என் மலர்
புதுச்சேரி

வீடுகட்டுவதற்கான ஆணையை அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. வழங்கிய காட்சி.
வீடுகட்டுவதற்கான ஆணை-அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. வழங்கினார்
- பயனாளிகளுக்கு பரிசீலிக்கப்பட்டு தவணைத் தொகை ஆணையை தொகுதி எம்.எல்.ஏ. அனிபால் கென்னடி வழங்கினார்.
- கழிவறையுடன் கல்வீடு கட்ட வேண்டும் அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. அறிவுறுத்தினார்.
புதுச்சேரி:
உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட பொதுமக்கள் வீடு கட்டுவதற்கான தவணைத் தொகை ரூ.3,50,000 பெற வேண்டி விண்ணப்பித்த பயனாளிகளுக்கு பரிசீலிக்கப்பட்டு தவணைத் தொகை ஆணையை தொகுதி எம்.எல்.ஏ. அனிபால் கென்னடி வழங்கினார்.
வீடு கட்டுவதற்கான மானியத்தொகை பயனா ளிகளின் வங்கிக் கணக்கில் குடிசை மாற்று வாரியத்தின் மூலம் செலுத்தப்படும் மானிய தவணைத் தொகை பெற்ற தேதியில் இருந்து 4 மாத காலத்திற்குள் அதற்கான கட்டிட வேலையை முடித்து விட வேண்டும்.
கழிவறையுடன் கல்வீடு கட்ட வேண்டும் அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. அறிவுறுத்தினார். நிகழ்ச்சியில் இளநிலை பொறியாளர் சத்தியவாணி, ஆய்வாளர் சங்கர், சக்திவேல், தொகுதி செயலாளர் சக்திவேல், பொருளாளர் மணிமாறன், கிளைச் செயலாளர்கள் ராகேஷ் மற்றும் ரவிக்குமார், ரகுமான் மற்றும் பலர் உடன் இருந்தனர்.






