என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    ஏரி நீரை வெளியேற்றுவதை நிறுத்த வேண்டும்-சம்பத் எம்.எல்.ஏ. எச்சரிக்கை
    X

    பொதுப்பணித்துறை அதிகாரியிடம் சம்பத் எம்எல்ஏ மனு அளித்த காட்சி.

    ஏரி நீரை வெளியேற்றுவதை நிறுத்த வேண்டும்-சம்பத் எம்.எல்.ஏ. எச்சரிக்கை

    • முதலியார் பேட்டை தொகுதியில் அமைந்துள்ள மிகப்பெரிய 2 ஏரிகள் உழந்தை மற்றும் முருங்கப்பாக்கம் ஏரிகள்.
    • புதுவை மாநிலம் தற்பொழுது கடும் நிதி நெருக்கடியில் உள்ளது. இருப்பினும் வேல்ராம்பட்டு ஏரியில் நீர் தேக்கி நிலத்தடி நீரை உயர்த்த பல நூறு கோடி ரூபாய் செலவிடுகிறது.

    புதுச்சேரி:

    முதலியார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் சம்பத் பொதுப்பணித்துறை நீர்ப்பாசன கோட்ட செயற்பொறியாளர் ராதா கிருஷ்ணனை சந்தித்து வேல்ராம்பட்டு ஏரி நீரை வெளியேற்ற அனுமதி கொடுத்ததை ரத்து செய்ய வேண்டும் என மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-

    முதலியார் பேட்டை தொகுதியில் அமைந்துள்ள மிகப்பெரிய 2 ஏரிகள் உழந்தை மற்றும் முருங்கப்பாக்கம் ஏரிகள். இந்த 2 ஏரிக்கும் நீர் நிரப்ப மழை நீரை பல பகுதிகளில் இருந்து கொண்டு வர உங்கள் துறையே பல கோடி ரூபாய் செலவிட்டு கட்டுமானப் பணியையும் மேற்கொண்டு வருகிறது.

    இந்த 2 ஏரிகளிளும் நீர்த்தேக்கி படகு போக்குவரத்து ஏற்படுத்தி பெரிய சுற்றுலா மையமாக சுற்றுலாத் துறை தொலைநோக்கு திட்டத்துடன் பல கோடி ரூபாய் செலவில் பணி தொடங்கியுள்ளது.

    புதுவை மாநிலம் தற்பொழுது கடும் நிதி நெருக்கடியில் உள்ளது. இருப்பினும் வேல்ராம்பட்டு ஏரியில் நீர் தேக்கி நிலத்தடி நீரை உயர்த்த பல நூறு கோடி ரூபாய் செலவிடுகிறது.

    நிலைமை இப்படி இருக்க வேல்ராம்பட்டு ஏரியின் மீன்பிடிக்க ஒப்பந்தம் எடுத்தவர் மீன் பிடிக்க சுயலாபத்திற்காக ஏரியின் நீரை வெளியேற்றி வருகிறார். இதற்கு தங்கள் துறையே அனுமதி வழங்கி உள்ளது.

    இதை தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் என்ற வகையில் இனியும் என்னால் வேடிக்கை பார்க்க முடியாது.

    தங்கள் துறை மூலம் நீர் வெளியேற்ற கொடுத்த அனுமதியை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் இல்லையெனில் முன்னறிவிப்பு ஏதும் கொடுக்காமல் மக்களை ஒன்று திரட்டி மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவேன் என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    Next Story
    ×