என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    மீனவர்களுக்கு அடிப்படை வசதிகள்-அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. ஆய்வு
    X

    அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. ஆய்வு மேற்கொண்ட காட்சி.

    மீனவர்களுக்கு அடிப்படை வசதிகள்-அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. ஆய்வு

    • தற்பொழுது சரக்கு கப்பல் புதுவையில் பயன்பாட்டிற்கு வந்த நிலையில் புதுவை அரசு மீன்பிடி கப்பல் நிற்க்கும் இடத்தை அப்புறப்படுத்தியது.
    • புதுவை அரசு மற்றும் துறைமுக அதிகாரிகளிடம் பேசி அப்புறப்படுத்தாமல் மாற்று இடமாக மேற்கிலிருந்து கிழக்கு புறம் ஒதுக்கி கொடுக்கும்படி கோரிக்கை வைத்தார்.

    புதுச்சேரி:

    புதுவை உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட பழையத் துறைமுகம் மீன்பிடி துறைமுகமாக இயங்கி வந்தது.

    ஆனால் தற்பொழுது சரக்கு கப்பல் புதுவையில் பயன்பாட்டிற்கு வந்த நிலையில் புதுவை அரசு மீன்பிடி கப்பல் நிற்க்கும் இடத்தை அப்புறப்படுத்தியது.

    இதனை அறிந்த உப்பளம் தொகுதி அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. புதுவை அரசு மற்றும் துறைமுக அதிகாரிகளிடம் பேசி அப்புறப்படுத்தாமல் மாற்று இடமாக மேற்கிலிருந்து கிழக்கு புறம் ஒதுக்கி கொடுக்கும்படி கோரிக்கை வைத்தார்.

    சாலை விளக்குகளை அமைத்துக் கொடுக்கவும், குடிதண்ணீர் வசதியை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். அதை ஏற்றுக்கொண்டு அதிகாரிகள் தற்பொழுது செம்மண் கொட்டி தற்சமயம் சாலையும், அதை தொடர்ந்து ஒரு ஐமாஸ் மின் விளக்கும் அமைத்து தந்துள்ளனர். அந்த பகுதியை அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.

    உடன் தி.மு.க. கிளைச் செயலாளர் ராகேஷ், கழக சகோதரர் ரகுராமன், சக்திவேல், வேல்முருகன்,சங்கர், கோபி, பிரபு, செழியன், தனுஷ் பலர் உடனிருந்தனர்.

    Next Story
    ×