என் மலர்
புதுச்சேரி
- முதலியார் பேட்டை தொகுதியில் அமைந்துள்ள மிகப்பெரிய 2 ஏரிகள் உழந்தை மற்றும் முருங்கப்பாக்கம் ஏரிகள்.
- புதுவை மாநிலம் தற்பொழுது கடும் நிதி நெருக்கடியில் உள்ளது. இருப்பினும் வேல்ராம்பட்டு ஏரியில் நீர் தேக்கி நிலத்தடி நீரை உயர்த்த பல நூறு கோடி ரூபாய் செலவிடுகிறது.
புதுச்சேரி:
முதலியார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் சம்பத் பொதுப்பணித்துறை நீர்ப்பாசன கோட்ட செயற்பொறியாளர் ராதா கிருஷ்ணனை சந்தித்து வேல்ராம்பட்டு ஏரி நீரை வெளியேற்ற அனுமதி கொடுத்ததை ரத்து செய்ய வேண்டும் என மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-
முதலியார் பேட்டை தொகுதியில் அமைந்துள்ள மிகப்பெரிய 2 ஏரிகள் உழந்தை மற்றும் முருங்கப்பாக்கம் ஏரிகள். இந்த 2 ஏரிக்கும் நீர் நிரப்ப மழை நீரை பல பகுதிகளில் இருந்து கொண்டு வர உங்கள் துறையே பல கோடி ரூபாய் செலவிட்டு கட்டுமானப் பணியையும் மேற்கொண்டு வருகிறது.
இந்த 2 ஏரிகளிளும் நீர்த்தேக்கி படகு போக்குவரத்து ஏற்படுத்தி பெரிய சுற்றுலா மையமாக சுற்றுலாத் துறை தொலைநோக்கு திட்டத்துடன் பல கோடி ரூபாய் செலவில் பணி தொடங்கியுள்ளது.
புதுவை மாநிலம் தற்பொழுது கடும் நிதி நெருக்கடியில் உள்ளது. இருப்பினும் வேல்ராம்பட்டு ஏரியில் நீர் தேக்கி நிலத்தடி நீரை உயர்த்த பல நூறு கோடி ரூபாய் செலவிடுகிறது.
நிலைமை இப்படி இருக்க வேல்ராம்பட்டு ஏரியின் மீன்பிடிக்க ஒப்பந்தம் எடுத்தவர் மீன் பிடிக்க சுயலாபத்திற்காக ஏரியின் நீரை வெளியேற்றி வருகிறார். இதற்கு தங்கள் துறையே அனுமதி வழங்கி உள்ளது.
இதை தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் என்ற வகையில் இனியும் என்னால் வேடிக்கை பார்க்க முடியாது.
தங்கள் துறை மூலம் நீர் வெளியேற்ற கொடுத்த அனுமதியை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் இல்லையெனில் முன்னறிவிப்பு ஏதும் கொடுக்காமல் மக்களை ஒன்று திரட்டி மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவேன் என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
- புதுவை அருகே உருளையன்பேட்டையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
- துணை தலைவர் முகமது இலியாஸ், நகர செயலாளர் ஷேக் இஸ்மாயில், முத்தவல்லி அப்துல்ரவூப், ஜைனுல் ஆப்தின் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
புதுச்சேரி:
உருளையன்பேட்டையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
மாநில அமைப்பு செயலாளர் ஜிகினி முகமதுஅலி தலைமை வகித்தார். துணை செயலாளர் சம்சுதீன், பிரதிநிதி முஜிபுர்ரகுமான் முன்னிலை வகித்தனர். திமுக பொதுக்குழு உறுப்பினர் கோபால் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
தொகுதி நிர்வாகிகள் அமர், ஜியாவுதீன், பாக்கியராஜ், யூத் லீக் பொருளாளர் முகமதுரிபாய், மாவட்ட தலைவர் முகமதுஷெரிப், செயலாளர் முக மதுஇப்ராகிம், பொருளாளர் அப்துல்அக்கீம், துணை தலைவர் முகமது இலியாஸ், நகர செயலாளர் ஷேக் இஸ்மாயில், முத்தவல்லி அப்துல்ரவூப், ஜைனுல் ஆப்தின் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
- புதுவை அரசு கல்வித்துறையின் சார்பில் தற்காப்பு கலை பயிற்சி 3 மாதங்களாக அளிக்கப்பட்டது.
- மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சியினை மேம்படுத்த ஆலோசனை வழங்கினார்.
புதுச்சேரி:
மதகடிப்பட்டு கலைஞர் கருணாநிதி அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு புதுவை அரசு கல்வித்துறையின் சார்பில் தற்காப்பு கலை பயிற்சி 3 மாதங்களாக அளிக்கப்பட்டது.
சான்றிதழ் வழங்கும் விழாவில் பள்ளியின் துணை முதல்வர் சுகந்த குமாரி தலைமை தாங்கி, பயிற்சி பெற்ற கராத்தே மாணவிகளுக்கு சான்றிதழ்களை வழங்கி வாழ்த்தி பேசினார்.
புதுவை சென்சாய் கராத்தே தலைமை பயிற்சியாளர் மதிஒளி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சியினை மேம்படுத்த ஆலோசனை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் கராத்தே பயிற்சியாளர் கவிதாவீரமுத்து முன்னிலை வகித்தார். ஆசிரியர் குமார் வரவேற்று பேசினார்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கராத்தே பயிற்சியாளர்கள் கோபாலகிருஷ்ணன், வழக்கீல் தினேஷ் ஆகியோர் செய்து இருந்தனர்.
நிகழ்ச்சியில் பள்ளியின் ஆசிரியர்கள் மாணவர்கள், பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
- புதுவை பூமியான்பேட் ஜவகர் நகர் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் மனைவி பூங்கொடி வயது (64) கடந்த 6 மாதங்களாக தனியாக வசித்து வருகிறார்.
- தனக்கு ஆபரேசன் செய்ய விருப்பம் இல்லை என பூங்கொடி அவரது மகனிடம் கூறியுள்ளார்.
புதுச்சேரி:
புதுவை பூமியான்பேட் ஜவகர் நகர் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் மனைவி பூங்கொடி வயது (64) கடந்த 6 மாதங்களாக தனியாக வசித்து வருகிறார்.
இவருக்கு தைராய்டு பிரச்சினை இருந்தது. இதற்காக தனியார் ஆஸ்பத்திரியில் நேற்று ஆபரேசன் செய்ய தேதி ஒதுக்கியிருந்தனர்.தனக்கு ஆபரேசன் செய்ய விருப்பம் இல்லை என பூங்கொடி அவரது மகனிடம் கூறியுள்ளார். அவர்கள் பூங்கொடியை சமாதானம் செய்துள்ளனர்.
இந்த நிலையில் பூங்கொடி அவரது அறையில் இருந்த மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வீட்டுக்கதவு வரை திறக்காததால் கதவை உடைத்து உள்ளே சென்று அவரது மகன்கள் பார்த்தனர். அங்கு பூங்கொடி பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
ரெட்டியார் பாளையம் போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வீட்டினுள் வைத்து பூட்டி பெட்ரோல் ஊற்றி கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்துள்ளார்.
- ரூ.3 லட்சம், ரூ.5 லட்சம் மதிப்புள்ள சீர்வரிசை பொருட்களை வரதட்சணையாக கொடுத்துள்ளனர்.
புதுச்சேரி:
புதுச்சேரி வீராம்பட்டி னம் பகுதியை சேர்ந்தவர் கலைஞர். மீனவர்.
இவரது மனைவி ஜமுனா (வயது 32). திருமணத்தின் போது பெண் வீட்டினர் 25 பவுன் நகை, ரூ.3 லட்சம், ரூ.5 லட்சம் மதிப்புள்ள சீர்வரிசை பொருட்களை வரதட்சணையாக கொடுத்துள்ளனர். கலைஞர், அடிக்கடி குடித்துவிட்டு, பணத்தை சூதாட்டத்தில் செலவழித்து வந்ததாக தெரிகிறது.
இதனை தட்டிக் கேட்ட ஜமுனாவை தாக்கி வந்துள்ளார். மேலும், பணம், நகை வாங்கி வருமாறு அடித்து வந்துள்ளார். இதற்கிடையே, கலைஞர் வேறு ஒரு பெண்ணுடன் பழகி, 2-வது திருமணம் செய்ததாக தெரிகிறது. இதனை ஜமுனா தட்டிக் கேட்டபோது அவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இதுபற்றி அரியாங்குப்பம் போலீஸ் நிலையத்தில் ஏற்கனவே புகார் அளித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கலைஞர், வழக்கை வாபஸ் பெறா விட்டால், வீட்டினுள் வைத்து பூட்டி பெட்ரோல் ஊற்றி கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்துள்ளார்.
இதற்கு கணவர் குடும்பத்தினர் உடந்தையாக இருப்பதாக கூறப்படுகிறது. இதுபற்றி ஜமுனா, அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்பேரில், கணவர் கலைஞர், மாமியார் மரக தம், நாத்தனார் சித்ரா ஆகிய 3 பேர் மீதும் வரதட் சணை கொடுமை, கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
- மீன்பிடி களன்களுக்கு எரிபொருள் நிரப்புவதற்கான டீசல் நிலையம் அமைக்க சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தொடர் நடவடிக்கை எடுத்தார்.
- இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் மூலம் நல்லவாடு தெற்கு பகுதியில் புதிய டீசல் நிலையம் அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது.
புதுச்சேரி:
மணவெளி தொகுதி நல்லவாடு மீனவ கிராமத்தில் அப்பகுதி மீனவர்களின் நீண்ட நாள் கோரிக்கையான மீன்பிடி களன்களுக்கு எரிபொருள் நிரப்புவதற்கான டீசல் நிலையம் அமைக்க சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தொடர் நடவடிக்கை எடுத்தார்.
அதன் புதுவை அரசு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை பயன்படுத்த உரிமை விதிகளின்படி புதுவை மாநில மீனவர் கூட்டமைப்பு சம்பளத்திற்கு இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் மூலம் நல்லவாடு தெற்கு பகுதியில் புதிய டீசல் நிலையம் அமைப்பதற்கான பூமி பூஜை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் பொதுப்பணித்துறை மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் முன்னிலையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் மீன்வளத்துறை இயக்குனர் பாலாஜி, இணை இயக்குனர், துணை இயக்குனர், மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் அதிகாரிகள் நலவாடு கிராம பஞ்சாயத்தார்கள் பா.ஜனதா மாநில விவசாய அணி பொறுப்பாளர் ராமு, தொகுதி தலைவர் லட்சுமி காந்தன், சக்திபாலன், கிருஷ்ண மூர்த்தி ரெட்டியார், வடிவேலு உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் மற்றும் மீன்பிடி படகு உரிமையாளர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இந்த டீசல் பங்க் சுமார் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட டேங்குகள் மற்றும் 2 பம்புகள் அமைக்கப்பட உள்ளது.
புதுச்சேரி:
புதுச்சேரி உப்பளம் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள குத்பா பள்ளி முஹம்மதியா பள்ளி, முவஹீதியா பள்ளி மிராபள்ளி,பூராப் பள்ளி ஆகிய பள்ளிவாசல்களுக்கு ரமலான் நோன்பு கஞ்சி நன்கொடை முதல்-அமைச்சர் நிவாரண நிதியில் இருந்து உப்பளம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. அனிபால் கென்னடி பள்ளிவாசல்களுக்கு தனித்தனியாக தலா ரூ. 10 ஆயிரம் வீதம் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் புதுவை மாநில வக்பு வாரிய உறுப்பினர்கள் சையத் அஹமது மெய்தீன், பசிலா பாத்திமா, வக்பு அதிகாரி முஹம்மது இஸ்மாயில், மீராபள்ளி முத்தவல்லி ஹாஜாமெய்தீன் முஹமதியா பள்ளி முத்தவல்லிகள், ஷேக் அப்துல் கப்பார்திரு முஹம்மது ரஃபி, முவஹிதியா பள்ளி முத்தவல்லி, முஹம்மது அமீன், பூரா பள்ளி முத்தவல்லி , முஹம்மது முசாதிக் மற்றும் பலர் பங்கேற்றனர்.
- பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகை வழங்கும் விழா திருக்கனூரை அடுத்த கே .ஆர். பாளையத்தில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது.
- பா.ஜனதா மாநில செயற்குழு உறுப்பினர் செல்வகுமார், காட்டேரிக்குப்பம் ஃபோட்டோ ராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி:
புதுவை அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை மூலம் மண்ணாடிப்பட்டு தொகுதிக்கு உட்பட்ட பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகை வழங்கும் விழா திருக்கனூரை அடுத்த கே .ஆர். பாளையத்தில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது.
விழாவிற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் உள்துறை அமைச்சருமான நமச்சிவாயம் தலைமை தாங்கி மண்ணாடிப்பட்டு தொகுதிக்கு உட்பட்ட 650 பயனாளிகளுக்கு முதியோர் மற்றும் விதவைகளுக்கான உதவித் தொகை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அதிகாரிகள் , முன்னாள் எம்.எல்.ஏ. அருள்முருகன், பா.ஜனதா மாநில செயற்குழு உறுப்பினர் செல்வகுமார், காட்டேரிக்குப்பம் ஃபோட்டோ ராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- புதுவை மாநிலத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
- புதுவை சுகாதாரத்துறை கொரோனா பரிசோனைகளை அதிகரித்துள்ளது. 941 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
புதுச்சேரி:
புதுவை மாநிலத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
கடந்த சில நாட்களாக ஒற்றை இலக்கத்தில் இருந்த தொற்று, ரெட்டை இலக்கமாகி, 3 இலக்கத்தை தொடும் நிலை ஏற்பட்டுள்ளது. புதுவை சுகாதாரத்துறை கொரோனா பரிசோனைகளை அதிகரித்துள்ளது.
941 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுவையில் 58 பேர், காரைக்காலில் 32 பேர், ஏனாமில் 2 பேர், மாகியில் ஒருவர் என 93 பேருக்கு தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது.
தற்போது தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 3 பேர் ஜிப்மர் ஆஸ்பத்திரியிலும் 2 பேர் அரசு மார்பக ஆஸ்பத்திரியிலும், 6 பேர் கோவிட் கேர் சென்டரிலும் சிசிக்சை பெற்று வருகின்றனர்.
314 பேர் வீட்டு தனிமை என மொத்தம் 325 பேர் கொரோனா தொற்றுடன் சிகிச்சையில் உள்ளனர். இன்று 41 பேர் குணமடைந்துள்ளனர். உயிரிழப்பு ஏதும் இல்லை. இந்த தகவல்களை சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
- புதுவை கூடப்பாக்கத் தைச் சேர்ந்தவர் அருண் பாண்டியன் என்ஜினீயர். இவர் தன்னுடைய செல்போனில் இன்ஸ்டா கிராமில் வந்த ஒரு லிங்கை பார்த்து. அதன் உள்ளே சென்றுள்ளார்.
- ரூ.31 லட்சம் வரை அதில் முதலீடு செய்து விட்டு பணத்தை திரும்ப எடுக்க முயற்சித்த போது, அவருடைய வங்கி கணக்கில் பணம் எதுவும் இல்லை.
புதுச்சேரி:
புதுவை கூடப்பாக்கத் தைச் சேர்ந்தவர் அருண் பாண்டியன் என்ஜினீயர். இவர் தன்னுடைய செல்போனில் இன்ஸ்டா கிராமில் வந்த ஒரு லிங்கை பார்த்து. அதன் உள்ளே சென்றுள்ளார். அப்போது ஆன்லைனில் வருகின்ற சினிமாக்களை பார்த்து படத்தைப் பற்றிய மதிப்பெண்ணை குறிப்பிட்டால் முதலீடு செய்யும் பணத்திற்கு உடனடியாக 10 சதவீதம் வருமானம் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனை நம்பி அவர் இன்ஸ்டாகிராம் லிங்க் உள்ளே சென்று ஒரு படத்தை பார்த்து அதற்கான மதிப்பெண் கொடுத்தவுடன் இவர் முதலீடு செய்த ரூ.10 ஆயிரத்துக்கு 10 சதவீதம் கூடுதலாக உடனடியாக ரூ.11ஆயிரம் அனுப்பி உள்ளார்கள்.
தொடர்ந்து அவர் தனது பணத்தை செலுத்தி, பல்வேறு படங்களை பார்த்து இவர் அதற்கான மதிப்பெண்ணை கொடுத்துக் கொண்டே இருந்தார் ரூ.31 லட்சம் வரை அதில் முதலீடு செய்து விட்டு பணத்தை திரும்ப எடுக்க முயற்சித்த போது, அவருடைய வங்கி கணக்கில் பணம் எதுவும் இல்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்தார்.
இதுகுறித்து அவர் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் கீர்த்தி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இதனை தொடர்ந்து சைபர் கிரைம் போலீசார் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்ப தாவது:-
பொதுமக்கள் தங்கள் மொபைல் போனில் குறுஞ்செய்தி அல்லது வாட்ஸ் அப், இன்ஸ்டா கிராம், பேஸ்புக் போன்ற வற்றில் வருகிற லிங்கில் உள்ளே சென்று பார்க்க வேண்டாம். அப்படி அந்த லிங்க் மூலமாக நீங்கள் உள்ளே செல்லும் பொழுது உங்களுடைய செல்போன் ஹேக் செய்யப்படுகிறது,
உங்கள் செல்போனில் இருக்கின்ற அனைத்து தகவல்களும் இணைய வழி மோசடிக்காரர்களால் திருடப்பட்டுவிடும், மேலும் கவர்ச்சிகரமான அதிக சம்பளத்தின் கூடிய வெளிநாட்டு வேலை வாய்ப்பு அறிவிப்புகள், நாங்கள் சொல்வதில் முதலீடு செய்தால் அன்றைய தினமே 10 சதவீதம் லாபம் கொடுக்கப்படும் கவர்ச்சிகரமான அதிக சம்பளத்தில் உள்நாடு மற்றும் வெளிநாடு வேலை வாய்ப்புகள் போன்ற பெரும்பாலானவை இணைய வழி மோசடிக்கா ரர்ககள் பொதுமக்களை ஏமாற்ற தற்போதும் கையா ளப்படும் யுக்திகளாகும்.
பொதுமக்கள் இது போன்ற மோசடிக்காரர்கள் நம்பி பணத்தை இழக்க வேண்டாம். இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.
- புதுவை அருகே கிருமாம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனை மருத்துவ கல்லூரியில் அட்டெண்டராக வேலை செய்து வருகிறார்.
- திருவிழாவில் பொதுமக்களின் வரிப்பணத்தை அய்யனா ரப்பன் முறைகேடு செய்து வருவதாக சரண்ராஜ் என்பவர் அருள்ராஜியிடம் கூறினார் என்று அய்யனாரப்பனுக்கு தெரியவந்துள்ளது.
புதுச்சேரி:
அரியாங்குப்பத்தை அடுத்த மணவெளி தண்ணீர் தொட்டி வீதியை சேர்ந்தவர் அருள்ராஜ் (வயது 37) இவர் கிருமாம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனை மருத்துவ கல்லூரியில் அட்டெண்டராக வேலை செய்து வருகிறார்.
மேலும் மணவெளி பகுதியில் உள்ள அரியாங் குப்பம் கொம்யூன் பஞ்சா யத்து பராமரிப்பில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்தை குத்தகை மூலம் குடிநீர் விநியோகம் செய்து வந்தார்.
ஏற்கனவே அதே பகுதியை சேர்ந்த அய்யனாரப்பன் என்பவரும் சுத்திகரிப்பு நிலையத்தை ஏலம் எடுத்து விற்பனை செய்து வந்துள்ளார். இதனால் இருவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில் மண வெளி முத்துமாரியம்மன் கோவில் கூட்டம் நடந்துள்ளது. திருவிழாவில் பொதுமக்களின் வரிப்பணத்தை அய்யனா ரப்பன் முறைகேடு செய்து வருவதாக சரண்ராஜ் என்பவர் அருள்ராஜியிடம் கூறினார் என்று அய்யனாரப்பனுக்கு தெரியவந்துள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த அய்யனாரப்பன் அப்பகுதி யைச் சேர்ந்த அருள்ராஜை அசிங்கமாக திட்டி கையால் தாக்கி உள்ளார். பின்னர் நேற்று இரவில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை சேதப்படுத்தி அங்கிருந்த கேமராவையும் உடைத்துள்ளார்.
மேலும் இரும்பு கம்பி யால் கொலை செய்து விடுவேன் என அருள்ராஜ் க்கு மிரட்டல் விடுத்தார். இது சம்பந்தமாக அரியாங்
குப்பம் போலீஸ் நிலையத்தில் புகார் தெரி வித்தார். போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர் முருகானந்தம், உதவி சப்-இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி ஆகியோர் வழக்கு பதிவு செய்து அய்யனாரப்பனை கைது செய்தனர்.
- புதுவை அருகே உப்பளம் துறைமுக நுழைவு வாயில் அருகில் உள்ள அம்பேத்கர் சிலையை சுற்றி இருந்த தடுப்பு சுவர்கள் முழுமையாக சேதம் அடைந்தன.
- முதல்-அமைச்சருக்கும் அ.தி.மு.க. சார்பில் மனமார்ந்த நன்றியையும், பாராட்டையும் தெரிவித்து கொள்கிறேன்.
புதுச்சேரி:
புதுவை மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
உப்பளம் துறைமுக நுழைவு வாயில் அருகில் உள்ள அம்பேத்கர் சிலையை சுற்றி இருந்த தடுப்பு சுவர்கள் முழுமையாக சேதம் அடைந்தன.
அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு சிலையை சுற்றி நீரூற்று, மின்விளக்கு மற்றும் அழகிய சிமெண்ட் தடுப்பு கட்டைகள் அமைக்க பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணனிடம் அ.தி.மு.க. கோரிக்கை வைத்தது.
கோரிக்கையை ஏற்று ரூ.5½லட்சம் மதிப்பீட்டில் இந்த பணிகளை செய்ய அரசு ஒப்பந்தம் விட்டுள்ளது. பணியை விரைந்து முடிக்க உதவிய அமைச்சர் லட்சுமிநாராயணனுக்கும், முதல்-அமைச்சருக்கும் அ.தி.மு.க. சார்பில் மனமார்ந்த நன்றியையும், பாராட்டையும் தெரிவித்து கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.






