ஊழியர்கள் கலந்து கொண்டனர். ஆலோசனை கூட்டத்தில் பொதுமக்களுக்கு தாகத்தை தீர்க்கும் வகையில் முக்கிய இடங்களில் நீர்மோர் பந்தல் அமைப்பது, கோடைகாலங்களில் கிராமங்களுக்கு குடிநீர் தடையின்றி விநியோகிக்கப்படுவது போன்ற ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
மேலும் கடந்த 1.4.2022 முதல் 31.3.2023 வரை வருவாய் பிரிவில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு பாராட்டி சால்வை அணிவித்து இனிப்பு வழங்கி கவுரவிக்கப்பட்டது. இதில் அலுவலக மேலாளர் ரவி, உதவி பொறியாளர் முத்துசிவம், இளநிலைப் பொறியாளர் , வருவாய் ஆய்வாளர் மற்றும் இதர ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
- ஆண்டியார்பாளையம் அரசு தொடக்க பள்ளியில் படித்த 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு பிரிவு உபசாரவிழா நடந்தது.
- மாணவன் புவித் நன்றி கூறினார். பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள், கலந்துகொண்டனர்.
புதுச்சேரி:
ஆண்டியார்பாளையம் அரசு தொடக்க பள்ளியில் படித்த 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு பிரிவு உபசாரவிழா நடந்தது. தலைமை ஆசிரியர் விஜயலட்சுமி தலைமை தாங்கி மாணவர்களுக்கு பரிசு வழங்கினார்.
ஆசிரியர் பாட்சா, ஆசிரியைகள் கோமதி, கலைவாணி, பொற்கிலை, வினுபாலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாணவி சாதனா வரவேற்றார். மாணவன் புவித் நன்றி கூறினார். பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள், கலந்துகொண்டனர்.
- முள்ளோடை என்ற இடத்தில் உள்ள ஒரு தனியார் பாரில் அவர்கள் அதிக அளவில் மது வாங்கி நீண்ட நேரம் அருந்தியுள்ளனர்.
- தகராறை தடுக்க சென்ற பார் ஊழியர்களை கையாலும் பீர் பாட்டிலாலும், தாக்கி கொலை மிரட்டல் விட்டனர்.
பாகூர்:
கடலூர் மாவட்டம் வடலூர் பகுதியைச் சேர்ந்த ஒருவர் தற்கொலை முயற்சி செய்தார். அவர் சிகிச்சைகாக புதுவை கிருமாம்பாக்கம் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அவரைப் பார்க்க உறவினர்கள் மற்றும் நண்பர்கள் 10-க்கும் மேற்பட்டோர் நேற்று கிருமாம்பாக்கம் பகுதிக்கு வந்தனர்.
பின்னர் புதுவையில் மதுபாட்டில் குறைந்த விலையில் கிடைக்கும் என்பதால் மது குடிக்க முடிவு செய்தனர்.
முள்ளோடை என்ற இடத்தில் உள்ள ஒரு தனியார் பாரில் அவர்கள் அதிக அளவில் மது வாங்கி நீண்ட நேரம் அருந்தியுள்ளனர்.
போதை தலைக்கு ஏறி பார் ஊழியர்கள் மற்றும் அருகில் மது அருந்தியவர்களிடம் தகராறில் ஈடுபட்டனர்.
அவர்களுக்குள்ளே தகராறு ஏற்பட்டு தாக்கி கொண்டனர். இதனை தடுக்க சென்ற பார் ஊழியர்களை கையாலும் பீர் பாட்டிலாலும், தாக்கி கொலைமிரட்டல் விட்டனர்.
தகவல் அறிந்த புதுவை ரோந்து போலீசார் அங்கு சென்றனர். அவர்களையும், தமிழக வாலிபர்கள் தாக்கினர்.
இதனையடுத்து கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு அவர்களை போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர்.
விசாரணையில் அவர்கள் கடலூர் மாவட்டம் வடலூர் ஆர்.சி காலனி பகுதியை சேர்ந்த சத்தியமூர்த்தி (வயது 30), அதே பகுதியை சேர்ந்த ஜீவஜோதி (27), குறிஞ்சிப்பாடியைச் சேர்ந்த சரத்குமார் (25), புவனகிரி அடுத்த கரைமேடு பின்நல்லூர் பகுதியைச் சேர்ந்த ஆசைமணி (27), சவுந்தரராஜன் (24), அருள்பாண்டி (20), அருளரசன் (22), வேல்முருகன் (23) என்பது தெரியவந்தது.
இது சம்பந்தமாக பார் ஊழியர் மூலகுளம் பகுதியை சேர்ந்த வெங்கடேசன் கொடுத்த புகாரின் பேரில் கிருமாம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து 9 பேரையும் கைது செய்தனர்.
- புதுவை சின்னசுப்பு ராயப்பிள்ளை வீதியில் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது.
- இதற்காக திருப்பணிக் குழுவை அமைத்து இந்து சமய அறநிலையத்துறை ஆணை வெளியிட்டுள்ளது.
புதுச்சேரி:
புதுவை சின்னசுப்பு ராயப்பிள்ளை வீதியில் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது.பிரசித்தி பெற்ற கோவிலுக்கு 2010-ல் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. 13 ஆண்டுக்கு பின் மீண்டும் கும்பாபிஷேகம் நடத்தவும், திருப் பணிகளை மேற்கொள்ளவும் அரசு முடிவு செய்தது.
இதற்காக திருப்பணிக் குழுவை அமைத்து இந்து சமய அறநிலையத்துறை ஆணை வெளியிட்டுள்ளது.
திருப்பணிக்குழு கவுரவ தலைவராக அமைச்சர் லட்சமிநாராயணன், தலைவராக ஓய்வுபெற்ற போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார், பொரு ளாளராக நாக சீனுவாசன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். உறுப்பினர்களாக ராஜேந்தி ரன், சிவசுப்பிரமணியன், முத்துலி ங்கம், ஹேமா மாலினி, ஜெயக்குமார், நாகமுத்து, வேல்முருகன், ஜோதி லிங்கம், கலாவ திகுப்தா, ராமதாஸ், கோவிந்தராஜூலு ஆகியோர் நியமிக்க ப்பட்டுள்ளனர்.
- புதுவை பாரதிதாசன் அறக்கட்டளை சார்பில் மாதந்தோறும் பாவேந்தர் கலை இலக்கியத் திங்கள் விழா பாவேந்தர் பாரதிதாசன் அரசு அருங்காட்சியகத்தில் நடந்தது.
- சட்டமன்ற உறுப்பினர் வெ.பொ.இராமலிங்கம் கலந்து கொண்டு போட்டியினைத் தொடங்கி வைத்தார்.
புதுச்சேரி:
புதுவை பாரதிதாசன் அறக்கட்டளை சார்பில் மாதந்தோறும் பாவேந்தர் கலை இலக்கியத் திங்கள் விழா பாவேந்தர் பாரதிதாசன் அரசு அருங்காட்சி யகத்தில் நடந்தது.
அறக்கட்டளைத் தலைவர் எழுத்தாளர் கோ.பாரதி தலைமை தாங்கிப் பேசினார். வி.கிருஷ்ணகுமார், மு.அருள்செல்வம், ஜெயந்தி ராஜவேலு, படைப்பாளி பைரவி, முன்னாள் ராணுவ வீரர் து.சசிக்குமார், செயலர் ஜெ.வள்ளி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் "பாவேந்தர் வாழ்கிறார்" என்ற தலைப்பில் கவிதைப் போட்டி நடைபெற்றது. சட்டமன்ற உறுப்பினர் வெ.பொ.இராமலிங்கம் கலந்து கொண்டு போட்டியி னைத் தொடங்கி வைத்தார். கலை பண்பாட்டுத் துறை இயக்குநர் வி.கலிய பெருமாள் வாழ்த்திப் பேசினார்.
தேர்வு பெற்ற 10 கவிஞர்களுக்கு மொத்தம் ரூ.4 ஆயிரம் ரொக்கப் பரிசினை அறக்கட்டளை சார்பில் பொதுப்பணித் துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் வழங்கினார்.
புதுவைத் தமிழ்ச் சங்கத் தலைவர் வி.முத்து வாழ்த்தி பேசினார்.முன்னதாகக் கவிஞர் ராஜேஷ் வரவேற்றுப் பேசினார். கவிஞர் பிரமீளா மேரி நன்றி கூறினார். கலைமாமணி செல்வ துரைநீஸ், கவிஞர் வெ. விசாலாட்சி, லட்சுமி தேவி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- புதுவை அருகே உருளையன்பேட்டை தொகுதி தி.மு.க. சார்பில் அண்ணா சாலையில் மோர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.
- பொதுமக்களுக்கு இளநீர், தர்பூசணி, மோர், குளிர்பானம், வெள்ளரிக்காய், நுங்கு உள்ளிட்ட குளிர்ச்சியான பொருட்களை வழங்கினார்.
புதுச்சேரி:
கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து புதுவை மக்களை காக்கும் வகையில், உருளை யன்பேட்டை தொகுதி தி.மு.க. சார்பில் அண்ணா சாலையில் மோர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.
மோர் பந்தல் திறப்பு விழாவுக்கு தி.மு.க. தலைமை பொதுக்குழு உறுப்பினர் கோபால் தலைமை தாங்கினார். தொகுதி செயலாளர் சக்திவேல் முன்னிலை வகித்தார்.
தி.மு.க. மாநில அமைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான சிவா எம்.எல்.ஏ. நீர்மோர் பந்தலை திறந்து வைத்து, பொதுமக்களுக்கு இளநீர், தர்பூசணி, மோர், குளிர்பானம், வெள்ளரிக்காய், நுங்கு உள்ளிட்ட குளிர்ச்சியான பொருட்களை வழங்கினார்.
நிகழ்ச்சியில் அவைத் தலைவர் எஸ்.பி.சிவக்குமார், எம்.எல்.ஏ.க்கள் அனிபால் கென்னடி, சம்பத், செந்தில்குமார், துணை அமைப்பாளர் தைரியநாதன், பொதுக்குழு உறுப்பினர்கள் மாறன், ராமசாமி, தர்மராஜ், சன். சண்முகம், பிரபாகரன், இளம்பரிதி, தொகுதி செயலாளர்கள் தியாகராஜன், நடராஜன், வடிவேல் மற்றும் உருளையன்பேட்டை தொகுதி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர் ஒரு கடிதம் அனுப்பியுள்ளார்.
- பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக விளங்கும் பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.
புதுச்சேரி:
புதுவை போக்குவரத்து ஆணையர் சிவக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர் ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அதில், மத்திய மோட்டார் வாகன விதிகளின்படி வாகன சீட்பெல்ட் போன்ற முக்கிய பாகாப்பு உபகரணங்களின் தரம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
தரமற்ற சீட்பெல்ட், அலாரம் உட்பட ஆயிரத்து 300 உபகரணங்களை ஆன்லைனில் விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இவற்றை விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் ஆணையம் அறிவு றுத்தியுள்ளது.பாது காப்புக்கு அச்சுறுத்தலாக விளங்கும் பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.
எனவே தர மற்ற பாதுகாப்பு உபகரணங்களை விற்பனை செய்யக்கூடாது என வாகன விற்பனையாளர்களுக்கு உத்தரவிடப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- பிரியாணியில் கம்பி கிடந்ததை தெரிவித்த போது கடை நிர்வாகம் முதலில் மறுத்தனர்.
- சுல்தான்பேட்டையில் தரமற்ற உணவு விநியோகம் செய்வதாக வெளியான வீடியோவை தொடர்ந்து, பிரியாணியில் இரும்பு கம்பி கிடக்கும் வீடியோ புதுவையில் வைரலாக பரவி வருகிறது.
புதுச்சேரி:
புதுவை 45 அடி சாலையில் பிரபலமான பிரியாணி கடை உள்ளது.
இங்கு தட்டாஞ்சாவடியை சேர்ந்த மைக்கேல் சிக்கன் பிரியாணி வாங்கினார். வீட்டுக்கு கொண்டு சென்று சாப்பிட்ட போது, அதில் பாத்திரம் கழுவும் ஸ்கிரப் கம்பி இருந்தது.
இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவர் கடைக்கு வந்து உரிமையாளரிடம் முறையிட்டார். கடை உரிமையாளரிடம் அவர் முறையிட்ட வீடியோ வைரலாக பரவி வருகிறது.
அந்த வீடியோவில் மைக்கேல் கூறுகையில், பிரியாணியில் கம்பி கிடந்ததை தெரிவித்த போது கடை நிர்வாகம் முதலில் மறுத்தனர். பின்னர் சாதாரணமாக மன்னித்து விடுங்கள் என கூறுகின்றனர்.
கம்பி வயிற்றுக்குள் சென்றால் ஏற்படும் பாதிப்புகளுக்கு பிரியாணி கடை பொறுப்பேற்குமா? பிரியாணி சாப்பிடும்போது என்ன உள்ளது? என பார்த்து சாப்பிடுங்கள்.
இதுகுறித்து உணவு பாதுகாப்பு துறையிடம் புகார் அளிப்பேன் என்றார். ஏற்கனவே சுல்தான் பேட்டையில் தரமற்ற உணவு விநியோகம் செய்வதாக வெளியான வீடியோவை தொடர்ந்து, பிரியாணியில் இரும்பு கம்பி கிடக்கும் வீடியோ புதுவையில் வைரலாக பரவி வருகிறது.
- புதுவையில் மது ஆறு ஓடுவதற்கு போலி சித்தர் ரங்கசாமிதான் காரணம். ஆன்மிக பூமியை தனது சுயநலத்திற்காக போதை பூமியாக மாற்றியுள்ளார்.
- தற்போது ஒஸ்ட் புதுவையாக மாறியுள்ளது. அதிகாலை வரை மதுபார்களில் குத்தாட்டம் போடுகின்றனர்.
புதுச்சேரி:
புதுவையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் முதல்- அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-
புதுவையில் மது ஆறு ஓடுவதற்கு போலி சித்தர் ரங்கசாமிதான் காரணம். ஆன்மிக பூமியை தனது சுயநலத்திற்காக போதை பூமியாக மாற்றியுள்ளார். சாலைகளில் பொதுமக்கள் நடக்கவே பயப்படும் சூழல் உருவாகியுள்ளது.
பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டுள்ளது. குடியிருப்புவாசிகள் மது பார் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து முதல்- அமைச்சரை வந்து சந்திக்கின்றனர்.
அப்போது, இன்னும் 100 மதுபார் வரும் என ஆணவத்தோடு ரங்கசாமி கூறுகிறார். வருமானம் வேண்டும் என்பதற்காக மதுபார்களுக்கு அனுமதி தருவதாகவும் அவர் கூறுகிறார்.
மது வருவாயில் ஒரு ஆட்சி நடக்க வேண்டுமா? ஏற்கனவே 400 மதுபார்கள் புதுவையில் இருந்தது. தற்போது 900 ஆக உயர்ந்துள்ளது. இன்னும் 40 பார்களுக்கு அனுமதி வழங்கும் கோப்பு முதல்- அமைச்சர் அலுவலகத்தில் உள்ளது.
ரூ.20 லட்சம் கொடுத்தால் நள்ளிரவு நடன பாருக்கு அனுமதி, ரூ.15 லட்சம் கொடுத்தால் விடுதிகளில் பார் திறக்க அனுமதி வழங்கப்படுகிறது. பெஸ்ட் புதுவையை உருவாக்குவோம் என பிரதமர் கூறினார். தற்போது ஒஸ்ட் புதுவையாக மாறியுள்ளது. அதிகாலை வரை மதுபார்களில் குத்தாட்டம் போடுகின்றனர். அதற்கு பிறகும் சாலைகளில் வந்து நடனமாடுகின்றனர்.
சுற்றுலா பயணிகளை கவர பீர் பஸ் விடுகிறார். அதில் குடித்துக்கொண்டே புதுவைக்கு வந்து குடித்தபடியே திரும்பி செல்வார்களாம். காவல்துறையை பொறுத்தவரை மாமூல் கொடுத்தால் போதும் என்ற நிலை உருவாகியுள்ளது. முதல்-அமைச்சருக்கு அவரின் நாற்காலி இருந்தால் போதும். போதை கும்பலால் இறந்த என்ஜினியர் என்ன கனவு கண்டிருப்பார்?
அவர் ஒரே பிள்ளை. அவரது தாயார் இழப்புக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமிதான் பொறுப்பேற்க வேண்டும். மதுபார் மட்டுமின்றி, 6 மதுபான தொழிற்சாலைகளுக்கும் அனுமதி வழங்கப்போகிறார்களாம். 2 ஆண்டு ஆட்சியில் 500 மதுபார் கூடியுள்ளது.
இன்னும் இந்த ஆட்சி நீடித்தால் இன்னும் 500 பார் புதிதாக வரும். இந்த ஆட்சி நீடிக்க வேண்டுமா? இளைய சமுதாயத்தை அழிக்க ரங்கசாமி முற்பட்டுள்ளார்.ரெஸ்டோ பார்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து சிறை செல்லவும் தயங்க மாட்டோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
- ரூ. 67.40 லட்சம் செலவில் மாணவியர் விடுதியையும் புனரமைக்கும் பணிக ளுக்கான பூமி பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது
- சாலைப்பணிகள் 8 மாத காலத்திலும் மாணவ- மாணவியர் விடுதி சீரமைப்பு பணிகள் 6 மாத காலத்திலும் முடிக்கப்பட உள்ளது.
புதுச்சேரி:
புதுவை, கதிர்காமம் இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவன வளாகத்தில் ரூ.3.57 கோடி செலவில் உள்சாலைகள் மற்றும் மழை நீர் வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணி மற்றும் ரூ. 67.85 லட்சம் செலவில் மாணவர் விடுதியையும் ரூ. 67.40 லட்சம் செலவில் மாணவியர் விடுதியையும் புனரமைக்கும் பணிக ளுக்கான பூமி பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் முதல்-அமைச்சரும் கல்லூரி நிர்வாகத்தின் தலைவருமான ரங்கசாமி பூமி பூஜை செய்து பணிகளைத் தொடங்கி வைத்தார்.
பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன், கே.எஸ்.பி. ரமேஷ் எம்.எல்.ஏ., சுகாதாரதுறை இயக்குனர் ஸ்ரீராமுலு, கல்லூரி இயக்குனர் உதயசங்கர், பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் சத்தியமூர்த்தி, கல்லூரி ஆசிரியர்கள், மருத்துவர்கள் பொறியாளர்கள் அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
சாலைப்பணிகள் 8 மாத காலத்திலும் மாணவ- மாணவியர் விடுதி சீரமைப்பு பணிகள் 6 மாத காலத்திலும் முடிக்கப்பட உள்ளது.
இப்பணிகளை தொடர்ந்து மருத்துவமனை கட்டிடத்தின் 4-வது மாடியில் அதிநவீன வசதிகள் கொண்ட 11 அறுவை சிகிச்சை கூடங்கள் ரூ.32 கோடி செலவில் கட்டி முடித்து இறுதிக்குள் மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர திட்டமி டப்பட்டுள்ளது.
இன்னும் ஒரு மாத காலத்திற்குள் அதற்கான ஒப்பந்தபுள்ளிகள் கோரப்பட்டு பணிகள் துவங்கப்பட உள்ளது.
மேலும், உள்ளிருப்பு மருத்துவர்கள் தங்கு வதற்காக ரூ.32 கோடி மதிப்பீட்டில் 240 அறைகளுடன் கூடிய 8 மாடி விடுதி கட்டிடத்திற்கான கட்டுமான பணிகள் 2 மாதங்களில் தொடங்கப்பட உள்ளன.மருத்துவமனை, கல்லூரி, நூலகம் மற்றும் அதைச்சார்ந்த அனைத்து கட்டிடங்களையும் சீரமைக்க ரூ.6.50 கோடி செலவில் பல்வேறு பணிகள் மிக விரைவில் மேற் கொள்ளப்படவுள்ளன.
பணிகள் தேசிய மருத்துவ கவுன்சிலின் அனைத்து தேவைகளுக்கு ஏற்ப 1½ ஆண்டு காலத்தில் நிறைவு பெற்று புதுவை மக்களின் முழு பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என தெரிவித்துள்ளார்.
- புதுவை மாநிலத்திற்கு நபார்டு வங்கி ரூ.116 கோடி 47 லட்சத்துக்கு அனுமதி வழங்கியுள்ளது.
- புதுவை மாநில உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டங்க ளுக்கான நிதியை தர தயாராக உள்ளதாக தெரிவித்தனர்.
புதுச்சேரி:
புதுவை மாநிலத்திற்கு நபார்டு வங்கி ரூ.116 கோடி 47 லட்சத்துக்கு அனுமதி வழங்கியுள்ளது.
இதில் ரூ.50 கோடியே 25 லட்சம் விடுவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் புதுவை சட்டசபையில் நபார்டு வங்கி அதிகாரிகள் முதல்- அமைச்சர் ரங்கசாமியை சந்தித்து பேசினர்.
அப்போது, நடப்பு நிதியாண்டிலும் புதுவை மாநில உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டங்க ளுக்கான நிதியை தர தயாராக உள்ளதாக தெரிவித்தனர்.
நடப்பு நிதியாண்டுக்கான திட்டங்களை தயாரித்து அனுப்புவதாகவும், அதற்கு அதிக நிதி வழங்க வேண்டும் என முதல்- அமைச்சர் ரங்கசாமி கேட்டுக் கொண்டார்.
இந்த சந்திப்பின்போது அமைச்சர் லட்சுமி நாராயணன், நிதி செயலர் ராஜூ ஆகியோர் உடனிருந்தனர்.






