என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    புதுவையில் 93 பேருக்கு கொரோனா
    X

    கோப்பு படம்.

    புதுவையில் 93 பேருக்கு கொரோனா

    • புதுவை மாநிலத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
    • புதுவை சுகாதாரத்துறை கொரோனா பரிசோனைகளை அதிகரித்துள்ளது. 941 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

    புதுச்சேரி:

    புதுவை மாநிலத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    கடந்த சில நாட்களாக ஒற்றை இலக்கத்தில் இருந்த தொற்று, ரெட்டை இலக்கமாகி, 3 இலக்கத்தை தொடும் நிலை ஏற்பட்டுள்ளது. புதுவை சுகாதாரத்துறை கொரோனா பரிசோனைகளை அதிகரித்துள்ளது.

    941 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுவையில் 58 பேர், காரைக்காலில் 32 பேர், ஏனாமில் 2 பேர், மாகியில் ஒருவர் என 93 பேருக்கு தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது.

    தற்போது தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 3 பேர் ஜிப்மர் ஆஸ்பத்திரியிலும் 2 பேர் அரசு மார்பக ஆஸ்பத்திரியிலும், 6 பேர் கோவிட் கேர் சென்டரிலும் சிசிக்சை பெற்று வருகின்றனர்.

    314 பேர் வீட்டு தனிமை என மொத்தம் 325 பேர் கொரோனா தொற்றுடன் சிகிச்சையில் உள்ளனர். இன்று 41 பேர் குணமடைந்துள்ளனர். உயிரிழப்பு ஏதும் இல்லை. இந்த தகவல்களை சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

    Next Story
    ×