என் மலர்
புதுச்சேரி
- புதுவை முல்லா வீதியை சேர்ந்தவர் பைகல்லா பேக் (வயது 62) . வீட்டிலேயே சமையல் ஆர்டர் எடுத்து செய்து வருகிறார்.
- இதனால் பைகல்லா பேக்கிற்கும், ஷ்புதீனுக்கும் இடையில் தொழில்போட்டி ஏற்பட்டுள்ளது.
புதுச்சேரி:
புதுவை முல்லா வீதியை சேர்ந்தவர் பைகல்லா பேக் (வயது 62). வீட்டிலேயே சமையல் ஆர்டர் எடுத்து செய்து வருகிறார். இவரது மகன் பைரோஸ் (வயது 28) தந்தைக்கு துணையாக சமையல் வேலையில் ஈடுபட்டு வருகிறார்.
இவர்களது பக்கத்து வீட்டில் வசிப்பவர் ஷர்புதீன். டிரைவர் வேலை பார்த்து வந்த அவர் சில மாதங்களாக சமையல் செய்த ஆர்டர்களை பிடித்து வந்துள்ளார். இதனால் பைகல்லா பேக்கிற்கும், ஷ்புதீனுக்கும் இடையில் தொழில்போட்டி ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் சம்பவத்தன்று ஷர்புதீனின் மாமனார் ரபிக் உப்பு, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை கையில் எடுத்து வந்து பைகல்லாபேக்கின் வீட்டின் முன்பு போட்டதாக கூறப்படுகிறது. இதனை அவர் தட்டிக்கேட்டுள்ளார்,
அப்போது அவர்களுக்குள் வாக்குவாதமும் கைகலப்பும் ஏற்பட்டுள்ளது. இதில் இருவருக்கும் ஆதரவாக அவர்களது குடும்பத்தினரும் வந்து ஒருவரை ஒருவர் தாக்கியுள்ளனர். இரு தரப்பினருக்கும் காயங்கள் ஏற்பட்டது.
இதுகுறித்து இருவரும் தனித்தனியாக ஒதியஞ்சாலை போலீசில் புகார் அளித்துள்ளனர். ஒதியஞ்சாலை போலீசார் வழக்கு பதிவு செய்து இருதரப்பினரையும் விசாரித்து வருகின்றனர்.
- புதுவை வில்லியனூர் பாண்டியன் நகரை சேர்ந்தவர் வீரமணி (வயது 48) தச்சு தொழிலாளி. இவர் குடிபழக்கம் உடையவர்.
- கோமதி, கணவரை உடனே அழைத்துக் கொண்டு ஆஸ்பத்திரிக்கு செல்லுமாறு அறிவுறுத்தி உள்ளார்.
புதுச்சேரி:
புதுவை வில்லியனூர் பாண்டியன் நகரை சேர்ந்தவர் வீரமணி (வயது 48) தச்சு தொழிலாளி. இவர் குடிபழக்கம் உடையவர். இவருக்கு கோமதி என்ற மனைவியும், 2 ஆண் குழந்தைகளும் உள்ளனர்.
கடந்த சில நாட்களாக வீரமணி வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்தார். கடந்த வாரம் கோமதி மன்னார்குடியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார்.நேற்று காலை கோமதிக்கு போன் செய்த வீரமணி எப்போது ஊருக்கு வருவாய் என கேட்டுள்ளார். அப்போது கோமதி புறப்பட்டு விட்டேன், மாலைக்குள் வந்துவிடுவேன் என கூறியுள்ளார்.
ரெயிலில் கோமதி புதுவை வந்துக் கொண்டிருந்தார். அப்போது அவரது மகன் அவருக்கு போன் செய்து அப்பா மயக்கத்தில் இருப்பதாக கூறியுள்ளார். கோமதி, கணவரை உடனே அழைத்துக் கொண்டு ஆஸ்பத்திரிக்கு செல்லுமாறு அறிவுறுத்தி உள்ளார்.
அவரது மகன்கள் வீரமணியை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வீரமணி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து வில்லியனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தற்பொழுது சரக்கு கப்பல் புதுவையில் பயன்பாட்டிற்கு வந்த நிலையில் புதுவை அரசு மீன்பிடி கப்பல் நிற்க்கும் இடத்தை அப்புறப்படுத்தியது.
- புதுவை அரசு மற்றும் துறைமுக அதிகாரிகளிடம் பேசி அப்புறப்படுத்தாமல் மாற்று இடமாக மேற்கிலிருந்து கிழக்கு புறம் ஒதுக்கி கொடுக்கும்படி கோரிக்கை வைத்தார்.
புதுச்சேரி:
புதுவை உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட பழையத் துறைமுகம் மீன்பிடி துறைமுகமாக இயங்கி வந்தது.
ஆனால் தற்பொழுது சரக்கு கப்பல் புதுவையில் பயன்பாட்டிற்கு வந்த நிலையில் புதுவை அரசு மீன்பிடி கப்பல் நிற்க்கும் இடத்தை அப்புறப்படுத்தியது.
இதனை அறிந்த உப்பளம் தொகுதி அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. புதுவை அரசு மற்றும் துறைமுக அதிகாரிகளிடம் பேசி அப்புறப்படுத்தாமல் மாற்று இடமாக மேற்கிலிருந்து கிழக்கு புறம் ஒதுக்கி கொடுக்கும்படி கோரிக்கை வைத்தார்.
சாலை விளக்குகளை அமைத்துக் கொடுக்கவும், குடிதண்ணீர் வசதியை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். அதை ஏற்றுக்கொண்டு அதிகாரிகள் தற்பொழுது செம்மண் கொட்டி தற்சமயம் சாலையும், அதை தொடர்ந்து ஒரு ஐமாஸ் மின் விளக்கும் அமைத்து தந்துள்ளனர். அந்த பகுதியை அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.
உடன் தி.மு.க. கிளைச் செயலாளர் ராகேஷ், கழக சகோதரர் ரகுராமன், சக்திவேல், வேல்முருகன்,சங்கர், கோபி, பிரபு, செழியன், தனுஷ் பலர் உடனிருந்தனர்.
- விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் புதுவை மாநில, உயர் நிலைக்குழு மற்றும் மாநிலச் செயற்குழு கூட்டம் தலைமை அலுவலகத்தில் நடந்தது.
- காரைக்கால் மதகடியிலிருந்து மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரில் உள்ள அம்பேத்கர் சிலை நோக்கி ஜனநாயகம் காப்போம் அணிவகுப்பு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் நடைபெறும்.
புதுச்சேரி:
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் புதுவை மாநில, உயர் நிலைக்குழு மற்றும் மாநிலச் செயற்குழு கூட்டம் தலைமை அலுவலகத்தில் நடந்தது.
முதன்மைச் செயலாளர் தேவ.பொழிலன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக கட்சி மேலிட பொறுப்பாளர்கள் கருத்தியல் பரப்பு மாநிலச் செயலாளர் சிபிச்சந்தர், புதுவை-தமிழ்நாடு அமைப்புச் செயலாளர் தலையாரி ஆகியோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
அம்பேத்கர் பிறந்த நாளில் மத்திய அரசின் போக்கை கண்டித்தும், மாநில பா.ஜனதா - என்.ஆர்.காங்கிரஸ் அரசை கண்டித்து 14-ந் தேதி 10 மணியளவில் சுதேசி பஞ்சாலையிலிருந்து புதுவை சட்டப்பேரவை அம்பேத்கர் சிலை நோக்கியும், காரைக்கால் மதகடியிலிருந்து மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரில் உள்ள அம்பேத்கர் சிலை நோக்கி ஜனநாயகம் காப்போம் அணிவகுப்பு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் நடைபெறும்.
முதன்மைச் செயலாளர் தேவ.பொழிலன் தலைமையில் நடைபெறும் அணிவகுப்பை கட்சியின் மேலிடப் பொறுப்பாளர்கள் சிபிச்சந்தர், தலையாரி ஆகியோர் தொடங்கி வைக்க உள்ளனர் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அமைப்புச் செயலாளர் அமுதவன், பொருளாளர் பாத.தமிழ்மாறன், தொண்டரணி முதன்மைச் செயலாளர் பொதினிவளவன், அரசியல் குழு மாநில துணைச் செயலாளர் முன்னவன், தலைமை நிலையச்செயலாளர் செல்வ.நந்தன், தேர்தல் பணிக்குழு மாநிலச் செயலாளர் அரிமாத்தமிழன், கருத்தியல் பரப்பு மாநிலச் செயலாளர் ஆதவன், ஊடக பிரிவு மாநிலச் செயலாளர் கார்முகில் உட்பட, துணைநிலை அமைப்புகளின் மாநிலச் செயலாளர்கள் மற்றும் தொகுதிச் செயலாளர்கள், பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். தலைமை அலுவலகச் செயலாளர் எழில்மாறன் நன்றி கூறினார்
- புதுவை கராத்தே சங்கம் சார்பில் 23-வது மாநில அளவிலான கராத்தே சாம்போ சாம்பியன்ஷிப் போட்டி மற்றும் துளசி சுழல் கோப்பை வழங்கும் விழா மதகடிப்பட்டு அமர்த்தீஸ்வரி திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
- முதல் சுழல் கோப்பையை மதகடிப்பட்டு பாரத தேவி பள்ளி மாணவர்களும், இரண்டாவது சுழல் கோப்பையை திருக்கனூர் சுப்ரமணிய பாரதி பள்ளி மாணவர்களும் தட்டி சென்றனர்.
புதுச்சேரி:
புதுவை கராத்தே சங்கம் சார்பில் 23-வது மாநில அளவிலான கராத்தே சாம்போ சாம்பியன்ஷிப் போட்டி மற்றும் துளசி சுழல் கோப்பை வழங்கும் விழா மதகடிப்பட்டு அமர்த்தீஸ்வரி திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
கராத்தே சங்க இணை ச்செயலாளர் மதிஒளி தலைமை தாங்கி பரிசுகள் வழங்கி பாராட்டி பேசினார். இப்போட்டியில் கிராமப்புறங்களில் இருந்து 500-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
பரிசளிப்பு விழாவில் சட்டமன்ற உறுப்பினர் அங்காளன், கராத்தே சங்கத் தலைவர் இளங்கோவன், சம்போ சங்க கவுரவத் தலைவர் திருவேங்கடம், உதவி ஆய்வாளர் ராஜசேகர், பேராசிரியர் ராஜவேலு, புதுச்சேரி சுயநிதி தனியார் பள்ளி கூட்டமைப்பின் தலைவர் டாக்டர். ரங்கநாதன், திருக்கனூர் சுப்ரமணிய பாரதி பள்ளி தாளாளர் டாக்டர்.சம்பத் மதகடிப்பட்டு பராததேவி பள்ளியின் தாளாளர் இளமதி அழகன், திருபுவனை அன்னை வித்யா மந்திர் பள்ளி தாளாளர் தனசெல்வம், சாம்போ சங்க நிர்வாகிககள் ஜனா ர்த்தனன், கோதண்ட ராமன், ரவிச்சந்திரன், சரவணன், பழனிராஜ் ஆகியோர் கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி வாழ்த்தி பேசினார்கள்.
முதல் சுழல் கோப்பையை மதகடிப்பட்டு பாரத தேவி பள்ளி மாணவர்களும், இரண்டாவது சுழல் கோப்பையை திருக்கனூர் சுப்ரமணிய பாரதி பள்ளி மாணவர்களும் தட்டி சென்றனர்.
மூத்த பயிற்சியாளர்கள் கோபா லகிருஷ்ணன், செந்தில், கவிதா. லலிதா. தினேஷ், சரண், கரண் மற்றும் ரவிராஜ் கலந்துகொண்டு போட்டியின் நடுவர்களாக செயல்பட்டு சிறந்த கராத்தே மாணவ மாணவிகளை தேர்ந்தெடுத்தனர். நிகழ்ச்சியின் முடிவில் ஆசிரியர் சரவணன் நன்றி கூறினார்.
- உழவர்கரை நகராட்சி, நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் துப்புரவு பணிகளை மேற்கொண்டு வருகிறது.
- சாலையோ ரங்களிலும் பொதுமக்கள் மற்றும் வியாபார நிறுவனங்களால் குப்பைகள் கொட்ட ப்படு வது கள ஆய்வின்போது கண்டறியப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ் ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
உழவர்கரை நகராட்சி, நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் துப்புரவு பணிகளை மேற்கொண்டு வருகிறது. மேலும், வீடுகள் மற்றும் வியாபார நிறுவனங்களில் தினசரி உருவாகும் குப்பைகளை ஸ்வச்சதா கார்பரேஷன் நிறுவனத்தின் மூலம் வீடு மற்றும் வியாபார நிறுவனங்களுக்கே சென்று தினசரி குப்பை பெறப்படுகிறது.
இருப்பினும், நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பல இடங்களில் காலி மனைகளிலும், சாலையோ ரங்களிலும் பொதுமக்கள் மற்றும் வியாபார நிறுவனங்களால் குப்பைகள் கொட்ட ப்படு வது கள ஆய்வின்போது கண்டறியப்பட்டுள்ளது.
இதனை சரிசெய்யும் பொருட்டு உழவர்கரை நகராட்சி தீவிர துப்புரவு பணியை மேற்கொண்டு வருகிறது. இதில் காலி மனை கள் மற்றும் தெருவோரம் கொட்டப்பட்டுள்ள குப் பைகள் முதற்கட்டமாக கண்டறியப்பட்டு அகற்றப் பட்டு வருகிறது.
எனவே தெருவோரம் மற்றும் காலி மனைகளில் குப்பைகளை போடுபவர்கள் அதனை உடனடியாக தவிர்த்து குப்பைகளை சேகரிக்க வருபவர்களிடம் கொடுக் குமாறு அறிவுறுத்தப்படுகி றது. மேலும் சாலையோர வியாபாரிகள் தங்களிடம் உருவாகும் குப்பைகளை குப்பைத்தொட்டிகள் அமைத்து சேகரித்து வியாபாரம் முடிந்த பின்னர் அருகில் இருக்கும் நகராட்சியின் குப்பை தொட்டியில் கொட்டுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இதனை பின்பற்றாமல் சுற்றுப்புறத்தை அசுத்தம் செய்பவர்கள் மீது கடு மையான நடவடிக்கை மேற்கொண்டு அபராதம் விதிக்கப்படும்.மேலும் தங்கள் பகு தியில் தினமும் குப்பை களை சேகரிக்க வாகனம், ஊழியர்கள் வரவில்லை என்றால் 18004255119 என்ற இலவச எண்ணில் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- உழவர்கரை நகராட்சிக்கு உட்பட்ட திண்டிவனம் சாலையில் ராஜிவ் சதுக்கம் - கோரிமேடு வரையில் சாலை சென்டர் மீடியினில் உள்ள மின் கம்பங்களில் கட்டப்பட்டுள்ள கேபிள்கள் ஆங்காங்கே தொங்கி போக்கு வரத்துக்கு ஆபத்தாக இருந்தது.
- சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் கேபிள்களை ஒழுங்குபடுத்தாததால், நகராட்சி ஊழியர்கள் தொங்கி கொண்டிருந்த கேபிள்களை துண்டித்து அப்புறபடுத்தினர்.
புதுச்சேரி:
உழவர்கரை ஆணையர் சுரேஷ்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
உழவர்கரை நகராட்சிக்கு உட்பட்ட திண்டிவனம் சாலையில் ராஜிவ் சதுக்கம் - கோரிமேடு வரையில் சாலை சென்டர் மீடியினில் உள்ள மின் கம்பங்களில் கட்டப்பட்டுள்ள கேபிள்கள் ஆங்காங்கே தொங்கி போக்கு வரத்துக்கு ஆபத்தாக இருந்தது.
இது குறித்த புகார்கள் உழவர்கரை நகராட்சிக்கு வந்ததை யொட்டி, கேபிள்களை ஒழுங்குப்படுத்த சம்பந்த பட்ட நிறுவனங்களுக்கு 2 வாரம் அவகாசம் அளிக்கப்பட்டது.
சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் கேபிள்களை ஒழுங்குபடுத்தாததால், நகராட்சி ஊழியர்கள் தொங்கி கொண்டிருந்த கேபிள்களை துண்டித்து அப்புறபடுத்தினர்.
பொதுமக்களின் போக்குவரத்து நலனை யொட்டி, கேபிள்களை முக்கிய பிரதான சாலைகளின் சென்டர் மீடியன் மின் கம்பங்களில் ஆபத்தான முறையில் கட்டக் கூடாது. மீறினால் கேபிள்கள் தொடர்ந்து துண்டிக்கப்படுவதோடு, அபராதம் மற்றும் சம்பந்தபட்ட நிறுவனங்கள் மீது நகராட்சி சட்ட விதிகளின் படி நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- 2014-ல் நடந்த பாராளுமன்ற தேர்தலிலும் பா.ம.க. வெற்றி பெறவில்லை. அத்தேர்தலில் 3.17 சதவீதம் வாக்கு பெற்றிருந்தது.
- 2016-ல் நடந்த சட்டமன்ற தேர்தலிலும் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.
புதுச்சேரி:
புதுவையில் பா.ம.க. மாநில கட்சி அங்கீகாரத்தை தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளது.
அரசியல் கட்சி மாநில கட்சியாக அங்கீகாரம் பெறுவதற்கு மாநிலத்தில் சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மாநிலத்தில் பதிவான மொத்த வாக்குகளில் 6 சதவீதத்துக்கு குறையாமல் வாங்கி இருக்க வேண்டும்,
அல்லது சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் குறைந்தபட்சம் 2 எம்.எல்.ஏ.க்களை வெற்றி பெற்றிருக்க வேண்டும் என்ற விதிமுறை உள்ளது.
இந்த அடிப்படையில் 2009-ம் ஆண்டு பா.ம.க. புதுவை மாநில கட்சியாக அங்கீகரிக்கப்பட்டது. அதன்பிறகு 2011-ல் நடைபெற்ற சட்டமன்ற பொதுத்தேர்தல் 2014-ல் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலிலும் இந்திய தேர்தல் ஆணையம் ஆய்வு செய்தது.
இதில் 2011-ல் புதுவையில் உள்ள 30 தொகுதிகளில் ஒரு தொகுதியில் கூட பா.ம.க. வெற்றி பெறவில்லை. அதுமட்டுமல்லாமல் 2.48 சதவீதம்தான் வாக்கு வாங்கியது.
2014-ல் நடந்த பாராளுமன்ற தேர்தலிலும் பா.ம.க. வெற்றி பெறவில்லை. அத்தேர்தலில் 3.17 சதவீதம் வாக்கு பெற்றிருந்தது.
2016-ல் நடந்த சட்டமன்ற தேர்தலிலும் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.
இந்ததேர்தலில் 0.71 சதவீதம்தான் வாக்குகள் பெற்றிருந்தது. 2021-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் பா.ம.க. போட்டியிடவில்லை.
இதையடுத்து 6ஏ விதிகளின் படி விளக்கம் கேட்டு பா.ம.க.வுக்கு இந்திய தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.
இதற்கு கூடுதல் அவகாசம் வழங்குமாறு கேட்டிருந்தது. இருப்பினும் தேர்தல் ஆணைய விசாரணைக்கு பா.ம.க. ஆஜராகவில்லை.
இதற்கிடையே கொரோனா தொற்று பரவல் காரணமாக அரசியல் கட்சியின் செயல் திறன் மறு ஆய்வு செய்வது நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் கடந்த 16.12.2021-ல் மீண்டும் விசாரணை தொடங்கப்பட்டது. 29.12.2021-ல் பா.ம.க.விடம் விசாரணை நடத்த திட்டமிட்டிருந்தது. இந்த விசாரணைக்கும் பா.ம.க. ஆஜராகவில்லை. அதன் பிறகு 20.3.2023-ல் மீண்டும் விசாரணை நடத்த திட்டமிடப்பட்டது.
அப்போது கட்சியின் பிரதிநிதி வந்து கட்சியின் அங்கீகாரத்தை தொடர தேர்தல் ஆணையத்திடம் அனுமதி கேட்டார். 2024-ல் பாராளுமன்ற தேர்தலில் எங்களுடைய சின்னத்தி லேயே போட்டியிட அனுமதி வழங்க வேண்டும் என கேட்டிருந்தார்.
ஆனால் 2011 முதல் 2021 வரை புதுவை யூனியன் பிரதேசத்தில் நடை பெற்ற சட்டப்பேரவை மற்றும் மக்களவை பொதுத்தேர்தலில் பதிவான வாக்கு சதவீதம் மற்றும் வெற்றி பெற்ற இடங்களின் எண்ணிக்கை எல்லாம் இந்திய தேர்தல் ஆணையம் மதிப்பாய்வு செய்தது.
மேலும் 6ஏ விதிகளின்படி கொடுக்கப்பட்ட பலன்களை பா.ம.க. முழுமையாக அனுபவித்து விட்டது. இந்நிலையில் தேர்தல் ஆணையத்தின் தேர்தல் சின்னங்கள் ஒதுக்கீடு தொடர்பான விதிகளில் புதுவையில் பா.ம.க.வுக்கு மாநில கட்சி என்ற அங்கீகாரம் ரத்து செய்கிறது.
பா.ம.க. இன்று முதல் புதுவை யூனியன் பிரதேசத்தில் பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சியாகவே கருதப்படும்.
இதற்கான உத்தரவை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
- புதுவை முல்லை நகரில் உள்ள அரசு ஊழியர் சம்மேளன அலுவலகத்தில் சுகாதார ஆய்வாளர்கள், உதவியாளர்கள் சங்க பொதுக் குழு கூட்டம் நடந்தது.
- அமைப்பு செயலாளர் இளையதாசன், தொழில்நுட்ப உதவியாளர் பதவி உயர்வுக்கு தடை பெறுவதால் ஏற்படும் பாதிப்பு குறித்து விளக்கினார்.
புதுச்சேரி:
புதுவை முல்லை நகரில் உள்ள அரசு ஊழியர் சம்மேளன அலுவலகத்தில் சுகாதார ஆய்வாளர்கள், உதவியாளர்கள் சங்க பொதுக் குழு கூட்டம் நடந்தது.
தலைவர் திருமலை தலைமை வகித்தார். அமைப்பு செயலர் கிரி வரவேற்றார். கவுரவ தலைவர் பிரேமதாசன், தலைவர் ரவிச்சந்திரன், சுகாதார ஊழியர் சம்மேளன தலைவர் கீதா, அமைப்பு செயலர் மணிவண்ணன் முன்னிலை வகித்தனர். துணை தலைவர் ஜவகர் பணி மறுகட்டமைப்பு செய்ய தடையாக உள்ள ஒரு நபர் குழு குறித்து விளக்கினார்.
அமைப்பு செயலாளர் இளையதாசன், தொழில்நுட்ப உதவியாளர் பதவி உயர்வுக்கு தடை பெறுவதால் ஏற்படும் பாதிப்பு குறித்து விளக்கி னார். வரவு, செலவு சங்க செயல்பாடுகள் குறித்து பொருளாளர் முனுசாமி, சங்க போராட்டங்கள் குறித்து செயலாளர் ஜெகநாதன் பேசினர்.
கூட்டத்தில், பொது சுகாதார சட்டத்தை உடனே தகுந்த மாற்றங்கள் செய்து அமல்படுத்த வேண்டும். சுகாதார ஆய்வாளர்களுக்கு வெள்ளை நிற ஓவர்கோட் அணிந்து பணி செய்ய அனுமதிக்க வேண்டும்.
சுகாதாரத்துறை மூலம் பள்ளிகளுக்கு வழங்கும் சான்றிதழ்களை அந்தந்த ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு உட்பட்ட ஆய்வாளர்கள் மேற்பார்வை யிட்டு, மருத்துவ அதிகாரிகள் மூலம் வழங்க வேண்டும் என்ற தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. ஈணை செயலாளர் பன்னீர் செல்வம் நன்றி கூறினார்.
- இளைஞர்கள் மது, கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களுக்கு அடிமையாகி வருகின்றனர்.
- இளைஞர்கள் ஒன்றுகூடி சாலையில் செல்லும் பொதுமக்களை தாக்கி, மிரட்டும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.
புதுச்சேரி:
புதுவை நகர பகுதியில் நூற்றுக்கணக்கான மதுபார்கள் ஏற்கனவே இயங்கி வருகிறது.
தற்போது ரெஸ்டோபார் எனப்படும் நடன அரங்கத்துடன் கூடிய மதுபார்களுக்கு அரசு அனுமதி வழங்கி வருகிறது. இந்த மதுபார்கள் நகர், புறநகர் பகுதிகளில் ஆங்காங்கே புதிது, புதிதாக முளைத்து வருகிறது. குடியிருப்புகள், கோவில், பள்ளி அருகே ரெஸ்டோ பார் திறக்க மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இருப்பினும் அரசின் வருவாயை பெருக்கும் வகையில் ரெஸ்டோ பாருக்கு அனுமதி வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.
வார இறுதியில் புதுவைக்கு வரும் சுற்றுலா பயணிகளில் ஒரு தரப்பினர் ரெஸ்டோ பாருக்காகவே வருகை தருகின்றனர். சென்னை, பெங்களூரு, ஐதராபாத் ஆகிய நகரங்களிலிருந்து வரும் சுற்றுலா பயணிகள் மது அருந்திவிட்டு, நடனமாடுவதை விரும்புகின்றனர்.
அதோடு நள்ளிரவு வரை ரெஸ்டோ பார் திறந்து செயல்பட சிறப்பு அனுமதி வழங்கப்படுகிறது. இதனால் நள்ளிரவுக்கு மேல் மதுஅருந்தி கொண்டாடி விட்டு, நள்ளிரவு, அதி காலைக்கு மேல்தான் விடுதிகளுக்கு திரும்புகின்றனர்.
புதுவையில் இருசக்கர வாகனங்களும் அதிகளவு வாடகைக்கு விடப்படுவதால், இதுபோன்ற ரெஸ்டோ பார் செல்பவர்கள், கார்கள், மோட்டார் சைக்கிளில் நள்ளிரவில் செல்கின்றனர்.
அப்போது ஒரு சில இடங்களில் விபத்துகள் ஏற்படுகிறது. ஏற்கனவே புதுவையில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களின் நடமாட்டமும் அதிகரித்துள்ளது. இதனால் புதுவை இளைஞர்கள் மது, கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களுக்கு அடிமையாகி வருகின்றனர்.
சமீபகாலமாக ஆங்காங்கே இளைஞர்கள் ஒன்றுகூடி சாலையில் செல்லும் பொதுமக்களை தாக்கி, மிரட்டும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.
இதுபோன்ற ஒரு சம்பவத்தில்தான் லப்போர்த் வீதியில் மோட்டார்சைக்கிளில் சென்ற என்ஜினீயரை தாக்க முயன்றபோது பலியாகியுள்ளார். இது புதுவை மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுவை மக்களுக்கு பிரெஞ்சு காலத்தில் இருந்தே மது அருந்தும் பழக்கம், பார்ட்டி கொண்டாடும் பழக்கம் உள்ளது. ஆனால் மற்றவர்களுக்கு இடையூ றாகவோ, பொது இடங்களில் அருவருக்கத்தக்க வகையிலோ நடப்பதோ கிடையாது.
ஆனால் புதிய ரெஸ்டோ பார் கலாச்சாரம் சாலையின் நடுவீதியில் பிறந்தநாள் கொண்டாடுவது, பொது மக்களை அச்சுறுத்துவது போன்ற சம்பவங்களை அதிகரிக்க செய்துள்ளது. இதை தடுத்து நிறுத்த வேண்டும் என அ.தி.மு.க. குரல் கொடுத்துள்ளது. ரெஸ்டோ பார் அனுமதியை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதனால் புதுவை அரசுக்கு வருவாயா? வருங்காலமா? என்ற நெருக்கடி நிலை உருவாகியுள்ளது.
- புதுவையில் மது போதையில் இரவில் பொதுமக்களுக்கு இடையூறு அளிக்கும் வகையில் சாலைகளில் போதை கும்பல் அட்டகாசம் செய்து வருவது அதிகரித்துள்ளது.
- புதுவை மக்களிடையே பெரும் சோகத்தையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி:
புதுவையில் மது போதையில் இரவில் பொதுமக்களுக்கு இடையூறு அளிக்கும் வகையில் சாலைகளில் போதை கும்பல் அட்டகாசம் செய்து வருவது அதிகரித்துள்ளது.
போதை கும்பல் அட்டகாசத்தால் சில நாட்களுக்கு முன்பு என்ஜினியர் ஒருவர் பலியாகியுள்ளார். இது புதுவை மக்களிடையே பெரும் சோகத்தையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
ரெஸ்டோ பார் திறக்கும் அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
இதனிடையே முதல்- அமைச்சர் ரங்கசாமி, நகர பகுதி போலீஸ் அதிகாரிகளை நேற்று அழைத்து பேசினார். அப்போது, இந்த சம்பவம் குறித்து கேட்டறிந்தார்.
தொடர்ந்து நகர பகுதியில் நள்ளிரவிலும் போலீசார் ரோந்து செல்ல வேண்டும். இதுபோன்ற அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் மது போதையில் வாகனங்களில் சுற்றி வருபவர்களை தடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
- ரூ.6 லட்சத்து 84 ஆயிரம் மதிப்பில் செம்மண் சாலை அமைக்கும் பணி நடைபெற உள்ளது.
- இளநிலை பொறியாளர் சிவஞானம், ஊர் பிரமுகர்கள் சக்திபாலன் லட்சுமி காந்தன் ஆறுமுகம் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி:
புதுவை அரசு அரியாங்குப்பம் வட்டார வளர்ச்சி அலுவலகம் மூலம் மணவெளி பூரணாங்குப்பத்தில் 100 நாள் வேலை திட்டத்தின் மூலம் கிருஷ்ணசாமி நகரில் ரூ.3 லட்சத்து 14 ஆயிரம் மதிப்பிலும் மற்றும் ரங்கா கார்டன் நகரில் ரூ.3 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பிலும் என மொத்தம் ரூ.6 லட்சத்து 84 ஆயிரம் மதிப்பில் செம்மண் சாலை அமைக்கும் பணி நடைபெற உள்ளது.
இதற்கான பணியை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் இன்று காலை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அதிகாரி சந்திரகுமார், உதவி பொறியாளர் ராமன், இளநிலை பொறியாளர் சிவஞானம், ஊர் பிரமுகர்கள் சக்திபாலன் லட்சுமி காந்தன் ஆறுமுகம் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.






